பகுத்தறிவு போர்வையில் பழமைவாதிகள்
[ இறைவனை பார்த்துத்தான் ஏற்றுக்கொள்வேன் என்று அடம் பிடிப்பது பகுத்தறிவு வாதமேயல்ல; பார்த்தறிவு வாதம்; அதாவது மிருகவாதம்! இதைப் பகுத்தறிவுடன் முடிச்சுப் போடுவது அதைவிட அறிவீனமாகும்.]
பகுத்தறிவுக்காரர்கள் கண்னுக்குத் தெரியாத கடவுளை நம்புவது காட்டு மிராண்டித்தனம். பகுத்தறிவுக்கு ஒவ்வாதது. இறைவனைக் காட்டினால் நம்புகிறோம், லட்சக்கணக்கில் பணம் பரிசும் தருகிறோம் என்று சவால் விடுகிறார்கள். இதை உண்மையான பகுத்தறிவு என்று ஏற்றுக்கொள்ள முடியுமா? எந்த உண்மையான பகுத்தறிவுவாளனும் இதை பகுத்தறிவு என்று ஒப்புக் கொள்ளமாட்டான்.
இதனைப் ”பார்த்தறிவு” அதாவது ”ஐயறிவு” என்றே சொல்லுவான். இன்னும் பச்சையாகச் சொன்னால் இதை ”மிருக அறிவு” என்றே சொல்ல வேண்டும்.
உதாரணத்திற்கு ஒரு மனிதன் ஒரு காட்டுப்பகுதியிலிருந்து ஒரு பெரிய ஆற்றை கடந்து ஓர் ஊருக்கு வருகிறான்/ அவனைப் பார்த்து எப்படியப்பா உன்னால் வரமுடிந்தது என்று கேட்கிறோம். அவன் அதற்கு தான் அந்த ஆற்றை கடக்க முற்ப்பட்ட போது தூரத்தில் இருந்த ஒரு நீண்ட பெரிய மரம் ஒன்று தானாகவே தன் அருகில் வந்து பாலம் போல் அந்த ஆற்றின் குறுக்கே சாய்ந்து கொண்டது அதன் மேல் ஏறி ஊர் வந்து சேர்ந்தேன் என்று தான் கடந்து வந்த கதையை சொல்கிறான்.
இதை யாராவது அறிவுள்ள மனிதனால் நம்ப முடியுமா? நிச்சயமாக ஒரு பகுத்தறிவுள்ளவன் இந்த சம்பவத்தை கேலி செய்து சொன்னவனை பைத்தியக்காரன் என்றுதான் சொல்வான்.
நான் கேட்கிறேன். ஒரு மரம் தானாக ஆற்றின் பாலமாக வந்ததை மறுக்கும் பகுத்தறிவு இந்த பேரண்டம். அத்தனை கோள்கள் பல அறிவியல் அதிசயத்தை உள்ளடக்கியிருக்கும் கடல் இவையெல்லாம் தானாக உருவாகவில்லை என்பதை மட்டும் உங்கள் பகுத்தறிவு ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது?
உண்மையை சொல்லுங்கள் நீங்கள் பேசுவது பகுத்தறிவா? அடி முட்டாள் தனமா? இல்லை பகுத்தறிவு போர்வையில் நீங்கள் போடும் வெளி வேஷமா?
கண்ணியமிக்க ஒருவர் உங்களிடம் வந்து எதிர்வரும் ஒரு தேதியில் பெரிய தொரு விருந்துபசாரம் நடைபெற இருப்பதாகவும், அதில் நீங்கள் அவசியம் கலந்துக்கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுகிறார். பகுத்தறிவு ரீதியாக இதை எப்படி ஏற்பீர்கள்? அவர் வீட்டிற்குப் போய் அந்த விருந்துக்குறிய ஏற்பாடுகள் அனைத்தையும் கண்ணால் பார்த்த பின்னர்தான் ஏற்பீர்களா? அப்படியே அவர் வீட்டிற்குப் போய் நேரில் நீங்கள் பார்ப்பதால் நடைபெற இருக்கும் விருந்துக்குரிய அறிகுறிகள் ஏதும் அதற்கு முன்னரே உங்கள் பார்வையில் படுமா? இல்லையே?
அந்த கனவானின் நன்னடைத்தையில் நம்பிக்கை வைத்து பகுத்தறிவு ரீதியாகச் சிந்தித்து அவரது கூற்றிலுள்ள உண்மையை ஏற்றுக் கொள்கிறீர்கள். குறிப்பிட்ட தேதியில் அவர் வீடு சென்று பார்க்கும் போது விருந்துக்குறிய அத்தனை ஏற்படுகளையும் கண்ணால் பார்க்கிறீர்கள். மகிழ்சியுடன் உண்டு அனுபவிக்கிறீர்கள் இது யாருக்கு பொருந்தும் பகுத்தறிவுள்ள மனிதனுக்கு மட்டும் தானே பொருந்தும்! மிருகத்திற்குப் பொருந்துமா?
ஒரு மாட்டையோ, ஒரு ஆட்டையோ விழித்து ”ஏய்! மாடே அல்லது ஆடே உனக்காக இன்ன தேதியில் பெரியதொரு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . நீ அவசியம் கலந்து கொள்ள வேண்டும்” என்று சொன்னால் அந்த மிருகத்திற்கு அது புரியுமா? ஐயறிவு மிருகமான அது பகுத்தறியும் திறன் பெற்றுள்ளதா? இல்லையே! அதற்கு முன்னால் ஒரு மரக்கொப்பைக் அசைத்துக் காட்டி அழைத்தால் அது வேகமாக ஓடிவரும். அதாவது கண்ணால் கண்டபின் வேகமாக ஓடிவரும். இது பகுத்தறிவு செயலா? பார்த்தறிவு செயலா -மிருக அறிவு செயலா? சிந்தியுங்கள். எனவே இறைவனை பார்த்துத்தான் ஏற்றுக்கொள்வேன் என்று அடம் பிடிப்பது பகுத்தறிவு வாதமேயல்ல; பார்த்தறிவு வாதம்; அதாவது மிருகவாதம்! இதைப் பகுத்தறிவுடன் முடிச்சுப் போடுவது அதைவிட அறிவீனமாகும்.
பெரியாரையாவது ஒழுங்காக பின் பற்றினார்களா என்றால் இல்லை என்றுதான் நம் பகுத்தறிவு சொல்கிறது.
கல்லை வணங்காதே கல்லுக்கு பொட்டு வைக்காதே பூ போஅடாதே நீ செய்வதை அந்த கல் உணராது என்று சொன்ன பெரியாரின் உருவத்தையே கல்லால் செதுக்கி அவருக்கு மாலையிட்டு மரியாதை செய்து நினைவஞ்சலி செலுத்தும் வேடிக்கையை நாம் பார்க்கிறோம்.
இப்போது நாம் கேட்கிறோம் பகுத்தரிவாதிகளே நீங்கள் போட்ட மாலையையும் மரியாதையும் அந்த கல்(பெரியார்)ஏற்றுக்கொண்டதா? அதை உணர்ந்து கொண்டதா?
மேலும் ஒருவன் இறந்த நாளை நினைவுப்படுத்தி கொண்டாடுவது கூடாது என்று பேசுகிறீர்கள். இது போன்று நாட்களை முர்ப்படுத்தி நினைவு நாள் பிறந்த நாள் என்று கொண்டாடுவது பகுத்தறிவுக்கு உகந்ததல்ல என்று சொல்லும் நீங்கள் பெரியார் அவர்களின் அவர்களின் நினைவு நாளை முன்னீட்டு நிகழ்ச்சிகளை நடத்துவதும் இரத்த தானம் செய்வதும் ஏன்? மற்ற நாட்களில் செய்ய வேண்டியதுதானே?
இப்படி பகுத்தறிவாளர்களை நோக்கி லட்சக்கணக்கான கேள்விகள் உண்டு.
”Jazaakallaahu khairan” உண்மைகுரல்