காட்டுமிராண்டிகள் யார்?
புர்கா போடுவது காட்டுமிராண்டித்தனம் என்று முழக்கமிடுகின்றவர்கள்; காட்டுமிராண்டிகள் யார்? என்பதை முதலில் விளங்கிக் கொள்ளட்டும்.
புர்கா போடுவது காட்டுமிராண்டித்தனம் என்று முழக்கமிடுகின்றவர்கள்தான் உண்மையாகவே காட்டுமிராண்டிகளாக வாழ்கிறார்கள். தங்களைப்போல் எல்லோருமே காட்டுமிராண்டிகளாக வாழ வேண்டுமென்பதில் அவர்களுக்கு அப்படி ஒரு ஆசை!
எது காட்டுமிராண்டித்தனம்? மனித இனத்திற்கும் விலங்கினத்திற்கும் உள்ள வேறுபாடுகளில் ஒன்று – பாலியல் குறித்த விஷயங்களில் விலங்கினங்களுக்கு எவ்வித கட்டுப்பாடும் கிடையாது. ஆனால் மனித இனம் அப்படியல்ல. பல கட்டுப்பாடுகளுக்கும் சட்ட திட்டங்களுக்கும் உட்பட்டவன்மனிதன்.
விலங்குகளைப்போல் கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறையை ஆதரிக்கும் அத்தனை பேருமே காட்டுமிரண்டிகள்தான். இவர்களில் போலித்தனமான அறிவு ஜீவிகளும் அடக்கம். இந்த போலியான அறிவு ஜீவிகளால்தான் இன்றைய உலகம் சின்னாபின்னமாகிக்கொண்டு வருகிறது.
மனிதனுக்கும் விலங்கினங்களுக்கும் வித்தியாசம் காணத்தெரியாத இவர்கள் அறிவு ஜீவிகளாம்! வெட்கக்கேடு. (வெட்க உணர்வை தூக்கி எறிந்து விட்டவர்கள்தானே…! இவர்களுக்கு கண்ணியமிக்க புர்காவைப்பற்றி விமரிசனம் செய்வதற்கு எவ்வித அறுகதையும் இல்லை.
பித்தலையைப்பார்த்து இளித்ததாம் ஈயம் என்று கூட சொல்வது தவறு; பசும்பொன்னைப்பார்த்து பொறாமைப்பட்டதாம் ஈயம் என்று சொல்லவேண்டும். வைரத்தை கூழாங்கற்களாக மதிப்பிடும் பார்வையற்றவர்கள்; இவர்களுக்கு பெயர் அறிவுஜீவிகளாம்!!!
இறைவன் வழங்கியிருக்கும் அபிரிமிதமான செல்வங்களை முறையாக, சரியாக பங்கிடத்தெறியாத மகா மேதைகள்! நாட்டுக்கு நாடு போர் என்ற பெயரில் மனித சமுதாயத்தை கூறு போட்டு கொல்லும் கொடூரமானவர்கள்; கோட்டும் சூட்டும் அணிந்து கொண்டு உலகை நாசப்படுத்தும் பசுத்தோல் போர்த்திய காட்டுமிராண்டிகளின் பார்வை காலங்காலமாக ‘புர்கா’வை விமர்சிப்பதற்குக்காரணம் இஸ்லாத்தின் வளர்ச்சி! அதை என்னதான் முயன்றாலும் அவர்களால் தடுக்கவே முடியாது.
ஏன்? என்ன காரணம்? இந்த உலகை மட்டுமல்ல அகிலத்தையும் படைத்த ஏக வல்ல அல்லாஹ் தனது சொல்லை நிலை நிறுத்தியே தீருவான். ஆம்! சகல பொருட்கள்மீது ஆற்றல் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்;
”தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் – ஆனால் இறை மறுப்பாளர்கள் (காஃபிர்கள்) வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.”(ஸூரத்துத் தவ்பா- 9:32. )
”அவனே தன் தூதரை நேர் வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான் – முஷ்ரிக்குகள் (இணை வைப்பவர்கள், இம்மார்க்கத்தை) வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே (அவ்வாறு தன் தூதரையனுப்பினான்.)” (ஸூரத்துத் தவ்பா- 9:33. )
adm. www.nidur.info