பொன்மொழி முத்துக்கள்
1. சின்னச் சின்ன விஷயங்கள் சந்தோஷத்தைத் தரும். ஆனால், சந்தோஷம் சின்ன விஷயம் இல்லை.
2. செலவுக்குமேல் வரும்படி உள்ளவன் செல்வன்; வரவுக்குமேல் செலவழிப்பவன் ஏழை.
3. போனால் வராதது ஒன்றே ஒன்று; அதுதான் காலம்(நேரம்).
4. மனைவி இல்லாதவன் அரை மனிதன்.
5. ஆண்களைவிடப் பெண்களுக்குப் பசி இரு மடங்கு; புத்தி நான்கு மடங்கு; ஆனால் ஆசைகளோ எட்டு மடங்கு. (பெண்கள் வருந்தற்க)
6. அழகுக்கு ஆற்றல் அதிகம்; ஆயினும் அதைவிட ஆற்றலுடையது பணமே!
7. உள்ளத்தில் அன்பு இருந்தால் மட்டும் போதாது; அது செயலில் வெளிப்படவேண்டும்.
8. பெண்ணை ஒரு பொருள்போல் நடத்துவதால்தான் எல்லா இன்னல்களும் வருகின்றன.
9. எழுதப்படும் சொல்லைவிட நாக்கால் பேசப்படும் சொல்லே வலிமை மிக்கது.
10. நம்பிக்கை இல்லாத இடத்தில் முயற்சியும் இருக்க முடியாது.
11. பரிசுத்த இதயத்தைப் பெற்று இருப்பதே மனிதனின் முதல் தகுதி.
12. பொறுமைசாலிக்குக் கோபம் வரும்பொழுது எச்சரிக்கையுடன் விலகி இருந்து கொள்வது நல்லது
13. துன்பங்கள் நிலையானவை அல்ல; அவை ஆற்றில் ஓடும் தண்ணீர்போல் ஓடிவிடும்.
14. வல்லமையற்ற நீதி ஆற்றலற்றது; நீதியற்ற வல்லமை கொடுங்கோன்மை.
15. எந்த ஒரு முட்டாளும் பணம் ஈட்டமுடியும்; ஆனால் அறிவாளியால் மட்டுமே அதைக் காப்பாற்ற இயலும்.
16. ஒருவனைத் தனிமையில் கண்டிக்கவேண்டும்; பலர் முன் பாராட்டவேண்டும்.
17. பிள்ளையின் அருமை பெற்றவளுக்குத்தான் தெரியும்.
18. இயலுமாயின் பிறரைவிட அறிவாளியாக இரு; ஆனால், அதை அவர்களிடம் கூறாதே!
19. நண்பனுக்காக உயிரைக் கொடுப்பது எளிது; ஆனால், உயிரைக் கொடுப்பதற்குரிய நண்பன் கிடைப்பதுதான் அரிது.
20. துன்பம் வந்துவிடுமோ என்னும் அச்சம் துன்பத்தைவிடக் கொடியது; துயரமானது.
21. இறந்தவர்கள் இருப்பவர்களின் கண்களைத் திறக்கிறார்கள்.