Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

பொன்னகைக்கு விலையுண்டு; புன்னகைக்கு?

Posted on January 17, 2010 by admin

 

Don’t miss to read the last line of this article

[ காலையில் எழுந்ததும் உங்கள் குடும்பத்தினருக்கு புன்னகையுடன் ”அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு” என்று முழுமையாக ஸலாம் சொல்லிப்பாருங்கள்; அன்று முழுவதும் உங்கள் குடும்பம் குதூகலமாக இருக்கும் என்பதை கண்கூடாகக் காண்பீர்கள்.

சாதாரணமாக ஒருவர் மற்றவருக்கு ஸலாம் சொல்லும்போதே சொல்பவருக்கும் சரி அதை கேட்பவருக்கும் சரி முகத்தில் புன்னகை இழையோடடுவதைக் காணலாம். சிடு சிடு என்று எவரும் ஸலாம் சொல்வதில்லை– சொல்லவும் முடியாது; இது எதார்த்தம். ஆகவே புன்னகைக்கு காரணமான ஸலாத்தை அடிக்கடி கூறுங்கள்.

அதிகம் புன்னகை செய்பவர் இளமையான தோற்றத்தை தக்க வைத்துக்கொள்வார். நினைவிருக்கட்டும். புன்னகை உங்கள் இதழ்களில் தங்கியிருக்கவேண்டும்.

உங்கள் முகத்தில் இருக்கும் புன்னகை உங்களுக்கு மட்டுமின்றி உங்கள் உடனிருப்பவர்களுக்கும் வெளிச்சம் கொடுக்கிறது, மகிழ்வூட்டுகிறது. எத்தகைய இறுக்கமான சூழலையும் தளர்த்திவிடுகிறது. புன்னகையை நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் பரிசளிக்கலாம். எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் வழங்கலாம். அதற்கு செலவெதுவும் இல்லை. ஆனால் பலன்களோ ஏராளம்.. ஏராளம்.]

“என் வாழ்நாளில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லவம் அவர்கள் அளவிற்குப் புன்னகை பூத்த இன்னொருவரை நான் கண்டதேயில்லை” என்று அறிவிப்பவர் அப்துல்லாஹ் இப்னு ஹாரித் (திர்மிதி)

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் ”ஒருவர் முகத்தில் காட்டும் மென்மையான புன்னகையும் அவர் பிறருக்குச் செய்யும் தர்மமே” என்ற அளவிற்கு அதனை வலியுறுத்தியுள்ளார்கள்.

“உனது சகோதரனை மலர்ந்த முகத்துடன் நீ சந்திப்பதும் தர்மமாகும்! என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லவம் அவர்கள் கூறியுள்ளார்கள்” – அறிவிப்பாளர்கள்: அபூதர் ரளியல்லாஹு அன்ஹு ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு (திர்மிதி 2022, 2037)

“உன் சகோதரனின் முகத்தைப் பார்த்து புன்னகை புரிவது உனக்கு நல்லறமாகும்.

நீ நன்மையை ஏவுவதும் தீமையைத் தடுப்பதும் நல்லறமாகும்.

பாதை தவறிய மனிதருக்குப் பாதையைக் காட்டுவதும் உனக்கு நல்லறமாகும்.

பார்வையிழந்தவருக்குப் பார்வையாக நீ ஆவதும் உனக்கு நல்லறமாகும்.

பாதையில் கிடக்கும் கல், முள், எலும்பு போன்றவற்றை நீ அகற்றுவதும் உனக்கு நல்லறமாகும்.

உனது வாளியில் உள்ள தண்ணீரை உனது சகோதரரின் வாளியில் ஊற்றுவதும் உனக்கு நல்லறமாகும்.”

என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லவம் அவர்கள் கூறினார்கள். (இப்னு ஹிப்பான்: திர்மிதீ)

பொன்னகைக்கு விலையுண்டு. புன்னகைக்கு? அதற்கு விலை எதுவும் இல்லை. ஆனால் அதுவோ விலை மதிப்பில்லாதது. புன்னகையை ‘எந்தப் பிரச்னையையும் நேராக்கும் வளைந்த கோடு‘ என வரையறுக்கிறது ஒரு பொன்மொழி. புன்னகையால் வசமாகாதவர்களே இருக்க முடியாது. நீங்கள் புன்னகையுங்கள், உலகமே உங்களுடன் புன்னகைக்கும்.

புன்னகை பூத்த முகமாக ஏன் இருக்க வேண்டும்?

புன்னகை பூத்த முகமாக ஏன் இருக்க வேண்டும்? அதனால் என்ன பலன்?

புன்னகை நமது வெளியுலகத் தொடர்புகளை சீரான முறையில் வைத்திருக்க உதவுவதோடு, உடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. நம்மைக் கவர்ச்சியாக்குகிறது.ஒருவர் எவ்வளவுதான் அழகாக இருந்தாலும் கடுகடுவென்று முகத்தை வைத்திருப்பின் அவர்களுடன் பழகத் தோன்றுமா என்ன?

ஒரு புதிய அலுவலகத்துக்குள் நுழைகிறீர்கள். ஏதோ ஒரு தகவலை விசாரிக்கவேண்டும் என்றால் யாரை அணுகுவீர்கள்? அங்குள்ளவர்களில் அழகிய தோற்றமுடையவரையா அல்லது சிரித்த முகத்துடன் இருப்பவரையா? கண்டிப்பாக இரண்டாமவரைத்தான். ஏனெனில் அவர் முகத்தில் உள்ள புன்னகை உங்களை அவர்பால் ஈர்த்துவிடுகிறது. உண்மையா இல்லையா? பிறரை வசீகரிக்க வேண்டுமானால், நம்மை உயர் ரக ஆடைகளாலும், அணிகலன்களாலும் அலங்கரித்தாக வேண்டுமென்பதில்லை. உதடுகளில் புன்னகையை மட்டும் அணிந்தாலே போதுமானது. அது முன்பின் தெரியாதவர்களைக் கூட இணைக்கக் கூடிய கயிறு.

புன்னகைக்கு மறு பெயர் அழகு என்று சொல்லலாம். குழந்தையானாலும் வயதானவர்களானாலும் எந்த வயதை உடையவர்களாயிருந்தாலும் சரி; புன்னகைத்தால் அதன் அழகே தனிதான்.

சோர்வாக உணரும்பொழுது புன்னகை

அடுத்தமுறை சோர்வாக உணரும்பொழுது கண்ணாடி முன் நின்று புன்னகை செய்யுங்கள். உங்கள் சோர்வு எங்கே போயிற்று என்று தேடித்தான் பார்க்கவேண்டும். ஏனெனில் புன்னகை உங்கள் சோர்வை விரட்டி அடித்துவிடும். புன்னகை மன உளைச்சலைக் கட்டுப்படுத்தும் மிகச்சிறந்த காரணி. ஏனெனில், நீங்கள் புன்னகைக்கையில் உங்கள் உடம்பில் ‘எண்டார்பின்‘, ‘செரோடினின்‘ மற்றும் சில இயற்கையான வலி நிவாரணிகள் சுரக்கின்றன. இவை உங்கள் உடல்வலியைக்கட்டுப்படுத்தக்கூடியவை. புன்னகை ஒரு இயற்கையான மருந்து.

உங்களுக்கு இரத்த அழுத்தம் இருக்கிறதா? அடிக்கடி புன்னகையுங்கள். இரத்த அழுத்தம் குறைவதைக் காண்பீர்கள். அது மட்டுமல்ல. புன்னகை உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்துகிறது. எப்போதும் புன்னகைத்தவாறே இருப்பவர்களுக்கு உடல் நலப்பாதிப்பு அடிக்கடி ஏற்படுவதில்லை என்கிறது ஒரு ஆய்வு.

கோபமும் புன்னகையும்

நாம் கோபப்படுகையிலும், அழுகும்போதும் நமது முகத்தில் உள்ள தசைகள் தளர்ந்துவிடுகின்றன. குறிப்பாக அழுகையில், கண்ணீர் அதிகம் சுரப்பதால் கண்கள் உப்பி அழகிழந்து விடுகிறது. அதிகம் கோபப்படுகிறவர்களும் எதற்கெடுத்தாலும் முகத்தை உம்மென்று வைத்திருப்பவர்களும் விரைவில் முதுமையடைந்து விடுகின்றனர்.ஆனால் புன்னகைக்கிறபோது, முகத்தசைகள் தளர்வதில்லை. அதிக அளவான தசைகளும் பயன்படுத்தப் படுவதில்லை. அதனால் நம் தோற்றம் பொலிவு அடைகிறது.

அதிகம் புன்னகை செய்பவர் இளமையான தோற்றத்தை தக்க வைத்துக்கொள்வார். முகம் பார்க்கும் கண்ணாடி முன் நில்லுங்கள். முதலில் அழுவது போல் பாவனை செய்யுங்கள். பின் கோபமாக இருப்பதுபோல். கடைசியில் புன்னகை செய்யுங்கள். உங்கள் முகம்தான். நீங்கள் பலமுறை கண்ணாடியில் பார்த்த முகம்தான். அதில்தான் எத்தனை வேறுபாடு?

மன உளைச்சலில் இருப்பவர்களுக்கு புன்னகை ஒரு அருமருந்து

மன உளைச்சலில் இருப்பவர்களுக்கும் புன்னகை ஒரு அருமருந்து. கண்களை மூடிக்கொண்டு உங்களுக்குப் பிடிக்காத, வருத்தத்தை உண்டாக்கக்கூடிய நிகழ்வுகளை, தகவல்களை நினைத்துக்கொள்ளுங்கள். இப்பொழுது புன்னகைத்தவாறு கண்களை மூடிக்கொண்டு அதே நிகழ்வுகளை மீண்டும் எண்ணிப்பார்க்க முயலுங்கள். முடிகிறதா?

நினைவிருக்கட்டும். புன்னகை உங்கள் இதழ்களில் தங்கியிருக்கவேண்டும். உங்கள் மன நிலையில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? முதலில் மிகுந்த துன்பத்தை ஏற்படுத்திய அதே நிகழ்வுகள் நீங்கள் மறுமுறை நினைக்கையில் அத்தனை வருத்தத்தைத் தருவதில்லை. சரிதானே? அடிக்கடி புன்னகை செய்துகொண்டே இருங்கள். உங்கள் மனச் சோர்வு, மன அழுத்தத்திற்கு நீங்கள் வேறு மருந்து எதுவும் தேட வேண்டியதே இல்லை.

புன்னகைக்கத் தூண்டும் ”ஸலாம்”

காலையில் எழுந்ததும் உங்கள் குடும்பத்தினருக்கு புன்னகையுடன் ”அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு” என்று முழுமையாக ஸலாம் சொல்லிப்பாருங்கள். அன்று முழுவதும் உங்கள் குடும்பம் குதூகலமாக இருக்கும் என்பதை கண்கூடாகக் காண்பீர்கள். சாதாரணமாக ஒருவர் மற்றவருக்கு ஸலாம் சொல்லும்போதே சொல்பவருக்கும் சரி அதை கேட்பவருக்கும் சரி முகத்தில் புன்னகை இழையோடடுவதைக் காணலாம். சிடு சிடு என்று எவரும் ஸலாம் சொல்வதில்லை- சொல்லவும் முடியாது; இது எதார்த்தம். ஆகவே புன்னகைக்கு காரணமான ஸலாத்தை அடிக்கடி கூறுங்கள்.

அலுவலகத்தில் பார்க்கும் அனைவருக்கும் புன்முறுவலுடன் முகமன் கூறுங்கள். அது எல்லாத் திசைகளிலும் காற்று போல் பரவக்கூடியது. எவ்வளவு கடுமையான பிரச்னையாக இருக்கட்டும். புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள். அது எளிமையாக மாறிவிடும். எவ்வளவு கோபக்கார முதலாளியாக இருக்கட்டும். முறுவலுடன் தகவல் தொடர்பை மேற்கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் கோரிக்கையில் வெற்றியடைவீர்கள்.

தன்னம்பிக்கையை அதிகரிக்கிறிக்கச் செய்யும் புன்னகை

புன்னகை செய்யுங்கள்; உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. புன்னகை செய்யுங்கள்; உங்கள் மனதில் நேர்மறையான சிந்தனைகள் நிறைகின்றன. புன்னகை உங்களை வெற்றியாளராக மாற்றும் ஒரு எளிய சாதனம்.

ஒரே நிறுவனத்தில் இரு விற்பனையாளர்கள் ஒரே கல்வித்தகுதி, அறிவுத்திறன் போன்ற காரணிகளில் ஒத்திருக்கலாம். ஆனால் ஒருவர் தமது விற்பனை இலக்கை எளிதில் எட்டிவிடுகிறார். மற்றொருவரால் அந்த இலக்கைத் தொட முடிவதில்லை. ஏன்? அவர்கள் வாடிக்கையாளர்களை அணுகும் விதம்தான் காரணம். புன்னகையுடன் வாடிக்கையாளரை அணுகுபவர் தன்னம்பிக்கையுடன் பேசி அவர்களை வசமாக்குகிறார். மற்றவரிடம் அது இல்லாமலிருக்கக் கூடும். அது அவரை, அவரது இலக்கை அடைய விடாமல் தடுத்துவிடுகிறது.

நோயை குணப்படுத்தும் புன்னகை

நோயாளிகளிடம் சிரித்த முகத்துடன் பழகும் செவிலியர் மற்றும் மருத்துவர்கள் எளிதில் நோயைக் குணப்படுத்திவிட முடியும். நோயாளியை மருத்துவர் பார்க்கும்பொழுதே அவருடைய புன்னகை அந்நோயாளியைத் தொற்றிவிடுகிறது. அவர்கள் தமது நோய் குறித்து அவரிடம் வெளிப்படையாகவும் எளிதாகவும் உரையாடும் மன நிலையைப் பெறுகின்றனர். அம்மருத்துவர் தன்னையும் அறியாமல் அந்த நோயாளியின் நம்பிக்கையைப் பெற்றுவிடுகிறார். இதனால் அவருடைய மருத்துவம் வெற்றி பெறுகிறது. புன்னகைப்பவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியும், நம்பிக்கையும் அதிகரிக்கும் என்று மேலே கண்டோம். உடல் குணமாக இவை இரண்டும் மிகவும் அவசியம். இவை அதிகரிக்கையில் நோயாளி நலம் பெறுவது எளிதாகி விடுகிறது.

பலருக்கு முன் பேசப்போகிறீர்களா? சுவையான பேச்சைத் தயாரிப்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் நீங்கள் சிரித்த முகத்துடன் பார்வையாளர்களை எதிர்கொள்வது. இதனால் பார்வையாளர்களுக்கும் உங்களுக்கும் ஒரு பிணைப்பு ஏற்பட்டு விடுகிறது. சிலர் மிக நன்றாகப் படித்து இருப்பார்கள். ஆனால் தேர்வில் கேள்வித்தாளை வாங்கும் பொழுது பதற்றமடைந்து விடுவார்கள். இதனால் பல சமயம் நன்கு தெரிந்த விடைகள் கூட மறந்துவிடும். மாறாக, புன்னகையுடன் கேள்வித்தாளைப் புரட்டிப் பாருங்கள். பதட்டம் தணிந்து நினைவோட்டம் சீராகும்.

உங்கள் முகத்தில் இருக்கும் புன்னகை உங்களுக்கு மட்டுமின்றி உங்கள் உடனிருப்பவர்களுக்கும் வெளிச்சம் கொடுக்கிறது, மகிழ்வூட்டுகிறது. எத்தகைய இறுக்கமான சூழலையும் தளர்த்திவிடுகிறது. புன்னகையை நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் பரிசளிக்கலாம். எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் வழங்கலாம். அதற்கு செலவெதுவும் இல்லை. ஆனால் பலன்களோ ஏராளம்..ஏராளம்.

 so smile please…… please…… please…….

www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 32 = 41

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb