ஜகாத் இல்லை என்போர் காட்டும் சான்றுகள்(?)
1. “செல்வத்தை தூய்மைப்படுத்தக் கூடியதாக ஜகாத்தை அல்லாஹ் ஆக்கிவிட்டான்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறி உள்ளார்கள். (துஹ்ரத்தன் லில் அம்வால்) எனவே, ஒருமுறை ஜகாத் வழங்கி விட்டால் பொருளாதாரம் சுத்தமாகி விடுகிறது. சுத்தமாகி விட்ட ஒரு பொருளை மீண்டும் சுத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை.
(மீண்டும் ஜகாத் இல்லை என்போர் தங்களது வாதத்திற்கு இதனை வலுவான முதன்மைச் சான்றாக கருதி வந்தார்கள். இதை இறைத்தூதர் கூறவில்லை என்பதை நாம் நிரூபித்துக் காட்டியதன் பின், துணை ஆதாரமாகத்தான் கூறினோம் என்பதால் தங்களது கருத்தை மாற்றிக் கொண்டனர். இவர்களின் கருத்துப்படி இதனை துணை ஆதாரமாகவும் கருதமுடியாது. ஏனெனில் இறைத்தூதர் கூறாத எதையும் முதன்மை ஆதாரமாகவும் துணை ஆதாரமாகவும், காட்டலாகாது என்பதே இவர்களின் கொள்கை.)
2. “ஜகாத் கொடுங்கள்” என அல்லாஹ் கூறுகிறான். “கொடு” என்று சொன்னால் எல்லா மொழியிலும் ஒரு முறை கொடுக்க வேண்டும் என்றுதான் எல்லோரும் புரிந்து கொள்கிறோம். அது போன்றே “ஜகாத் கொடு” என்ற வசனத்தையும் ஒரு முறை ஜகாத் கொடு என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும்.
3. ஹஜ்ஜைப் போன்றே ஜகாத்தும் ஆயுளில் ஒரு முறைதான்.
4. விளைபொருளில் அறுவடை செய்யும் அன்று ஜகாத் கொடுத்து விட்டால் அதன் பின் அதற்கு எப்போதும் ஜகாத் வழங்க வேண்டாம் என எல்லோரும் கூறுகின்றனர். அதுபோல்தான் மற்ற பொருளாதாரத்திலும் ஒரு முறைதான் ஜகாத் எனப் புரிந்து கொள்ள வேண்டும். விளைபொருளுக்கு ஒரு சட்டம், தங்கம், வெள்ளி போன்ற பொருளாதாரத்திற்கு மற்றொரு சட்டமா?
5. கொடுத்த பொருளுக்கே மீண்டும் மீண்டும் ஜகாத் வழங்கிக் கொண்டிருந்தால் விரைவில் வறுமை ஏற்பட்டு ஜகாத் கொடுத்தவன் பிறரிடம் கை ஏந்தும் நிலைக்கு தள்ளப்பட்டு பிச்சைக்காரனாக ஆகிவிடுவான். ஒருவனை பிச்சைக்காரனாக ஆக்கும் சட்டத்தை இஸ்லாம் ஒரு போதும் கூறாது.
6. அனைவரும் செய்யும்படி சட்டத்தை எளிமையாக கூறினால் அனைவரும் செயல்படுத்துவார்கள். மீண்டும் மீண்டும் ஜகாத் வழங்க வேண்டும் என சட்டத்தைக் கடினமாக சொல்வதனால்தான் ஆயிரத்தில் ஒருவர் கூட சரியாக ஜகாத் வழங்குவதில்லை. ஒருமுறை ஜகாத் கொடுத்தால் போதும் என சட்டம் கூறினால் ஆயிரத்திற்கு ஆயிரம் பேரும் ஜகாத் வழங்கி விடுவார்கள்(!?).
7. “ஜகாத் வழங்கிய பொருளுக்கு மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டும்” என குர்ஆனிலோ நபிமொழி யிலோ ஒர் இடத்தில் கூட கூறப்படவில்லை.
ஒரு முறைதான் ஜகாத் வழங்க வேண்டும் எனக் கூறி வருவோர் தங்களது கருத்திற்கு எடுத்துக் காட்டும் சான்றுகள்தான் இவை.
(சமீத்தில் வெளியான ஏகத்துவத்திலும், (செப்டம்பர் 2005), ஜகாத் குறித்து பல இடங்களில் பேசியவற்றை தொகுத்து வழங்கப்பட்ட “ஜாகத் ஓர் ஆய்வு” என்ற சி.டி. யிலும் இச்சான்றுகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளததைக் காணலாம்.)
சான்றாய்வு– 1
ஜகாத் பொருளைத் தூய்மைப்படுத்துகின்றதா?
“பொருளாதாரத்தை தூய்மைப் படுத்தக் கூடியதாக ஜகாத்தை அல்லாஹ் ஆக்கி விட்டான்” என இறைத்தூதர் கூறியதாக மேடைகளில் பேசிவரும் இவர்கள், எந்த நூலில், யார் அறிவித்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற விபரத்தை ஒர் இடத்திலும் அறவே குறிப்பிடவில்லை. பொதுவாக மார்க்க அறிஞர் ஒரு நபிமொழியை கூறுவதாக இருந்தால், அறிவிப்பாளர் தொடரோடு எந்த நூலில் இடம் பெற்றுள்ளது என்பதை மேற்கோள் காட்டித்தான் பேச வேண்டும். அவ்வாறு கூறாததால் நாமே இந்த நபிமொழியை சரிகாண ஆய்வில் இறங்கினோம்.இச்செய்தி, புகாரியில் 1404, 4661 இடங்களில், பதிவாகி இருப்பது உண்மைதான். ஆனால், அதை இறைத்தூதர் கூறவில்லை. மாறாக அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்தான் கூறியுள்ளார்.
இதோ அந்த செய்தி!
1404–عَنْ خَالِدِ بْنِ أَسْلَمَ قَالَ خَرَجْنَا مَعَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ-رضى الله عنهما – فَقَالَ أَعْرَابِىٌّ أَخْبِرْنِى قَوْلَ اللَّهِ (وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلاَ يُنْفِقُونَهَا فِى سَبِيلِ اللَّهِ ) قَالَ ابْنُ عُمَرَ – رضى الله عنهما – مَنْ كَنَزَهَا فَلَمْ يُؤَدِّ زَكَاتَهَا فَوَيْلٌ لَهُ ، إِنَّمَا كَانَ هَذَا قَبْلَ أَنْ تُنْزَلَ الزَّكَاةُ فَلَمَّا أُنْزِلَتْ جَعَلَهَا اللَّهُ طُهْراً لِلأَمْوَالِ (رواه البخاري)
காலித் பின் அஸ்லம் கூறியதாவது:
நாங்கள் அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு உடன் வெளியில் புறப்பட்டோம். அப்போது ஒரு கிராமவாசி, “யார் பொன்னையும் வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ..” என்ற வசனத்தைப் பற்றி வினவினார். இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு , “யார் அவற்றைப் பதுக்கிவைத்து அதற்கான ஜகாத்தை கொடுக்காமலிருக்கின்றாரோ அவருக்குக் கேடுதான். இவ்வசனம் ஜகாத் கடமையாகுவதற்கு முன்புள்ளதாகும். ஜகாத் பற்றிய வசனம் அருளப்பட்டதும் செல்வங்களைப் தூய்மைப்படுத்தக் கூடியதாக “ஜகாத்தை” அல்லாஹ் ஆக்கிவிட்டான்” என்றனர். (புகாரி: 1404, 4661)
இச்செய்தி இப்னு மாஜாவிலும், 7021 வது நபி மொழியாக பைஹகியிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இச்செய்தி நாம் அறிந்தவரை இறைத்தூதர் கூறியதாக உலகில் உள்ள எந்நூலிலும் பதிவு செய்யப்படவில்லை. இது இறைத்தூதர் மீது இட்டுக் கட்டப்பட்ட மாபெரும் பொய்யாகும்.
நபித் தோழரின் கூற்றை ஏற்க மறுப்பது ஏன்?
இப்னு உமர் கூறிய செய்தி நம்பகத்திற்குரியதாக இருக்கும் பட்சத்தில் அதனை ஏன் மறுக்க வேண்டும்? என்ற கேள்வி எழலாம்.
ஆனால், எந்த ஒரு விஷயத்திற்கும் நபித் தோழர்களின் கூற்றை சான்றாக ஏற்காதவர்கள் இக்கேள்வியை எழுப்ப அறவே அருகதையற்றவர்கள்.
ஜகாத் மனிதனைத்தான் தூய்மைப்படுத்துகிறது என குர்ஆனிலும் நபிமொழியிலும் தெளிவாகக் கூறப்பட்டு விட்டதால், இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் கூற்றை சான்றாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.
செல்வத்தைத் தூய்மைப்படுத்துகிறது என்பதற்கு இப்னு உமரின் கூற்றை சான்றாக எடுத்துக் கொண்டவர்கள், அதே இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், ஜகாத் வழங்கிய பொருளுக்கே மீண்டும் ஜகாத் வழங்கி வந்துள்ளார்கள் என்ற நடைமுறையை மறந்து விட்டார்களா? அல்லது மறைத்து விட்டார்களா? என்பது அவர்களுக்குத் தான் வெளிச்சம்.இச்செய்தியை கூறிய இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களாலேயே புரிந்து கொள்ள முடியாத ஒரு செய்தியை இவர்கள் மட்டும் அறிந்து கொண்டார்கள் என்றால் அதுதான் ஒரு வியப்பான மர்மம்.
செல்வத்தைத் தூய்மைப் படுத்துவதாக நபி மொழியில் இடம் பெற்றுள்ளதா?
“ஜகாத் செல்வத்தை தூய்மைப் படுத்துகிறது” என்ற தங்களின் கருத்துக்கு அபூ தாவூதில் இடம் பெற்ற பின்வரும் ஹதீஸை கூடுதல் சான்றாக முன் வைக்கிறார்கள்.
ஆனால், அவர்கள் சான்றாக காட்டிய இந்நபி மொழியில் “துஹ்ரத்தன் லில் அம்வால்” (செல்வத்தை தூய்மைப்படுத்துகிறது) என்ற (அர்த்தத்தைக்கொண்ட) வார்த்தை அறவே இடம் பெறவில்லை. அதற்கு நிகரான “தஹ்ஹாரத்தன்”, “முதஹ்ஹிரத்தன்” “யுதஹ்ஹிர” “தஹ்ஹர”, “துஹுரன்” போன்ற வார்த்தைகளும் இடம் பெறவில்லை என்பது கவனிக்கத் தக்கது.
முதலில் அவர்கள் சமர்ப்பித்த நபி மொழியை அதன் அர்த்தத்துடன் காண்போம்.
حدثنا عثمان بن أبي شيبة حدثنا يحيى بن يعلى المحاربي حدثنا أبي حدثنا غيلان عن جعفر بن إياس عن مجاهد عن ابن عباس قال لما نزلت هذه الآية والذين يكنزون الذهب والفضة قال كبر ذلك على المسلمين فقال عمر رضي الله عنه أنا أفرج عنكم فانطلق فقال يا نبي الله إنه كبر على أصحابك هذه الآية فقال رسول الله إن الله لم يفرض الزكاة إلا ليطيب ما بقي من أموالكم وإنما فرض المواريث لتكون لمن بعدكم فكبر عمر ثم قال له ألا أخبرك بخير ما يكنز المرء المرأة الصالحة إذا نظر إليها سرته وإذا أمرها أطاعته وإذا غاب عنها حفظته – ابوداود
“பொன்னையும் வெள்ளியையும் சேமித்து வைத்து” என்ற வசனம் அருளப்பட்டது நபித்தோழர்களுக்கு பெரும் பாரமாக தெரிந்தது. உங்களது கவலையை நான் நீக்குகிறேன்” என்று கூறி விட்டு, இறைத்தூதரை நோக்கிச் சென்ற உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! இவ்வசனம் உங்களின் தோழர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது” என்று கூறினார்கள்.
அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “உங்களின் செல்வத்தில் எஞ்சியதை (சேமிப்பதை) அனுமதிப்பதற்காகவே தவிர வேறு எதற்கும் ஜகாத்தை அல்லாஹ் கடமையாக்கவில்லை. உங்களுக்குப் பின் வருவோருக்கு செல்வம் சேர வேண்டும் என்பதற்காகத்தான் வாரிசுரிமைச் சட்டத்தைக் கடமையாக்கினான்” என கூறினார்கள்.
இதை செவியுற்ற உமர் ரளியல்லாஹு அன்ஹு தக்பீர் முழங்கிய போது, “மனிதன் சேமிப்பதில் சிறந்தது” எது என உங்களுக்கு அறிவிக்கட்டுமா? “கணவன் காணும்போது மகிழ்விக்கும், அவனது கட்டளைக்கு கீழ்படிந்து நடக்கும், அவளை விட்டும் அவன் வெளியில் சென்று விட்டால் அவனை (அவனது உடமையை) பாதுகாக்கும் நல்ல மனைவிதான் சிறந்த சேமிப்பாகும்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அபூ தாவூத்).
இந்நபி மொழியில் இடம் பெற்ற “லி யுதய்யப” என்ற வார்த்தைக்கு தூய்மைப்படுத்துதல் என்ற ஒரு அர்த்தமும் இருப்பதால், ஜகாத் வழங்குவது செல்வத்தை தூய்மைப்படுத்துகிறது என இறைத்தூதரே கூறிவிட்டதாக தங்களின் கருத்திற்குச் சான்றாக இந்நபி மொழியை முன்வைக்கிறார்கள்.
அறிவிப்பாளர் விடுபட்ட தொடர்பறுந்த பலவீனமான ஹதீஸ்
ஆனால், இந்நபி மொழி அறிவிப்பாளர் தொடர்பறுந்த பலவீனமான ஹதீஸாகும். காரணம், நபி மொழியின் அறிவிப்பாளர் வரிசையில் “உஸ்மான்” என்ற அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார். அவர் பலவீனமானவர் என்பது இக்கலை அறிஞர்கள் அனைவரின் ஏகோபித்த முடிவாகும்.
மேலும், முஜாஹித் என்பவரிடமிருந்து ஜாஃபர் பின் இயாஸ் அறிவிப்பதாக இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாஃபர் நம்பகமானவர், புஹாரி முஸ்லிம் ஆகிய நூட்களில் இடம் பெற்றவர்தான் என்றாலும், முஜாஹித்தின் மூலம் அவர் அறிவிக்கும் ஹதீஸ் பலவீனமானதாகும் என்று அவரது மாணவரும், அறிவிப்பாளர் ஆய்வில் சிறந்து விளங்குபவருமான ஷுஃபா அவர்கள் கூறியதை, யஹ்யா பின் முயீன், யஹ்யா பின் சயீத், அஹ்மத் பின் ஹன்பல், இப்னு ஹஜர் ஆகியோர் சந்தேகத்திற்கு இடமின்றி உறுப்படுத்தியுள்ளனர்.
எனவே, இவ்விரு காரணங்களின் அடிப்படையில், அபூ தாவூதில் இடம் பெற்றுள்ள இந்நபி மொழி பலவீனம் என்பதால், அவர்களின் கருத்துக்கு இது சான்றாக அமையாது.
பொருளைத் தூய்மைப் படுத்துவதே ஜகாத் என்ற நபிமொழி பலவீனமானது
பொருளைத் தூய்மைப் படுத்துவதே ஜகாத் என்ற நபிமொழி பலவீனம் என்பதற்கான சான்றுகள் அரபி மூலத்துடன்:
அபூ தாவூதில் இடம் பெற்றுள்ள இந்நபி மொழியை மேலோட்டமாக பார்க்கும் போது ஸஹீஹானது போல தோன்றும். ஏனெனில் இதில் இடம் பெற்றுள்ள அறிவிப்பாளர்களில் பெரும்பாலோர் புஹாரி மற்றும் முஸ்லிம் ஆகிய நூற்களில் இடம் பெற்றவர்கள். குறிப்பாக அறிவிப்பாளர் வரிசையில் உள்ள கைலான் என்பவரும், ஜாஃபர் என்பவரும் சம காலத்தில், அடுத்தடுத்த ஊரில் வாழ்ந்து வந்தவர்கள்.
இவ்விருவரும் சந்தித்திருக்க வாய்ப்புகள் அதிகம் உண்டு போன்ற செய்திகளை மேலோட்டமாக பார்த்து விட்டு ஹாகிம், ஹாஃபிழ் அல்இராகி ஆகியோர் இது ஸஹீஹானது என கூறிவிட்டனர். அறிவிப்பாளர் ஒருவர் விடுபட்ட தொடர்பறுந்த நபிமொழி என்பது ஊர்ஜிதமாகவில்லையானால், இவர்கள் கூறியது சரி என ஏற்கலாம். ஆனால், ஓர் அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார், அவர் பலவீனமானவர் என்பது சான்றுகளுடன் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. ஸஹீஹ் என வாதிப்பவர்கள் அதற்கான பதிலைத் தராத வரையிலும் பலவீனம் என்ற கருத்தே உறுதியாகும்.
அறிவிப்பாளர் விடுபட்டதை அறிந்து கொள்வது எப்படி?
அறிவிப்பாளர் விடுபட்ட செய்தியை உறுதிப்படுத்திக் கொள்ள இந்நபி மொழி எந்தெந்த நூற்களில் இடம் பெற்றுள்ளது என்பதை முதலில் அறிந்து கொள்வோம்.
ஹாகிமில் இரு இடங்களில்:
1487 أخبرنا أحمد بن محمد بن سلمة العنزي ثنا عثمان بن سعيد الدارمي ثنا علي بن عبد الله بن المديني ثنا يحيى بن يعلى المحاربي ثنا أبي حدثنا غيلان بن جامع عن جعفر بن إياس عن مجاهد عن بن عباس رضي الله عنهما ………
3281 أخبرنا علي بن محمد بن عقبة الشيباني حدثنا إبراهيم بن إسحاق الزهري حدثنا يحيى بن يعلى بن الحارث المحاربي حدثنا أبي حدثنا غيلان بن جامع عن عثمان بن القطان الخزاعي عن جعفر بن إياس عن مجاهد عن بن عباس رضي الله عنهما
ஸுனன் பைஹகி:
سنن البيهقي الكبرى ج: 4 ص: 83
7027 أخبرنا أبو محمد عبد الله بن يحيى بن عبد الجبار السكري ببغداد أنبأ إسماعيل بن محمد الصفار ثنا عباس بن عبد الله الترقفي ثنا يحيى بن يعلى بن الحارث ثنا أبي ثنا غيلان يعني بن جامع عن عثمان أبي اليقظان عن جعفر بن إياس عن مجاهد عن بن عباس……
7028 وأخبرنا أبو عبد الله الحافظ ثنا علي بن محمد بن عقبة الشيباني بالكوفة أنبأ إبراهيم بن إسحاق الزهري ثنا يحيى بن يعلى بن الحارث المحاربي فذكره ثم بمثل إسناده وقصر به بعض الرواة عن يحيى فلم يذكر في إسناده عثمان أبا اليقظان
முஸ்னத் அபீ யஃலா:
مسند أبي يعلى ج: 4 ص: 378
2499 حدثنا أبو بكر حدثنا يحيى بن يعلى قال حدثني أبي حدثنا غيلان عن عثمان أبي اليقظان عن جعفر بن إياس عن مجاهد عن بن عباس….
ஷுஃபல் ஈமான்:
شعب الإيمان ج: 3 ص: 194
3307 أخبرنا ابو عبد الله الحافظ أنا أبوعلي محمد بن عقبة الشيباني وبالكوفة نا ابراهيم بن اسحاق الزهري نا يحيى بن يعلى بن الحارث المحاربي نا ابي نا غيلان بن جامع عن عثمان ابي اليقظان الخزاعي عن جعفر بن أياس عن مجاهد …..
فضائل الصحابة لابن حنبل ج: 1 ص: 374 560 حدثنا محمد بن يونس قال نا يحيى بن يعلى قال أبي نا غيلان بن جامع عن جعفر بن إياس عن مجاهد عن بن عباس
தஃப்ஸீர் இப்னு கஃதீர்:
تفسير إبن كثير
قال ابن أبي حاتم: حدثنا أبي حدثنا حميد بن مالك حدثنا يحيى بن يعلى المحاربي حدثنا أبي حدثنا غيلان بن جامع المحاربي عن عثمان بن أبي اليقظان عن جعفر بن إياس عن مجاهد عن ابن عباس……..
மேற்கண்ட நூற்களில் இடம் பெற்ற அறிவிப்பாளர்கள் வரிசையில் கோடிட்ட இடங்களை நன்கு கவனித்து பார்ப்பவர்கள், ஓர் அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார் என்பதை எடுத்த எடுப்பிலேயே புரிந்து கொள்வார்கள். அதாவது கைலான் மற்றும் ஜாஃபர் ஆகிய இருவருக்குமிடையில் உஸ்மான் என்பவர் இடம் பெற்றுள்ளார். அவர்தான் அபூ தாவூதின் அறிவிப்பில் விடுபட்டுள்ளார்.
கட்டுரையின் தொடர்ச்சிக்கு ”Next” ஐ ”கிளிக்” செய்யவும்.