அக்பர் பாட்சா
[ முஸ்லீம்கள் ஒற்றுமை, ஒன்றுபட்ட தலைமை, சீரான சமூக அமைப்புகள் இல்லாமலும், மற்றும் கல்வியில் பின் தங்கிய நிலை, இன்னும் அங்கங்கே சிதறுண்ட சமூகமாக வாழ்கின்ற காரணத்தாலும் மாற்றர்களின் அரசியல் விளையாட்டிற்குள் அகப்பட்டு வழி தெரியாமல் “psycho somatic” வியாதி ஏற்பட்டவர்களைப் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அபுல் கலாம் ஆசாத் அவர்கள் சொன்னது போல் “certainly this is an un-Islamic and irreligious life which entire community is living”
மரணக் குழிக்கு செல்லும் வரை அறிவைத் தேடு என்று சொன்னார்கள் முகம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். அறிவு என்பது வெறும், மார்க்கத்தைப் படிப்பது மட்டுமல்ல, அதனுடன் சேர்ந்து உலகக் கல்வியையும் தேடவேண்டும் என்பதை உணாரதவரை முஸ்லீம்கள் தான் உருவாக்கிய சிந்தனைச் சிறைக்குள்ளிருந்து வெளியேறுவது கடினம். மாற்றார்களின் அரசியல் கைதிகளாக இல்லாமல், அரசியலை நடத்திச் செல்லக்கூடிய சமூகமாக மாறும்போதுதான், முஸ்லீம்கள் மட்டுமல்ல, இந்தியாவும் உலகத்தின் தலைசிறந்த நாடக உருவாகும்.
முஸ்லீம்களின் எதிர்காலம் முஸ்லீம்களின் கையில்தான் உள்ளது. குர்ஆனில் இறைவன் எச்சரிப்பதைப் போல் “தானாக மாறாத வரை” இறைவன்கூட நமக்கு உதவி செய்யமாட்டான். சத்தியத்தையும், எல்லாவிதமான பிரச்சனைகளுக்கு தீர்வையும் கையில் வைத்துக் கொண்டு குருடர்கள் போல் வாழ்ந்து கொண்டிருக்கும் சமுதாயமாக இல்லாமல், பொறுப்புகளை உணர்ந்த சமுதாயமாக மாறவேண்டும்.]
மாற்றார்கள் முஸ்லீம்களுக்கு எதிராக நடத்தக்கூடிய இந்த மோசமான, கோரமான அரசியல் விளையாட்டிற்கு மிக முக்கியமாக காரணம் ஒன்றே ஒன்றுதான். பல்வேறு பரிமானங்களை தன்னிடத்திலே உள்ளடக்கிய ஒரு ஆழமான காரணம் அது. அழகான வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், “இந்துக்களின் மத்தியிலே மாற்றார்கள் நிர்ணயிக்கக் கூடிய அல்லது அவர்களின் கட்டுப் பாட்டிற்குள் அமைகின்ற ஒற்றுமையை உருவாக்கவும், நாளுக்கு நாள் விரிவாகிக் கொண்டிருக்கிற பிளவுகளையும், பகைகளையும் மறக்கவும் அல்லது மறைக்கவும்” அப்பாவி கூட்டங்களான முஸ்லீம்கள் பொது எதிரியாக அடையாளப்பட்டு நிற்க வேண்டும்.
கொஞ்சம் எதார்த்தமாக சொல்ல வேண்டுமென்றால், “காலம் காலமாக ஒடுக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டு இருக்கக் கூடிய அப்பாவி மக்கள் சமூகத்தின் அடித்தட்டிலேயே இருந்து அழிய வேண்டும். தாழ்த்தப் பட்டவர்களும், அவர்களை தாழ்த்தப் பட்டவர்களாகவே வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கும் இரு மக்கள் கூட்டங்களுக்கு மத்தியிலெ வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய முஸ்லீம்கள் தலீத்களின் பக்கம் சாய்வதே இந்த இனவாத அரசியலுக்கு மிகப் பெரும் காரணம்.
யார் எப்படி வாழ்ந்தால் நமக்கென்ன? என்று முஸ்லீம்கள் ஒதுங்கியிருந்தார்கள் என்றால், மாற்றார்களுக்கு இப்படி ஒரு நெருக்கடியான சூழல் ஏற்பட்டிருக்காதோ என்னவோ? இந்தியாவில் வாழ்ந்துக் கொண்டிருக்கக் கூடிய முஸ்லீம்கள் ராமரை கடவுளாகவும், சரித்திர கதாநாயகனாகவும் ஏற்றுக் கொண்டால் எல்லாவிதாமான வகுப்புவாத பிரச்சனைகளுக்கும் தீர்வு ஏற்பட்டுவிடும் (1) என்ற விஷம் கக்கும் பிரச்சாரத்தின் அடிப்படையை புரிந்துக் கொண்டால் தாழ்த்தப் பட்டவர்களிடத்தில் முஸ்லீம்களால் ஏற்படக்கூடிய சிந்தனைத் தாக்கங்களை அறிந்துக் கொள்ளமுடியும்.
முஸ்லீம் மன்னர்களும், முகலாய மன்னர்களும் குழப்பத்திலேயே தனது காலச்சாரத்தை தொடங்கி, குழப்பத்திலேயே முடிந்து போனாலும், அவர்களை அறியாமல் அவர்களின் பெரிதான உதவிகள் எதுவும் இல்லாமல் இஸ்லாமிய மார்க்கம், தாழ்த்தப் பட்டவர்கள் மற்றும் ஒடுக்கப் பட்டவர்களின் மத்தியிலே வேருன்ற ஆரம்பித்தது. ஆனால் கடந்த ஆயிரம் வருடமாக மாற்றார்களுக்கு அது ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கவில்லை.
காரணம் ஒடுக்கப் பட்டவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுடைய அன்றாட வாழ்க்கையில் எந்தவித மாற்றமும் கிடையாது, குறிப்பாக மன்னரட்சியில் அவர்களுக்கு எந்தவித உரிமையோ அல்லது அதிகாரமோ கிடையாது. இன்னும் சொல்லப் போனால், மாற்றார்களின் அரசியல் அதிகாரத்தில் அவர்கள் பங்கு கேட்கும் அளவிற்கு சமூக விழிப்பற்றவர்களாகவும், அருகதையற்றவர்களாகவும் இருந்ததுதான் அல்லது இருக்க வைத்ததுதான். ஆகவே யார் மன்னனாக இருந்தாலும், தனக்கு கிடைக்க வேண்டியது கிடைத்துக் கொண்டிருந்த காரணத்தால் மாற்றார்கள் வாளவிருந்து போனார்கள். மன்னராட்சியின் மூலம் தனது அரசியல் அதிகாரங்களுக்கு எந்தவிதாமன இடையூறுகள் வராமல் பார்த்துக் கொண்டார்கள்.
ஆனால், வெள்ளையனின் சுமையான ஜனநாயக ஆட்சியை இந்தியாவில் வெள்ளையர்கள் இறக்கி வைக்க ஆரம்பித்தவுடன் ஒட்டுப்பெட்டிகளை நிரப்புவும் சொகுசான அரசியல் அதிகாரத்தை இழக்காமல் இருப்பதற்கும் ஒடுக்கப் பட்டவர்களும், தாழ்த்தப் பட்டவர்களும் தேவைப்பட ஆரம்பித்ததன் விளைவுதான் இந்த பொது எதிரி சாயம் பூசப்பட்ட முஸ்லீம்கள்.
முஸ்லீம்கள் ஒற்றுமை, ஒன்றுபட்ட தலைமை, சீரான சமூக அமைப்புகள் இல்லாமலும், மற்றும் கல்வியில் பின் தங்கிய நிலை, இன்னும் அங்கங்கே சிதறுண்ட சமூகமாக வாழ்கின்ற காரணத்தாலும் மாற்றர்களின் அரசியல் விளையாட்டிற்குள் அகப்பட்டு வழி தெரியாமல் “psycho somatic” வியாதி ஏற்பட்டவர்களைப் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அபுல் கலாம் ஆசாத் அவர்கள் சொன்னது போல் “certainly this is an un-Islamic and irreligious life which entire community is living” (2).
மாற்றார்கள் உண்மையிலேயே பயப்படுவது தலீத்களின் வளர்ச்சியை நினைத்துதான். 2000 வருடங்களுக்கு மேலாக ஒடுக்கப்பட்ட சமுதாயம், கடந்த 50 ண்டுகளில் அரசியல் அதிகாரத்தில் பங்கு கேட்கும் நிலையை எட்டியதே இந்த பயத்திற்க்கு காரணம். சுதந்திரமடைந்து இந்த 58 வருட காலத்தில் தலீத்கள் அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வில் முன்னிலை அடைந்ததும், நியாயமாக பெறவேண்டிய, இத்தனை காலமாக இழந்திருந்த அரசியல் அதிகாரத்தை தட்டிக் கேட்டதும் மாற்றர்கள் மத்தியிலே “mental conflict” உருவாகிப் போனது. இந்த மெண்டல் கன்பிளிக்ட் இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு இன்னும் அதிகமாகவே இதற்கு தீர்வாக இப்படி அவசரம் அவசரமாக ஒரு பொது எதிரியை உருவாக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாக்கபட்டனர்.
வி.பி. சிங் மண்டல் பெயர் சொல்லி தனக்கென்று ஒரு கூட்டத்தையும், தலீத்களின் மத்தியில் ஒரு பெரும் பரபரப்பையும் ஏற்படுத்திய போது, மாற்றார் கூட்டம் பதைத்து போய், கடவுளின் பெயர் சொல்லி கூட்டம் சேர்க்கத் தொடங்கியது. மதத்தின் பெயர் சொல்லி மக்களை பிரித்த மாற்றார் கூட்டத்திற்க்கு, இப்போது அதே மதம் மற்றும் கடவுளின் பெயர் சொல்லி மக்களை கூட்ட வேண்டிய நிலை ஏற்பட்டதுதான் வேடிக்கை. அதிகாரம் கையை விட்டு நழுவாமல் இருக்க அங்கங்கே இரை போடும் வேலையில் இறங்கினார்கள். முஸ்லீம்களைப் பற்றிய “Fantasy” உருவாக்கப்பட்டு விஷப் பிரச்சாரங்கள் முடுக்கி விடப்பட்டன.
முஸ்லீம்களுக்கு எதிராக எது நடந்தாலும், சமூக ரீதியாக போரடவும் மற்றும் ஜனநாயக வழியில் அதை எடுத்துச் சொல்லவும் எந்தவிதமான அமைப்புகளையும், வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொள்ளாமல் சிதறுண்ட சமூகமாக சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது முஸ்லீம் சமுதாயம்.
1954 லிருந்து 1992 வரை 39 வருடங்களில் முஸ்லீம்களுக்கு எதிராக 13,356 இனப் படுகொலைகள் மாற்றர்களால் நடத்தப் பட்டிருக்கிறது (3). ஆனால், இன்றுவரை எத்தனை வழக்குகள் முடிவடைந்து நீதி கிடைத்திருக்கிறது?. தனி ஒரு மனிதனை கொலை செய்தால், சுப்ரீம் கோர்ட் வரை சென்று தூக்கு தண்டனை தருகின்ற அரசியல் சட்டம், கூட்டுக் கொலைகளுக்கு வெறும் கமிஷன் அமைப்பதோடு நின்றுவிடுகிறது.
சிறுபான்மையினருக்கு எதிராக நடந்த கலவரங்களும், இனப் படுகொலைகளும் இன்றுவரை நீதி மன்ற வாசல்களில் தவமிருந்ததுதான் மிச்சம். J.B. டிசூசா சொன்னது போல், சுதந்திரடைந்த 47 வருடங்களில் வகுப்பு கலவரங்களால் கொல்லப் பட்டவர்களின் எண்ணிக்கை, வெள்ளையர்கள் ஆண்ட 150 வருடங்களில் கொல்லப் பட்டவர்களைவிட அதிகம் (4).
“கிழவர்கள் இறந்து விடுவார்கள், இளைஞர்கள் மறந்து விடுவார்கள்” என்று பாலஸ்தீனர்களுக்கு எதிராக எக்காளமிட்ட தீவிரவாதி பென் குயூரன் (5) சொன்னதற்கிணங்க இந்தியாவில் தீவிரவாதச் செயல்கள் செய்கின்ற மாற்றர்கள் கூட்டம் ஒரு பக்கம். ஆனால் சமூகத்தில் குற்றவாளிகளாக, தீவிரவாதிகள் கூட்டம் என்று பழி சுமத்தப்பட்டு கூனிக் குருகி செத்து மடிகின்ற முஸ்லீம்கள் இன்னொரு பக்கம். உதாரணம் குஜராத் இனப் படுகொலைகளும், ரயில் பெட்டி எறிப்பு சம்பவமும். ரயில் பெட்டி எரிப்பு சம்பவத்தில் கடந்த மூன்று வருட காலமாக எப்பாடு பட்டவது, பாகிஸ்தானின் ISI உடன் தொடர்பு ஏற்படுத்திவிடுவது என்ற விடாப்புடியுடன் போலீஸ் போராடிக் கொண்டிருக்கிறது.இரண்டு விதாமான சிந்தனை சிறைக்குள் மூழ்கி கிடக்கிறது இந்த முஸ்லீம் சமுதாயம். ஒன்று தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது, எப்படி வலை பின்னப் பட்டிருக்கிறது என்று தெரியாமல் எது நடந்தாலும், “மன்னித்து விடுங்கள்” என்ற apologetic மனநிலையும், இன்னொன்று, எதார்த்தமே புரியாமல், “arrogant” சிந்தனையும்.
சாதாரண முஸ்லீம்களின் தலைக்குள்ளே எதை வேண்டுமானலும் திணிக்கலாம், கேட்பதற்கு எந்த நாதியும் இல்லையென்று, முஸ்லீம் அரசியல்வாதிகளும், மாற்றர்களும் தங்களது சரக்குககளை மதம் மற்றும் சமுதாயத்தின் பேரில் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். உதாரணத்திற்க்கு பாபர் மசூதி பிரச்சனையை எடுத்துக் கொள்ளாலாம். பாபர் மசூதி பிரச்சனை தொடங்கிய காலத்திலிருந்தே இப்படி இரண்டுவிதமான அணுகுமுறையின் காரணமாக சமுதாயத்தில் ஆக்கப் பூர்வமான தீர்வு எதுவும் எடுக்க முடியாமல் இன்றுவரை தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.
தாஜ் மாஹாலுக்கும், டெல்லி செங்கோட்டைக்கும் இந்திய அரசாங்கம், இந்திய முஸ்லீம்களுக்கு எதோ ராயல்டி கொடுப்பதைப் போல், பாபர் மசூதி பிரச்சனையை முஸ்லீம்களின் தலைமேல் போட்டு விட்டு, இரண்டு பக்கத்தினரும் எப்போது வேண்டுமானலும் ஒரு முடிவுக்கு வாருங்கள் என்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசாங்கம்.
முஸ்லீம்களின் எதிர்காலம் முஸ்லீம்களின் கையில்தான் உள்ளது. குர்ஆனில் இறைவன் எச்சரிப்பதைப் போல் “தானாக மாறாத வரை” இறைவன்கூட நமக்கு உதவி செய்யமாட்டான். சத்தியத்தையும், எல்லாவிதமான பிரச்சனைகளுக்கு தீர்வையும் கையில் வைத்துக் கொண்டு குருடர்கள் போல் வாழ்ந்து கொண்டிருக்கும் சமுதாயமாக இல்லாமல், பொறுப்புகளை உணர்ந்த சமுதாயமாக மாறவேண்டும்.
முலயாம் சிங் யாதவின் “வெள்ளிக்கிழமை பொலிட்டிக்ஸ்” எல்லாம் வேண்டாம் என்று உ.பி. முஸ்லீம்கள் முலயாம் சிங்கிற்கு சொன்னது மட்டுமல்லாமல் அந்த உத்தரவை திருப்பி வாங்க வைத்ததைப் போல், இந்தியாவில் மற்ற மாநிலங்களிலும் அரசியல் விளையாட்டிற்கு முற்றுப் புள்ளி வைக்கும்போதுதான் இந்த முஸ்லீம் சமுதாயம் உருப்பட வழி கிடைக்கும்.
இந்தியன் என்ற எண்ணமும், இது என்னுடைய நாடு என்று மனதுக்குள் மட்டும் தினம் தினம் சொல்லிக் கொண்டிருந்தால் போதாது. தெருவில் கிடக்கும் முட்களை நகர்த்தி, ஓரத்தில் எறிவதுகூட ஒரு இபாதத், அதவாது இறைவழிபாடு என்று சொன்ன நபிகள் நாயகத்தின் வழிகளை பின்பற்றக்கூடிய முஸ்லீம்களில் எத்தனை பேர் மற்றவர்களுடன் சேர்ந்து தெருச் சாக்கடைக்கும், நல்ல ரோடுகளுக்கும் போரடியிருக்கின்றார்கள்.
ஒரு நோயாளியைச் சென்று பார்ப்பதும், அவனுக்காக பிரார்த்திப்பதும் இறைவழிபாடு என்று நபிகளார் சொன்னார்கள், ஆனால், முஸ்லீம்களோ பள்ளிவாயிலில் நோயாளி யாரவது வந்தால், ஒதிவிட்டு, காசு வாங்கிக் கொள்வதோடு முடிந்து போகிறது.
மரணக் குழிக்கு செல்லும் வரை அறிவைத் தேடு என்று சொன்னார்கள் முகம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். அறிவு என்பது வெறும், மார்க்கத்தைப் படிப்பது மட்டுமல்ல, அதனுடன் சேர்ந்து உலகக் கல்வியையும் தேடவேண்டும் என்பதை உணாரதவரை முஸ்லீம்கள் தான் உருவாக்கிய சிந்தனைச் சிறைக்குள்ளிருந்து வெளியேறுவது கடினம். மாற்றார்களின் அரசியல் கைதிகளாக இல்லாமல், அரசியலை நடத்திச் செல்லக்கூடிய சமூகமாக மாறும்போதுதான், முஸ்லீம்கள் மட்டுமல்ல, இந்தியாவும் உலகத்தின் தலைசிறந்த நாடக உருவாகும்.
References:
1) Organizer, RSS official weekly, 20 June 1971
2) Islam & Indian Nationalism (Reflections on Abul Kalam Azad), Edited by Prof. Mishirul Hassan
3) Indian Human Right, International Muslims in India USA, Nov. 93
4) Times of India, 8 April 1994
5) Terrorist turned Prime Minister of Israel
”jazaakallaahu khairan” : http://suvatukal.blogspot.com & www.nouralislam.org