அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்வோம் (1)
அபூ ரிள்வான்
அல்லாஹ், பூமி மற்றும் வானங்களுடைய ஆட்சியின் உரிமையாளனாவான். தான் நாடுகின்றவற்றைப் படைக்கின்றான். தான் நாடுவோருக்குப் பெண்மக்களை வழங்குகின்றான். தான் நாடுவோருக்கு ஆண் மக்களையும் வழங்குகின்றான். தான் நாடுவோருக்கு ஆண் மக்களையும் பெண் மக்களையும் சேர்த்து வழங்குகின்றான். தான் நாடுவோரை மலடுகளாகவும் ஆக்குகின்றான். திண்ணமாக, அனைத்தையும் அறிந்தவனும் யாவற்றின் மீதும் பேராற்றல் கொண்டவனும் ஆவான்” (அல்-குர்ஆன் 42:49,50)
ஆசிய நாடுகளில், குறிப்பாக இந்தியாவையும், பாகிஸ்தானையும் எடுத்துக் கொண்டால் பெண் கருவுறுந்தன்மை முறையே 2.81 மற்றும் 3.52 ஆக உள்ளன. இவைகள் குறைந்த அளவான ஒரு பெண்ணுக்கு 2.11 குழந்தைகள் என்ற அளவை விட அதிகமாக இருப்பதால் இந்நாடுகளுக்கு ஆபத்தில்லை. குடும்பக் கட்டுப்பாடு கோஷங்களான ”நாம் இருவர் நமக்கிருவர்” மற்றும் ”ஒரு குழந்தை போதுமே!” என்பதெல்லாம் இந்தியாவில் தற்போது மறைந்து விட்டது அல்லது மறைந்துக் கொண்டு வருகிறது.
ஆனால் சீனா மற்றும் ரஷ்ய நாடுகளில் பெண் கருவுறுந்தன்மை முறையே 1.73 மற்றும் 1.34 ஆக உள்ளன. இவைகள் குறைந்த பட்ச அளவைவிட மிகக் குறைவாக இருப்பதால் இந்நாடுகள் பயப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதில் சீன அரசின் ”ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தை” என்னும் குடும்பக் கட்டுப்பாட்டுக் கொள்கையால் அந்நாடு பெரும்பாதிப்பை சந்தித்திருக்கிறது.
ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தை மடடுமே பெற்றுக்கொள்ள அனுமதி என்ற கொள்கையால், ஒவ்வொரு குடும்பமும் தனக்குப் பிறகு பிறக்கும் குழந்தை ஆண் குழந்தையாகவே இருக்க வேண்டும் என விரும்புகின்றனர்.
கருவுற்ற சீனப் பெண்கள், ஸ்கேன் மூலம் தன் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்று தெரிந்துக் கொண்டவுடன், ஆண் குழந்தையாக இருந்தால் குழந்தையைப் பெற்றுக் கொள்கிறார்கள். மாறாக பெண் குழந்தையாக இருந்தால் கருவைக் கலைத்து விடுகின்றனர். இதனால் ஆண், பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் சமமாக இல்லாமல் ஆண் விகிதம் மட்டும் அதிகமாகி விட்டது.
1970 ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்படும் ”ஒரு குழந்தை” குடும்பக்கட்டுப்பாட்டுத் திட்டம், பெண்கள் சதவிகிதம் குறைவதற்கு காரணமாகி விட்டது. ஒரு சமுதாயத்தில் ஆண்களைவிட பெண்கள் குறைவாக இருந்தால் அச்சமுதாயத்தில் குழந்தைப் பிறப்பும் குறைவாகவே இருக்கும்.
கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்னால் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட ”இவ்வொரு குழந்தைச் சட்டத்தால்” தற்சமயம் திருமண வயதை அடைந்த ஆண்களில் அநேகருக்கு பெண்கள் கிடைக்காது அல்லாடுகின்றனர். இதனால் அண்டை நாடுகளான தென் கொரியா, மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலிருந்து பெண்களை மணமுடித்து தம் சீன நாட்டிற்கு அழைத்துச் செல்கின்றனர்.ஐரோப்பா கண்டத்தில் உள்ள
”ஒருங்கினைந்த ஐரோப்பா”வில் (Europian Union) 31 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. அவைகளில் தற்கால நிலைமையையும், எதிர்காலத்தில் என்ன மாறுதல்கள் ஏற்படப்போகின்றன என்பதையும் சற்று ஆராய்வோம்!
ஐரோப்பாவின் ஒரு முக்கிய நாடான பிரான்ஸில் இஸ்லாம் வேகமாக பரவி வருகிறது. பிரான்ஸின் தெற்குப் பகுதியில் முஸ்லிம்களின் பள்ளிவாயில்கள் கிறிஸ்தவ மாதா கோவில்களையும் விட அதிகமாக உள்ளன.
தற்போது உள்ள மக்கட்தொகையில் பொதுவாக பிரான்ஸில் 20 வயதுக்கு கீழ் உள்ள இளைஞர்களும், சிறுவர்களும், குழந்தைகளும் 30 சவிகிதம் பேர் உள்ளனர். இன்னும் நைஸ், மர்ஸில்ஸ், பாரிஸ் போன்ற நகரங்களில் இவ்வெண்ணிக்கை 40 சதவிகிதம் ஆக உள்ளது. ஆராய்ச்சியாளர்களின் கணக்குப்படி, 2027-ல் பிரான்ஸில் உள்ள மக்களில் ஐந்தில் ஒருவர் முஸ்லிமாக இருப்பார். மேலும் 39 வருடங்களுக்குப் பிறகு பிரான்ஸ் ஒரு இஸ்லாமிய நாடாக மாறும்!
குழந்தைகளைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில்
”அல்லாஹ், பூமி மற்றும் வானங்களுடைய ஆட்சியின் உரிமையாளனாவான். தான் நாடுகின்றவற்றைப் படைக்கின்றான். தான் நாடுவோருக்குப் பெண்மக்களை வழங்குகின்றான். தான் நாடுவோருக்கு ஆண் மக்களையும் வழங்குகின்றான். தான் நாடுவோருக்கு ஆண் மக்களையும் பெண் மக்களையும் சேர்த்து வழங்குகின்றான். தான் நாடுவோரை மலடுகளாகவும் ஆக்குகின்றான். திண்ணமாக, அனைத்தையும் அறிந்தவனும் யாவற்றின் மீதும் பேராற்றல் கொண்டவனும் ஆவான்” (அல்-குர்ஆன் 42:49-50)
மேற்கூறப்பட்ட இவ்வசனங்களிலிருந்து அல்லாஹ் (சுப்) ஒருவனே மக்கட்செல்வத்தைக் கொடுக்க முடியும்; மற்ற எந்த சக்தியாலும், அரசாட்சியாலும், மக்கட்தொகையை பெருக்கவோ, குழந்தைகளின் பிறப்பை அதிகரிக்கவோ ஒருகாலும் முடியாது.
குழந்தைகள் என்பது சீனாவில் உற்பத்தியாகும் விளையாட்டு பொம்மைகள் அல்ல! அவைகைளை கோடிக்கணக்கில் ஓரிரு தொழிட்கூடங்களில் தானியங்கி எந்திரங்களைக் கொண்டு (Robatic Machinary) தயாரித்து விடுவதற்கு! சோதனைக் குழாய் (Test Tube) குழந்தைகள் என்று கூறப்படும் சோதனைக்குழாயில் கருவுறவைக்கப்படும் கருவை திரும்ப பெண்ணின் கருப்பையில் வைத்துத்தான் குழந்தை பூரண வளர்ச்சி அடைந்ததும் பிரசவிக்கச் செய்கிறார்கள்.
செயற்கை கருப்பையை (Artificial uterus) இதுவரை எந்த விஞ்ஞானிகளாலும் உருவாக்க முடியவில்லை! உருவாக்கவும் முடியாது!! இன்னும் ஒன்றையும் இங்கே குறிப்பிட வேண்டும். கோழி முட்டைகளை இன்குபேட்டரில் (Incubator) வைத்து விரைவாகவே குஞ்சுப்பொறிக்க வைப்பதைப்போல கருப்பையில் கருவளர்ச்சியை வேகப்படுத்தி ஒன்பது மாதத்திற்கு முன்பாக 7 மாதத்திலேயோ அல்லது 5 மாதத்திலேயோ குழந்தையை முழுவளர்ச்சி அடைவித்து பிரசவிக்க வைக்க ஒருகாலும் முடியாது!
எனவே குழந்தைகள் பிறப்பதை அதிகரிக்க வழி ஒன்றே ஒன்றுதான்! அதுவே இயற்கையான வழி! நம் முன்னோர்களால் காலம் காலமாகக் காட்டப்பட்ட வழி! இஸ்லாம் காட்டும் வழியும் அதுதான். வயது வந்த ஆண் பெண் இருபாலரும் திருமணம் முடித்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது தான். எத்தனை குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் வரம்பு எதுவும் விதிக்கவில்லை.
இப்பொழுதுள்ள நடைமுறைப்படி, ஒருவரது பொருளாதார வசதிக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் தகுந்தவாறு தம்பதிகள் குழந்தைகளைப் பெற்றுக்கொள்கிறார்கள். அதிலும் வெளியில் வேலைக்குப் போகும் பெண்கள் குறைவாகவே ஓரிரு குழந்தைகளுடன் நிறுத்திக் கொள்கின்றனர். பெண்கள் நாட்பட்டுத் திருமணம் செய்து கொள்வதும் குறைவாக குழந்தைகள் பெற்றுக்கொள்வதற்கு ஒருகாரணம்.
இறைவன் தன் திருமறையில் அஷ்ஷூரா அத்தியாயத்தில் குழந்தைகளை தான் நாடுவோருக்கு கொடுப்பதாக கூறும் இடங்களில் ”பெண் குழந்தைகளைக் கொடுப்பேன்; ஆண் குழந்தைகளைக் கொடுப்பேன்; இரண்டையும் கலந்துக் கொடுப்பேன், என்கிறான். இதில் உபயோகிக்கப்படும் அரபிச் சொற்களை பார்க்கும் பொழுது ஒரு உண்மை பளிச்சிடும்.
அரபி இலக்கணத்தில் ஒன்றைக் (Singular) குறிக்க ஒரு சொல்லும், இரண்டைக் (Dual) குறிக்க மற்றொரு சொல்லும், மூன்றையும் அதற்கு மேல் உள்ளவற்றைக் குறிக்க பிரிதொரு சொல்லும் பயன்படுத்தப் படுகின்றன. குர்ஆனில், இந்த வசனத்தில் பயன்படுத்தப்படும் பெண் குழந்தைகள் மற்றும் ஆண் குழந்தைகளுக்கான சொற்கள் மூன்றையோ அல்லது அதற்கு மேல் உள்ளவைகளையோ குறிக்கும் பன்மைச் சொற்கள்ஆகும். இதன் மூலம் சூசகமாக மூன்று குழந்தைகளையோ அல்லது அதற்கு மேலேயோ பெற்றுக்கொள்வதைத்தான் இறைவன் விரும்புகின்றான் என்று கூட நாம் பொருள் கொள்ளலாம். அல்லாஹ் மிக அறிந்தவன்.
ஒரு பெண் தன் கருவுறுங்காலத்தில் (15 முதல் 44 வயது வரை) குறைந்தபட்சமாக 2.11 குழந்தைகளைப் பெற்றுக்கொண்டால் தான் அச்சமுதாயம் நீடித்து வாழும் என்பது விஞ்ஞானிகளின் முடிவு. இவ்வெண் 2.11 யை முழு எண்ணாக மாற்றினால் 3 குழந்தைகள் ஆகும். ஆக, ஒரு பெண் முன்று அல்லது அதற்கு மேல் குழந்தைகளைப் பெற்றுக்கொண்டால் தான் அச்சமுதாயம் (அல்லது நாடு) வளரும்; அபிவிருத்தியடையும்.
இதில் ஆண் குழந்தையாகப் பெறவேண்டுமா? அல்லது பெண் குழந்தையாகப் பெறவேண்டுமா? என்றெல்லாம் கவலைப்படத் தேவையில்லை. இறைவன் தனது திட்டப்படி ஆணாகவோ, பெண்ணாகவோ அல்லது இரண்டும் கலந்தோ கொடுப்பான். குழந்தை இறப்பு (Infant Martality) விகிதம் அதிகம் உள்ள நாடுகளிலும், போர் மற்றும் இயற்கை அழிவுகளால் பாதிக்கப்படும் நாடுகளிலும் உள்ள மக்கள் குழந்தைப் பிறப்பு விகிதத்தை இன்னும் அதிகப்படுத்த வேண்டும் அங்குள்ள பெண்கள் நான்கோ அதற்கு மேலுமோ குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
கட்டுரையின் தொடர்ச்சிக்கு ”Next” ஐ ”கிளிக்” செய்யவும்.