[ வாராந்த ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றுவதற்கான போதிய இடவசதியுடனான பள்ளிகள்கூட இல்லை. அல்பேனிய தலைநகரத்தில் 6 பள்ளிவயல்கள் மாத்திரமே காணப்படுகின்றன. அவ்வாறே பர்தா உடையுடன் தமது பெண் பிள்ளைகளை பாடசாலை அனுப்புவதற்கு பிரத்தியேக பாடசாலை தலைநகரத்தில் இல்லாதிருக்கின்றது.
ஹிஜாப் அணிபவர்களுக்கு அரச பாடசாலைகளில் அனுமதி மறுக்கப்படுகின்றது. கிறிஸ்தவர்களுக்கு இருப்பதைப் போன்று முஸ்லிம்களுக்கு பிரத்தியேகமான வானொலி சேவையோ பத்திரிகையோ இல்லை.
அல்பேனிய முஸ்லிம்களின் வரலாறு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளையும் அதிகாரங்களையும் கொண்டிருந்த போதும் தற்போது அவர்களின் நிலை கவலைக்கிடமாக இருக்கின்றது.
முஸ்லிம்கள் பெரும் பான்மையாக இருந்தபோதும் அவர்களுக்கென பிரத்தியேமான அரசியல் கட்சி இல்லாதிருப்பதுடன் அவர்களது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள அல்லது பாதுகாப்பதற்கு முடியாமலிருக்கின்றது.
அல்பேனிய முஸ்லிம்களுக்கென்று அரசியல் கட்சிகள், வானொலிகள், பத்திரிகைகள், பாடசாலைகள், நிறுவ னங்கள் போன்றன இல்லாதிருப்பதனால் தமது இருப்பை பாதுகாத்துக் கொள்வதில் அல்பேனியர்கள் பெரும் பிரச்சினையை எதிர் கொள்கின்றனர்.]
அல்பேனியா, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற ஒரு ஐரோப்பிய நாடு. 2000 வருடங்களுக்கு முன்பு ஐரோப்பாவில் வாழ்ந்த மிகப் பழைமையான இல்ரியன் கோத்திரத்திலிருந்து பிரிந்து வந்தவர்களே அல்பேனியர்கள் என நம்பப்படுகின்றது. உஸ்மானிய ஆட்சியின் கீழ் ஐரோப்பாவில் ஏற்பட்ட அமைதியான சூழலைத் தொடர்ந்து, பால்கன் நாடுகளில் துருக்கிய சாம்ராஜ்யத்துடன் முதலாவதாக தொடர்பை ஏற்படுத்திக் கொண்டது அல்பேனியர்களாகும். மட்டுமன்றி அவர்களில் பெருந் தொகையானவர்கள் இஸ்லாத்தை தழுவிக்கொண்டனர்.
உஸ்மானிய ஆட்சியின் கீழ் அல்பேனியர்கள் கணிசமான நன்மைகளைப் பெற்றுக்கொண்டது மட்டுமன்றி பல முக்கிய பதவிகளையும் வகித்தனர். உஸ்மானிய இராணுவப் பிரிவில் முக்கிய பதவிகளில் அல்பேனியர்கள் நியமிக்கப் பட்டிருந்தனர். 19 ஆம் நூற்றாண்டு காலப் பகுதியில் உஸ்மானிய சாம்ராஜ் யத்தை நவீனமயமாக்குவதில் (Modernization) குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்த ஸம்ஸுத்தீதீன் ஸாமி (shemsedin Sami) அல்பேனியராவார்.
அவ்வாறே 19 ஆம் நூற்றாண்டில் எகிப்து நாட்டை சுதந்திர நாடாக நிறுவுவதில் முன்னின்றவர் முஹம்மது அலி பாஷா ஒரு அல்பேனியவராவார். 20 ஆம் நூற்றாண்டில் ஸலபி சிந்தனைப் போக்கின் முன்னோடி ஷெய்க் நாஸிருத்தீன் அல்பானி, ஒரு அல்பேனியர். அவ்வாறே துருக்கிய சாம்ராஜ்யத்தை பாதுகாப்பதிலும் அல்பேனியர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.
தற்போது அல்பேனியர்கள், அல்பேனியா, கோசோவோ மற்றும் மஸிடோனியா ஆகிய 3 போல்கன் நாடுகளிலும் சிதறி வாழ்கின்றனர். 1913 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதலாவது போல்கன் யுத்தத்தில் துருக்கிய சாம்ராஜ்யம் தோற் கடிக்கப்பட்டதன் பின்பே அல்பேனியா என்ற நாடு தோற்றுவிக்கப்பட்டதாக வரலாற்று ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன.
எனினும் அல்பேனியாவின் தோற்றத்திற்குப் பின் பல சவால்களுக்கும் பிரச்சினைகளுக்கும் முகங்கொடுக்க நேரிட்டது. இரண்டு உலக யுத்தத்தங்களின் பாதிப்புகளுக்குட்பட்டதுடன் அண்டைய நாடுகளினால் நாட்டின் “இருப்பு” அச்சுறுத்தலுக்குள்ளானது, இனத் துடைப்பு, அவ்வப்போதான தாக்குதல்கள் மற்றும் பொருளாதார நெருக்கடிகள், புரட்சி நிலைகள் என்பனவற்றைக் குறிப்பிடலாம்.
அல்பேனியாவின் தற்போதய மக்கள் தொகை 3.5 மில்லியனாகும். இதில் அல்பேனியர்களே பிரதான இனக் குழுமமாகும். ஏனைய சிறு பான்மைகளாக கிரேக்கர்கள், சேர்பியர்கள், பல்கேரியர்கள் வாழ்கின்றனர். அல்பேனிய மக்கள் தொகையில் 73% முஸ்லிம்களும், 14% ஓத டொக்ஸ் கிறிஸ்தவர்களும், 10% கத்தோலிக்கர்களும் வாழ்கின்றனர்.
துருக்கிய சாம்ராஜ்ய வீழ்ச்சியின் பின் அல்பேனியாவின் வரலாறு, முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழ்கின்ற ஏனைய ஐரோப்பிய நாடுகளைப் போன்றே முடிவில்லாத தாக்குதல்களுக்கும் தொடர்ந்தேர்ச்சையான சிலுவை யுத்த பாதிப்புகளுக்கும் உட்டப்பட்டது. அல்பேனிய முஸ்லிம்கள் தொடர்ந்தும் துன்புறுத்தல்களுக்கு உபட்டனர். 1967 ஆம் ஆண்டிலிருந்து கம்யூனிஸ்ட் ஆட்சிக் காலப் பகுதியில் முஸ்லிம்கள் மிக மோசமான துன்புறுத்தல்களுக்கு முகம் கொடுத்தனர். மத சுதந்திரம் முற்றாக நீக்கப்பட்டது மட்டுமன்றி அல்பேனியா ஒரு மதச்சார்பற்ற நாடாக பிரகடனப்படுத்தப்பட்டது.
அவ்வாறே இக்காலப்பகுதியில் அல்பேனிய முஸ்லிம் தலைவர்கள், அறிஞர்கள் கூட கொலை செய்யப்பட்டனர், சிறையிடப்பட்டனர், நாடு கடத்தப்பட்டனர். பள்ளிவாயல்கள் அழிக்கப்பட்டன. மார்க்கம் தொடர்பான புத்தகங்கள், வெளியீடுகள் தடைசெய்யப்பட்டதுடன் அழிக்கப்பட்டன. இந்நிலை 1991 ஆண்டுவரை நீடித்தது. பெரும்பான்மையாக வாழ்ந்த அல்பேனிய முஸ்லிம்களின் “இஸ்லாமிய அடையாளம்” குறித்து நெருக்கடியான, நிச்சயமற்ற நிலையே காணப்பட்டது.
1990களுக்குப் பின் கிழக்கு ஐரோப்பாவில் ஏற்பட்ட ஜனநாய கத்தின் வருகை யோடு, மத சுதந்தி ரம் மீண்டும் அல்பேனியா உட்பட பல நாடுகளில் நடை முறைக்கு வர லானது. அல்பேனியர்கள் தமது மார்க்கத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கூடிய சூழலைப் பெற்றதுடன் தமது அடையாளத்தையும் பெற்றுக்கொண்டனர். 1990 களுக்குப் பின் அல்பேனியர்கள் இஸ்லாமியமயப்படுத்தலுக்கான ஆரம்ப எட்டுக்களை முன்னெடுக்கக் கூடிய நிலை தோற்றம் பெற்றது. இக்காலப்பகுதியில் இஸ்லாமிய நாடுகளின் அமைப்பில் (OIC) அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டது. அறபு-அல்பேனிய இஸ்லா மிய வங்கியொன்றும் தாபிக்கப் பட்டதுடன் 20க்கும் அதிகமான அறபு, இஸ்லாமிய நிறுவனங்கள் தமது கிளைகளை திறந்தன.
இந்நிறுவனங்கள் இஸ்லாம் தொடர்பில் அறிவூட்டல், பள்ளி வாயல்களை நிர்மாணித்தல், இஸ்லாமிய நூல்களை அல்பேனிய மொழியில் அச்சிட்டு விநியோகித்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டன. எனினும் 1997இல் ஜனநாயக ஆட்சிமுறைக்கெதிரான கிரேக்கத் தின் தலையீட் டின் பின் பழைய கம்யூனிஸ்ட்டுகள் அதிகாரத்தைக் கைப்பற்றினர். அதனைத் தொடர்ந்து இஸ்லாத்திற்கெதிரான இரண்டா வது சிலுவை நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விட்டது. அறபு இஸ்லாமிய நிறுவனங்கள் தடைசெய்யப்பட்டதுடன் அனைத்தும் மூடப்பட்டன.
அல்பேனியர்கள் எதிர்கொள்கின்ற மிகப் பெரும் பிரச்சினை வறுமை நிலை. இஸ்லாமிய நிறுவனங்கள் தமது செயற்பாடுகளை முழுமையாக வெளிநாட்டு உதவிகள் மூலமே மேற்கொள்கின்றன. அல்பேனிய முஸ்லிம் அமைப்பு (AMC) சில மத்ரஸாக்களை மிகக் கஷ்டமான நிலையிலேயே நடத்தி வருகின்றது.
பொதுவாக அல்பேனிய முஸ்லிம்களின் பொருளாதார நிலை கஷ்டமாக இருப்பதானால் சமூகப் பணிகளை முன்னெடுப்ப திலும் இஸ்லாத்திற்கெதிரான சக்திகளை எதிர்கொள்வதிலும் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அல்பேனிய முஸ்லிம் அமைப் புக்கு பல வக்ப் சொத்துக்கள் இருந்த போதும் அவை பெரும்புள்ளிகளாலும் மாபியாக்களாலும் சூறையாடப்பட்டன. மற்றும் சில குறைந்த விலைக்கு விற்கப்பட்டன.
அல்பேனியா ஒரு சிறிய நாடாக இருந்தபோதும் பலமான நாடுகளால் சூழப்பட்டிருப்பதுடன் வெளிநாட்டு சக்திகளின் விருப்பிற்கேற்ப அதன் தலைவிதி தீர்மானிக் கப்படுகின்றது. மதங்களாக இஸ்லாம், கிறிஸ்தவம் என்பனவும் அரசியல் சிந்தனைகளான கம்யூனிசம், முதலாளித்துவம், ஏகாதிபத்தியம், சோசலிசம் என்பனவும் அடிக்கடி மோதிக்கொள்ளும் நிலை சாதாரணமாகக் காணப்படுகின்றது.
1990க்குப் பின் கிறிஸ்தவ ஏகாதிபத்தியம், தமது முகாமிற்குள் அல்பேனியர்களை உள்வாங்குவதற்கு வாய்ப்பான சூழலை பயன்படுத்திக் கொண்டது. அதற்காக பல முதலீடுகளையும் செயற்பாடுகளையும் முன்னெடுக்கலானது. அதேவேளை, மேற்கின் முழுமையான உதவியுடன் கத்தோலிக்க தேவாலயங்களும் மிகப் பலமான நிறுவ னங்களாக செயற்பட்டன. குறிப்பாக இத்தாலி மற்றும் வாடிகன் என்பன முன்னணி சக்திகளாக செயற்பட்டன.
போப்பாண்டவர் அல்பேனியாவை தரிசித்ததனைத் தொடர்ந்து கத்தோலிக்க செயற்பாடுகள் கணிசமாக மேற்கொள்ளப்படலானது. அல்பேனியாவின் தலைநகரில் கத்தோலிக்க தேவாலயம் அமைத்தல், கத்தோலிக்க பல்கலைக்கழகம் அமைத்தல், பல நிறுவனங்களை அமைத் தல், பத்திரிகைகளை வெளியிடல் வானொலி நிலையங்களை அமைத்தல், மற்றும் அரசியல் கட்சி யொன்றை அமைத்தல் என்பன அவற்றில் சிலவாகும். கத்தோலிக்கர்கள், மக்கள் தொகையில் 10 வீதத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாடிகன் மற்றும் இத்தாலியின் அனுசரணையுடன் இயங்குகின்ற ஜனநாயக கிறிஸ்தவக் கட்சியை இயக்குகின்ற கத்தோலிக்க அடிப்படைவாதிகள் குறிப்பிடும்போது “அல்பேனியா கத்தோலிக்கத்தின்பால் மீள்வதன் மூலம் மாத்திரமே ஐரோப்பாவில் அல்பேனியாவின் எதிர்காலத்தையும் இருப்பையும் தக்க வைத்துக் கொள்ள முடியும்” என குறிப்பிடுகின்றனர்.
வாடிகன், அஸ்ரியா மற்றும் இத்தாலியின் மிகப்பலமான பணரீதியான உதவியுடன் ஜனநாயக கிறிஸ்தவக் கட்சி நாட்டின் மூலை முடுக்கெல்லாம் அதன் கிளைகளை அமைத்தது.
அல்பேனிய முஸ்லிம்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக 9/11க்குப்பின் இந்நிலை இன்னும் மோசமான நிலையை அடைந்தது. சர்வதேச தளத்தில் பொதுவாக முஸ்லிம்களுக்கொதிரான கெடுபிடிகள் அதிகரித்த போதும் குறிப்பாக அல்பேனிய அரசு முஸ்லிம்களுக்கெதிரான வெளிப்படையான கெடுபிடிகளை மேற்கொண்டது. இதுபோன்ற ஓரங்கட்டல்களையும் சோதனைகளையும் இதற்கு முன்பு ஒரு போதும் கண்டதில்லை என அல்பேனியர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஏன் இந்தளவு மோசமாக தாம் வழிநடத்தப்படுகின்றோம்? ஏன் தாம் குற்றவாளிகள் போன்று நடாத்தப்படுகின்றோம்? எனப் புரிந்துகொள்ள முடியாமலிருக்கின்றது என அல்பேனிய முஸ்லிம்கள் குறிப்பிடுகின்றனர்.
தமது அடையாளத்தையும் இருப்பையும் பாதுகாத்துக் கொள்வதற்கு தமக்கென நிறுவனங்கள், பாடசாலைகள், அமைப்புகள் மற்றும் பிரத்தியேகமான ஊடகம் என்பன அமைக்கப்பட வேண்டும் என அல்பேனிய முஸ்லிம்கள் கருதுகின்றனர். எனினும் அவற்றுக்கான பௌதீக மனித வளங்களின் போதாமை மிகப்பெரும் பிரச்சினை என குறிப்பிடுகின்றனர்.
வாராந்த ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றுவதற்கான போதிய இடவசதியுடனான பள்ளிகள்கூட இல்லை. அல்பேனிய தலைநகரத்தில் 6 பள்ளிவயல்கள் மாத்திரமே காணப்படுகின்றன. அவ்வாறே பர்தா உடையுடன் தமது பெண் பிள்ளைகளை பாடசாலை அனுப்புவதற்கு பிரத்தியேக பாடசாலை தலைநகரத்தில் இல்லாதிருக்கின்றது. ஹிஜாப் அணிபவர்களுக்கு அரச பாடசாலைகளில் அனுமதி மறுக்கப்படுகின்றது. கிறிஸ்தவர்களுக்கு இருப்பதைப் போன்று முஸ்லிம்களுக்கு பிரத்தியேகமான வானொலி சேவையோ பத்திரிகையோ இல்லை.
அல்பேனிய முஸ்லிம்களின் வரலாறு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளையும் அதிகாரங்களையும் கொண்டிருந்த போதும் தற்போது அவர்களின் நிலை கவலைக்கிடமாக இருக்கின்றது.
முஸ்லிம்கள் பெரும் பான்மையாக இருந்தபோதும் அவர்களுக்கென பிரத்தியேமான அரசியல் கட்சி இல்லாதிருப்பதுடன் அவர்களது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள அல்லதுபாதுகாப்பதற்கு முடியாமலிருக்கின்றது. அல்பேனிய முஸ்லிம்களுக்கென்று அரசியல் கட்சிகள், வானொலிகள், பத்திரிகை கள், பாடசாலைகள், நிறுவ னங்கள் போன்றன இல்லாதிருப்பதனால் தமது இருப்பை பாதுகாத்துக் கொள்வதில் அல்பேனியர்கள் பெரும் பிரச்சினையை எதிர் கொள்கின்றனர்.
நன்றி: புதிய களம்