[ சாக்லெட்டில் காபின் சத்துடன், தியோப்ரோமின் என்ற ரசாயனமும் உள்ளது. இது தான் தூக்கத்தை கெடுக்க ஊக்குவிக்கின்றது. நன்றாக எட்டு மணி நேரம் தூங்குவோருக்கு ஜலதோஷம் வருவது அரிதாகவே இருக்கும்.]
சிறிய வயதில் சாக்லெட் சாப்பிட்டால், உடலுக்கும் சத்து தான்.ஆனால், அதற்காக சாக்லெட்டே சாப்பிட்டுக்கொண்டிருந்தால், உடலுக்கு தீங்கு தான். இளைய வயதை தாண்டிய பின்னும், சாக்லெட் மோகம் குறையாவிட்டால், குறிப்பாக தூக்கம் கெடும் என்று நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
காபி, டீ குடித்தால் துக்கம் வராது என்பது தெரிந்த உண்மை. காபின் என்ற ரசாயன கலவை இருப்பதே இதற்கு காரணம். இவற்றில் உள்ளது போல பல மடங்கு காபின் ரசாயனம் , சாக்லெட்டில் உள்ளது. அதனால், சாக்லெட் பழக்கம் உள்ளவர்கள் கண்டிப்பாக தூக்கமில்லாமல் தவிப்பர்.
சாதாரண சாக்லெட்டில் ஒன்பது மில்லி கிராம் வரை காபின் இருக்கிறது; சில உயர் ரக சாக்லெட்டில் 30 மில்லி கிராம் வரை உள்ளது. அப்படியானால், தூக்கம் எந்த அளவுக்கு கெடும் என்பதை மதிப்பிட்டுக்கொள்ளலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். சாக்லெட்டில் காபின் சத்துடன், தியோப்ரோமின் என்ற ரசாயனமும் உள்ளது. இது தான் தூக்கத்தை கெடுக்க ஊக்குவிக்கின்றது.
”தூங்கப்போகும் முன், சில மணி நேரம் வரை சாக்லெட், டீ, காபி, குளிர்பானம் குடிக்காமல் இருப்பது நல்லது; அப்போது தான் தூக்கம் நிம்மதியாக வரும்” என்று தேசிய உறக்க ஆராய்ச்சி பவுண்டேஷன் கூறியுள்ளது. இப்ப புரியுதா, நைட்டுல சாக்லெட் சாப்பிடாதீங்க!
நல்லா தூங்கினா போச்சு ”ஹாச்ச்ச்…”!
”ஹாச்…” என்று ஒரு முறை தும்மினால் போதும், அடுத்த ஒரு வாரத் துக்கு சளி, சனியாகப்பிடித்துக் கொண்டு விடும். ஜலதோஷம் வந்து விட்டால்போதும், மூக்கே சிவக்கும் அளவுக்கு சிலர் பிழிந்து எடுத்துவிடுவர்; கர்சீப்பை எல்லாம் நனைத்து விடுவர். ஒரு உண்மையை மறந்திருப்பர்; தூங்கி எழுந்தவுடன் ஜலதோஷம் குறைந்திருக்கும். இதை பலர் கவனித்திருக்க மாட்டர். தூக்கம் குறைவாக இருந்தால், அதுவே, ஜலதோஷத்துக்கு நண்பன். ஹாச்ச்ச்ஸஇன்னும் அதிமாகி விடும். நன்றாக தூங்கினால், வெகுவாக குறைந்து விடும். இது தான் அமெரிக்க உறக்கவியல் மருத்துவ நிபுணர்கள் கண்டுபிடிப்பு.
நன்றாக எட்டு மணி நேரம் தூங்குவோருக்கு ஜலதோஷம் வருவது அரிதாகவே இருக்கும். தூக்கமில்லாமல் இருப்போருக்கு அடிக்கடி ஜலதோஷம் வர வாய்ப்புள்ளது. தூங்கி விட்டால், ஜலதோஷத்தை பரப்பும் கிருமிகள் ஒடுங்கி விடுகின்றன. அவை குறைந்து விடுவதால் மீண்டும் எழுந்திருக்கும் போது, ஜலதோஷத்தின் வீரியம் குறைந்து விடுகிறது என்றும் நிபுணர்கள் தெளிவுபடுத்துகின்றனர். உங்களுக்கு ஜலதோஷம் வந்தால் இப்படி முயற்சி பண்ணிப்பாருங்களேன்!
ரெண்டு வயசில் ‘டூத் பிரஷ்‘ கொடுங்க!
குழந்தை பிறந்தவுடன், ஒரு வயதில் ஆறு பற்கள் முளைத்து விடும். அதன் பின் நாலைந்து மாதங்கள் முளைக்காது. அதன் பின் மற்ற பற்கள் முளைக்க ஆரம்பிக்கும். கடைவாய்ப்பற்கள் நான்கு ஒன்றரை வயதில் முளைக்க ஆரம்பித்து, இரண்டு வயதில் தெரியும். எனினும், பால்பல் விழுந்து, நிரந்தர பற்களுக்கு இடம் அளிக்கும். ஆறு வயதில் ஆரம்பித்த நிரந்தர பற்கள் வளருவது, 12 வயதில் பூர்த்தி அடையும். அறிவுப்பல், அதாவது, 20 வயதுக்கு மேல் முளைக்கும் கடைவாய்ப்பல்லை சொல்வர். அது சிலருக்கு முளைக்காமலும் போகும்.
பற்களை பளீச்…சென வைத்திருப்பதும், பாதுகாப்பாக வைத்திருப்பதும் குழந்தை வயதில் இருந்தே பராமரிப்பதை பொறுத்து தான் அமையும். அதனால் தான், இரண்டு வயதில் இருந்தே பல்தேய்க்கும் பழக்கத்தை குழந்தைகளுக்கு ஊக்குவிக்க வேண்டும்; அப்போதே, மிருதுவான டூத் பிரஷ் வாங்கி, பழக்க வைக்க வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். காலை, இரவில் பல் துலக்கும் பழக்கம் வந்து விட்டால், எந்த வயதிலும் பற்கள் விழவோ, அழுக்கு படியவோ வாய்ப்பே இல்லை. அறுபது வயதிலும் பற்கள் பளீச் தான்.
www,nidur.info