
”திருக்குர்ஆன் இயற்கை மருத்துவம்”
Dr.M.A.HARUN, Phd (Quraan Medicine)
நூலைப் பற்றி பத்திரிக்கைகளின் பாராட்டு
திருக்குர்ஆனில் கூறப்பட்டிருக்கும் இயற்கை மருத்துவம், கூட்டு மருத்துவம், மாற்றுவழி மருத்துவம் போன்றவற்றில் இருக்கும் அடிப்படை சிகிச்சைகளின் தொகுப்பு இந்த புத்தகம் ”தொழுகையில் அக்குபஞ்சர்” போன்ற அத்தியாயங்கள் சுவாரஸ்யமாக இருக்கின்றன.
– இந்தியா டுடே: 29.3.2000
மயிலாடுதுறையில் இறைவழியில் மருத்துவராகப் பணியாற்றி வரும் டாக்டர் எம். ஏ.ஹாருன் முதன் முதலாகக் கண்டுபிடித்த திருக்குர்ஆன் சாந்தி சிகிச்சை மன அழுத்தங்களால் ஏற்படக்கூடிய பெரும்பாலான உடல் கஷ்டங்களை மிக எளிதாக நீக்கியதால் முதல் முயற்சியே இவருடைய திருக்குர்ஆன் இயற்கை மருத்துவம் நூல் ஆராய்ச்சிகளுக்கு ஊக்கமளித்து இருக்கிறது.
– ஹெல்த் டைம் – மருத்துவ மாதஇதழ் : ஆகஸ்ட்,2000
திருக்குர்ஆன் முஸ்லிம் மதத்தினர் மட்டும் படிப்பதற்கல்ல, அது மனித இனமே படிக்க வேண்டிய நூல் என்று நூல் ஆசிரியர் எடுத்திருக்கும் முயற்சியே, அவரது உழைப்பை அங்கீகரித்து பாராட்டலாம்.
– ஹெல்த் ப்யூட்டி – மருத்துவ மாதஇதழ் :ஏப்ரல்,2000
இஸ்லாமிய முறைப்படி அமைந்த மருத்துவ நூல்
– குமுதம் : 29.7.99
இந்த நூல் கையிலிருந்தால் உங்களுடன் ஒரு டாக்டர் இருப்பது மாதிரி என்பது முற்றிலும் பொருத்தமான உண்மையாகும்.
– நர்கிஸ் : செப்டம்பர் 1999
துஆவில் தான் என்னென்ன மருத்துவத் தத்துவங்கள் அமைந்திருக்கின்றன என்பதை படிக்கும் போது டாக்டரின் அபார ஆய்வுத் திறமையை அறியமுடிகிறது.
– ஜமா அத்துல் உலமா : நவம்பர் 1999
திருமறையில் இத்தனை மருத்துவ முறைகளா? ஏன வியக்கச் செய்கிறது.
– விடியல் வெள்ளி : பிப்ரவரி 2000
ஒருவர் இதை முழுவதும் படித்துத் தேர்ந்துவிட்டால் இம்மை, மறுமை வாழ்வுக்கு வேறு நூல் படிக்கத் தேவையில்லை.
– முஸ்லீம் முரசு: அக்டோபர் 1999
இந்த நூலில் திருக்குர்ஆன் வசனங்களை ஒவ்வொரு அத்தியாயத்திலும் குறிப்பிட்டு மருத்துவ விளக்கததையும், சிகிச்சையையும் கூறியிருப்பது நம்மை வியக்கவைக்கிறது.
– குர்ஆனில் குரல் : பிப்ரவரி 2000
தொடர்ச்சிக்கு ‘Next’ ஐ ‘கிளிக்’ செய்யவும்