இயற்கையைமீறிய இச்சைகளின் கிளர்ச்சி
இதில் ஈடுபாடுகொண்ட பலமனம் அதனைநோக்கி
இறைவனின் கட்டளைகளை ஏளனமாக்கி
இறுமாப்புடன் செயல்படுது மனிதமனசாட்சி
மரபுகளை அறுத்தெறிகிறது
மனிதனின் உணர்ச்சி
மனஇச்சைகளின்மேல் ஆட்டம்போடுது
மனகிளர்ச்சியின் ஆட்சி
மலர்களை வண்டுகள் முகர்ந்து புணர்வது
மகரந்த சேர்க்கை
மலரோடு மலர் முகர்ந்து புணர்வது
மரபற்ற ஓரினச்சேர்க்கை
ஆணையும் பெண்ணையும் இணைப்பதுதான்
ஆண்டவனின் சட்டம்
அதை அறுத்தெறிய நினைப்பது
ஆணவத்தின் உச்சம்
தீராத நாகரீகமோகம் நாளுக்குநாள் அதிகரிப்பு
தீயவைகளின் பக்கமேபோகுது சிலமனிதபிறப்பு
தீயென்று தெரிந்தும் சுட்டுக்கொல்லுது தேகத்தை நுழைத்து
தீராத பாவம்வந்து சேருமே இதுபோன்ற தீமைகளுக்கு
மதிகெட்டுவாழும் இம்மனிதர்களின் போக்கு
மாறிடவேண்டும் மறையோனுக்கு கட்டுப்பட்டு
ஆணும் பெண்ணும் இணைந்துவாழ்வதே மாபெரும்சிறப்பு
அதை அறிந்து வாழ்ந்தால் கிடைக்கும் இறைவனிடம் பரிசு…
காதலிப்பதும்(நேற்றிரவு (நடந்தது என்ன)விஜய் டீவி புரோக்ராமில்.
ஓரினச்சேர்க்கையின் விபரீதத்தால் பெண் தற்கொலை
இப்படியே தொடரும் நிலை என பட்டியலிடப்பட்டது.
ஒரு பெண்ணை பெண் காதலிப்பதும்
ஒரு ஆணை ஆண்காதலிப்பது.
எங்கே போய்கொண்டிருக்கிறது உலகம்
மேலை நாடுகளில் உலவிய விபரீதமெல்லாம்
வீரநடைப்போட்டபடி கலாச்சாரம் குடியிருக்கும் இடத்திற்குள்
காலாரநடைபோடுகிறதாம். பார்க்கவும் கேட்கவும்
வேதனையாக இருந்தது.
மரபுகளெல்லாம் மண்ணுக்குள் புதைந்துகொண்டிருக்கிறது.
தோண்டியெடுக்கமுடியாதவாறு
காலத்தின் கோலத்தால் கண்மூடித்தனமாக வாழநினைப்போரை நினைத்து
வருத்தப்படுவதா.? வசைபாடுவதா?
புரியாமல் புலம்பியபடி… எழுதிவிட்டேன் [இக்ககவி]
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்