கட்டாய திருமணப் பதிவு சட்டம் அமலாக்கப்படுவதை எதிர்த்து ஆல் இந்தியா இமாம் கவுன்சில் ஆர்ப்பாட்டம்
இந்திய அரசியல் சாசன சட்டம் வழங்கியுள்ள மத சுதந்திரத்திற்கு எத்தகைய பங்கமும் நேரிடாதவாறு திருமண கட்டாய பதிவு சட்டத்தின் விதிமுறைகளை ஒழுங்குப்படுத்தவும்,
முஸ்லிம் தனியார் சட்ட பாதுகாப்பிற்கு உத்திரவாதம் வழங்கவும் அதுவரை சட்ட அமுலாக்கத்தை நிறுத்த்தவும்
தமிழக அரசை வலியுறுத்தி உலமாக்கள் தலைமையில் நான்கு தினங்களுக்கு முன்பு சிதம்பரம் கஞ்சித்தொட்டி முனையில் ஆல் இந்தியா இமாம் கவுன்சில் மாவட்டத்தலைவர் ஹாஜி. மௌலவி. எ. முஹம்மது அபுபக்கர் மிஸ்பாஹி அவர்களின் தலைமையில் மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆல் இந்தியா இமாம் கவுன்சில் மாநில பொதுச்செயலாளர் மௌலவி டி. சையது இப்ராஹிம் உஸ்மானி, வேற்றுமையில் ஒற்றுமை கண்ட நம் நாட்டின் அரசியல் சாசன சட்டம் பிரிவு 25-ன் படி ஒவ்வொரு இந்திய குடிமக்களும் மதச்சுதந்திரத்தை பாதுகாத்துக்கொள்வது அடிப்படை உரிமைகளில் ஒன்று என உத்திரவாம் வழங்கியுள்ளது என குறிப்பிட்டு பேசினார்.
அதனைத்தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்டத்தலைவர் மௌலவி. எ. ஆபிருத்தீன் மன்பயீ,
ஆல் இந்தியா இமாம் கவுன்சில் மாவட்ட பொருளாளர் மௌலவி. ஓ.ஆர். ஹஜ்ஜிமுஹம்மது மன்பயீ,
லால்பேட்டை ஐக்கிய ஜமாஅத் அமைப்பாளர் மௌலவி. எம். ஒய். முஹம்மது அன்சாரி மன்பயீ,
ஷேக் மொய்தீன் மிஸ்பாஹி
ஆகியோர் கோரிக்கைகளை முன்வைத்து உரைநிகழ்த்தி ‘
தெளிவில்லாத திருமண பதிவு சட்டம்! தமிழகத்தின் கருப்புச்சட்டம்!’ நிறுத்திவை! நிறுத்திவை! திருமண கட்டாய பதிவு சட்ட அமுலாக்கத்தை நிறுத்திவை! போன்ற கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜஃபருல்லா மன்பயீ, அபுபக்கர் ஃபிர்தௌஸி, உஸ்மான் மன்பயீ, ரஹமத்துல்லாஹ் மன்பயீ உள்ளிட்ட மாவட்டம் தழுவிய உலமாக்கள், மதரஸா பேராசிரியர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துக்கொண்டனர்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மௌலவி. எம். இசட். கலிலுர்ரஹ்மான் பாகவி. அவர்களின் நன்றியுரையுடன் ஆர்ப்பாட்டம் நிறைவுபெற்றது.
தமிழக அரசு கொண்டுவந்திருக்கும் இத்திருமண சட்டத்தினால் ஏற்படும் பின்விளைவுகளைப்பற்றி ஆராயாமல் சமுதாய இயக்கங்கள் இன்னும் தூங்கிக்கொண்டிருப்பதாகவே தெரிகிறது. ஆலிம்கள் களத்தில் இறங்கி போராட்டதில் இறங்கியிருப்பதிலிருந்தே இது எவ்வளவு முக்கியமான பிரச்சனை என்பதை சமூக ஆர்வலர்கள் புரிந்து கொண்டு – ஒரு எச்சரிக்கை மணியாக எடுத்துக் கொண்டு இச்சட்டத்தை அரசு வாபஸ் வாங்க முயற்சி எடுக்க வலியுருத்த வேண்டும்.
sources: paalaivanathoothu.blogspot.com