Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

மஸ்ஜித்களும் சமூகப் புனரமைப்பும் (2)

Posted on January 23, 2010 by admin

மஸ்ஜித்களும் சமூகப் புனரமைப்பும் (2)

மஸ்ஜிதுகளின் இன்றைய நிலை

மஸ்ஜிதுகளின் வரலாற்று புகழ்மிக்க பங்களிப்புகளும், பணிகளும் இன்று வெறுமனே ஏட்டளவில் காணப்படும் வரலாற்றுச் சம்பவங்களாக மாறிவிட்டன. இன்றைய மஸ்ஜிதுகள் அவற்றின் உயிரோட்டத்தை இழந்திருக்கின்றன. நிதி, நீதி, நிர்வாகம் உற்பட முஸ்லிம் சமூகத்தின் அனைத்து துறைகளுக்கும் மையமாக விளங்கிய மஸ்ஜித் இன்று வணக்க வழிபாடுகளுடனும் சில சிறிய அளவிலான செயற்பாடுகளுடனும் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதைக் காண முடிகின்றது.

மஸ்ஜித்களின் இவ்வீழ்ச்சிக்கு பல்வேறு காரணங்களை குறிப்பிட முடியும். காலனித்துவ வாதிகள் மஸ்ஜிதுகள் முஸ்லிம் சமூகத்தில் வகிக்கும் இடத்தை நன்கு புரிந்து கொண்டனர். அவை தொடர்ந்தும் அவற்றின் செயற்பாடுகளை செய்து வந்தால் முஸ்லிம்களை அடிமைப்படுத்துவது என்பது அசாத்தியமானது என்பதையும் அவர்கள் உணர்ந்தனர்.

இந்த வகையில் மஸ்ஜிதுகள் என்பவை வணக்கஸ்தளங்களே அன்றி சமூக விவகாரங்களை மேற்கொள்வதற்கான இடமல்ல என்ற கண்ணோட்டம் திட்டமிட்ட அடிப்படையில் வளர்க்கப்பட்டது. காலப்போக்கில் இக்கண்ணோட்டம் முஸ்லிம்கள் மத்தியில் செல்வாக்குச் செலுத்தியதன் விளைவாக மஸ்ஜிதுகளின் வரலாற்றுப் பங்களிப்பு படிப்படியாக குறைந்து இன்றைய நிலையை அடைந்தது எனலாம்.

ஆயினும், இருபதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் உலகளாவிய ரீதியில் உருவான இஸ்லாமிய எழுச்சியின் விளைவாக, மஸ்ஜிதுகளும் முஸ்லிம் சமூகத்தில் அவை பெற்றிருந்த இடத்தை மீண்டும் பெறும் நிலை தோன்றியுள்ளது. இந்நிலையில் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் உயிர்நாடியாக விளங்கும் இந்நாட்டில் அமைந்துள்ள மஸ்ஜிதுகளையும் செயற்திறன் மிக்க சமூகமையங்களாக மாற்றுவதற்கு ஆவணம் செய்தல் காலத்தின் தேவையும் சன்மார்க்கக் கடமையுமாகும்.

நமது பள்ளிவாசல்களை செயற்திறன்மிக்கவையாக மாற்றுவதில் பள்ளிவாசல்களின் பரிபாலன சபைகளின் பங்கு மகத்தானதாகும்.

பள்ளி பரிபாலணம்

முதலில் இறை இல்லங்களை பரிபாலனம் செய்வது எத்தகைய பொறுப்பான பணி என்பதையும் உயர்ந்த அமல் என்பதையும் நிருவாகிகள் புரிந்து கொள்ளல் வேண்டும். மஸ்ஜிதுகளை நிர்மாணிப்பதும், பரிபாலிப்பதும் நேர்வழிப் பெற்ற சிறந்த முஃமின்களின் பண்பாக அல்குர்ஆன் வர்ணிக்கின்றது. (பார்க்க: அல்குர்ஆன் 9:18)

இவ்வுலகில் ஓர் இறை இல்லத்தை நிர்மாணிப்பவர்களுக்கு அல்லாஹ் சுவனத்தில் ஓர் இல்லத்தை நிர்மாணிக்கின்றான் என்ற நபிவாக்கும் இங்கு நினைவு கூறத்தக்கதாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் ஒரு கருப்பின பெண் இருந்தாள்.

பள்ளிவாயலை கூட்டி சுத்தம் செய்வது அவளது வழக்கமாக இருந்தது. சில நாட்கள் அவளை காண முடியவில்லை. இதனை அவதானித்த நபியவர்கள் அவளைப்பற்றி விசாரித்தார்கள்.

அவள் இறந்து விட்டதாக அன்னாருக்கு தெரிய வந்தது. ‘அவள் இறந்த செய்தியை அப்போதே நீங்கள் எனக்கு சொல்லியிருக்கக் கூடாதா?’ என்று தோழர்களை விழித்துக் கூறிய நபியவர்கள் அவளது கப்ரை தரிசித்து அவளுக்காக தொழுகையையும் நிறைவேற்றினார்கள். (புகாரி, முஸ்லிம்). ”நான் அப்பெண்ணை சுவனத்தில் பார்த்தேன்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னதாக குறிப்பிடும் ஓர் அறிவிப்பு முஃஜமுத் தபரானியில் பதிவாகியுள்ளது. இது மஸ்ஜிது தொடர்பான பணிகளில் ஈடுபடுவதன் சிறப்பை எடுத்துச் சொல்ல போதுமான ஆதாரமாகும்.

மஸ்ஜிதுகளை நிர்வகிப்பது ஒர் உயர்ந்த அமலாக இருப்பது போலவே ஒரு பெரிய பொறுப்பு என்பதையும் மேலே குறிப்பிட்டோம். இந்த வகையில் தகுதியுடையவர்கள் பரிபாலண சபையில் இருக்கின்ற போதே ஒரு பள்ளிவாயல் அதன் பணியை செவ்வனே நிறைவேற்ற முடியும். பரிபாலண சபைக்கு நியமிக்கப்படுவோர் அல்குர்ஆன் குறிப்பிடும் மஸ்ஜித் பரிபாலணத்திற்குரிய தன்மைகளையும் தகைமைகளையும் பெற்றவர்களாக இருக்கின்றார்களா என்பது உறுதி செய்யப்படல் வேண்டும்.

”அல்லாஹ்வுடைய பள்ளிகளை பரிபாலணம் செய்பவர்கள் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் விசுவாசித்து தொழுகையையும் நிறைவேற்றி, ஸகாத்தும் கொடுத்து, அல்லாஹ்வையன்றி மற்ற எவருக்கும் பயப்படாமலும் இருப்பவர்களே. இத்தகையோர் நேர்வழிப்பெற்றவர்களாக இருக்கத்தக்கவர்களே” (அல்குர்ஆன் 9:18)

பள்ளிகளும் பணிகளும்

நம்நாட்டு பள்ளிவாயல்களும் அவற்றுக்குரிய வரலாற்றுப் பங்களிப்பை நிறைவேற்றுவதற்கு பரிபாலண சபைகள் முனைப்புடன் செயற்பட கடமைப்பட்டுள்ளன. இலங்கை, முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் ஒரு நாடு. கடந்த ஆயிரம் ஆண்டுகளாக நாம் இந்த நாட்டில் வாழ்ந்து வந்த போதிலும் இந்த நாட்டின் பெரும்பான்மை சமூகத்திற்கு இஸ்லாத்தின் செய்தியை சொல்லத்தவறி விட்டோம் என்பதை நாம் ஏற்றாக வேண்டும்.

இப்போது இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் சர்வதேச மட்டத்திலும் ஏன் உள்நாட்டு மட்டத்திலும் கூட பிழையான கருத்துக்கள் பரவலாக உருவாகியுள்ளன. இந்நிலையில் உண்மை நிலையை முஸ்லிமல்லாதாருக்கு புரியவைப்பதற்கும் இஸ்லாத்தின் தூதை முன்வைப்பதற்கும் சமூகங்களுக்கிடையிலான நல்லுறவை வளர்ப்பதற்கும் உரிய இடங்களாக மஸ்ஜிதுகள் காணப்படுகின்றன. எனவே, முஸ்லிமல்லாதார் எமது மஸ்ஜிதுகளுக்கு வருவதற்கும் இஸ்லாம், முஸ்லிம்கள் பற்றிய உண்மைகளை அறிவதற்கும் வழிசெய்வது சமூகத்தின் முன்னால் உள்ள மிகப் பெறும் கடமையாகும்.

இன்று அமெரிக்கா, பிரித்தானியா முதலான மேற்குலக நாடுகளிலும் பஹ்ரைன் போன்ற சில மத்திய கிழக்கு நாடுகளிலும் முஸ்லிம் அல்லாதாருக்கான தஃவாவை முன்வைப்பதில் சில மஸ்ஜிதுகள் முன்னணியில் நின்று இயங்கி வருகின்றன. மஸ்ஜிதை பார்வையிட வருபவர்களை வரவேற்கவும் அவர்களுக்கு வழிகாட்டவும் தேவையான விளக்கங்களை வழங்கவும் இப்பள்ளிவாயல்களில் விஷேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இஸ்லாம் பற்றிய நூல்களையும் பிரசுரங்கங்களையும் பெற்றுக்கொள்வதற்கு இங்கு விஷேட ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக செப்டம்பர் 11 அசம்பாவிதங்களைத் தொடர்ந்து இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் உருவான பிழையான கருத்துக்களை போக்குவதிலும் பலரை இஸ்லாத்தின் பால் கவர்வதிலும் இவை பெரும் பணியாற்றி வருகின்றன.

முஸ்லிமல்லாதாரை பள்ளிகளில் நுழைய அனுமதிப்பதில் முஸ்லிம்கள் மத்தியில் நீண்ட காலமாகவே ஒருவகை தயக்கம் இருந்துவருகின்றது. ஆனால் அவர்கள் அவ்வாறு பள்ளிவாயல்களை பார்வையிட இஸ்லாத்தில் எவ்வித தடையும் இருப்பதாக தெரியவில்லை. முஸ்லிமல்லாதாரை மஸ்ஜிதுகளில் நுழைய அனுமதிக்கலாம் என்பதற்கு பின்வரும் அல்குர்ஆன் வசனம் ஆதாரமாக கொள்ளப்படுகின்றது.

”மேலும் இணைவைத்துக் கொண்டிருப்போரில் எவரேனும் (நபியே) உம்மிடம் அபயம் தேடினால் அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக, பின்னர் அவருக்கு அபயமளிக்கும் வேறு இடத்தில் அவரை சேர்த்து வைப்பீராக. ஏனெனில் அவர்கள் அறியாத சமூகத்தவர்களாய் இருக்கின்றனர்.” (9:6)

முஸ்லிம்கள் பனூஹனீஃபா கோத்திரத்தை சேர்ந்த அடிமை ஒருவரைக் கைதியாக நபியவர்களிடம் கொண்டு வந்த போது அவரை பள்ளிவாயல் தூண் ஒன்றில் மூன்று நாட்களுக்கு கட்டி வைக்குமாறு அன்னார் பணித்தார்கள். அவர் முஸ்லிம்களின் வணக்க முறைகளையும் பண்பாடுகளையும் பார்க்க வேண்டுமென்பதே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நோக்கமாக இருந்தது. அக்கைதிக்கு பள்ளியிலேயே உணவு வழங்கப்பட்டது. ஏனைய தேவைகளை நிறைவேற்றவும் ஒழுங்குகள் செய்யப்பட்டன. மூன்று நாட்களின் பின்னர் அவர் அவிழ்த்து விடப்பட்ட போது இஸ்லாத்தினால் கவரப்பட்டிருந்த அவர் ஷஹாதத்தை மொழிந்து இஸ்லாத்தை தழுவினார்.

நஜ்ரான் கிறிஸ்த்தவ தூதுக் குழுவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மஸ்ஜிதுந் நபவியில் வைத்து வரவேற்றதோடு அங்குதான் அவர்களுடன் பேச்சுவார்த்தையும் நடாத்தினார்கள். அவர்களது வணக்க நேரம் வந்த போது நபியவர்கள் தனது மஸ்ஜிதிலேயே ஒரு பகுதியை அவர்களுக்கு ஒதுக்கியும் கொடுத்தார்கள்.

இலங்கையைப் பொருத்தவரையில் குறைந்த பட்சம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரதான நகரங்களில் பள்ளிவாசல்களை முஸ்லிமல்லாதார் வந்து பார்வையிட ஒழுங்கு செய்யப்படல் வேண்டும். குறிப்பாக பாடசாலை மாணவர்கள், உள்நாட்டு வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் இப்பள்ளிவாயல்களை தரிசிக்க ஆவணம் செய்யப்படல் வேண்டும். இது இஸ்லாத்தின் தூதை அவர்கள் இலகுவில் புரிந்து கொள்ள வழிசெய்வதோடு சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வை வளர்க்கவும் பேருதவியாக அமையும்.

மேலும் தற்கால மஸ்ஜிதுகளின் செயற்பாடுகளை விரிவுபடுத்துவதன் மூலம் அவற்றின் பங்களிப்பை செயற்திறன் மிக்கதாக அமைத்துக் கொள்ள முடியும். இந்த வகையில் மஸ்ஜித் நிர்வாகிகள் பள்ளிவாசலை மையமாகக் கொண்டு மேற்கொள்ளக் கூடிய சில முக்கிய பணிகளை கீழே தருகின்றோம்.

1. பள்ளிவாசலை சார்ந்து நடைபெறும் மத்ரஸாவில் அல்குர்ஆன், சன்மார்க்க போதனைகளுடன் நடைமுறைக் கல்வியுடன் தொடர்பான வகுப்புகளையும் நடாத்த ஒழுங்கு செய்தல்.

2. நூல்நிலையம் அமைத்தல்.

3. பெண்களுக்காக பள்ளியில் பிரத்தியேக இடம் ஒதுக்குதல்.

4. சமூகத்தில் உருவாகும் பிணக்குகளையும் சர்ச்சைகளையும் பள்ளியில் தீர்த்து வைக்க வழிசெய்தல்.

5. நிவாரண உதவிகள்,சமூக சேவைகளுக்கான மையமாக இயங்குதல்.

6. வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்தை அமுல்படுத்துதல்.

7. சமூக நல திட்டங்களை வகுத்து செயற்படுத்துதல்.

8. ஸகாத், ஸதகதுல் பித்ர் முதலானவற்றை கூட்டாக சேர்த்து விநியோகிக்க வழிசெய்தல்.

9. இமாம்கள், கதீப்மார்களை பயிற்றுவிக்க ஒழுங்கு செய்தல்.

10.குத்பாக்களை செயற்றிறன்மிக்கதாக அமைத்து கொள்ள ஆவணச் செய்தல்.

11.முஸ்லிமல்லாதோர் பள்ளிவாசலை வந்து பார்வையிடவும் தேவையான விளக்கங்களை பெறவும் உரிய ஏற்பாடுகளை செய்தல்.

மேற்குறிப்பிட்ட செயற்பாடுகளை ஒரு மஸ்ஜிதில் மேற்கொள்வதற்கு மஸ்ஜிதின் கட்டட அமைப்பிலும் மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கும். இந்தவகையில் மஸ்ஜிதுகளில் பெண்களுக்கான தொழுகையறை, நூலகம், மாநாட்டு மண்டபம், வகுப்பறைகள், வரவேற்பறை முதலான பகுதிகளும் உள்ளடக்கப்படல் வேண்டும்.

இன்று உலகின் பல நாடுகளில் வெற்றிகரமாக இயங்குகின்ற மஸ்ஜிதுகளில் இப்பகுதிகள் அனைத்தும் உள்ளடக்கப்பட்டிருப்பதை காணமுடியும். சுருங்கச் சொல்லின் ஒவ்வொரு பள்ளிவாயலும் இஸ்லாமிய சனசமூக நிலையமாக இயங்க வழிவகைகள் செய்யப்படுவதன் மூலமே மஸ்ஜிதுகளின் உயிரோட்டம் மீண்டும் கட்டியெழுப்பப்படுவது சாத்தியப்பட முடியும்.

நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்த அல்லாஹ் போதுமானவன்.

”Jazaakallaahu khairan” http://www.sheikhagar.net/articles/genaral3/59-masjidhhalumsamuha-punaramaipum

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 8 = 1

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb