Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

சோர்வை விரட்டுவோம்!

Posted on January 19, 2010 by admin

 

[”சோர்வு ஏற்படும்போது புத்தகங்களே புத்துணர்ச்சி தருகின்றன” – அப்துல் கலாம்

மனச் சோர்வு என்பது மன அழுத்தம் என்றும் வழங்கப்படுகின்றது. உறக்கமும் அசதியும் சோர்வும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது. மனச் சோர்வு பல வகைப்படும். இது ஏன் ஏற்படுகின்றது? அறிவியலாளர்க்கே விடை தெரியாத கேள்வி இது!

எதை கெடுத்தாலும் சோர்வுதான்! அடிப்படையாக, உள்ளே இருக்கும் உயிர்சக்தியை கெடுத்தால் நேரடியாக சோர்வுதான். அப்படி இல்லாவிட்டாலும், உற்சாகத்தை கெடுத்தாலும் சோர்வுதான்.

கேட்க சாதரணமாக தோன்றினாலும், இது வாழ்க்கை அடிப்படையையே மாற்றும் ஒரு விஷயம். கோர்வையாக ஒரு கணம் தாண்டி இன்னொரு கணம் வருவது தானே வாழ்க்கை. உற்சாகம் இல்லாவிட்டால் எப்படி?]

ஒரு துறையில் வேகமாய் முன்னேறிக் கொண்டே செல்கிறபோது தெரியாமல் ஏற்படும் பின்னடைவுகள் ஒரு மனிதனை சோர்வடையச் செய்கிறது. ஏன்? எதனால்?. ஒரேயொரு காரணம்தான் உண்டு. மற்றவர்கள் பார்க்கும் அதிர்ச்சிமிக்க பார்வை, ஒரு சிலரின் ஏளனப் பார்வை.

அந்தத் துறையில் இயங்கிக் கொண்டு இருப்பவர்களுக்குத் தெரியும், அந்தப் பின்னடைவை எளிதில் சமாளிக்க முடியும் என்று. ஆனால், அடுத்தவர்களின் அனுதாபப் பார்வையாலும் சந்தேகப் பார்வையாலும் அவர்களுக்கே சில சமயம் சோர்வு வந்துவிடும். அக்கறையாலோ, பதட்டத்திலோ ஆளுக்கொரு அறிவுரையும் உபதேசமும் சொல்லி, சேற்றில் சிக்கிய வண்டியை இழுப்பதாய் நினைத்து இன்னும் ஆழமாய் புதைப்பதும் சில நேரங்களில் நடக்கும்.

உண்மையில் மனிதர்கள் தங்களுக்கு வருகிற பின்னடைவின்போது என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அதிலிருந்து மீள்வது நிகழும். உதாரணமாக, ஒருவர் உடல்நலக் குறைவுக்கு ஆளாகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். இப்படி நேர்ந்து விட்டதே என்று சோர்வாக அமர்வதைவிடவும் சரியானவழி, தீர்வை நோக்கி நகர்வதுதான். அதாவது ஒரு மருத்துவரிடம் போவது. மருத்துவரிடம் போவது என்று முடிவெடுத்த விநாடியிலிருந்தே அவர் அந்தப் பின்னடைவிலிருந்து மீள்வதற்கான முதலடியை எடுத்துவைக்கிறார்.

உடலுக்குப் பின்னடைவு வருகையில் உடனே செயல்படும் மனிதர்கள், மனதுக்குப் பின்னடைவு வரும்போது சோர்வாய் அமர்வதும், தீர்வு நோக்கிய பயணத்தைத் தள்ளிப் போடுவதுமே அவர்களின் நிலை மோசமாகக் காரணம்.

பொதுவாகவே பின்னடைவுகள், நம்முடைய பயணத்தின் வேகத்தை தீவிரப் படுத்தவோ, அல்லது சரியான திசையில் செல்லவோ நினைவூட்டுவதற்காகவே நேர்கின்றன.

பின்னடைவுகளைக் கையாள்வதில் இருக்கும் வெற்றிதான் இலக்கு எட்டுவதில் நம்மை துரிதப்படுத்துகிறது. இன்னும் தெளிவான பயணத்தை நமக்குத் தருகிறது.

உலகின் பல சாதனையாளர்கள், பின்னடைவிலிருந்து மீள்வது பற்றி ஒரு வரியில் சொல்லியுள்ள உயிர்ப்பு மிக்க அனுபவப் பதிவுகள் சோர்விலிருக்கும் யாரையுமே தீர்வு நோக்கி நகர்த்தும் தனித்தன்மை வாய்ந்தவை.

o எதிர்பாராமல் ஏற்படுகிற பின்னடைவை சரியாக ஆராய்ந்தால், அது எதிர்கால வெற்றியை வரையறை செய்யும் வாய்ப்பாக அமைகிறது.

o சவாலான நிமிஷங்களை சாதாரணமான மனிதர்கள் எதிர்கொள்ள மட்டுமே செய்கிறார்கள். சாதனையாளர்களோ, சவாலை எதிர்கொண்டு, இன்னும் பலமாய் வெளிப்படுகிறார்கள்.

o பதட்டம் தருகிற சூழ்நிலை என்பது, முடிந்து போகிற முட்டுச்சந்து என்று நினைப்பவர்கள் பதறுவார்கள். அது திருப்பங்கள் ஏற்படுத்தும் திருப்புமுனை என்று நினைப்பவர்கள் வளருவார்கள்.

o எதிர்மறையான மனிதர்களை எதிர்கொண்டும் நேர்மறையாய் செயல்படுவதுதான் உண்மையான முன்னேற்றம். எல்லாவற்றையும் நல்லதாகவே பார்க்கும் நம்பிக்கை மனிதர்களை மட்டுமே கொண்டதல்ல வாழ்க்கை.

o ஒரு செயலைச் செய்ய உங்களால் முடியாதென்று நினைப்பவர்களை சந்திக்க நேர்கிறதா? உங்கள் மேல் நம்பிக்கை வைத்துள்ள மனிதர்களின் நினைவு அங்கே தோன்றட்டும்.

o ஒரு செயலை நீங்கள் செய்தது பற்றிய விமர்சனங்கள் உங்கள் காதுகளில் விழுகின்றனவா? அதில் இருக்கும் நடுநிலையான கருத்துக்கள் மட்டுமே நெஞ்சில் தங்கட்டும்.

o உங்கள்மேல் உங்களுக்கே சந்தேகம் தோன்றுகிறதா? உங்களுடன் நீங்கள் உட்கார்ந்து பேச, இதுதான் சரியான நேரம். உங்கள் பலங்கள் – பலவீனங்களை அலசுங்கள். சந்தேகம் என்கிற கறை காணாமலே போகும்.

o உங்களைச் சுற்றியிருப்பவர்கள் மீது சந்தேகம் வருகிறதா? அது எல்லோரையும் சந்தேகிக்கும் நோயாக வளராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கொரு வழி இருக்கிறது. உங்களை உயர்த்துவதற்காகத் தங்கள் வாழ்வை அர்ப்பணித்தவர்களை நினைவில் கொண்டு நிறுத்துங்கள். 

o அதிகாலை நேர நடைப்பயிற்சியின்போது, உங்கள் திறன்களுக்காகவும், உங்கள் வாழ்க்கைக்காகவும், கடவுளுக்கு நன்றி சொல்லும் விதமாய், நன்றியுணர்வை உங்களுக்குள் நிரப்பிக்கொள்ளுங்கள்.

o அச்சம் வரும்போதெல்லாம் நம்பிக்கை கொள்ளுங்கள். நம்பிக்கையின் உயரம், அச்சத்தின் உயரத்தைவிட அதிகமாய் இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

o உள்ளுக்குள்ளே அயர்வு தலைகாட்டும்போது கடவுளை நோக்கி உங்களை முழுவதும் ஒப்படையுங்கள். அந்தப் பெரும்சக்தி தரும் சக்தியை மீண்டும் பெற்றுக்கொண்டு மீண்டு வாருங்கள்.

o நீங்களே உங்களை அறிந்திருக்கும் அறிவுகூட மேலோட்டமான அறிவுதான். அப்படியிருக்க, மற்றவர்கள் உங்களைக் குறைவாக எடைபோட்டால் அதற்காக வருந்தாதீர்கள். உரிய நேரத்தில் உங்கள் செயல்திறன் வெளிப்படும்போதுதான். உலகுக்கும் உங்களுக்கும், உங்களைப்பற்றித் தெரிகிறது.

o சில விஷயங்களைத் தக்கவைக்க முயல்வதால் வாழ்வின் மற்ற விஷயங்கள் பாதிக்கிறதா? சிறிதும் தயங்காமல் அவற்றை வெளியேற விடுங்கள்.

o ஒரு சூழலை நீங்கள் கடப்பீர்களா மாட்டீர்களா என்ற கேள்வியுடன் எல்லோரும் உங்களை எதிர் நோக்குகிற போது, அந்தச் சூழலை ஒரு விளையாட்டு மைதானமாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். சிரித்த முகத்துடன் அந்த விளையாட்டில் பங்கெடுங்கள்.

உறக்கமும் அசதியும் சோர்வும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது. நீண்ட நேரம் தூங்கவேண்டாம், நல்ல ஆழ்ந்த தூக்கம் கிடைத்தால் போதும் என்று சொல்பவர்கள், தொடர்ந்து அசதியையும் சோர்வையும் சேமிக்கிறார்கள். இன்னொரு பக்கம், பலருக்கு ஆழ்ந்த தூக்கமே கிடைப்பதில்லை. எப்போதும் கண்களில் தூக்கம் மிச்சமிருக்கும். ஒரு மாதிரி போதை மனநிலையிலேயே இருப்பார்கள். அதுவும் காலை வேளைகளில், இளைஞர்களையும் இளம்பெண்களையும் ஏற்றி வரும் வாகனங்கள் இப்போது அதிகரித்திருக்கின்றன. இவர்கள் எல்லாம் பல்வேறு பிபிஓக்களில் இரவு நேரப் பணியை செய்தவர்கள். வண்டியில் வரும்போதே தூக்கம் அப்பிக்கொண்டு இருக்கும்.

பலர் பேசிக்கொண்டே இருக்கும்போது, எதிரே இருப்பவர் கண் அயர்வதைப் பார்க்க முடியும். இசைக் கச்சேரிகள், ஆன்மிகச் சொற்பொழிவுகளில் இதுபோல் தம்மை மறந்து உறங்குபவர்கள் அதிகம். மீண்டும் எழுந்தவுடன் ஒருவித கூச்சம் தலைகாட்டும்.

நிறைய பேருக்கு தூங்குவதில் பிரச்னை இருக்கிறது.  விடிகாலை என்பது இவர்களுக்கு பாதி ராத்திரி ஒன்று அல்லது இரண்டு மணி. எழுந்து உட்கார்ந்துகொண்டு, வீட்டில் உள்ளதையெல்லாம் குடைந்துகொண்டு இருப்பார்கள்.

கவலை நிறைய பேரைத் தூங்கவிடாமல் செய்கிறது. இரவின் தனிமை மிகவும் அகோரமாக இருக்கிறது. உள்ளே பீறிடும் துக்கமும் கவலையும் சோகமும் ஆதங்கங்களும் இவர்களைத் தூங்கவிடாமல் செய்கிறது. ஒவ்வொரு இரவையும் இவர்கள் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுவது போல், வலியுடன் தள்ளிக்கொண்டு இருக்கிறார்கள். இதில் பலியாவது, தூக்கம். தூக்கமின்மை, எரிச்சலை மேன்மேலும் அதிகப்படுத்துகிறது.

பல்வேறு காரணங்களால் சிலர் இரவில் தூக்கமில்லாமல் தவிப்பார்கள். இதனால் கண்களில் சோர்வு ஏற்பட்டு சுறுசுறுப்பின்றி காணப்படுவர். இதுபோன்ற பிரச்சனைகளில் சிக்கி தவிப்பவர்களின் சோர்வை நீக்கி, அவர்களை சுறுசுறுப்பாக மாற்ற ஆரஞ்சை பழத்திலிருந்து ஜூஸ் பிழிந்து அதை ஃபிரீசரில் வையுங்கள். பிரீசரை அதிக குளிரூட்டி, ஜூஸை ஐஸ் கட்டிகளாக உறைய வையுங்கள். இவற்றை சுத்தமான வெள்ளைத்துணியில் கட்டி கண்களில் ஒத்தடம் கொடுங்கள். தினந்தோறும் இரவில் இப்படி செய்து வந்தால் ஒரே வாரத்தில் கண் சோர்வு நீங்கி உற்சாகம் பொங்கும்.

மனச் சோர்வு என்பது மன அழுத்தம் என்றும் வழங்கப்படுகின்றது. வேதனை இல்லாத மனிதரே இல்லை. ஆனால் சிலரை இது நோய் வடிவத்தில் பீடிக்கின்றது. சரி இந்த நோய்க்கு என்ன அறிகுறி? பசி எடுக்காமல் போவது ! உறக்கத்தில் மாறுபாடு! உற்சாகமின்மை! நம்பிக்கையின்மை! குற்ற உணர்வு! சிந்திக்க முடியாமை! மரணம் பற்றிய எண்ணம் தலைவலி வயிற்று வலி மனச் சோர்வு வருவதற்கு வயது தடையில்லை. விடலைப் பருவத்தினரிடேயே இது அதிகமாகத் தென்படுகின்றதாம்! காதல் தோல்வி, மண முறிவு இந்த இரண்டினாலும் மனச் சோர்வு ஏற்படலாம்.

பொருளாதார நெருக்கடி, குடும்பத் தலைவிக்குத் தலைவலியாகி மனச் சோர்வை உண்டாக்கக் கூடும். மனச் சோர்வு பல வகைப்படும். இது ஏன் ஏற்படுகின்றது? அறிவியலாளர்க்கே விடை தெரியாத கேள்வி இது! குடும்பத்தில் ஏற்கனவே எவரேனும் இந்த நோய்க்கு ஆளாகியிருந்தால், மற்றவருக்கு இது ஏற்பட 70 விழுக்காடு வாய்ப்புண்டு. இது குணப்படுத்தப்படக் கூடிய ஒரு நோய்தான்? பல வகை சிகிச்சை முறையை மருத்துவர் கையாள்கின்றனர். உலகில் 5 விழுக்காட்டினர் வரை இந்நோய்க்கு ஆளாகியிருக்கின்றனர். நல்ல உணவு, உடற்பயிற்சி நல்ல நண்பர்கள் சீரான குடும்ப உறவு இவை இருந்தால் மனச் சோர்வு நம்மை அண்டாது!

www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 79 = 83

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb