துபாய்: 2015ஆம் ஆண்டில் ஐக்கியநாடுகள் சபையின் தலைமையகத்தை நியூயார்க்கிலிருந்து மாற்றுவதற்கு தீர்மானித்ததோடு அதனை துபாய்க்கு மாற்றுவதற்கான முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன.
ஐக்கியநாடுகள் சபைக்கு தலைமையகம் அமைப்பதற்கான இடம் தர தயார் என துபாய் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே இந்த வாய்ப்பு சிங்கப்பூருக்கு இருந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் அமெரிக்காவில் செயல்பட அமெரிக்காவுக்கு விருப்பமில்லாத காரணத்தால் அதனை நியூயார்க்கிலிருந்து மாற்றுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது.
ஆனால் உலக நாடுகளின் தலைமையகமான ஐக்கியநாடுகள் சபைக்கு உலக நாடுகள் அனைத்திற்கு எளிதில் செல்வதற்கான இடமாக இருக்கவேண்டுமென்பது இதன் முக்கிய நோக்கமாகும். ஐக்கியநாடுகள் சபைக்கு தலைமையகம் அமைப்பதற்கான இடத்தை ஒதுக்க தாங்கள் தயார் என்று துபாய் அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை துபாய் அரசு மீடியா அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு கூறுகிறது.
இது தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு ஐ.நா அதிகாரிகளை அழைத்துள்ள துபாய் அரசு தலைமையகத்தை துபாயில் அமைப்பதால் ஏற்படும் சாதகங்களை குறித்து ஐ.நா அதிகாரிகளுக்கு தெளிவுப்படுத்த தயாரென்றும் கூறியுள்ளது.
பூகோள அமைப்பில் துபாய்க்கு நிறைய சிறப்புகள் உண்டு. உலகத்தின் எந்த மூலையிலிருந்தும் எளிதாக சென்றடையக் கூடிய நகரம், உலகத்திலேயே மாநாடு நடத்துவதற்கான இடமாகவும் துபாய் கருதப்படுகிறது. சர்வதேச தரத்திலான அடிப்படை வசதி வாய்ப்புகள் நிறைந்த இடமாகவும் துபாய் கருதப்படுகிறது. கடல்வழி, விமான வழி, சாலை வழி போக்குவரத்து வாய்ப்புகள் ஐக்கியநாட்டு சபை போன்ற எப்பொழுதும் பரபரப்பாக இயங்கும் அமைப்பிற்கு ஏற்ற இடமாக துபாய் கருத்தில் கொள்ளப்படுகிறது.
உலக சமாதானத்திற்கும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஐ.நா நடத்தும் முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகத்தான் ஐ.நா வின் தலைமையகத்தை துபாய்க்கு கொண்டுவருவதற்கான முயற்சி என்றும் அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இத்தகைய முயற்சிகள் அதிகமான தொடர் பங்களிப்பை உறுதிச்செய்யும் விதமாக ஐ.நா தலைமையகத்தின் இடம் மாற்றம் தங்களுக்கு உதவும் என துபாய் அரசு அறிவித்துள்ளது.
இதற்கிடையே போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் ஐ.நா சபை அமெரிக்காவில் இருப்பதால் செலவுகள் அதிகரித்து அது அமெரிக்கா குடிமகன்கள் மீது வரிச்சுமையை ஏற்படுத்துவதாக கூறியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த செய்தி அறிக்கையிலும் ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா நாடுகளில் அதிக வசதிகள் உள்ள துபாய்தான் எதிர்காலத்தில் உலகத்தின் தலைமையகமாக சிறந்தது என்றும் “யுனைட்டட் நேசன்ஸ் சிட்டி” துபாய் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி: தேஜஸ் மலையாள நாளிதழ்
தற்காப்புக்காக கொலை செய்வது குற்றமில்லை: உச்ச நீதிமன்றம்
புது தில்லி: தன்னுடைய உயிருக்கு எதிராளியால் ஆபத்து நேரிடலாம் என்ற சூழலில், தற்காப்புக்காக அந்த எதிராளியைக் கொலை செய்வதற்கு ஒருவருக்கு உரிமை உள்ளது என உச்ச நீதிமன்றம் மீண்டும் தெளிவுபடுத்திள்ளது.
தற்காப்புக்காக கொலை செய்வதை சட்டம் அனுமதிக்கிறது என, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, அசோக்குமார் கங்குலி ஆகியோர் அண்மையில் அளித்த தீர்ப்பில் தெரிவித்தனர்.
பஞ்சாப் மாநிலம், லூதியானா மாவட்டத்தில் கடந்த 1991 ஆம் ஆண்டு, ஜூலை 15 ஆம் தேதி நிலத் தகராறில் தனது மாமா குர்சரண் சிங்கை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ததாக தர்ஷன் சிங் என்பவர் கைது செய்யப்பட்டார்.
தர்ஷன் சிங்கின் தந்தை பக்தவார் சிங்கை பயங்கர ஆயுதத்தால் தலையில் தாக்கிய பிறகு, தர்ஷன் சிங்கையும் தாக்க குர்சரண் சிங் முயன்றார். அப்போது ஏற்பட்ட மோதலில் குர்சரண் சிங்கை தர்ஷன் சிங் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.
இந்த வழக்கை விசாரித்த செஷன்ஸ் நீதிமன்றம், தற்காப்புக்காக எதிராளியைக் கொலை செய்வது குற்றமல்ல என இந்திய தண்டனைச் சட்டத்தின் 96, 106}வது பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதன் அடிப்படையில், தர்ஷன் சிங்கை விடுதலை செய்து உத்தரவிட்டது.
எனினும், பஞ்சாப் உயர் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம் தர்ஷன் சிங்குக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தர்ஷன் சிங் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுவை விசாரித்து, தர்ஷன் சிங்கை விடுதலை செய்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, அசோக்குமார் கங்குலி ஆகியோர் அளித்த தீர்ப்பு :
சட்டத்தை மதித்து நடக்கும் குடிமகன் ஒருவரின் உயிருக்கு எதிராளியால் ஆபத்து ஏற்படக் கூடிய சூழலில், அந்த நபர் கோழையாக இருக்க வேண்டியதில்லை.
ஒருவரது உயிருக்கு அச்சுறுத்தல் நேரிடும் போது, அச்சத்தில் தப்பிச் செல்வதற்குப் பதிலாக தற்காப்புக்காக அந்த எதிராளியைக் கொலை செய்வது குற்றமாகாது என இந்த நீதிமன்றம் ஏற்கெனவே பல முறை தீர்ப்பளித்துள்ளது.
சமூக நீதி அடிப்படையில் வரையறுக்கப்பட்டுள்ள தற்காப்பு உரிமையைப் பயன்படுத்தி, தனிநபர் ஒருவர் தன்னைக் காத்துக் கொள்வதை சட்டம் அனுமதிக்கிறது.
எதிராளியால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கருதுபவர் தற்காப்புக்காக அந்த எதிராளியைக் கொலை செய்யலாம். எதிராளி உண்மையிலேயே தாக்குதல் நடத்தாமல் அல்லது காயம் ஏற்படுத்தாமல் இருந்தாலும்கூட, அவரால் தனது உயிருக்கு ஆபத்து நேரிடும் எனக் கருதுபவர் தனக்குள்ள தற்காப்பு உரிமையைப் பயன்படுத்தலாம்.
எனினும், தற்காப்பு உரிமையைப் பயன்படுத்துபவர் எந்தச் சூழலில் அதைப் பயன்படுத்தியுள்ளார், அவருக்கு உண்மையிலேயே அச்சுறுத்தல் ஏற்பட்டதா என்பதை ஆய்தறிந்தே தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட கொலை வழக்கில் அளிக்கப்படும் தீர்ப்பானது, பிற வழக்குகளுக்கும் பொருந்தும் எனக் கருத முடியாது.
சட்டம் அனுமதித்துள்ள இந்தத் தற்காப்பு உரிமையை ஒருவர் தன்னைத் தற்காத்துக் கொள்ள மட்டுமே பயன்படுத்தலாம். பதிலடி அல்லது பழிவாங்கும் நோக்கில், மற்றொருவரைக் கொலை செய்வதற்கு தற்காப்பு உரிமையைப் பயன்படுத்த முடியாது என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
கல்வியில் பின்தங்கும் தமிழகம்!
வாசிக்க திணறும் மாணவர்கள்!!
ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!!
மாநிலங்களின் கல்வித்தரம் குறித்து நடத்திய ஆய்வில், தமிழகத்தில் கற்றல் திறன் குறைந்து வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. துவக்க பள்ளிகளில் செயல் வழி கற்றல் (ஏ.எல்.எம்.,), படைப்பாற்றல் கல்வி (ஏ.பி.எல்.,) முறையில் கல்வி போதிக்கப்படுகிறது.
துவக்க கல்விக்காக மத்திய அரசு பணத்தை கோடிக்கணக்கில் கொட்டுகிறது. ஆனால், கல்வித்தரம் உயர்ந்துள்ளதா என்றால், தமிழகத்தை பொறுத்தவரை இல்லை என்றே சொல்ல வேண்டும்.இந்திய கல்வி வளர்ச்சி கழகம், 2005 முதல் நாடு தழுவிய அளவில், கல்வி நிலை
ஆண்டறிக்கை (ஏ.எஸ்.இ.ஆர்.,-அசர்) என்ற ஆய்வை நடத்துகிறது. தமிழகத்தில் “கல்வி’ என்ற தன்னார்வ கூட்டமைப்பு ஆய்வை நடத்தியது. இதில், தமிழகம் கற்றல் திறனில் பின்தங்கி இருப்பதாக, “பகீர்’ தகவல் வெளியாகியுள்ளது.2008 ல் தமிழகம் பின்தங்கி இருப்பதும்; கடந்த மூன்று ஆண்டுகளில் கற்றல் திறனில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதுகுறித்து, இந்திய கல்வி வளர்ச்சி கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆறு முதல் 14 வயது வரை உள்ள கிராமப்பள்ளி மாணவர்களிடம், அடிப்படை திறன் (வாசிப்பு, எளிய கணிதம்) குறித்து ஆய்வு நடத்தினோம்.
o இரண்டாம் வகுப்பு குழந்தைகள், பாடத்தில் உள்ளசிறிய கதைகளை வாசிப்பது
அடிப்படை திறன் ஆகும். ஆனால், ஐந்தாம் வகுப்பில் படிக்கும் 72 சதவீத
மாணவர்களால், இரண்டாம் வகுப்பில் உள்ள சிறிய கதைகளை கூட வாசிக்க
முடியவில்லை.
o இரண்டாம் வகுப்பு குழந்தைகள், எளிய கழித்தல் கணக்குகளை செய்ய வேண்டும்.
ஆனால், மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு படிக்கும் 64 சதவீதத்தினருக்கு இது
தெரியவில்லை.
o நாட்டின் ஒட்டுமொத்த கல்வி நிலையோடு ஒப்பிடுகையில், தமிழகத்தின் கற்றல் திறன் மிகவும் பின்தங்கியுள்ளது.
நாட்டின் ஒட்டுமொத்த
வாசித்தல் திறன்- 66.6 சதவீதம்,
கணிதத்திறன்- 54.9 சதவீதம்.
ஆனால்,
தமிழகம், முறையே
வாசித்தல் திறன்– 45.7;
கணிதத்திறன்– 36.9 சதவீதம் என்ற நிலையில் தான் உள்ளது.
o 2006 முதல் 2008 வரை ஒப்பீட்டில், கற்றல் திறனில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
வாசிப்பு திறன் (சதவீதம்):
2006- 46.4, 2007-49.2, 2008- 45.7.
கணிதத்திறன் (சதவீதம்):
2006- 53, 2007- 43, 2008- 36.3.
o மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கேரளா, சண்டிகர், இமாச்சல்,
உத்தரகாண்ட், சிக்கிம், நாகலாந்து மாநிலங்களில் 85 சதவீததத்திற்கும்
மேற்பட்ட மாணவர்கள் வாசிப்பு திறன் பெற்றுள்ளனர்.
o மத்திய பிரதேசம், சண்டிகார், இமாச்சல், கேரளா, மகாராஷ்டிரா,
உத்தரகாண்ட், சிக்கிம், நாகலாந்து, ஆந்திரா, மேகாலயா, மணிப்பூர், பீகார்,
அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் 85 சதவீததத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள்
கணித்திறன் பெற்றுள்ளனர். இவ்வாறு அதிகாரி கூறினார்.
இதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில் தமிழ் நாட்டில் படிப்பை விட சினிமா தான் மிகவும் முக்கியமானது. நடிகர், நடிகைகளுக்கு பட்டம் வழங்குவதே அரசின் தலையாய கடமை என்று ஆகிவிட்ட பிறகு, கல்வி எக்கேடு கெட்டால் என்ன?கல்வி நிறுவனங்கள் வியாபார நிறுவனங்களாகவும், அரசியல் வாதிகளின் வருமான கூடங்களாகவும் ஆகி விட்டால் பின் கல்வி தரம் குறையாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது பெரும் தவறு.காமராஜர், அண்ணா காலங்களில் தமிழகத்தில் இருந்துதான் அதிக ஐ ஏ எஸ்
அதிகாரிகள் இந்தியாவிற்கு தேர்ந்து எடுத்தார்கள் என்பது வரலாறு, இன்று
தமிழர் கல்விதரம் இந்த அளவிற்கு கீழே போய்விடாது என்பது வருந்தத்தக்க விஷயம். இலவசத்தை கொடுத்ததும், டி வீ, சினிமாவிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த அரசியல்வாதிகள் வருங்கால மக்களை சிந்திக்கவிடாமல் தனது கட்டுபாட்டில் வைப்பதற்குதான் முயற்சி செய்வார்கள். மக்கள் தான் விழிப்படைய வேண்டும்.
Posted by: Ayangudi.MOHAMED ISMAIL – Qatar