M.A.முஹம்மது ஸலாஹுத்தீன் B.Com
[ ஃபிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தல் நமது ஊருக்கு நேர்மாற்றம். யாரும் போட்டி இடலாம். ஒரு சின்ன நிபந்தனை; 500 நகர, மாநகர மேயர்கள் ஆதரவு தெரிவித்து கையொப்பமிட்டு இருக்க வேண்டும்.
நிகோலா சர்கோஜியின் உள்துறை அமைச்சக செயலாளரிடமிருந்து நன்றி தெரிவித்து கடிதம் வந்தது. தொடர்ந்து கடிதங்கள் எழுதினேன். எமது ஆலோசனைகளில் பெரும்பகுதியை அவர் செயல்படுத்தினார். நேரடியாக எமது மடலில் இருந்து பெறாமல் இருக்கலாம். ஆனால் நான் 5 மடல் எழுதியதும், 4 நன்றிக்கடிதம் பெற்றதும் உண்மை.
ஃபிரான்ஸ் அதிபரின் நடவடிக்கைகளினால் மற்ற கட்சிகள் எல்லாம் முஸ்லிம்களை முன்னிலைப்படுத்த வேண்டிய நிலைக்கு ஆளாகிவிட்டன. இருபெரும் கட்சிகளில் முஸ்லிம்கள் மேல்நிலைக்கு வந்துவிட்டனர். இது சர்வதேச ரீதியில் தாக்கம் ஏற்படுத்தக் கூடியது.
இக்கட்டுரையின் மற்றொரு முக்கிய நோக்கம் உலகில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்கள் இந்த முன்னுதாரணத்தை காட்டி தங்களது உரிமைகளை நிலைநாட்டிக்கொள்ள முயல வேண்டும் என்பதே.]
ஒரு சில குறைகள் இருந்தாலும் முஸ்லிம் ஆதரவை சர்கோஜி கைவிடவில்லை. 2007ம் ஆண்டு தேர்தல் நெருங்கிய சமயம் எனக்கு ஒரு சிந்தனை. இஸ்திகாரா தொழுது உறுதிசெய்து கொண்டேன். மாற்ற முடியாத முடிவை எடுத்த பிறகு பரீட்சித்துப் பார்க்க இருவரிடம் ஆலோசனை கேட்டேன்.
ஒருவர் பல்கலைக்கழக பேராசிரியர்- நவ் முஸ்லிம்; வெள்ளையர்; தவறாமல் ஜும்ஆவுக்கு வருபவர். அவர் ”ஏன் இமாம் என்ற ரீதியில் நீங்கள் அவருக்கு கடிதம் போடுகிறீர்கள்? தேவையில்லை!” என்றார்.
‘தேவைதான்! காரணம் அவர் முஸ்லிம் நலனில் அக்கறை காட்டுகிறார்” என்றேன். ”அதெல்லாம் அரசியல் ஆதாயம் கொண்டது” என்று தொடர்ந்தார்.
”எப்படி இருப்பினும், முஸ்லிம் என்ற வார்த்தையை சொல்வதற்குக் கூட நான் கடிதம் எழுதலாம் அல்லாவா?” அது சரி. அவருக்கு போட்டியாக எதிரணியில் நிற்கும் இடதுசாரி பெண்மணி அப்படி இஸ்லாத்தைப் பற்றி சொல்ல வாய்ப்பு உண்டா?” விடாமல் கேட்டேன்.
”அவரா? அதையெல்லாம் அப்பெண்மயியிடம் எதிர்பார்க்க முடியாது” என்றார். இவ்வளவுக்கும் அம்மணி ஸெனகல் (Senegal) என்ற ஆப்ரிக்கா நாட்டில் பிறந்தவர். அங்கு 94 முஸ்லிம்கள். 2003-ம் ஆண்டில் பிரான்ஸில் டிசனகல் நாட்டவரின் எண்ணிக்கை சுமார் 50,000. மற்றொருவர் ஃபிரெஞ்சு அரசியல்வாதி கறுப்பர். நவ் முஸ்லிம். அவர் ”நான் இடதுசாரி” என்றார்.
”அதனால் என்ன? நீங்கள் ஒரு முஸ்லிம். உண்மையை சொல்லுங்கள். என் முடிவு தவறா?””இல்லை. சர்கோஜி சுத்தமானவர்” அப்புறம் என்ன, இரண்டே பக்கத்தில் ஆதரவும், வாழ்த்தும், ஆலோசனையும் தெரிவித்ததோடு, ஒரு கணிப்பையும் கூறி இருந்தேன். அதாவது அன்று பிரதமராக இருக்கும் டொமினிக் விரைவில் மக்கள் ஆதரவை இழப்பார் என்று.
ஃபிரான்ஸ் அதிபராய் நியமிக்கப்படுபவரே பிரதமர். 5 ஆண்டு பதவி காலம். ஆனால், அதிபர் விரும்பினால் எப்போது வேண்டுமானாலும் தூக்கிவிடலாம். ஒரு பிரதமர் கூட முழுமையாக ஐந்தாண்டை முடித்தது இல்லை. அதுவரை எந்த அதிபரும் இந்த அதிகாரத்தை பயன்படுத்தாமல் இருந்ததே இல்லை. பெரும்பாலும் மறைமுகமாக நிறைவேற்றப்படும். அது எப்படி?
”உன்னை நீக்குவது அழகாக தெரியவில்லை. எனவே, ராஜினாமா செய்விடு. உனக்கும் கண்ணியமாக இருக்கும்” என்ற பாணியில்! இரண்டாவது முக்கிய பதவியும், மந்திரிசபைக்கே தலைமையான இப்பதவியையும் அவ்வளவு எளிதில் யாரும் விடமாட்டார்கள் அல்லவா? 48 ஆண்டுகளில் 18பேர் பிரதமர் பதவியை வகித்து உள்ளனர். அதாவது, பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டோ, ராஜினாமா செய்தோ உள்ளனர்.
இருப்பினும், மாண்புமிகு இப்பதவியை வகிப்பவருக்கு அதிபர் போட்டியில் பங்குபெற அதிக வாய்ப்பும், வெற்றி பெறும் சாத்தியமும் அதிகம் உண்டு என்பது மறுக்கப்பட முடியாத உண்மை.
இந்நிலையில் சர்கோஜியின் நிலை வெற்றி பெற வாய்ப்பே தவிர உறுதி என்று சொல்ல முடியாது. பிரதமரும் செல்வாக்காகத்தான் இருந்தார். அப்படி இருக்க எப்படி என்னால் கணிக்க முடிந்தது என்றால் முஸ்லிம்களின் செல்வாக்கே காரணம். எந்த அளவுக்கு என்றால் அவர்களின் மானசீக ஆதரவு, பாதிப்பை ஏற்படுத்த ஆரம்பிக்கும் அளவு செல்வாக்கை அல்லாஹ் அளித்துவிட்டான் என்றே சொல்ல வேண்டும்.
ஃபிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தல் நமது ஊருக்கு நேர்மாற்றம். யாரும் போட்டி இடலாம். ஒரு சின்ன நிபந்தனை; 500 நகர, மாநகர மேயர்கள் ஆதரவு தெரிவித்து கையொப்பமிட்டு இருக்க வேண்டும்.
இரண்டு கட்டமாக தேர்வு நடைபெறும். முதல் கட்டத்தில் பலபேர் போட்டியிடுவர். இரண்டாம் கட்ட தேர்வு இரு வாரத்திற்கு பின்பு நடக்கும். ஆதிகமான வாக்குகள் பெற்ற இரண்டு போட்டியாளர்கள் மட்டும் இரண்டாம் கட்டத்தில் இருப்பர். அப்படி எவரேனும் 50;மூ தாண்டி வாக்கு பெற்று இருந்தால் இரண்டாம் கட்ட தேர்வு நடைபெறாது. இது அதிபரை மக்கள் நேரடியாக தேர்வு செய்யும் முறை. ஏராளமான அதிகாரங்களை உடைய பொறுப்பு. ஒரேஒரு நாள் பதவி வகித்தால் போதும். இறக்கும்வரை அதே சம்பளம் அதே ‘தலைவரே” என்றழைக்கப்பட வேண்டிய கண்ணியம் தொடரும்.
அதிபர் சிராக் இரண்டாம் முறை நிற்கும்போது இரண்டாம் தேர்வுக்கு அவருக்கு எதிராக இடதுசாரி ஜொஸ்பேன் தேர்வு செய்யப்படுவது யாராலும் சந்தேகமேபடாத அளவுக்கே இருந்தது. இருந்தாலும் புகழ்பெற்ற ஜொஸ்பேன் தோற்றுவிட்டார். அதிர்ச்சியில் உறைந்துபோன அவர் அன்றிரவே அரசியல் துறவறம் மேற்கொண்டு விட்டார். ஸுப்ஹானல்லாஹ் இன்றும் பல பேருக்கு இது புரியாத புதிர். நமக்கு புரிகிறது.
இன்னும் ஒரு வேடிக்கை என்னவென்றால் இதிலும் மற்றொரு செல்வாக்கின் உதாரணம் உண்டு. அவர் தோற்பதற்கு நேரடியான காரணம் ஓட்டை பிரித்தது. அப்படிப் பிரித்தவர் கண்ணியமிக்க ஒரு இடதுசாரி வேட்பாளர். அதென்ன கண்ணியம் மிக்க?
அவர் பெயர் ஜான்பியர் செவன்மா. இவர் ஏற்கனவே உள்துறை அமைச்சராக இருந்து சர்கோஜிக்கும் முன்னோடியாக முஸ்லிம் ஆதரவுக்கு நமது காலத்தில் வித்தூன்றியவர். முதல் இராக் போருக்கு இடதுசாரி அதிபர் பிரான்சுவா மித்திரன் படை அனுப்பியபோது தனது பதவியையெ ராஜினாமா செய்த கண்ணியவான். அப்போது அவர் பாதுகாப்பு அமைச்சர். இவரே உள்துறை அமைச்சராக இருந்தபோது முதன்முறையாக முஸ்லிம்களின் நலனில், ஒரு தேசிய அளவிலான அமைப்பை ஏற்படுத்தியவர்.
முஸ்லிம்களின் செல்வாக்கு ஃபிரான்ஸில் வளர்ந்து வருகிறது. அதுவும் நேரிடையாக பார்க்கும் வண்ணம் என்பதை நினைக்கும்போது மகிழ்வு ஏற்படுவது இயற்கையே. அல்ஹம்துலில்லாஹ்.
நிகோலா சர்கோஜியின் உள்துறை அமைச்சக செயலாளரிடமிருந்து நன்றி தெரிவித்து கடிதம் வந்தது. தொடர்ந்து கடிதங்கள் எழுதினேன். அல்லாஹ்வின் அருளால் பேனாவை எடுத்தால் ஆலோசனைகள் ஊற்றைப் போன்று வெளிவந்தன.
எமது ஆலோசனைகளில் பெரும்பகுதியை அவர் செயல்படுத்தினார். நேரடியாக எமது மடலில் இருந்து பெறாமல் இருக்கலாம். ஆனால் நான் 5 மடல் எழுதியதும், 4 நன்றிக்கடிதம் பெற்றதும் உண்மை.
அக்கடிதங்களில் ஒரு தலைவர் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பதற்கு அண்ணலெம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மற்றும் அவர்களின் அருமைத் தோழர்கள்,
சமீப கால அமெரிக்க அதிபர் ஃபிராங்லின் ரூஸ்வெல்ட், (4 முறை அமெரிக்க அதிபராக இருந்தவர்), ஃபிரெஞ்சு அதிபர் டிகால்,
தேர்தல் பிரச்சாரத்திற்கு தொகுதிக்கே செல்லாத காயிதேமில்லத் அவர்களின்
முன்மாதிரிகளை, படிப்பினைகளை, ஆலோசனைகளை தெரிவித்தது மட்டுமின்றி,
முஸ்லிம்களின் வாக்குகளை எப்படி கைப்பற்றலாம்.
பயங்கரவாதத்திற்கு எப்படியெல்லாம் தீர்வு காணலாம் என்பது குறித்து எழுதியதோடு
அதிபராக தேர்வு செய்யப்பட்ட பிறகு என்னவென்ன மாற்றங்களை செய்யலாம் என்பது குறித்தும் எழுதியிருந்தேன்.
அதில் அரபு நாடுகளின் தொடர்பை வளர்த்துக்கொண்டு பொருளாதார நலனுக்காகவும் சில ஆலோசனை இருந்தது.
சான்றுக்கு இரண்டு.
1. மக்கா, மதீனாவுக்கும் இடையே அதிவிரைவு புகைவண்டிக்கான ஒப்பந்தம் மேற்கொள்க. அதற்கு பணத்திற்கு பதிலாக பெட்ரோலை பெறுக. (அதன்மூலம் பெட்ரோல் விலையை கட்டுப்பாட்டில் வைத்து பொருளாதார ஆணித்தர நிலையை தக்க வைக்க முடியும். இது அதில் நேரடியாக எழுதாத ஒரு தத்துவம்.)
சவூதி அரேபியாவுக்கு சென்றார். 40 பில்லியன் யூரோ ஒப்பந்தம் கிடைத்தது. 2 இலட்சத்து அறுபதாயிரம் கோடி ரூபாய். சில மாதங்களுக்குப் பின்பு பத்திரிகையில் பார்த்தேன். அது உண்மை எனில் இன்ஷா அல்லாஹ் பிரான்ஸ் தயாரிப்பான 300 கிமீ. வேக அதிவிரைவு TGV புகைவண்டிகள் மக்கா, மதீனா இடையே வழுக்க ஆரம்பித்துவிடும். இது ஒரு சவுண்ட் புரூஃப் (Sound proof) அதாவது சத்தம் இதன் உள் நுழையா அதி நவீன புகைவண்டி சுமார் 6 மணிநேரம் பேருந்தில் கடக்கும். ஹஜ் பிரயாணிகள் சுமார் 1 அல்லது 1.5 மணி நேரத்தில் இலக்கை அடைந்துவிடலாம். எமது மாண்டமான உலகம் பெரும் புகைவண்டியாக மாடிகள் அமைத்து கட்ட எழுதி இருந்தேன்.
கத்தார் நாட்டு அதிபரோடு நட்புறவு கொண்டு தேசீய விழாவிற்கே அழைப்பு கொடுத்தார். வியாபார ஒப்பந்தம் பல கோடிகளில் செய்யாமல் விட்டுவிடுவாரா என்ன?
சமீபத்தில் ஜூன் மாதத்தில் அபுதாபியில் பிரான்ஸ் இராணுவதளம் அமைத்தது. விற்ற யுத்த விமானங்களின் மதிப்பு ரூபாய் 52,000 கோடி. 400 ஃபிரெஞ்சு இராணுவ வீரர்கள் உடைய இத்தளம் ஏற்பட அபுதாபியே அழைப்பு விடுத்தது என்று அறிவிக்கப்பட்டது. அல்லாஹ்வே அறிவான்.
மத்திய தரைகடல் நாடுகளின் அமைப்பை ஏற்படுத்தினார். இதில் பல முஸ்லிம் நாடுகள் உண்டு என்று சொல்லத் தேவையில்லை. விளைவு லிபியாவின் அதிபர் கடாஃபியையும், சிரியாவின் அதிபரையும் பிரான்ஸிற்கு வர அழைப்பு விடுத்தார். அவ்விருவரும் ஃபிபிரான்ஸிற்கு வந்தனர். கடும் விரோதிகளாக கருதப்பட்ட இவ்விருவரையும் வரவேற்றது சாதாரண ஒரு செய்தி அல்ல!
ஜூலை மாதம் பிரதமர் அதிரடியாக ஈராக்கிற்கு சென்று வியாபார ஒப்பந்தங்களை மேற்டிகொண்ட பின்னரே செய்தியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டது. இது முழுக்க வியாபார அடிப்படை.
இஸ்ரேலின் அநியாய நடவடிக்கைகளை நிறுத்த ஐரோப்பிய யூனியன் முயன்றது உண்மை. அதிபர் சர்கோஜி மூன்று முறை பயணம் செய்ததும் உண்மை.
அல்ஜீரியா, மொரோக்கோ நாடுகளுக்கும் விஜயம் செய்து இஸ்லாம், முஸ்லிம் என்ற பதங்களை தெளிவாக உச்சரித்து இருக்கிறார்.
2. நல்லதை ஏற்றுக் கொள்க. அது எந்தப் பகுதியிலிருந்து வந்தாலும், எந்தக் கட்சியாக இருப்பினும் என்று இரண்டாவது ஆலோசனையை சில உதாரணங்களோடு எழுதி இருந்தேன்.
ஸுப்ஹானல்லாஹ். அதை விரிவுபடுத்தினார். தனது மந்திரி சபையில் இடதுசாரி எதிர்கட்சியினரை மாற்றுக் கட்சியினரைக்கூட மந்திரிகளாக்கினார். இரண்டு முஸ்லிம் பெயர் உடைய அல்ஜீரிய பெண்களுக்கும், செனகல் நாட்டில் பிறந்த ஒரு கறுப்புப் பெண்ணிற்கும் மந்திரி சபையில் இடமளித்தார். மற்ற பதவிகளிலும் பலருக்கு கட்சி வேறுபாடின்றி அள்ளிக் கொடுத்தார்.
பழைய யூகோஸ்லோவியாவின் ஒரு பகுதியாக இருந்து பிப்ரவரி 2008லிருந்து தனி சுதந்திர நாடாக ‘கொசோவோ‘ அறிவிக்கப்பட்டது. பெரும்பான்மை முஸ்லிம்களைக் கொண்ட இந்நாட்டின் பிரதமர் ‘ஹாஷிம் தாஸி‘ சென்ற ஜூன் ஃபிரான்ஸ் வந்திருந்தார். அவரிடம் சர்கோஜி ஃபிரான்ஸ், கொசோவோ நாடு ஐரோப்பிய யூனியனில் இணைவதற்கு ஆதரவும் உதவியும் அளிக்கும் என்ற உறுதிமொழியை அளித்தார்.
ஃபிரான்ஸிற்கு மொத்தம் 100 மாநிலங்கள் இருந்தன. இதில் பிரான்ஸிற்கு அப்பால் மேற்கேயும், கிழக்கேயும் உள்ள சில தீவுகளும் அடங்கும். அதாவது வெஸ்ட்இண்டீஸ் (மேற்கின்திய தீவுகளுக்கு) அருகே வடக்கில் குவாடலூப், மார்தினிக் என்ற இரு தீவுகள், தென் அமெரிக்காவில் குய்யான் நாடு, மேலும் ஆப்ரிக்கா கண்டத்தின் ரெயூனியன் (Reunion) என்ற தீவு.
இது மடகாஸ்கருக்கு அருகே உள்ளது. இத்தீவில் மட்டும்தான் ஃபிரான்ஸின் நிர்வாகத்தில் உள்ள ஒரு மாநிலத்தில் முஸ்லிம்கள் தொழுகைக்காக பகிரங்கமாக பாங்கு சொல்ல முடியும்.
இங்கு வசிக்கும் மக்களில் வட இந்திய முஸ்லிம்கள் கண்ணியமும், செல்வாக்கும் உடையவர்கள். பெரும்பாலோர் வியாபாரிகள். புத்தாண்டுகளுக்கு முன்பே 1,600 ஹாஃபிழ்களும், 600 உலமா பெருமக்களும் எங்களில் உண்டு என்று என்னிடம் இங்கு வாழும் முஸ்லிம் சகோதரர் தெரிவித்தார். ஃபிரான்ஸில் ”கிரதெய்” நகரம் மட்டும் விதி விலக்கு. இங்கு பாங்கு பகிரங்கமாக அதாவது மைக்கில் சொல்லப்படுகிறது. இந்த பட்டியலில் இந்த ஆண்டு மயோத் (Malotte) என்ற தீவு ஃபிரான்ஸுடன் 101வது மாநிலமாக இணைகிறது. இரண்டு இலட்சம் பேர் வசிக்கும் தீவு.
ரெயூனியன் தீவுக்கு அருகேயுள்ள இந்த சின்ன தீவில் பெரும்பான்மையோர் கறுப்பு முஸ்லிம்கள் 97%. இவ்வாண்டு மார்ச் மாதம் மேற்கொள்ளப்பட்ட ஓட்டெடுப்பில் பெருவாரியாக ஃபிரான்ஸுடன் இணைய ஒப்புக் கொண்டதனால் சர்கோஜியின் அரசு இத்தீவை பிரான்ஸுடன் இணைத்துக் கொண்டது.ஃபிரான்ஸின் காலனியாக இருந்து ஓட்டெடுப்பில்
”வேண்டாம் ஃபிரான்ஸ்–வேண்டும் விடுதலை” என்று தெரிவித்து விடுதலை பெற்ற சில தீவுகளும் உண்டு. அவற்றில் மடகாஸ்கர் தீவு, கொமோர் தீவு இந்த இரு தீவுகளுக்கும் அருகே உள்ளவைகள். மயோத் தீவை பிரான்ஸுடன் இணைத்த காலத்தில் வாழ்ந்த காரணத்திற்காகவே பெரும்பான்மையான இத்தீவின் முஸ்லிம்களின் வாக்கு அடுத்த தேர்தலில் நிகோலா சர்கோஜிக்கு உண்டு என்று அடித்துச் சொல்லலாம்.
ஃபிரான்ஸ் அதிபரின் நடவடிக்கைகளினால் மற்ற கட்சிகள் எல்லாம் முஸ்லிம்களை முன்னிலைப்படுத்த வேண்டிய நிலைக்கு ஆளாகிவிட்டன. இருபெரும் கட்சிகளில் முஸ்லிம்கள் மேல்நிலைக்கு வந்துவிட்டனர். இது சர்வதேச ரீதியில் தாக்கம் ஏற்படுத்தக் கூடியது.
இக்கட்டுரையின் மற்றொரு முக்கிய நோக்கம் உலகில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்கள் இந்த முன்னுதாரணத்தை காட்டி தங்களது உரிமைகளை நிலைநாட்டிக்கொள்ள முயல வேண்டும் என்பதே.
ஃபிரான்ஸ் அதிபர் வழிகாட்டுகிறார். முஸ்லிம்களுக்கு மந்திரி பதவிகளையே அளித்து இருக்கிறார். இவ்வளவுக்கும் அங்கு முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக உரிமைக்காக குரல் கொடுப்பதில்லை. ஆனால் இந்தியாவில் உரிமைக்கு குரல் கொடுத்து வருகிறோம். நம்மில் பலர் நாட்டு விடுதலைக்காக உயிரையே கொடுத்து இருக்கிறார்கள். எனவேதான் அழகான முறையில் குரல் கொடுப்போம்! வெற்றி பெறுவோம்!