M.Shamil Mohamed
[ இருட்டில் இருந்த ஐரோப்பாவை விஞ்ஞான யுகத்துக்கு அழைத்து வந்தவர்கள் முஸ்லிம்கள் தான். இதுபற்றி Marguis’ எனும் அறிஞர் தனது ”peeches delivered in” எனும் நூலில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.ஆனால், இன்றுமேற்கு நாடுகளில் பணியாற்றும் முஸ்லிம் விஞ்ஞானிகள் ஐந்து வேலை தொழுதாலும் பயங்கரவாத பிரிவுகளினால் கைதாகின்றனர்.]
பிப்ரவரி 2007 ஆண்டு அமெரிக்காவின் டெனிசி பல்கலை கழகதின் – University of Tennessee- சட்டத்துறை பேராசிரியர் றிநோல்ட் -Glenn “Instapundit” Reynolds- அமெரிக்கா ஈரானின் இஸ்லாமிய தலைவர்களையும் , அணுவாயுத விஞ்ஞானிகளையும் கொலை செய்ய வேண்டும்” என்று கூறியிருந்தார்.
12.01.2010- மேற்கு பயங்கரவாதம் ஈரான் அணுவாயுத விஞ்ஞானியும் பல்கலை கழக முதுநிலை பேராசிரியருமான மசூத் முஹம்மதியை கொலை செய்துள்ளது. இது றிநோல்டின் என்ற ஒருவருடைய வாதம் அல்ல இது ஒரு சிந்தனை போக்கு இதை மேற்கு பயங்கரவாதம் றிநோல்டின் வாதத்திக்கு முன்னரும் பின்னரும் அழகாக செய்து வருகின்றது.
மேற்கு பயங்கரவாதம் அணுவாயுத விஞ்ஞானியும் பல்கலை கழக முதுநிலை பேராசிரியருமான மசூத் முஹம்மதியை ஈரான் தலை நகரில் அவரின் வீட்டின் அருகில் ரிமோட் மூலம் இயக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் குண்டின் மூலம் கொலை செய்துள்ளது இதை அமெரிக்க , இஸ்ரேலிய பயங்கரவாதம் என ஈரான் கூறியுள்ளது.
இந்த கொலை இஸ்லாமிய உலகத்துக்கு புதியது அல்ல அதிகமான முஸ்லிம் விஞ்ஞானிகள் அன்மை காலமாக கொலை செய்யப்படுகின்ரனர் அல்லது கடத்தடுகின்ரனர்.
ஈராக் ஆக்ரமிக்கபட்டு ஆரம்ப 18 மாதங்களில் மட்டும் 310 முஸ்லிம் விஞ்ஞானிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர் இவர்கள் முக்கிய அணு விஞ்ஞானத்துடன் தொடர்புடையவர்கள்,17500–கும் அதிகமான விஞ்ஞானிகள் நாட்டை விட்டும் வெளியேரிவிட்டனர் இவர்களில் அதிகமானவர்கள் மேற்கு மேலாதிக்க பயங்கரவாதத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்க வைக்கப்பட்டுள்ளனர் அல்லது ஏதே ஒரு வகையில் அச்சுறுத்தலின் கீழ் வாழ்கின்றனர் என்று இது பற்றிய ஆய்வை மேற்கொண்ட ஒரு எகிப்திய ஆய்வுமையம் கூறுகிறது என்பதுடன் இந்த கொலைகள் அமெரிக்க, இஸ்ரேலிய உளவு நிறுவனங்களினால் செய்யப்பட்டவை என சுட்டிகாட்டுகிறது.
ரஷிய கம்யூனிஸ ராஜ்ஜியம் பிரிந்து உடைந்த போது கீர்கிஸ்தான்– Kyrgyzstan- , தாஜ்கிஸ்தான்-Tajikistan-, டேக்மிஸ்தான் -Turkmenistan-, உஸ்பெக்கிஸ்தான்-Uzbekistan- என்ற நாடுகள் கம்யூனிஸ அராஜகதில் இருந்து முஸ்லிம் நாடுகளாக விடுதலை பெற்று நிமிர்ந்தன அங்கும், செச்னியா-Chechnya-, டாகஸ்தான்- Dagestan- , இங்குஸ்கீட்டியா-Ingushetia- ஆகிய ரஷ்ய ஆக்கிரமிப்பு தேசங்களிலும் பல முஸ்லிம் விஞ்ஞானிகள்,புத்திஜீவிகள் கடத்த பட்டு காணாமல் போயுள்ளனர் அல்லது கொலை செய்யபட்டுள்ளனர்.
கடத்தப்பட்ட முஸ்லிம் விஞ்ஞானிகள் பற்றி கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளனர் என்பதை தவிர வேறு எந்த தகவலும் இதுவரையும் கிடைக்கவில்லை , இங்கு நடந்த கடத்தல், காணாமல் போதல் என்பனவற்றின் சூத்திர தாரிகளாக ரஷிய , அமெரிக்க மேலாதிக்கங்கள் இருப்பதாக நம்பபடுகிறது.
அதேபோன்று மேற்கு நாடுகளில் பணியாற்றும் முஸ்லிம் விஞ்ஞானிகள் ஐந்து வேலை தொழுதாலும் பயங்கரவாத பிரிவுகளினால் கைதாகின்றனர்.
கடந்த வருடம் அக்டோபர் மாதம் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த முஸ்லிம் அணு விஞ்ஞானி ஒருவர் சுவிட்சர்லாந்தில் உள்ள அணு ஆராய்ச்சி மையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். இவரும் இவரின் சகோதரர்களும் இணையத்தின் வாயிலாக அல்ஜீரியா இஸ்லாமிய போராளிகளின் இணைய தளங்களை பார்க்கிறார்கள் தாடி வைத்துள்ளார் ஐந்து தடவை தொழுகிறார் என்ற காரணத்தால் வட ஆப்பிரிக்காவில் உள்ள இஸ்லாமிய போராளிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறி . இவருடன் சேர்ந்து, அவரது 2 விஞ்ஞான துறை மாணவர்களான சகோதரர்களையும் கைது செய்தனர்.
பாகிஸ்தானிலும் பல முஸ்லிம் அணுவாயுத விஞ்ஞானிகள் கடத்தபடுகின்றனர் இந்த வரிசையில் பாகிஸ்தானைச் சேர்ந்த Dr.ஆபியா என்ற பெண் முஸ்லிம் விஞ்ஞானி 2003 மார்ச் 30ல் கடத்தப்பட்டு காணாமல் போனார் . கடத்தப்பட்ட அவர் அமெரிக்க கட்டுபாட்டில் இயங்கும் ஆப்கானிஸ்தான் பக்ரம் (Bagram) சிறையில் அடைக்கப்பட்டு மிக கடுமையாக சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டார். சிறைக்காவலர்களால் மோசமான முறையில் பாலியல் வதைகளுக்கும் ஆளாகியுள்ளார் இந்த பயங்கரவாத அமெரிக்க கொடுமையை 2008 ஜுலை 06ஆம் தேதி பிரபல முன்னால் பிரிட்டிஷ் பத்திரிகையாளர் இவோன் ரெட்லி அம்பலத்துக்குக் கொண்டுவந்தார். இவோன் ரெட்லி இதை வெளிகொண்டுவந்ததால் உலகம் இதை அறிந்து கொண்டது அல்லது மற்ற ஆயிர கணக்கான முஸ்லிம் விஞ்ஞானிகள், முஸ்லிம் புத்திஜீவிகள் , போன்று இதுவும் அறியப்படாத செய்தியாக இருந்திருக்கும்
இருட்டில் இருந்த ஐரோப்பாவை விஞ்ஞான யுகத்துக்கு அழைத்து வந்தவர்கள் முஸ்லிம்கள் தான் இதுபற்றி Marguis’ எனும் அறிஞர் தனது ”peeches delivered in” எனும் நூலில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ‘It is to Muslim science, to Muslim art and to Muslim literature that Europe has been in a great means indebted for its extrication from darkness of the middle ages.’ ‘ஐரோப்பா இடைக்காலத்தில் அறியாமை எனும் இருளை விட்டு வெளிவரக் காரணமாக இருந்ததற்கு முஸ்லிம்களின் கலை, முஸ்லிம்களின் விஞ்ஞானம், முஸ்லிம்களின் இலக்கியம் ஆகியவற்றிற்கு அது (ஐரோப்பா) பெருமளவில் நன்றிக் கடன் பட்டிருக்கிறது என்று குறிபிடுகிறார் .’
8-12ம் நூற்றாண்டு காலப்பகுதி ‘ஐரோப்பா அறியாமை இருட்டில் தத்தளித்துக் கொண்டிருந்த காலப்பகுதியாகும்’ என வரலாறு கூறுகின்றது. இக்காலப்பகுதியில் முஸ்லீம்களின் கண்டுபிடிப்புக்கள் . இந்த நான்கு நூற்றாண்டுகளிலும் வரலாறு சான்று பகரும் அளவுக்கு விஞ்ஞான அடிபடைகளை உருவாக்கி இருந்தது இந்த கால பகுதியில் இருட்டில் இருந்த ஐரோப்பாவுக்கு எழுச்சி, புரட்சி விஞ்ஞானம் என்று சிந்திப்பதற்கு கற்றுகொடுத்தவர்கள் முஸ்லிம்கள்தான் என்று உலக வரலாறு கூறுகிறது.
இன்றைய நவீன விஞ்ஞானத்துக்கு அஸ்திவாரமாக அமைந்த முஸ்லிம்களின் 1000 வருட விஞ்ஞானம் திட்மிட்டு மேற்கு உலகால் மறைக்கபட்டுள்ளது என்பது அதிர்ச்சியான தகவல் ஆனாலும் இப்போது அவை மீண்டும் வெளிகொண்டுவரபடுகின்றது என்பது மகிழ்ச்சியளிகிறது.
இன்று இஸ்லாத்தின் எழுச்சியை தடுக்க இஸ்லாம் மீண்டும் உலகை ஆள்வதை தடுக்க இஸ்ரேல மற்றும் அமெரிக்க,மேற்குலக பயங்கரவாதம் இஸ்லாத்தை நேசிக்கும் முஸ்லிம் புத்திஜீவிகளை கொலை செய்து வருகின்றது.
கடந்த வருடம் தென் கொரியாவின் தலைநகரான சியோலில் நடந்த சர்வதேச அளவிலான பெண் விஞ்ஞானிகளுக்கான போட்டி (Korea International Women’s Invention Exposition) யில் 12 தங்கப் பதக்கங்களும், 5 வெள்ளிப் பதக்கங்களும், 6 வெண்கலப்பதக்கங்களையும் அள்ளி முஸ்லிம் பெண் விஞ்ஞானிகள் உலகில் முதலிடம் பெற்றனர்.
விஞ்ஞானத்தில் சாதனை புரிந்து வரும் 25 நாடுகள் இதில் கலந்து கொண்டன என்பதும் முஸ்லிம் பெண் விஞ்ஞானி மெஹ்ராஜ் கோல்கின்பர் , மின் உற்பத்தித் திட்டம் (electricity generator system) ஒன்றை வடிவமைத்ததற்காகச் சிறப்புப் பரிசு பெற்றார் . மூன்றாம் உலக நாடுகளின் பயன்பாடுகளுக்காக என்றே தனித்துவமாகவும் அதேவேளை சுற்றுப்புறச் சூழல்களுக்கு மாசு விளைவிக்காத முதல் மின் உற்பத்தி நிலையம் என்பதாலும் இவரது கண்டுபிடிப்பு சிறப்புப் பரிசை வென்றது.
சோனியா சப்ரீ பல்வேறு மூலப்பொருட்கள் சேர்ந்து உருவாக்கும் “நானோ காம்ப்போஸைட்” கண்டுபிடிப்புகள் World Intellectual Property Organization (WIPO) பரிசினை பெற்றார், மரியம் இஸ்லாமி என்பவரின் எலும்புகள் தொடர்பான நோய் அறுவை சிகிச்சை முறைக்கான புதிய தொழில் நுட்பம், International Federation of Inventors’ Associations (IFIA)வின் பரிசை வென்றுள்ளது.என்பனவும் அவதானிக்க படவேண்டியவை இந்த முஸ்லிம் பெண் விஞ்ஞானிகள் இருவர் பிரித்தானியாவுக்கு சென்ற போது அங்கு பிரித்தானிய உளவு துறையால் பல மணி நேரம் விசாரிக்க பட்டார்கள் என்பதும் இவர்கள் இஸ்லாமிய உடைஅணிந்தவர்கள் என்பது குறிபிட்டதக்கது.
உலகளாவிய இஸ்லாமிய எழுச்சியை, இஸ்லாமிய ஆட்சியை-இஸ்லாமிய கிலாஃபத்- தடுக்க, தாமதபடுத்த மேற்கு பயங்கரவாதம் பல களங்களில் முனைகிறது அதில் ஒன்றுதான் இந்த முஸ்லிம் விஞ்ஞானிகளை, புத்திஜீவிகளை ஊதி அணைக்க முனையும் முயற்சி.
நிராகரிபவர்கள் இஸ்லாத்தின் ஒளியை தன் வாயால் ஊதி அணைத்துவிட எண்ணுகின்றனர் இருப்பினும், அல்லாஹ் அவ்வொளியை பிரகாசிக்கச் செய்வான். (அல் குர்ஆன் – 9:32)
நன்றி M.ஷாமில் முஹம்மத்
லங்கா முஸ்லிம்