ஸலவாத்தும் அதன் சன்மானங்களும் ஷம்சுல்லுஹா ரஹ்மானி அல்லாஹ்வின் இறுதித் தூதரான முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் முஸ்லிம்களின் உள்ளத்தில் யாரும் அடைய முடியாத இடத்தை அடைந்திருக்கின்றார்கள். அவர்களுக்காக உயிரையே அர்ப்பணிக்க கோடான கோடி மக்கள் காத்திருக்கின்றனர். ஒருவர் மீது அன்பு கொண்டு விட்டால் அந்த அன்பை வெளிப்படுத்தும் விதமாக அவரைப் புகழ ஆரம்பித்து விடுவது மனித இயல்பு! அப்படிப் புகழும் போது மனிதன் வரம்பு கடந்து விடுகின்றான். தான் நேசிப்பவரைக் கடவுள் அந்தஸ்திற்குக் கொண்டு…
Day: January 14, 2010
அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்வோம் (1)
அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்வோம் (1) அபூ ரிள்வான் அல்லாஹ், பூமி மற்றும் வானங்களுடைய ஆட்சியின் உரிமையாளனாவான். தான் நாடுகின்றவற்றைப் படைக்கின்றான். தான் நாடுவோருக்குப் பெண்மக்களை வழங்குகின்றான். தான் நாடுவோருக்கு ஆண் மக்களையும் வழங்குகின்றான். தான் நாடுவோருக்கு ஆண் மக்களையும் பெண் மக்களையும் சேர்த்து வழங்குகின்றான். தான் நாடுவோரை மலடுகளாகவும் ஆக்குகின்றான். திண்ணமாக, அனைத்தையும் அறிந்தவனும் யாவற்றின் மீதும் பேராற்றல் கொண்டவனும் ஆவான்” (அல்-குர்ஆன் 42:49,50) ஆசிய நாடுகளில், குறிப்பாக இந்தியாவையும், பாகிஸ்தானையும் எடுத்துக் கொண்டால் பெண்…
அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்வோம் (2)
அபூ ரிள்வான் திருமணம் செய்து அதிகமாக குழந்தைகள் பெற்றுக் கொள்வது ஒன்றே மனிதவளத்தை அதிகரிக்க வழி. அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் வல்ல அல்லாஹ் கொடுக்கின்ற அருட்கொடைகளில் மிகச்சிறந்த அருட்கொடையாகிய குழந்தைகளை அதிகமாகப் பெற்றுக்கொள்ளுதலே இறைவனின் உவப்பிற்கு உகந்தவழியாகும். அல்லாஹ், தனது திருமறையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றான். ”பெண்கள், ஆண்மக்கள், பெருவாரியான தங்கம் மற்றும் வெள்ளிக்குவியல்கள், கண்கவர் குதிரைகள், கால்நடைகள், வேளான் நிலங்கள் உள்ளிட்ட ஆசைப்பொருள்களை விரும்புவது மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது. இவை(யாவும்) இவ்வுலக வாழ்வின் (அற்பமான) வசதிகளே. (ஆனால்), அழகிய…
அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்வோம் (3)
அபூ ரிள்வான் சிலர் கேட்கலாம், ”நான் நடுத்தர வர்க்கத்தில் (middle class) உள்ளவன்- நான் எப்படி அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்” என்று. சிந்தித்துப் பாருங்கள்! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களுடன் வாழ்ந்த நபித்தோழர்களும், தோழியர்களும் பெரும் வசதியிலா வாழ்ந்தார்கள்? சாப்பிட மூன்று வேளை உணவுக்கே பெரிய திண்டாட்டம்! உடுத்த மாற்று உடைகள் இல்லை!! தங்கியிருப்பதற்கு ஈச்ச ஓலையினாலான கொட்டகைத்தான் வீடுகள்! இப்படித்தான் அவர்களின் முழு வாழ்க்கையும் இருந்தது. ஆனால் அவர்களெல்லாம்…
ஒரு வார்த்தையைக் கூட மாற்றுவதற்கு அனுமதியில்லை!
ஒரு வார்த்தையைக் கூட மாற்றுவதற்கு அனுமதியில்லை! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு நபித்தோழர் ரளியல்லாஹு அன்ஹு ஒருவருக்கு தூங்குவதற்கு முன் ஓதவேண்டிய நீண்ட துஆ ஒன்றைக் கற்றுக்கொடுத்தார்கள்; ”ஆமன்து பிகிதாபிக்கல்லதீ அன்ஜல்த வநபிய்யிக்கல்லதீ அர்ஸல்த” என்று செல்கிறது அந்த துஆ. அதைக் கற்றுக் கொண்ட நபித்தோழர் (ரளியல்லாஹு அன்ஹு) தன் வீட்டிற்குச் சென்றுவிட்டு மனனம் செய்து மறுநாள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து முந்தைய தினம் தாம் மனனம் செய்ததை ஒப்புவிக்கும்…
ஹிள்ரு – மூஸா அலைஹிஸ்ஸலாம் சந்திப்பு!
(ஹிள்ரு அலைஹிஸ்ஸலாம் அவர்களைச் சந்தித்த) மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள், இஸ்ராவேலர்களின் நபியாக அனுப்பப்பட்ட மூஸா அல்லர்; அவர் வேறு மூஸா” என்று நவ்ஃபுல் பக்காலி என்பவர் கருதிக் கொண்டிருக்கிறாரே என்று இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் ”இறைவனின் பகைவராகிய அவர் பொய் கூறுகிறார். எங்களுக்கு உபய்யுபின் கஅபு ரளியல்லாஹு அன்ஹு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் என அறிவித்தாவது: (இறைவனின்) தூதராகிய மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இஸ்ரவேலர்களுக்கிடையே உரையாற்ற நின்றார்கள். அப்போது…