”தித்திக்கும் திருமறை” கல்விக்கு உயிர் ஊட்டும் காவியம் (1)
மவ்லானா M.அப்துல் வஹ்ஹாப் M.A., B.Th., ரஹ்மதுல்லாஹி அலைஹி
”உலகத்தோடும், அதைப் படைத்த இறைவனோடும் மனிதன் கொண்டுள்ள பல்வேறு விதமான தொடர்புகளின் தன்மை பற்றிய உள்ளுணர்வுகளை எழுப்புவதே திருமறையின் நோக்கம். ”குர்ஆனின் போதனைகள் வெற்றியடையாமல் இருப்பதில்லை. நம் திட்டங்கள் அனைத்தும் இப்போதனைகளைத் தாண்டிச் செல்லா (இவற்றிற்குக் கட்டுப்பட்டே இருக்கும்)” என்று கெத்தே என்னும் ஜெர்மானியப் பேரறிஞர் கூறியதும் இதே கருத்தைக் கொண்டுதான்” என்று அல்லாமா முஹம்மது இக்பால் ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறியிருக்கிறார்.
மனிதனின் உள்ளத்திலும், அவனைச் சுற்றிலும் உள்ள எல்லா சக்திகளையும் பக்குவப்படுத்தித் தனக்குப் பணி செய்ய அவற்றை அமைத்துக் கொள்ள மனிதனுக்குக் குர்ஆன் பூரண உரிமை தருகிறது. இதற்கு முதற்படியாக மனிதன் கல்வியைத் தேடவேண்டும், அறிவைப் பெற்றுக்கொள்ள வேண்டும். நல்லறிவு பெறாத மனிதனின் சக்தி விரயமாகிவிடும். ஆகவேதான், ”இறைவா எனக்கு அறிவை வளப்படுத்து,” என்று மனிதன் பிரார்த்திக்குமாறு திருமறை பணிக்கிறது.
திருமறையின் பெருவிளக்கமாக வாழ்ந்து காட்டிய நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கல்வியின் அவசியத்தைப் பன்முறை வற்புறுத்தியிருக்கிறார்கள்.
”கல்வியைத் தேடுங்கள்: ஏனென்றால் இறைவனின் நல்லருளோடு அதைத் தேடுபவன் தூய செயல் செய்பவனாவான்;: கல்வியைப் பற்றிப் பேசுபவன் இறைவனைப் புகழ்பவனாவான்: அதை நாடிச் செல்பவன் இறைவனைத் தியானம் செய்தவனாவான்: அதைக் கற்றுக் கொடுப்பவன் தர்மம் செய்தவனாவான்: தகுதியுடையவர்களிடையே அதைச் செம்மையாகப் பரத்துபவன் இறைவனுக்கு வணக்கம் செலுத்தியவனாவான்.”
மேலும்: ”கல்வி அதை அடைந்தவனுக்கு, ஏவப்பட்டதையும், விலக்கப்பட்டதையும் பகுத்துக் காண்பிக்கிறது: சுவர்க்கத்தின் பாதைக்கு அது ஓர் விளக்காக இருப்பவனுக்கு அது கூட்டாளி: நட்பின்றி இருப்பவனுக்கு அது நல்ல தோழன்;: இன்பத்துக்கு அது வழி காட்டுகிறது: துன்பம் வந்துற்ற காலை அதனைப் பொறுத்துக் கொள்ளும் சக்தியைத் தருகிறது: அன்பர்கள் கூட்டத்திலே அது நமக்கு ஓர் ஆபரணம்: பகைவர்களின் கூட்டத்திலே அது நமக்கு ஒரு கேடயம்.”
”அறிவின் துணையால், இறைவனின் அடியான் நன்மையின் உச்சத்தை அடைகிறான்: உயர் இடங்களைப் பெறுகிறான்: அதன் துணையால் அவன்; இவ்வுலகிலே மாமன்னரின் தோர்மையையும் பெறுவான்: மறுவுலகிலே பேரின்ப வாழ்வையும் அடைவான்” என்று நாயகப் பெருந்தகை விளக்கமாகக் கூறியிருக்கிறார்கள்.
”அறிஞன் ஒருவனின் பேனாவிலுள்ள ஒரு துளி மை, வீரமரணம் எய்தியவனின்; இரத்தத்தை விடத் தூய்மையானது.”
”ஒரு நாழிகை நேரம் நல்லறிஞர்களின் போதனையைக் கேட்டு; கொண்டிருப்பது, வீர மரணம் எய்திய ஆயிரம் பேரின் ஜனாஸயாத் தொழுகையில் கலந்து கொள்வதைவிட மேலானது.”
குல்வியைத் தேழ நல்லறிவு பெறச் செல்பவனுக்கு, பேரின்ப மாளிகையில் உயர்வான இடம் ஒன்றை அமைத்துத் தருவான் இறைவன்: கல்வியை நாடி அவன் எடுத்து வைக்கும் ஒவ்வோர் ஒரு நற்கருமத்தின் பயனாகும்.”
இத்தகைய பல்வேறு அருளுரைகளால் கல்வியின் உயர்வையும், அறிவுத் தோட்டத்தின் அவசியத்தையும் வலியுறுத்தி வந்திருக்கின்றார்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
”கல்வி, நபிமார்களின் உரிமைப் பொருள்;;: செல்வம் பிர்அவ்ன்களின் உரிமைப் பொருள்,” என்று நபிமணியின் தோழர் முதல் கலீபா ஹல்ரத் அபூபக்ரு ஸித்தீக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மொழந்திருக்கிறார்கள். ”கல்வி செல்வத்தை விடச் சிறந்தது: ஏனென்றால் கல்வி உங்களுக்குப் பாதுகாவல் தருகிறது: செல்வத்தை நீங்கள் பாதுகாக்க வேண்டும்” என்று ஹல்ரத் அலீ ரளியல்லாஹு அன்ஹு கூறியிருக்கிறார்கள்.
கல்வியின் அவசியத்தை வற்புறுத்தாத இடமே இஸ்லாமிய இலக்கியத்தில்; இல்லையெனலாம். அதோடு,
”நிச்சயமாக அல்லாஹ் எந்த சமுதாயத்தின் நிலையையும் மாற்றுவதில்லை – தங்களைத் தாங்களே அவர்கள் மாற்றிக்கொள்ளாத வரை – அல்லாஹ் ஒரு கூட்டத்தினருக்குத் தீங்கை நாடினால், அதனைத் தடுப்பவர் எவருமில்லை: அவர்களுக்கு அவனையன்றி எந்த உதவியாளருமில்லை.” (13:11)
நல்லறிவு பெற்று மனிதன் நல்லவனாக வாழும் போதுதான், அவன் இறைவனின் பிரதிநிதியாகும் தகுதியைப் பெறுகிறான். அம்மனிதனுக்கு இறைவன் நல்கிய பெரும் அருட்கொடை யாது? இறைவனே தன் திருமறையில் இதனைக் குறிக்கிறான்.
”(நபியே) ஓதுவீராக! ஊம்முடைய ரப்பு தயாளமானவன் – அவன் எத்தகையோனென்றால் எழுதுகோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். மனிதனுக்கு அவன் அறியாதவற்றை (யெல்லாம்) அவன் கற்றுக் கொடுத்தான்.” (96:3,4.5)
இத்திருவாக்கியங்கள் ஸூரத்துல் அலக்” (இரத்தக்கட்டி) எனும் அத்தியாயத்தில் வருகின்றன. இந்த அத்தியாயத்துக்கு விளக்கம் தரும் ஜாருல்லாஹ் அஸ்ஸமஷுரீ தங்களுடைய ”கஷ்ப்” என்னும் விரிவுரையில்:
”மனிதன் அறியாதவற்றையெல்லாம் இறைவன் அவனுக்குக் கற்றுக் கொடுக்கிறான்: இதுவே அவன் பேரருளுக்கு ஒரு சான்றாகும். மனிதன் அறியாமலிருந்த பொருள்களின் உண்மையெல்லாம் அவனுக்கு இறைவன் வெளிப்படுத்துகிறான். அறியாமையென்னும் இருளிலிருந்து நல்லறிவென்னும் பிரகாசத்துக்கு மனிதனை இறைவன் கொண்டு வருகிறான். (எழுதுகோலால் கற்றுக் கொடுத்த) இறைவன், எழுத்தறிவின் அருள் தன்மையை மனிதனுக்கு உணர்த்தியிருக்கிறான்.
இதிலிருந்து எத்தகைய நன்மை மனித குலத்துக்குக் கிடைக்கிறது என்பது இறைவனுக்கு மட்டுமே தெரியும். எழுத்தறிவில்லாமல் வேறெந்த அறிவும் பெற முடியாது: எந்த நுண்ணறிவும் மனிதனுக்குக் கிட்டாது. முன்னோரின் வரலாற்றையும், அவர்கள் மனிதனுக்குக் கிட்டாது. முன்னோரின் வரலாற்றையும், அவர்கள் தம் நல்லுரைகளையும் எழுதுகோல் என்னும் பெருங்கொடையின்றி வரைய முடியாது: இறைவன் இறக்கிய வேதங்களையும் குறித்திருக்க முடியாது. அந்த எழுத்தறிவில்லாமல் தீனின் (மத) விஷயங்களையும், துன்யாவின் (உலக) விஷயங்களையும் ஒழுங்குபடுத்த முடியாது”’ என்று விளக்கியிருக்கிறார்கள்.
”அவன் தான் எழுதுகோல் கொண்டு கற்றுக்கொடுத்தான்” (96:4) என்ற ஒரு சிறு வாக்கியத்தின் விளக்கமாக மேற்கண்ட கருத்துகளைத் தந்திருக்கிறார்கள் அஸ்ஸமக்~ரீ. இப்படி ஒவ்வொரு வாக்கியத்துக்கும் மனித அறிவின் எல்லைக்கோடுவரை சென்று விரிவுரைகளும், விளக்க உரைகளும் தேடியிருக்கிறார்கள் பேரறிஞர்கள்.
நல்லறிவை நாடிச் செல்வதைக் கடமையாக்கிற்று இஸ்லாம்: அதோடு நல்லறிவை நாடி வருபவர்களையும் வெறுதொதுக்காது, அவர்களுக்கு அறிவு புகட்டுவதைக் கடமையாக்கினார்கள் இஸ்லாமிய அறிஞர்கள். ஐயத்தெளிவுகளுக்காக நம்மிடம் ஐயங்களைப் போக்கி, அகத் தெளிவை ஏற்படுத்துவது ஆலிம்களின் கடமை என்று திருமறையின் ஆதாரங்கொண்டு முடிவு கண்டிருக்கிறார்கள் அறிஞர் பெருமக்கள்.
சான்றாக, திருமறையில் (அல்லுஹா) ”வைகறை” ” அதிகாலை என்னும் அத்தியாயத்தில், ‘வ அம்மஸ்ஸாஇல ஃபலா தன்ஹர்” என்னும் ஒரு வாக்கியம் வருகிறது: ”இன்னும், பொருள். ஆனால் இங்கு ”யாசிப்பவன்” என்னும் சொல் உணவை, உடையை, பணத்தை யாசித்து வருபவனை மட்டும் குறிக்கவில்லை: கல்வியைத் தேழ வருபவனையும், நல்லறிவை நாடி வருபவனையும் இது குறிக்கிறது என்று கற்றறிந்த சான்றோர் பொருள் கொண்டுள்ளனர்.
நல்லறிவைப் பரப்புவது, மக்களின் இருண்ட இதயங்களை ஒளியால் நிரப்புவது, தூய வழியில் மனிதனைச் சிந்திக்கத் தூண்டுவது – இதுவே இறைவன் திருத்தூதரின் முக்கிய கடமை. ஆகவே ”நபியே (நல்லறிவு தேடி) யாசித்து வருபவனை வெறுக்காதீர்” என்று இறைவன் கட்டளையிட்டிருக்கிறான். ”ஸாஇல்” என்னும் அரபிச் சொல்லுக்கு இரப்பவன், கேள்வி ”ஸாஇல்” என்னும் அரபிச் சொல்லுக்கு ”மன் யஸ்அலுல் இல்ம” – நல்லறிவு பற்றிக் கேட்பவன் என்பதே மறைபொருள் என இமாம் ஃபக்ருத்தீன் ராஸீ போன்ற விரிவுரையாளர்கள் விளக்கம் தந்திருக்கின்றனர்.
இதற்கு ஆதாரமாக திருக்குர்ஆனின் எண்பதாம் அத்தியாயமும் எடுத்துக் காண்பிக்கப்படுவதுண்டு.
நாயகப் பெருந்தகை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செல்வாக்குள்ள உபை இப்னு கலப் என்பவரிடம் இஸ்லாமியத் தத்துவங்களை விளக்கிக் கொண்டிருந்தார்கள். ஆற்றலும், அதிகாரமும் மிக்க அந்த குறை~pத் தலைவர் இஸ்லாமிய அறிவு பெற்றால், அறநெறி பரவுவதற்குப் பெருத்த ஆதரவு கிடைக்கும் என்று எண்ணினார்கள் நபி பெருமானார். இவ்வேளையில் இப்னு உம்மி மக்தூம் என்னும் அந்தகர் அல்லாஹ்வின் தூதரை அணுகி இறைவன், நாயகத்துக்கு அருளிய நல்வேதத்தில் சில சந்தேகங்களைக் கேட்டார்.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யாரிடமும் கடுமையாகப் பேச மாட்டார்கள். வறியவர்களை வரவேற்றுப் பேசும் வள்ளல் நபி, அநாதைகளை அன்போடு நடத்தும் அண்ணல் நபி, அன்று அக்குருடர் டிசயலினைக் கண்டு சிறிது ஆத்திரம் கொண்டார்கள். தாம் முக்கியமான பணியிலே ஈடுபட்டிருக்கும்போது, இவர் வேறு இடைமறித்துக் கேள்விகள்; கேட்டுக் கொண்டிருக்கிறாரே என்று சிறிது கோபமடைந்தார்கள். அந்த ஆத்திரத்திலும், அக்குருடரைக் கடிந்து பேசி விடவுமில்லை: சினந்து அவரைத் தாக்கிப் பேசிவிடவுமில்லை: அவர் கேள்வியினைப் புறக்கணித்துவிட்டு அவரிடமிருந்து தம் முகத்தைத் திருப்பிக்கொண்டு, அந்த குறை~pத் தலைவரிடம் உரையாடிக் கொண்டிருந்தார்கள்.
இந்தச் சம்பவத்தை அடுத்து இறைவன் தன்னுடைய தூய நபிக்குப் போதிக்கிறான்:
”(நபியாகிய) அவர் கடுகடுத்தார்: முகத்தையும் திருப்பிக் கொண்டார் – பார்வையற்ற ஒருவர் அவரிடம் வந்ததற்காக – (நபியே) அவர் பரிசத்தமடைந்து விடக்கூடும் (என்பது பற்றி) உமக்கென்ன தெரியும்? அல்லது உபதேசத்தை அவர் நினைவு கூறலாம் – அப்போது அவ்வுபதேசம் அவருக்குப் பலனளிக்கலாம் (என்பது பற்றி உமக்கென்ன தெரியும்?): எவர் (தீனின் பக்கம்) தேவையற்றவராக இருக்கின்றாரோ – நீர் அவரையே முன்னோக்குகிறீர். அவர் பரிசத்தம் ஆகாததினால் உம்மீது குற்றம் (ஏற்படப் போவது) இல்லை. (எனினும்) எவர் உம்மிடம் விரைவாக வந்தாரோ – அவர் (அல்லாஹ்வை) அஞ்சிய நிலையில் – அவரை விட்டும் நீர் பராமுகமாகி விடுகின்றீர்….” (80:1-10)
கட்டுரையின் தொடர்ச்சிக்கு ”Next” ஐ ”கிளிக்” செய்யவும்.