நாம் கூறப்போகும் மவ்லிதுப் பாடல்கள் எத்தனை குர்ஆன் வசனங்களுடனும் ஹதீதுகளுடனும் மோதுகின்றது என்பதைப் பாருங்கள்.
شرف الأنام مولد – المخاطب هو النبي صلى الله عليه وسلم
ஷரஃபுல் அனாம் மவ்லிது
இதில் அழைக்கப்படுபவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
عَبْدُكَ الْمِسْكِيْنُ يَرْجُو فَضْلَكَ الْجَمَّ الْغَفِيْرَ
فِيْكَ قَدْ أَحْسَنْتُ ظَنِّيْ بَشِيْرٌ ياَ نَذِيْرُ
(நான்) உங்களின் ஏழ்மையான அடியான் உங்களின் அருளையும் பெரும் பாவ மன்னிப்பையும் நாடி உங்களிடம் வந்திருக்கின்றேன். சுவர்க்கத்தை கொண்டு நன்மாராயம் சொல்பவரே! நரகத்தை விட்டும் எச்சரிக்கை செய்பவரே! உங்களைப்பற்றி நான் நல் எண்ணம் வைத்திருக்கின்றேன்.
فَأَغِثْنِيْ وَآجِرْنِيْ يَا مُجِيْرُ مِنَ السَّعِيْرِ
يَاغَيْثِيْ يَا مَلاَذِيْ فِيْ مُلِمَّاتِ الْأُمُوْرِ
நரகத்திலிருந்து பாதுகாப்பவரே? கஷ்டமான சூழ்நிலைகளில் எனக்கு உதவுவரே? என் உறைவிடமே? எனக்கு உதவிடுங்கள், என்னை நரகத்திலிருந்து பாதுகாத்திடுங்கள்.
منقوص مولد – المخاطب هو النبي صلى الله عليه وسلم
மன்கூசு மவ்லிது
இதில் அழைக்கப்படுபவர்கள் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
إِرْتَكَبْتُ عَلَى الْخَطَا غَيْرَ حَصْرٍ وَعَدَدٍ
لَكَ أَشْكُوْ فِيْهِ يَا سَيِّدِيْ خَيْرَ النَّبِيِّ
அளவிடமுடியாத, கணக்கின்றி நான் பெரும் பாவம் செய்திருக்கின்றேன். நபிமார்களில் சிறந்த என் தலைவரே! அதுபற்றி உங்களிடம் நான் முறையிட வந்திருக்கின்றேன்.
இந்தப் பாடல்களுடன் முறன்படக்கூடிய திருமறை குர்ஆன் வசனங்கள்
1. மானக் கேடான ஏதேனும் ஒரு செயலை அவர்கள் செய்துவிட்டாலும், அல்லது (ஏதேனும் பாவத்தினால்) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலும் உடனே அவர்கள் (மனப்பூர்வமாக) அல்லாஹ்வை நினைத்து தங்கள் பாவங்களுக்காக மன்னிப்புத் தேடுவார்களேயானால், அல்லாஹ்வைத் தவிர வேறு யார் பாவங்களை மன்னிக்க முடியும்? மேலும், அவர்கள் அறிந்து கொண்டே தங்கள் (பாவ) காரியங்களில் தரிபட்டிருந்து விடமாட்டார்கள். 3:135
2. ”என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் – நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் – நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்” (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக”. 39:53
3. ”(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; ”நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக”. 2:186
விளக்கம்: நமது நாடுகளில் தர்ஹாவின் பக்கம் படையெடுக்கும் கூட்டங்கள் முந்தைய காலத்தை விட குறைந்திருந்தாலும் இன்னமும் அப்படிப்பட்ட மக்கள் அதிகமாக இருக்கத்தான் செய்கின்றார்கள். இவர்கள் தர்ஹாக்களுக்குச் செல்வதின் நோக்கங்களில் ஒன்று தங்களின் பாவமன்னிப்பை அந்த நல்லடியார்கள் மூலம் கேட்டுக் கொள்வதற்காகத்தான். குர்ஆனிலோ அல்லது ஹதீதிலோ இப்படி இடைத்தரகர்களை வைத்து தங்களின் பாவங்களுக்கு பிழை பொறுப்பு கேட்கும்படி கூறப்படவில்லை.
மாறாக எப்படிப்பட்ட தவறுகள் செய்திருந்தாலும், அல்லாஹ்விடத்தில் மாத்திரம்தான், எவ்வித தரகர்களின்றி கேட்கும் படி, திருமறைக் குர்ஆனும் ஹதீதும் தெளிவு படுத்துகின்றது. நமக்கு மிகவும் சமீபத்தில் இருக்கக்கூடிய நித்திய ஜீவனை விட்டுவிட்டு, மரணித்த, பல மைல்கள் தூரத்தில், மண்ணறைக்குள் அடங்கப்பட்டிருக்கும் ஒரு நல்லடியாரை அழைத்து, பிழை பொறுப்பு தேடுவது புத்திசாலித் தனமாகுமா? கப்ரில் அடங்கப்பட்டிருப்பவர் நல்லடியாராக இருந்தாலே இந்த நிலையென்றால், அங்கு அடங்கப்பட்டிருப்பவர் யாரென்றே தெரியாமல் பிரார்த்திப்பது எவ்வளவு அறியாமை! ஆனால் மேல் கூறப்பட்ட பாடல்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் பாவ மன்னிப்பு கேட்கும்படி ஆர்வமூட்டப்படுகின்றது. இந்தப்பாடல்கள் மேல் கூறப்பட்ட எத்தனை வசனங்களுடன் மோதுகின்றது? சிந்தித்துப் பாருங்கள்.
القائل محي الدين الشيخ عبد القادر جيلاني رحمه الله حسب زعمهم
இந்த பைத்தை எழுதியவர்களின் நம்பிக்கையின் அடிப்படையில், இங்கு கூறப்படுபவர், முஹ்யுத்தீன் அப்துல் காதிர் ஜெய்லானி (ரஹ்) அவர்கள்.
وَأَعْلَمُ عِلْمَ اللهِ أُحْصِيْ حُرُوْفَهُ وَأَعْلَمُ مَوْجَ الْبَحْرِ كَمْ هُوَ مَوْجَةً
அல்லாஹ்வின் அறிவையும் அவனுடைய அறிவின் எழுத்துக்களையும் நான் அறிவேன், கடலில் எழும் அலைகள் எத்தனை அலைகள் என்பதும் எனக்குத் தெரியும்.
இந்தப்பாடலுக்கு முறன்படும் குர்ஆன் வசனங்கள்
”(இன்னும்) நீர் கூறுவீராக ”அல்லாஹ்வைத் தவிர்த்து, வானங்களிலும், பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார்; இன்னும்; (மரித்தோர் இறுதியில்) எப்போது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள்.” 27:65
”(நபியே!) நீர் கூறும்; ”அல்லாஹ் நாடினாலன்றி நான் எனக்கே யாதொரு நன்மையோ அல்லது தீமையோ செய்து கொள்ள சக்தியில்லாதவன்; மறைந்திருப்பவற்றை நான் அறிபவனாக இருந்தால் நம்மைகளை அதிகமாகத் தேடிக்கொண்டிருப்பேன்; (அந்நிலையில் எவ்விதமான) தீங்கும் என்னைத் தீண்டியிராது ”நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நன்மாராயம் கூறுபவனுமேயன்றி வேறில்லை.” 7:188
”அல்லாஹ்வுடைய பொக்கிஷங்கள் என்னிடம் இருக்கின்றன என்று நான் உங்களிடம் கூறவில்லை; மறைவானவற்றை நான் அறிந்தவனுமல்லன், நிச்சயமாக நான் ஒரு மலக்கு என்றும் நான் கூறவில்லை; எவர்களை உங்களுடைய கண்கள் இழிவாக நோக்குகின்றனவோ, அவர்களுக்கு அல்லாஹ் யாதொரு நன்மையும் அளிக்கமாட்டான் என்றும் நான் கூறவில்லை; அவர்களின் இதயங்களில் உள்ளதை அல்லாஹ்வே நன்கு அறிந்தவன் (இவ்வுண்மைகளுக்கு மாறாக நான் எதுவும் செய்தால்) நிச்சயமாக நானும் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விடுவேன்” (என்றும் கூறினார்). 11:31
விளக்கம்: மறைவான அறிவு அல்லாஹுவிற்கு மாத்திரம்தான் உரியது, நபி(ஸல்) அவர்களுக்குக்கூட அது கிடையாது என்று திருமறை குர்ஆன் கூறும்போது, உலகத்திலுள்ள மற்ற யாருக்காவது அந்த அல்லாஹுவின் பண்பு இருக்க முடியுமா? இது அப்பட்டமான பொய்யும், அல்லாஹுவிற்கு இணைவைக்கும் செயலுமாகும்..
மேலும் சில அபத்தங்கள்
يَا سَيِّدَ السَّادَاتِ جِئْتُكَ قَاصِدًا أَرْجُوْ حِمَاكَ فَلاَ تُخَيِّبْ مَقْصَدِيْ
தலைவர்களுக்கெல்லாம் தலைவரே! உங்களின் பாதுகாப்பை எதிர்பார்த்தவனாக உங்களை நாடி நான் வந்திருக்கின்றேன். என் நோக்கத்தை (நிறைவேற்றாமல்) என்னை நஷ்டவாளியாக்கிவிட வேண்டாம்.
قَدْ حَلَّ بِيْ مَا قَدْ عَلِمْتَ مِنَ الْأَذَى وَالظُّلْمِ وَالضُّعْفِ الشَّدِيْدِ فَاسْعَدْ
எனக்கு ஏற்பட்டிருக்கும் கடுமையான பலவீனம், அநியாயம், நோவினை (இவைகள் அனைத்தையும்) நிச்சயம் நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள், ஆகவே என்னை சந்தோஷப்படுத்துங்கள்.
وَمَنْ يُنَادِيْ إِسْمِيْ أَلْفًا بِخَلْوَتِهِ عَزْمًا بِهِمَّتِهِ صَرْمًا لِعَفْوَتِهِ أَجَبْتُهُ مُسْرِعًا مِنْ أَجْلِ دَعْوَتِهِ
மன உறுதியுடன் என் பாவமன்னிப்பை நம்பியவராக தனிமையில் இருந்து என் பெயரை யார் ஆயிரம் முறை அழைக்கின்றாரோ, அவரின் அழைப்பால் நான் வேகமாக வந்து அவருக்கு விடையளிப்பேன்.
فَلْيَدْعُ يَا عَبْدَ الْقَادِرِ مُحْيُ الدِّيْنِ بَعْدَ الصَّلاَةِ اثْنَتَيْ عَشْرَةَ مِنْ رَكْعَةٍ
பனிரெண்டு ரக்அத் தொழுத பின் அப்துல் காதிர் முஹ்யுத்தீன் என்று அழைக்கட்டும்.
مَعَ الْفَوَائِدِ وَالْإِخْلاَصِ مَعَ خُضْعَةٍ يَا غَوْثَ الْأَعْظَمِ عَبْدَ الْقَادِرِ السُّرْعَةَ
பயபக்தியோடு சூரத்துல் ஃபாத்திஹாவுடன் சூரத்துல் இக்லாஸையும் ஓதி கண்ணியத்திற்குரிய அப்துல் காதிர் என்னும் உதவியாளரே! வேகமாக வாருங்கள்.
يَا سَيِّدِيْ أُحْضُرْنِيْ يَامُحْيُ الدِّيْنِ
என் தலைவரே! மார்கத்தை உயிர்பிப்பவரே! என்னிடம் சமூகம் அளியுங்கள்.
يَا سَيِّدِيْ عَبْدُ الْقَادِرِ يَا جَيْلاَنِيْ بِمَدَدِكَ وَغِيَاثِكَ أَدْرِكْنِيْ
என் தலைவரே! அப்துல் காதிர் ஜெய்லானியே! உங்களின் உதவியாலும் ஒத்தாசையாலும் என்னை அடைந்து விடுங்கள்.
يا غوث الأعظم عبد القادر السرعة
அப்துல் காதிரு என்னும் பெரும் உதவியாளரே வேகமாக வாருங்கள்.
இந்தப் பாடல்களுக்கு முறன்படும் திருமறை வசனங்கள்
கஷ்டத்திற்குள்ளானவன் அவனை அழைத்தால் அவனுக்கு பதில் கொடுத்து, அவன் துன்பத்தை நீக்குபவனும், உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (இல்லை) எனினும் (இவையெல்லாம் பற்றி) நீங்கள் சிந்தித்துப் பார்ப்பது மிக்க குறைவே யாகும். 27:62
விளக்கம்: கஷ்டத்தில் அகப்பட்டவர்கள் அந்த கஷ்டத்திலிருந்து விடுவிப்பு பெறுவதற்காக அல்லாஹுவைத் தவிர வேறு யாரையும் நாம் அழைக்கக்கூடாது, அப்படி அழைத்தால் அவர்களால் அந்த உதவியை செய்யவும் முடியாது, அல்லாஹுவைத் தவிர அப்படி எந்த ஒரு சக்தியாவது இந்த உலகத்தில் உண்டா? இல்லை என்று திட்டமாக அல்லாஹ் கூறியிருக்கும் போது, இந்தப் பாடல் ஒரு வலியுள்ளாவின் பெயரைச் சொல்லி, அவரும் இருக்கின்றார், அவரிடமும் கேட்கலாம் அவரும் நமது தேவையை நிறைவேற்றி கொடுப்பார் என்று கூறி, திருமறை குர்ஆனுக்கு முறன்படவில்லையா? இது அல்லாஹுவிற்கு இணைவைக்கும் செயல் இல்லையா?
இன்னும் இது போன்ற பாடல்கள் மவ்லிது என்கிற பேரில் நமது வீடுகளிலும் இறை இல்லங்களிலும் கொஞ்சம்கூட அல்லாஹுவின் பயம் இல்லாமல் பாடப்படுகின்றது, அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹுவை அஞ்சுவீர்களாக! இப்படிப்பட்ட அல்லாஹ்விற்கு இணையான வார்த்தைகளை கூறக்கூடிய பாடல்களை முற்றிலும் தவிர்ப்பீர்களாக? நீங்கள் இதற்கு முன்பு, இந்தப்பாடல்களை கேட்டு அல்லாஹ்விற்கு செய்த இணைவைப்பிற்காக பாவமன்னிப்புத் தேடுங்கள். அல்லாஹ் உங்களின் பாவங்களை மன்னிப்பான்.
இன்னும் ஒரு சில பாடலைக் எடுத்துக்காட்டி, மவ்லிதுகள் இஸ்லாதிற்கு எவ்வளவு முறன்பட்டிருக்கின்றது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
مَلَكْتُ بِلاَدَ اللهِ شَرْقًا وَمَغْرِبًا وَإِنْ شِئْتُ أَفْنَيْتُ الْأَنَامَ بِلَحْظَةٍ
கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையில் உள்ள அல்லாஹ்வின் ஊர்கள் என் ஆதிக்கத்தில் இருக்கின்றது. நான் நாடினால் ஒரு நிமிடத்திலேயே உலகத்தையே அழித்து விடுவேன்.
وَلَوْلاَ رَسُوْلُ اللهِ بِالْعَهْدِ سَابِقًا لَأَغْلَقْتُ بُنْيَانَ الْجَحِيْمِ بِعَظْمَتِيْ
அல்லாஹ்வின் தூதரின் உடன்படிக்கை முந்தவில்லையென்றால் என் வல்லமையால் நரகத்தின் கட்டிடத்தையே நான் மூடியிருப்பேன்.
أَنَا الْوَاجِدُ الْفَرْدُ الْكَبِيْرُ لِذَاتِهِ أَنَا الْوَاصِفُ الْمَوْصُوْفُ سَيِّدُ الطَّرِيْقَةِ
நான்தான் பெரும் படைப்பாகிய ஒரே ஒரு படைப்பாகும், நான்தான் தரீக்காக்களின் தலைவராகிய வர்ணிக்கக்கூடியவரும் வர்ணிக்கப்பட்டவருமாகும்.
ضَرِيْحِيْ بَيْتُ اللهِ مَنْ جَاءَ زَارَهُ بِهَرْوَلَةٍ تُحْظَى بِعِزٍّ وَرِفْعَةٍ
என்னுடைய சமாதி அல்லாஹ்வின் வீடாகும், அதை சந்திக்க வேகமாக யார் வருகின்றாரோ, அவருக்கு கண்ணியமும் உயர்வும் வழங்கப்படும்.
وَكُلُّ بِلاَدُ اللهِ مُلْكِيْ حَقِيْقَةً وَأَقْطَابُهَا مِنْ تَحْتِ حُكْمِيْ وَطَاعَتِيْ
அல்லாஹ் படைத்த எல்லா தேசமும் உண்மையில் என் ஆதிக்கத்தில்தான் இருக்கின்றது. உலகத்தின் அச்சாணி என் ஆதிக்கத்திலும் எனக்கு அடிபணிந்துதான் இருக்கின்றது.
وَقَالُوْا لِيْ يَا هَذَا تَرَكْتَ صَلاَتَكَ وَلَمْ يَعْلَمُوْا أَنِّيْ أُصَلِّيْ بِمَكَّةَ
ஓ இன்னவரே! ஏன் தொழுகையை விட்டீர் என என்னை அவர்கள் கேட்கின்றார்கள். ஆனால் நான் மக்காவில் தொழுதேன் என்பது அவர்களுக்கு தெரியாதோ!
حُجُّوْا إِلَيَّ فَدَارِيْ كَعْبَةٌ نُصِبَتْ وَصَاحِبُ الْبَيْتِ عِنْدِيْ وَالْحِمَى حَرَمِيْ
என்னிடம் வந்து ஹஜ் கடமையை நிறைவேற்றுங்கள். என் சமாதியே நஷ்டப்பட்ட கஃபாவாகும், வீட்டுக்குரியவன் (இறைவன்) என்னிடத்தில் இருக்கின்றான்.
மேலே சொல்லப்பட்ட பாடல்கள் எவ்வளவு பொய்யையும், தெட்டத்தெளிவாக இஸ்லாத்திற்கு மாற்றமான கருத்துக்களையும் கூறியிருக்கின்றது என்பதை மேலதிக விளக்கம் கொடுக்காமலேயே நீங்கள் விளங்கியிருப்பீர்கள் என்பதால் உங்களிடத்திலேயே அதை விட்டுவிடுகின்றேன்,. அல்லாஹ் மிக நன்கறிந்தவன்.
இஸ்லாத்தில் இசை கேட்பது தடுக்கப்பட்டிருக்கின்றது என்பதற்குரிய ஆதாரத்தை மாத்திரம் கூறி இந்த ஆய்வை முடித்துக் கொள்கின்றேன்.
”(இவர்கள் தவிர) மனிதர்களில் சிலர் இருக்கின்றார்கள் – அவர்கள் அறிவில்லாமல் வீணான பேச்சுக்களை விலைக்கு வாங்கி, (அவற்றால் மக்களை) அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழி கெடுக்கவும், அல்லாஹ்வின் பாதையைப் பரிகாசமாக்கிக் கொள்ளவும் (முயல்கிறார்கள்) இத்தகையோருக்கு இழிவுதரும் வேதனையுண்டு.” 31:6 இந்த திருவசனத்தில் வந்திருக்கும், வீணான பேச்சுக்கள் என்பதற்கு, அது இசைக்கருவிகள்தான் என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது ரளியல்லாஹு அன்ஹுஅவர்கள் கூறுகின்றார்கள்.என்னுடைய உம்மத்தில் சில கூட்டத்தினர் தோன்றுவார்கள், அவர்கள் விபச்சாரத்தையும் பாட்டையும் மதுவையும் இசைக்கருவிகளையும் ஹலால் (ஆகுமானதாக) ஆக்குவார்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரி)
மேல் கூறப்பட்ட ஆதாரத்தின் அடிப்படையில், இசை கேட்பது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டது என்பது தெளிவாகின்றது. ஆகவே மேல் கூறப்பட்ட நிபந்தனைகளுக்குட்பட்ட (தவறான கருத்தில்லாத, ஷிர்க்கில்லாத, இசை இல்லாத) பாடல்களை கேட்கலாம், அது அல்லாத பாடல்களை கேட்பது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டதாகும். அல்லாஹ் மிக நன்கறிந்தவன்.
”Jazaakallaahu khairan” : Posted by Husain, & சுவனப்பாதை மாதஇதழ்