Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

சிரமப்படாமல் சொர்க்கமா?

Posted on December 22, 2009 by admin

சிரமப்படாமல் சொர்க்கமா?

أَمْ حَسِبْتُمْ أَن تَدْخُلُواْ ٱلْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُم مَّثَلُ ٱلَّذِينَ خَلَوْاْ مِن قَبْلِكُم مَّسَّتْهُمُ ٱلْبَأْسَآءُ وَٱلضَّرَّآءُ وَزُلْزِلُواْ حَتَّىٰ يَقُولَ ٱلرَّسُولُ وَٱلَّذِينَ آمَنُواْ مَعَهُ مَتَىٰ نَصْرُ ٱللَّهِ أَلاۤ إِنَّ نَصْرَ ٱللَّهِ قَرِيبٌ (سورة البقرة 214)

”உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பிடித்தன ‘அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள்; ”நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” (என்று நாம் ஆறுதல் கூறினோம்.) (அல்குர்ஆன் 2:214)

தப்ஸீர் இப்னு கஸீர் விரிவுரை:

உங்களுக்கு முன்னர் வாழ்ந்த பல்வேறு சமுதாய மக்களுக்கு நிகழ்ந்ததைப் போன்று சோதனையும் துன்பமும் உங்களுக்கு ஏற்படாமலேயே நீங்கள் சொர்க்கத்தில் நுழைந்துவிடலாம் என்று கருதுகிறீர்களா? என்று இந்த வசனத்தில் அல்லாஹ் கேள்வி எழுப்புகின்றான். உங்களுக்கு முன் (வாழ்ந்து) மறைந்தோருக்கு ஏற்பட்ட நிலை உங்களுக்கு வராமலேயே நீங்கள் சொர்க்கத்தில் நுழைந்துவிடலாம் என்று கருதுகிறீர்களா? அவர்களுக்கு வறுமையும் துன்பமும் ஏற்பட்டன என்று அல்லாஹ் கூறியுள்ளான்.

கப்பாப் இப்னு அல் அரத்ரளியல்லாஹு அன்ஹுஅறிவிக்கின்றார்கள்;”இறைத்தூதர்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள், கஅபாவின் நிழலில் தம் சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்ந்து கொண்டிருந்தபோது அவர்களிடம் (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைக்கும் கொடுமைகளை) முறையிட்டபடி, எங்களுக்காக (அல்லாஹ்விடம்) நீங்கள் உதவி கோரமாட்டீர்களா? எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யமாட்டீர்களா?. என்று கேட்டோம்.

அதற்கு அவர்கள், உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே (ஏகத்துவக் கொள்கையை ஏற்று இறைத்தூதரின் மீது நம்பிக்கை கொண்ட) ஒரு மனிதருக்காக மண்ணில் குழிதோண்டப்பட்டு, அவர் அதில் நிறுத்தப்பட, ரம்பம் கொண்டு வரப்பட்டு அவரின் தலை மீது வைக்கப்பட்டு அது ஒரு கூறுகளாகப் பிளக்கப்படும். ஆயினும், அ(ந்தக் கொடுமையான)து அவரை அவரின் மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. (பழுக்கச் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளால் அவர் (மேனி) கோதப்பட, அது அவரின் இறைச்சியையும் கடந்து சென்று அதன் கீழுள்ள எலும்பையும் நரம்பையும் சென்றடைந்து விடும்.

அ(ந்தக் கொடூரமான சித்திரவதையும்)தும் கூட அவரை அவரின் மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (இஸ்லாத்தின்) விவகாரம் முழுமைப்படுத்தப்படும். எந்த அளவிற்கென்றால் வாகனத்தில் பயணம் செய்யும் ஒருவர் (யமனில் உள்ள) ஸன்ஆவிலிருந்து ஹளர மவ்த் வரை பயணம் செய்து சொல்வார். (வழியில்) அல்லாஹ்வைத் தவிர, அல்லது தன் ஆட்டின் விஷயத்தில் ஓநாயைத் தவிர வேறெவருக்கும் அவர் அஞ்சமாட்டார். ஆயினும், நீங்கள் தான் (கொடுமை தாளாமல் பொறுமை குன்றி) அவரசப்படுகிறீர்கள்’. என்று கூறினார்கள். (புகாரி: 3612, 3852, 6943 மற்றும் அபூதாவூத், முஸ்னத் அஹ்மத்).

”அலிஃப், லாம், மீம்.

‘நாங்கள் ஈமான் கொண்டிருக்கின்றோம்”என்று கூறுவதனால் (மட்டும்) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று மனிதர்கள் எண்ணிக் கொண்டார்களா?

நிச்சயமாக அவர்களுக்கு முன்னிருந்தார்களே அவர்களையும் நாம் சோதித்திருக்கின்றோம் – ஆகவே உண்மையுரைப்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் அறிவான்; இன்னும் பொய்யர்களையும் அவன் நிச்சயமாக அறிவான். ” (அல்குர்ஆன் 29:1-3).

இத்தகைய சோதனைகளில் ஒரு பெரும்பகுதி நபித்தோழர்களுக்கு ‘அல்அஹ்ஸாப்’ எனும் (அகழ்ப்) போர் நடைபெற்ற நாளில் ஏற்பட்டது.

உங்களுக்கு மேலிருந்தும், உங்களுக்குக் கீழிருந்தும் அவர்கள் உங்களிடம் (படையெடுத்து) வந்தபோது, (உங்களுடைய) இருதயங்கள் தொண்டை(க் குழி முடிச்சு)களை அடைந்து (நீங்கள் திணறி) அல்லாஹ்வைப் பற்றி பலவாறான எண்ணங்களை எண்ணிக் கொண்டிருந்த சமயம் (அல்லாஹ் உங்களுக்கு செய்த அருள்கொடையை) நினைவு கூருங்கள்.

அவ்விடத்தில் முஃமின்கள் (பெருஞ்) சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு, இன்னும் கடுமையான அதிர்ச்சியினால் அதிர்ச்சிக்கப்பட்டார்கள். (அல்குர்ஆன் 33:10,11).

அடுத்து இறுதியில் இறைத்தூதரும், அவருடன் உள்ள இறைநம்பிக்கை கொண்டோரும் அல்லாஹ்வின் உதவி எப்போது வரப்போகிறதோ என்று கூறும் அளவுக்கு அவர்கள் அலைக்கழிக்கப்பட்டனர் என்று அல்லாஹ் கூறியுள்ளான். தம்முடைய எதிரிகளுக்கு எதிராக (இறைவனிடம்) அவர்கள் வெற்றியைக் கோருவார்கள் நெருக்கடியான நிலையும், இறுக்கமான சூழலும் அகன்று விரைவில் விடிவுகாலம் பிறக்கவேண்டும் என்று பிரார்த்தனை புரிவார்கள் என்பது இதன் பொருளாகும்.

”இதோ அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது”

ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.

நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது. (அல்குர்ஆன் 94:5,6)

அதாவது சிரமம் ஏற்படுவதைப் போன்றே அதிலிருந்து விடுபடுவதற்கான இறை உதவியும் நிச்சயம் கிடைக்கவே செய்யும். இதனால்தான் ”இதோ அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” என்று அல்லாஹ் கூறுகின்றான்.

– read-quran.blogspot.com/

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 7 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb