Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

மஸ்ஜித்களும் சமூகப் புனரமைப்பும் (1)

Posted on January 23, 2010 by admin

மஸ்ஜித்களும் சமூகப் புனரமைப்பும் (1)

[ மஸ்ஜித் பாடசாலையின் ஆரம்ப வித்தாக அமைந்தது. அது இபாதத்துக்குரிய இடமாக மாத்ததிரமன்றி முஸ்லிம்களுக்கு மார்க்க கல்வியையும், உலகக்கல்வியையும் போதிக்கும் கலையகமாகவும் விளங்கியது.

பொதுவாக மஸ்ஜித்களில் நடைபெற்ற வகுப்புகளில் மார்க்கப் பாடங்கள் மாத்திரமன்றி மொழி, இலக்கியம், இலக்கணம், கவிதை, வானவியல், கணிதம் போன்ற பல்வேறு கலைகள் போதிக்கப்பட்டன.

வரலாற்றில் பல மஸ்ஜிதுகள் நீதிமன்றங்களாகவும், ஆலோசனை மன்றங்களாகவும் செயற்பட்டுள்ளன.

மஸ்ஜிதுகளின் வரலாற்று புகழ்மிக்க பங்களிப்புகளும், பணிகளும் இன்று வெறுமனே ஏட்டளவில் காணப்படும் வரலாற்றுச் சம்பவங்களாக மாறிவிட்டன. இன்றைய மஸ்ஜிதுகள் அவற்றின் உயிரோட்டத்தை இழந்திருக்கின்றன.]

மஸ்ஜித்கள் பூமியில் அமைந்துள்ள அல்லாஹ்வின் இல்லங்களாகும். அவனது அருளும் அமைதியும் இறங்கும் இடங்கள் அவை. மலக்குகள் தரிசனம் கொடுக்கும் தலங்களாகவும் அவை விளங்குகின்றன. இதனால்தான், ”பூமியில் அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான இடங்கள் மஸ்ஜித்களாகும், அவனுக்கு மிக வெறுப்புக்குரிய இடங்கள் சந்தைகளாகும்.” என்றார்கள் நபியவர்கள். (முஸ்லிம்)

இறையச்சம்மிக்க இறையடியார்களின் புகலிடமாகவும் மஸ்ஜித்களே விளங்குகின்றன. அல்லாஹ்வின் அருளையும் ஆன்மாவுக்கு பயிற்சியையும் உள்ளத்திற்கு அமைதியையும் தேடுபவர்கள் ஒதுங்கும் இடம் மஸ்ஜிதாகவே இருக்க முடியும். எமது ஆரம்பகால இறைநேசர்கள் மஸ்ஜிதுடன் எத்தகைய இறுக்கமான உறவைக் கொண்டிருந்தார்கள் என்பதை அறிகின்ற போது எவரும் வியப்படையாமல் இருக்க மாட்டார்.

நாற்பது ஆண்டுகாலமாக பள்ளிவாயலுக்குச் சென்று ஒரு வேளை கூடத் தவராமல் நான் ஜமாஅத் தொழுகையை நிறைவேற்றி வந்திருக்கின்றேன்’ என்று சொல்கிறார்கள் சஈத் இப்னு முஸய்யிப் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள். ‘நான் கடந்த முப்பதாண்டு காலமாக முஅத்தின் அதான் சொல்லும்போதெல்லாம் பள்ளியிலேயே இருந்திருக்கின்றேன்” என்றும் அன்னார் ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டர்கள்.

இறைவிசுவாசிகள் மஸ்ஜித்களுடன் நெருக்கமான தொடர்புடைய வர்களாக இருக்க வேண்டும் என்பதற்காகவே ”ஒருவர் தனித்து வீட்டில் தொழுவதை விட மஸ்ஜிதுக்கு சென்று கூட்டாக நின்று தொழுவது இருபத்தேழு மடங்கு உயர்வானது” என்று சொன்னார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

மறுமையில், மஹ்ஷரில், நிழலே இல்லாத அந்நாளில் அல்லாஹ்வின் அர்ஷின் கீழ் நிழல் பெறும் பேற்றைப் பெறும் ஏழு கூட்டத்தாரில் மஸ்ஜித்களுடன் இறுக்கமான உறவு கொண்டிருந்தோரும் அடங்குவர் என்பது பற்றி குறிப்பிடும் ஹதீஸும் இங்கு கவனத்திற் கொள்ளத் தக்கதாகும். (பார்க்க : புகாரி, முஸ்லிம்)

ஒருவர் மஸ்ஜிதுடன் நெருங்கிய தொடர்புடையவராக இருப்பது, அவர் ஓர் உண்மை விசுவாசி என்பதற்கு போதுமான சான்றாகும். இதுபற்றி குறிப்பிடும் நபிமொழி பின்வருமாறு:

ஒருவர் மஸ்ஜிதுடன் தொடர்புடையவராக இருப்பின் அவருடைய ஈமானுக்கு நீங்கள் சாட்சி கூறுங்கள் (பார்க்க : திர்மிதி, இப்னு மாஜா)

 இவ்வாறு மஸ்ஜித்கள் புனிதத்துவம் வாய்ந்த இடங்களாக விளங்குவது போலவே, அவை முஸ்லிம் சமூகத்தின் நடைமுறை வாழ்வின் இதயமாகவும், அச்சாணியாகவும் காணப்படுகின்றன. ஏனெனில், சமூக நிர்மாணத்திற்கும், நிர்வாகத்திற்குமான கேந்திர நிலையங்களாக அமைவன மஸ்ஜித்களே.

இதனால்தான், நபியவர்கள் தான் விரும்பும் ஒரு கொள்கை வழிச் சமூகத்தை உருவாக்கும் நோக்குடன் மதீனா நோக்கி பயணமான போது தான் செல்லும் வழியில் இடையில் தங்கிய இடமான குபாவில் கூட ஒரு மஸ்ஜிதை நிர்மாணித்தார்கள். மதீனா சென்றடைந்ததும் அன்னாரின் முதற்கட்ட பணியாக அமைந்ததும் மஸ்ஜித் நிர்மாணமே.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனா சமூகத்தை மஸ்ஜிதுந் நபவியை மையமாக வைத்தே கட்டியெழுப்பினார்கள். அன்று மஸ்ஜிதுந் நபவி வெறும் வணக்கங்கள் நிறைவேற்றப்படும் இடமாக மாத்திரம் இருக்கவில்லை. எல்லா சமூக பணிகளும் அங்குதான் நடைபெற்றன. அங்கிருந்தே அவை முடுக்கிவிடப்பட்டன.

மஸ்ஜிதுந் நபவி உட்பட இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் மஸ்ஜிதுகள் ஆற்றிய பணிகள் நமது கவனத்திற்குரியவையாகும்.

கலாநிலையங்களாக மஸ்ஜிதுகள்

நபியவர்களி;ன் காலத்திலும் பிற்பட்ட காலங்களிலும் மஸ்ஜிதுகள் கல்விக்கூடங்களாக விளங்கின. மஸ்ஜிதுந் நபவியில் பல நபித் தோழர்கள் பாடம் நடாத்தி வந்தார்கள். அலி ரளியல்லாஹு அன்ஹு, இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு போன்ற நபித்தோழர்கள் மஸ்ஜிதில் கல்வி கற்றவர்களே. இமாம் மாலிக் இப்னு அனஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி தனது வகுப்புக்களை மஸ்ஜிதுந்நபவியில் வைத்தே நடாத்தி வந்தார்கள்.

எகிப்தின் கெய்ரோ நகரத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஜாமிஉ அம்ரிப்னுல் ஆஸ் பள்ளிவாயலில் ஹிஜ்ரி 36 அளவில் பாடப்போதனைகள் ஆரம்பிக்கப்பட்டன. இங்கு 40 க்கும் அதிகமான கல்வி வட்டங்கள் இருந்தன. இமாம் ஷாபிஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி, இமாம் இப்னு ஜரீர் அத்தபரீ ரஹ்மதுல்லாஹி அலைஹி போன்றோரின் வகுப்புகளும் இந்த மஸ்ஜிதில் நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இன்றைய உலகில் புகழ்பெற்ற இஸ்லாமிய பல்கலைக்கழகமான அல்அஸ்ஹர் ஆரம்பத்தில் ஒரு மஸ்ஜிதாகவே இருந்தது. அல்ஜாமிஉல் அஸ்ஹர் எனும் இப்பள்ளிவாயல் ஹி. 361 அளவில் நிர்மாணி;க்கப்பட்டதாகும். டியூனீஸியாவில் அமைந்துள்ள அஸ்ஸெய்தூனா பல்கலைக்கழகமும் ஜாமிஉ ஸெய்தூனா என்ற மஸ்ஜிதில் இருந்தே உருவானதாகும்.

பக்தாதில் அப்பாஸிய கலீபா அபூ ஜஃபர் அல்மன்ஸூர் நிர்மாணித்த ஜாமிஉல் மன்ஸூரிலும் அக்காலத்து புகழ்பெற்ற பல அறிஞர்கள் பாடம் நடாத்தினார்கள். பேரறிஞர் அல்கதீபுல் பக்தாதி இங்கு ஹதீஸ் பாடம் நடாத்தினார்கள். இமாம் அல் கிஸாஈ அரபு மொழியையும், அபுல் அதாஹிய்யா கவிதையையும் கற்பித்தனர். டமஸ்கஸில் அமைந்துள்ள புகழ்பெற்ற அல்ஜாமிஉல் உமவி பள்ளிவாயலிலும் பல்வேறுபட்ட கலைகள் போதிக்கப்பட்டன.

பொதுவாக மஸ்ஜித்களில் நடைபெற்ற வகுப்புகளில் மார்க்கப் பாடங்கள் மாத்திரமன்றி மொழி, இலக்கியம், இலக்கணம், கவிதை, வானவியல், கணிதம் போன்ற பல்வேறு கலைகள் போதிக்கப்பட்டன. இந்த உண்மையை கலாநிதி முஸ்தபா சிபாஈ பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

மஸ்ஜித் பாடசாலையின் ஆரம்ப வித்தாக அமைந்தது. அது இபாதத்துக்குரிய இடமாக மாத்ததிரமன்றி முஸ்லிம்களுக்கு மார்க்க கல்வியையும், உலகக்கல்வியையும் போதிக்கும் கலையகமாகவும் விளங்கியது. ‘அஞ்ஞான இருளில் இருந்த மேற்குலகிற்கு அறிவொளி பரப்பிய முஸ்லிம் ஸ்பெயினின்; அறிவியல் இயக்கத்திற்கு தொட்டிலாக, ஸ்பெய்னிய மஸ்ஜிதுகளே அமைந்தன என்பது இங்கு ஈண்டு குறிப்பிடத்தக்கதாகும்.’ இஷாத் தொழுகையைத் தொடர்ந்து கெய்ரோ ஜும்மா பள்ளிவாசலில் மாத்திரம் 110 வகுப்புகள் நடந்ததாக அறிஞர் அல்மக்திஸி குறிப்பிடுகின்றார்.

மக்கள் சமூக நிலையங்கள்

அகதிகள், அநாதரவானவர்கள், வீடற்றோர் முதலானோர் தங்குமிடமாகவும் மஸ்ஜிதுகள் விளங்கின. மஸ்ஜிதுந் நபவியில் தங்கியிருந்த திண்ணைத் தோழர்கள் அநாதரவானவர்களாகவும், வீடற்றவர்களாகவும் இருந்தவர்களே. மதீனாவுக்கு வந்த நஜ்ரான் கிறிஸ்த்தவ தூதுக்குழு நபியவர்களின் பணிப்புரையின் பேரில் மஸ்ஜிதுந்நபவியில் தங்குவதற்கான ஒழுங்கு செய்யப்பட்டமை, அன்று மஸ்ஜித் விருந்தினர் விடுதியாகவும் விளங்கியிருந்தது என்பதற்கு போதுமான சான்றாதாரமாகும்.

மற்றொரு சந்தர்ப்பத்தில் மதீனாவுக்கு வருகைத்தந்த ஒரு தூதுக்குழு மஸ்ஜிதுந் நபவியில் தங்கவைக்கப்பட்டதோடு அவர்களைக் காவல் புரியும் பணியில் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஈடுபட்டதாகவும் தெரியவருகின்றது. பிற்பட்ட காலங்களிலும் மஸ்ஜிதுகள் பிரயாணிகள், விருந்தினர், ஏழைகள் முதலானோருக்கு புகலிடங்களாக விளங்கியமை பற்றி உலகப் பயணிகளான இப்னு ருஷ்த், இப்னு பதூதா, இப்னு ஜுரைர், அல்மக்திஸி போன்றோர் குறிப்புகளை தந்துள்ளனர்.

ஸகாத், ஸகாதுல் பித்ர் முதலான வரிகளும், தர்மநிதிகளும் சேகரிக்கப்பட்டு விநியோகிக்கின்ற இடங்களாகவும் மஸ்ஜிதுகள் இருந்து வந்துள்ளன. வரலாற்றில் பல மஸ்ஜிதுகள் நீதிமன்றங்களாகவும், ஆலோசனை மன்றங்களாகவும் செயற்பட்டுள்ளன. நீதிபதிகள் அரச தலையீடு ஏதுமின்றி பொதுமக்களின் வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்குவார்கள்.

நீதிபதிகளான ஷுரைஹ், மர்வான் போன்றவர்கள் பள்ளிவாயல்களிலேயே வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கினார்கள். எகிப்தில் அம்ரிப்னுல் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களினால் புஸ்தாத் நகரத்திற்கு நீதிபதியாக நியமிக்கப்பட்ட காழி கைஸ் பள்ளிவாசலையே தனது நீதிமன்றமாக அமைத்துக் கொண்டார். உஹத், அஹ்ஸாப் முதலான யுத்தங்களின் போது கலந்தாலோசனைகள் மஸ்ஜிதுந் நபவியிலேயே இடம்பெற்றன.

அன்று மஸ்ஜிதுகளில் யுத்தப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. யுத்தத்திற்கான முன் ஆயத்தங்களும் அங்கிருந்தே மேற்கொள்ளப்பட்டன. யுத்தங்களில் காயப்பட்டவர்களுக்கு மஸ்ஜிதுகளில் வைத்து சிசிச்சை அளிக்கப்பட்ட சந்தர்ப்பங்களும் வரலாற்றில் இடம் பெற்றுள்ளன. அகழி யுத்தத்தின் போது காயப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக மஸ்ஜிதில் ஒரு விஷேட கூடாரம் அமைக்கப்பட்டதாக வரலாறு கூறுகின்றது.

பொதுவாக முஸ்லிம் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு மஸ்ஜிதுகளில் அமர்ந்து சிகிச்சையளிக்கும் வழமை இருந்து வந்துள்ளது. பெரும்பாலும் மஸ்ஜிதுகளில் மருத்துவ சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்பட்டன. இங்கு மருந்துகளை வைப்பதற்கான பிரத்தியேக இடங்களும் காணப்பட்டன. ஸ்பெயினின் குர்துபா பெரிய பள்ளிவாயல் ஒரு மருத்துவ மனையாகவும் செயற்பட்டது.

தொடர்பாடல் மையங்கள்

சமூகத்துக்கு தேவையான அறிவுறுத்தல்களும், செய்திகளும் மஸ்ஜிதுகளுக்கூடாகவே வழங்கப்பட்டன. இஸ்லாத்தின் தூதை முன்வைக்கும் இடங்களாகவும் அவை இருந்து வந்தன. உரைகள், பிரசங்கங்கள், உரையாடல்கள், கவியரங்கங்கள், விவாதமேடைகள் முதலானவை மஸ்ஜிதுகளில் பரவலாக இடம்பெற்றன. இவற்றுக்கூடாக இஸ்லாத்தின் தூது முன்வைக்கப்பட்டது. சாபித் பின் கைஸ், ஹஸ்ஸான் பின் சாபித் பேன்ற இஸ்லாமிய கவிஞர்கள் அந்நிய கவிஞர்களுடன் போட்டிக்கு கவிதைகள் பாடி அவர்களை இஸ்லாத்தின் பால் கவர்ந்த நிகழ்வுகளும் மஸ்ஜிதுந் நபவியில் இடம் பெற்றன.

அன்று மஸ்ஜிதுகள் எவ்வாறு சமூகத்தின் பல்துறைசார்ந்த தேவைகளை நிறைவேற்றி வந்தன என்பது பற்றி இமாம் இப்னு தைமியா பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: ‘இஸ்லாமிய அறிஞர்கள் அமரும் இடங்களாகவும், சமூகத்தின் கழகங்களாகவும் மஸ்ஜிதுகளே விளங்கின. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது புனிதப் பள்ளிவாயலை தக்வாவின் அடிப்படையில் நிர்மாணித்தார்கள். அங்கு தொழுதல், ஓதுதல், திக்ரு செய்தல், கற்றல், கற்பித்தல் உரைநிகழ்த்துதல் முதலான அனைத்தும் நடைபெற்றன. அரசியல் தலைவர்கள், தளபதிகள் நியமணம், அறிமுகங்கள் எல்லாம் நடந்தன. முஸ்லிம்கள் தமது உலக, மறுமை தொடர்பான எல்லா விவகாரங்களுக்காகவும் அங்குதான் கூடினார்கள்’

கட்டுரையின் தொடர்ச்சிக்கு ”Next” ஐ ‘‘கிளிக்” செய்யவும்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

49 + = 53

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb