வசதியிருந்தும் – அல்லாஹ்வுக்கு அடிபணிந்தவராக – மிகஉயர்தர ஆடைகளை அணியாமல் தவிர்ந்து கொண்டவரை மறுமையில் அல்லாஹ் படைப்பினங்களுக்கு மத்தியில் அழைத்து, முஃமின்கள் அணியும் சொர்க்கத்து ஆடைகளில் அவர் விரும்பியதை அணிந்து கொள்ள அனுமதியளிப்பான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர் : முஆத் ரளியல்லாஹு அன்ஹு, நூற்கள் : திர்மிதீ 2405, அஹ்மத், ஹாகிம்)
நிச்சயமாக உண்மை நல்லவைகளின் பக்கம் வழிகாட்டுகிறது. நிச்சயமாக நல்லவை சொர்க்கத்தின் பக்கம் வழிகாட்டுகிறது. உண்மை பேசும் மனிதன் உண்மையாளனாகிவிடுகிறான்.
நிச்சயமாக பொய் தீமையின் பக்கம் வழிகாட்டுகிறது. நிச்சயமாக தீமை நரகத்தின் பக்கம் வழிகாட்டுகிறது. நிச்சயமாக பொய்யுரைப்பவன் அல்லாஹ்விடத்தில் பொய்யன் என்று எழுதப்படுகிறான்
என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் ரளியல்லாஹு அன்ஹு, நூற்கள் : புகாரீ 5629, முஸ்லிம்)
தன் கோபத்தை வெளிப்படுத்த சக்தி பெற்றிருந்தும் அதனை அடக்கிக் கொண்டவரை மறுமை நாளில் படைப்பினங்களுக்கு முன்னிலையில் அழைத்து, அவர் விரும்பிய ஹூருல்ஈனை (சொர்க்கத்து கன்னியரை) தேர்ந்தெடுத்துக் கொள்ள அல்லாஹ் அனுமதி வழங்குவான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர் : முஆத் இப்னு அனஸ் அல்ஜுஹ்னீ ரளியல்லாஹு அன்ஹு, நூற்கள்: அபூதாவூத் 4147, திர்மிதீ, இப்னுமாஜா)மதினாவில் மரணித்த ஒருவருக்குத் தொழ வைத்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இவர் பிறந்த ஊர் அல்லாத அந்நிய ஊரில் மரணித்திருக்கக் கூடாதா! என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! எதனால்? என்று பொதுமக்களில் ஒருவர் கேட்டார். அதற்கவர்கள், அன்னிய ஊரில் மரணித்தவருக்கு அவர் பிறந்த ஊரிலிருந்து அவர் கடந்த சென்ற தூரம் வரை அளக்கப்பட்டு –அந்தளவு இடம்– அவருக்கு சொர்க்கத்தில் வழங்கப்படுகிறது என்று கூறினார்கள். (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் –ரலி, நூற்கள் : அஹ்மத் 6369, நஸாயீ, இப்னுமாஜா)
அல்லாஹ்வுடைய பாதையில் போரிட்டு– கொல்லப்படுவதும் ஷஹாதத் ஆகும்.
காளராவினால் மரணிப்பதும் ஷஹாதத் ஆகும்.
மூழ்கி மரணிப்பதும் ஷஹாதத் ஆகும்.
வயிற்றுப் போக்கால் மரணிப்பதும் ஷஹாதத் ஆகும்.
பிறக்கும் குழந்தை தன் தொப்புள் கொடியினால் தாயை சொர்க்கத்தின் பக்கம் இழுக்கின்றது
என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : ராஷித் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : அஹ்மத் 15426)