Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

நன்மை பயக்கும் நபிமொழி – 63

Posted on January 20, 2010 by admin

حدثنا عثمان بن أبي شيبة حدثنا يحيى بن يعلى المحاربي حدثنا أبي حدثنا غيلان عن جعفر بن إياس عن مجاهد عن ابن عباس قال لما نزلت هذه الآية والذين يكنزون الذهب والفضة قال كبر ذلك على المسلمين فقال عمر رضي الله عنه أنا أفرج عنكم فانطلق فقال يا نبي الله إنه كبر على أصحابك هذه الآية فقال رسول الله إن الله لم يفرض الزكاة إلا ليطيب ما بقي من أموالكم وإنما فرض المواريث لتكون لمن بعدكم فكبر عمر ثم قال له ألا أخبرك بخير ما يكنز المرء المرأة الصالحة إذا نظر إليها سرته وإذا أمرها أطاعته وإذا غاب عنها حفظته – ابوداود

“பொன்னையும் வெள்ளியையும் சேமித்து வைத்து” என்ற வசனம் அருளப்பட்டது நபித்தோழர்களுக்கு பெரும் பாரமாக தெரிந்தது. ”உங்களது கவலையை நான் நீக்குகிறேன்” என்று கூறி விட்டு, இறைத்தூதரை நோக்கிச் சென்ற உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! இவ்வசனம் உங்களின் தோழர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது” என்று கூறினார்கள்.

அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “உங்களின் செல்வத்தில் எஞ்சியதை (சேமிப்பதை) அனுமதிப்பதற்காகவே தவிர வேறு எதற்கும் ஜகாத்தை அல்லாஹ் கடமையாக்கவில்லை. உங்களுக்குப் பின் வருவோருக்கு செல்வம் சேர வேண்டும் என்பதற்காகத்தான் வாரிசுரிமைச் சட்டத்தைக் கடமையாக்கினான்” என கூறினார்கள்.

இதை செவியுற்ற உமர் ரளியல்லாஹு அன்ஹு தக்பீர் முழங்கிய போது, “மனிதன் சேமிப்பதில் சிறந்தது” எது என உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” கணவன் காணும்போது மகிழ்விக்கும், அவனது கட்டளைக்கு கீழ்படிந்து நடக்கும், அவளை விட்டும் அவன் வெளியில் சென்று விட்டால் அவனை (அவனது உடமையை) பாதுகாக்கும் நல்ல மனைவிதான் சிறந்த சேமிப்பாகும்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அபூ தாவூத்).

முஸ்தவ்ரித் இப்னு ஷத்தாத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ”மறுமை விஷயத்தில் இவ்வுலகம் என்பது, உங்களில் ஒருவர் தன்விரலை கடலில் வைத்து, அதில் எவ்வளவு தண்ணீர்; உள்ளது என்பதைப் பார்ப்பது போல் தானே தவிர வேறில்லை” என்று கூறினார்கள். (முஸ்லிம்)

இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ”சொர்க்கம் என்பது, உங்களில் ஒருவருக்கு அவரது செருப்பின் வாரை விட மிக நெருக்கமாக இருக்கும். நரகமும் இதுபோல் தான்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (புகாரி)

ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு கிராமப்புற அரபி வந்து, ”இறைத்தூதர் அவர்களே! சொர்க்கம் – நரகத்தை அவசியமாக்கிடும் இரண்டு விஷயங்கள் என்ன? என்று கேட்டார். ”ஒருவர் அல்லாஹ்வுக்கு எதையும் இணை வைக்காமல் இறந்து விட்டால், அவர் சொர்க்கத்தில் நுழைவார். அவனுக்கு எதையேனும் இணை வைத்தவனாக இறந்து விட்டால், அவன் நரகில் நுழைவான்;” என்று கூறினார்கள். (முஸ்லிம்)

அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ”நிச்சயமாக இறை மறுப்பாளர் ஒரு நன்மையைச் செய்தால், அதன் மூலம் இவ்வுலகில் அவனுக்கு உணவாக (கூலி) கொடுக்கப்படும். இறை நம்பிக்கையாளன் நன்மை செய்தால், நிச்சயமாக அல்லாஹ் அவனுக்காக அவனது நன்மைகளை மறுமைக்காக சேகரிக்கிறான். மேலும் இவ்வுலகிலேயே அவனது வழிபாட்டிற்காக உணவை அவனுக்கு வழங்குகிறான்” என்று கூறினார்கள். (முஸ்லிம்)

www.nidur.info 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 2 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb