Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

நிலவின் இருப்பிடம் சேறல்ல; செவ்வானம்!

Posted on January 2, 2010July 2, 2021 by admin

நிலவின் இருப்பிடம் சேறல்ல; செவ்வானம்!

  ஸைய்யத் அப்துர் ரஹ்மான் உமரி   

( கட்டுரையாசிரியர் ஸைய்யத் அப்துர் ரஹ்மான் உமரி கோயமுத்தூரைச் சேர்ந்தவர். உமராபாத் ஜாமிஆ தாருஸ்ஸலாமி்ல் ஆலிமிய்யத் பட்டம் பெற்றவர். இஸ்லாம் குறித்து பல நூல்களை எழுதியுள்ளவர். பல நூல்களை மொழிபெயர்த்துள்ளவர். இதுவரை ஏறக்குறைய 27 நூல்கள் வெளிவந்துள்ளன. ‘”இஸ்லாமியப் பார்வை” என்கின்ற பெயரில் இணையதளம் ஒன்றை நடத்துகிறார். )

அவரது இணையதளம்:

http://islamiyappaarvai.blogspot.com/2008_07_01_archive.html

[[ வெள்ளிக்கிழமை ஜும்ஆவில் எந்த விஷயமும் இல்லாது என்றிருக்கும்போது வருகின்ற மக்கள் தாமதமாகத்தான் வருவார்கள். அதனைத் தவிர்க்கவே முடியாது.

உலகப்பற்றில் உம்மத் ஆழ்ந்துபோய்விடாமல் தடுத்து நிறுத்தி ஆஃகிரத் பாதையில் அவர்களை முன்னழைத்துச் செல்லும் பொறுப்பை சுமக்கவேண்டிய அறிஞர் பெருமக்கள் அதற்கு நேர்எதிர் திசையில் பயணம் செய்யத் தொடங்கியுள்ளதைக் காணுங்கால் உள்ளம் நொறுங்குகின்றது. இந்தக் கொடுமையை எங்கேபோய் சொல்லி அழ? வெள்ளிக்கிழமை ஜும்ஆ மேடைகளில் ‘நஸீஹா’ பண்ணாமல் அரசியல்வாதிகளுக்கு இணையாக ஃபிக்ஹுவை அடிப்படையாக வைத்து பிரிந்துசென்றுவிட்ட குழுக்களை விமர்சனம் செய்யும் போக்கு இப்போதெல்லாம் அதிகரித்துக் கொண்டே செல்வதையும் காணத்தானே செய்கிறோம்?

அடுத்தவர்களைத் திட்டும் வேலையை வேறுயார் வேண்டுமானாலும் செய்யலாம். உலமாக்கள் செய்யக்கூடாது! வழிகாட்டும் விண்மீன்கள் என்றால் வானத்தில் அல்லவா இருக்கவேண்டும்? சேற்றில் பிரதிபலிக்கும் நிலாவுக்கும் செவ்வானத்தில் தவழும் நிலாவுக்கும் பெருத்த வித்தியாசம் உண்டல்லவா?யாரோ ஒருவருடைய உலக வாழ்க்கைக்காக நாமேன் நமது ஆஃகிரத் வாழ்வைக் கெடுத்துக் கொள்ளவேண்டும்? ]]

சகோதரத்துவம் எனும் சொல்லை உலகிற்கு அறிமுகப்படுத்தியது இஸ்லாம் என்று மார்தட்டிக் கொள்கிறோம். சகோதரன் என்ற வார்த்தை உண்மையில் மிகப்பெரிய வார்த்தை! நம்முடைய நடைமுறை வாழ்வில் அதற்கு எந்தளவு மரியாதை இருக்கின்றது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.இறைவனை ஏற்றுக்கொண்டுள்ள முஸ்லிம்கள் எப்படி இருப்பார்கள் என்பதற்கான இலக்கணத்தை குர்ஆன் வரையறுத்துள்ளது.

.أَشِدَّاء عَلَى الْكُفَّارِ رُحَمَاء بَيْنَهُمْ’

நிராகரிப்பாளர்கள் விஷயத்தில் கடுமையாகவும் தமக்கிடையே கருணையோடும் நடந்து கொள்வார்கள்” (அல்குர்ஆன் 48 : 29)

.أَذِلَّةٍ عَلَى الْمُؤْمِنِينَ أَعِزَّةٍ عَلَى الْكَافِرِينَ

”இறைநம்பிக்கையாளர்களைப் பொருத்தவரை மென்மையாகவும் தாழ்பணிந்தும் இறை நிராகரிப் பாளர்களைப் பொருத்தவரை கடுமையாகவும் நடந்துகொள்வார்கள்” (அல்குர்ஆன் 5 : 54).

ஒட்டுமொத்த சமூகம் எவ்வாறு திகழும் என்றால்..

.إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ

”இறை நம்பிக்கையாளர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சகோதரர்களாக இருப்பார்கள்!” (அல்குர்ஆன் 49 : 10).

இன்றைக்கு இப்படிப்பட்;;;ட இஸ்லாமிய சமூகம் எதனையும் உலகில் வலைவீசித் தேடினாலும் பார்க்க முடியாது. இதற்கு நேர்மாற்றமான காட்சிகளை எங்கும் காணலாம். விமர்சனம் எனும் பெயரால் தரக்குறைவாக வசைபாடுவது, திட்டுவது, நா கூசும் தடித்த வார்த்தைகளை வரைமுறையின்றி பயன்படுத்து வது போன்றவற்றை தவிர்த்துவிட்டு இஸ்லாமியப் பணியாற்றுவோரைப் பார்ப்பது அரிதினும் அரிதாகி விட்டது.

பாமர மக்களை விட்டுவிட்டு அறிஞர் பெருந்தகைகளான உலமாக்களை மட்டும் எடுத்துக் கொண்டாலும் நம்முடைய உள்ளத்தில் கசப்பே மிஞ்சுகின்றது. ஜம்இய்யத்துல் உலமாயெ ஹிந்த் அமைப்பு இருகூறாகப் பிளவுபட்டு முட்டிமோதிக்கொள்ளும் இந்நேரத்தில் இதைப்பற்றி அவசியம் பேசியே ஆக வேண்டும். மார்ச் மாதம் ஆரம்பித்;த உலமாக்களின் போர் இன்னும் தொடருகின்றது. இரு குழுக்கள் மோதிக் கொண்டிருக்க இரண்டிலும் சாராத ஒருசில அறிஞர்கள் அமைப்பாக ஒன்று திரண்டிருக்கிறார்கள். ஜமாஅத்தை ‘மதனீ’க்களின் ஆதிக்கத்திலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்பது அவர்களுடைய வேணவா!.

உம்மத்துக்கு வழிகாட்டவேண்டிய உலமாக்கள் ‘தாகூத்’திய நீதிமன்றங்களில் போய் தங்களுடைய வழக்குகளை வாதாடிக் கொண்டிருப்பதை கண்களால் காணும் கொடிய யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நீதிவழங்கும் அரியாசனத்தில் வீற்றிருக்க வேண்டியவர்கள் குற்றவாளிக் கூண்டு களுக்குள் ‘நீதி’யை எதிர்பார்த்து நின்றுகொண்டிருக்கிறார்கள். மேல்மட்டத்து உலமாக்களின் நிலை இவ்வாறு உள்ளது என்றால் இங்கே கீழ்மட்டத்திலும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை!.

ஒவ்வொரு முஹல்லாக்களிலும் வெறுப்பையும் குரோதத்தையும் விதைக்கும் பணியில் உலமாக்கள் ஈடுபடுவதை கண்களால் நேரிடையாகக் காணும் போது ‘ருஹமாஉ பைனஹும்’ என்பதை எண்ணி சிரிப்பாக வருகின்றது.வெறுப்பு, குரோதம், பொறாமை, புறம், கோள், கயமை, இரட்டைவேடம் போன்ற ஷைத்தானிய குணங்கள் உம்மத்தி;ல் தலையெடுக்காமல் கண்காணிக்க வேண்டிய பொறுப்பும் ஆங்காங்கே ஏதேனு மொன்று தென்பட்டால் ஓடிச்சென்று உடனடியாக அகற்றவேண்டிய கடமையும் உலமாக்களுக்கல்லவா உள்ளது?

உலகப்பற்றில் உம்மத் ஆழ்ந்துபோய்விடாமல் தடுத்து நிறுத்தி ஆஃகிரத் பாதையில் அவர்களை முன்னழைத்துச் செல்லும் பொறுப்பை சுமக்கவேண்டிய அறிஞர் பெருமக்கள் அதற்கு நேர்எதிர் திசையில் பயணம் செய்யத் தொடங்கியுள்ளதைக் காணுங்கால் உள்ளம் நொறுங்குகின்றது. இந்தக் கொடுமையை எங்கேபோய் சொல்லி அழ?வெள்ளிக்கிழமை ஜும்ஆ மேடைகளில் ‘நஸீஹா’ பண்ணாமல் அரசியல்வாதிகளுக்கு இணையாக ஃபிக்ஹுவை அடிப்படையாக வைத்து பிரிந்துசென்றுவிட்ட குழுக்களை விமர்சனம் செய்யும் போக்கு இப்போதெல்லாம் அதிகரித்துக் கொண்டே செல்வதையும் காணத்தானே செய்கிறோம்?

அறிஞர்பெருமக்கள் மீதான விமர்சனமான இதனை எடுத்துக்கொள்ளாமல் உம்மத் சீர்கெட்டுப் போனதற்கான காரணங்களை ஆராயும் ‘இஹ்திஸாப்’ ஆக எடுத்துக் கொள்ளவேணடும் எனும் கோரிக்கையையும் ஈங்கு தாழ்மையுடன் வைக்கிறேன்.இன்றைக்கும் எத்தனை எத்தனையோ விஷயங்களை உலமாக்களிடம் இருந்துதான் உம்மத் கற்றுக் கொள்கின்றது.

சரியான விஷயங்கள் உம்மத்தினரின் மனங்களில் விதைக்கப்பட்டால் விளைச்சலும் அமோகமாக ஆஹாஓஹோவென்று இருக்கும். இல்லையெனில், மார்க்கத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு அரசியல் செய்யும் கொடுமையிலிருந்து விடுதலையே கிட்டாது.வெள்ளிக்கிழமை ஜும்ஆ மேடைகளை பயன்படுத்தாமல் வீணடிக்கும் போக்கு பல சான்றோர்கள் பன்முறை குறிப்பிட்டு வருந்தியபிறகும் சீரடைந்ததாகத் தெரியவில்லை.

வெள்ளிக்கிழமை ஜும்ஆவில் எந்த விஷயமும் இல்லாது என்றிருக்கும்போது வருகின்ற மக்கள் தாமதமாகத்தான் வருவார்கள். அதனைத் தவிர்க்கவே முடியாது. அதுவும் முன்பத்தியில் குறிப்பிட்டுள்ளதைப் போல வெறுப்பையும் துவேஷத்தையும் தூவும் பேச்சாக அது அமைந்துவிட்டால் அப்புறம் கேட்கவே வேண்டாம்.அறிஞர் பெருமக்கள் எவ்வாறு இருப்பார்கள்;ளூ அவர்களுடைய அடையாளங்கள் என்ன என்பது குறித்தும் திருமறை குர்ஆன் கூறியுள்ளது.

إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاء

”அல்லாஹ்வுடைய அடியார்களில் கற்றறிந்த அறிஞர் பெருமக்களே இறைவனுக்கு அதிகம் அஞ்சுவார்கள்’ (அல்குர்ஆன் 35:28).

இறையச்சத்தோடு திகழ்வார்கள். அதுமட்டுமல்ல, இறையச்சத்தை வளர்க்கவும் செய்வார்கள். இறைவனை ஏற்றுக்கொள்ளாதோரிடம் காட்டவேண்டிய கடுமையை நாம் நம்பும் அதே அல்லாஹ்வை நம்பி ஏற்றுக்கொண்டுள்ள சகோதரர்களிடம் காட்டுகிறோமே, இது சரியா? இதுதான் இஸ்லாமிய வழியா?

இறைவனின் திருத்தூதர் நின்று உரையாற்றிய மிம்பர்மேடையில் நின்றுகொண்டு நம்முடைய ஃபிக்ஹ்வையும் அல்லது நமக்குப் பிடிக்காம அரசியல் செய்யும் முஸ்லிம் சகோதரர்களையும் விமர்சனம் எனும் பெயரில் திட்டித் தீர்க்கிறோமே, நாளை மறுமையில் நம்முடைய திட்டுக்கும் வசைவுகளுக்கும் ஆளான அந்த சகோதரர் நம்மையெல்லாம் மிஞ்சி அல்லாஹ்வின் நம்பிக்கையையும் அருட்கொடை களையும் பெற்று சொர்க்கத்தில் சிறப்பான இடத்தை பெற்றுவிட்டால் என்ன செய்யப்போகிறோம்?’

”உங்களில் ஒவ்வொருவரையும் நல்ல அபிப்பிராயத்தோடு சந்திக்கவே ஆசைப்படுகிறேன். ஆகையால் யாரைப்பற்றியும் என்னிடம் அவரிழைத்த குறைகளைக் கூறவேண்டாம்” என்று இறைவனின் திருத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறிச் சென்றுள்ளார்களே, அதற்கு பொருளே இல்லையா? இங்கு மட்டுமா இந்தக் கொடுமை? இணையத்தின் பக்கங்களைப் புரட்டினால் அங்கு வீசும் கவிச்சி நாற்றத்தைத் தாங்க முடியவில்லை.

வளைகுடாவில் வேலை பார்க்கும் சகோதரர்களுக்கு நிறைய நேரம் கிடைக்கின்றது. அந்நேரத்தை பயனுள்ள வழிகளில் செலவிடுவதாக எண்ணிக்கொண்டு தங்களுக்குப் பிடிக்காதோரை வசைபாடுவதில் செலவளிக்கிறார்கள்.குழு அரசியலை இஸ்லாமியப் பணியாக எண்ணி ஏமாந்து போகிறார்கள். தமுமுகவிற்கும் ததஜவுக்கும் இடையிலான சண்டையை விலாவாரியாக விவரிக்கும் வலைப்பதிவுகளும் உள்ளன.

மேலே ‘என்னுடைய அடியார்கள்’ என்று பெருமிதத்தோடு இறைவன் அறிமுகப்படுத்தும் இறையடியார்களுக்கும் நமக்கும் ஏதாவது பொருத்தம் இருக்கின்றதா? நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்!அல்மாஇதாவில் அதே வசனத்தின் தொடக்கத்தில் அல்லாஹ் கூறுவதையும் கொஞ்சம் கேட்டுக் கொள்வோம்.

.يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ مَن يَرْتَدَّ مِنكُمْ عَن دِينِهِ فَسَوْفَ يَأْتِي اللّهُ بِقَوْمٍ يُحِبُّهُمْ وَيُحِبُّونَهُ أَذِلَّةٍ عَلَى الْمُؤْمِنِينَ أَعِزَّةٍ عَلَى الْكَافِرِينَ يُجَاهِدُونَ فِي سَبِيلِ اللّهِ وَلاَ يَخَافُونَ لَوْمَةَ لآئِمٍ ذَلِكَ فَضْلُ اللّهِ يُؤْتِيهِ مَن يَشَاء وَاللّهُ وَاسِعٌ عَلِيمٌ

”இறைநம்பிக்கையாளர்களே! உங்களில் எவரேனும் தனது தீனை-நெறியை விட்டுத் திரும்பி விடுவாராயின் (திரும்பிப் போகட்டும்) அல்லாஹ் வேறொரு சமுதாயத்தைத் தோற்றுவிப்பான். (அவர்கள் எத்தகையவர்களாய் இருப்பார்களெனில்) அல்லாஹ் அவர்களை நேசிப்பான்: அவர்களும் அல்லாஹ் நேசிப் பார்கள். அவர்கள் இறைநம்பிக்கையாளாடகளிடம் மென்மையாகவும் நிராகரிப்போரிடம் கடுமையாகவும் இருப்பார்கள்: அல்லாஹ்வின் பாதையில் கடும் முயற்சிகளை மேற்கொள்வார்கள் நிந்திப்பவர்களின் எந்த நிந்தனைக்கும் அவர்கள் அஞ்சமாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருளாகும். தான் நாடுகின்றவர்களுக்கு இதனை அவன் அருளுகின்றான். மேலும், அல்லாஹ் பரந்த வளங்களின் உரிமையாளனாகவும் அனைத் தையும் அறிந்தவனாகவும் இருக்கின்றான்”. (அல்குர்ஆன் 5:54).

இறுதித்தூதரின் வாரிசுகளாகப் பணியாற்றவேண்டிய உலமாக்கள் அத்தூய மானுடர் தலைவரின் பண்புநலன்களுக்கும் பிரதிநிதிகளாகத் திகழவேண்டும். ‘நான் அவ்விடத்தில் இருந்திருந்தால் ஃபிர்அவ்னின் பாவமன்னிப்புக்காக பிரார்த்தனை செய்திருப்பேன்!’ என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் ஃபிர்அவ்னின் அந்திம காலத்தைப் பற்றிக் கூறும்போது குறிப்பிட்டுள்ளார்கள் அல்லவா?.

பத்ருப்போரில் கைதானோரை என்ன செய்வது என்ற பிரச்சனை எழுந்தபோது அவர்கள் அனைவரையும் மன்னித்து விட்டுவிடலாம் என்று அபூபக்ரு சித்தீக் ரளியல்லாஹு அன்ஹு கூறியதைக் கேட்ட அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ”நீங்கள் இப்றாஹீமின் பண்புகளைப் பெற்றுள்ளீர்கள்!” எனக் கூறினார்களா, இல்லையா?.

அடுத்தவர்களைத் திட்டும் வேலையை வேறுயார் வேண்டுமானாலும் செய்யலாம். உலமாக்கள் செய்யக்கூடாது!.வழிகாட்டும் விண்மீன்கள் என்றால் வானத்தில் அல்லவா இருக்கவேண்டும்? சேற்றில் பிரதிபலிக்கும் நிலாவுக்கும் செவ்வானத்தில் தவழும் நிலாவுக்கும் பெருத்த வித்தியாசம் உண்டல்லவா?யாரோ ஒருவருடைய உலக வாழ்க்கைக்காக நாமேன் நமது ஆஃகிரத் வாழ்வைக் கெடுத்துக் கொள்ளவேண்டும்?

‘லா அய்ஷ இல்லா அய்ஷல் ஆஃகிரா’ என இறைத்தூதர் அடிக்கொருதரம் கூறியுள்ளதை நினைவில் பதித்து செயல்படுவோம். இன்ஷா அல்லாஹ்!.

www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 33 = 37

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb