உன் மனைவியாக வேண்டும்
உன்னை பார்த்துக் கொண்டே
இருக்க வேண்டும்
காலையும் மாலையும்
கண் இமைக்காமல்
உன்னை பார்த்துக் கொண்டே
இருக்க வேண்டும்!
உன் தேவைகள் எல்லாம்
பார்த்துப் பார்த்து
செய்ய வேண்டும்
என் தேவைகள் விடுத்து
பறந்து பறந்து
உன் தேவைகள் எல்லாம்
பார்த்துப் பார்த்து
செய்ய வேண்டும்!
உன் விருப்பங்களைத்
தேடித் தேடி
கண்டறிய வேண்டும்
என் விருப்பங்கள் மறந்து
ஓடி ஓடி
உன் விருப்பங்களைத்
தேடித் தேடி
கண்டறிய வேண்டும்!
உனக்கு பிடித்ததாய்
விரும்பி விரும்பி
சமையல் செய்ய வேண்டும்
எனக்கு பிடித்த
சமையல் நீக்கி
உனக்கு பிடித்ததாய்
விரும்பி விரும்பி
சமையல் செய்ய வேண்டும்!
உன் இன்பங்கள்
மேலும் மேலும்
பெருக வேண்டும்
அதன் மூலம்
என் இன்பங்கள்
பெருக வேண்டும்
அதைக் கண்டு
உன் இன்பங்கள்
மேலும் மேலும்
பெருக்க வேண்டும்!
உன் கவலைகள்
வேண்டி என்னில்
தாங்கிக் கொள்ள வேண்டும்
என்னையே நான் மறந்து
மன்னவன்
உன் கவலைகள்
வேண்டி என்னில்
தாங்கிக் கொள்ள வேண்டும்
வலிகளைப் போக்க வேண்டும்
என்றும் உன்
வலிகளைப் போக்க வேண்டும்
நல் மருந்தாக உன்னில்
நானே இருந்து
வலிகளைப் போக்க வேண்டும்
என்றும் உன்
வலிகளைப் போக்க வேண்டும்!
உன்னோடு சண்டை வேண்டும்
அன்பாய் தினமும்
உன்னோடு சண்டை வேண்டும்
பொய்க் கோபம் காட்டிக் கொண்டு
உன்னை தவிக்க விட
உன்னோடு சண்டை வேண்டும்
அன்பாய் தினமும்
உன்னோடு சண்டை வேண்டும்
உன்னோடு உறக்கம் வேண்டும்
உன்னை அணைத்துக் கொண்டு
உறக்கம் வேண்டும்
எனக்கு பிடித்த
உன்னில் நானும்
நெருக்கம் கொண்டு
உன்னோடு உறக்கம் வேண்டும்
உன்னை அணைத்துக் கொண்டு
உறக்கம் வேண்டும்
உன்னை என்றும்
உறவாய் நெஞ்சில்
ஏந்த வேண்டும்
உன் மகவை மடியில்
சுமந்து கொண்டே
உன்னை என்றும்
உறவாய் நெஞ்சில்
ஏந்த வேண்டும்!
இத்தனையும் நடப்பதென்றால்
நான் உந்தன்
மனைவியாக வேண்டும்
இறை நாட்டமிருந்தால்
உனக்காய் வாழ்ந்து விட-
உனக்காய் மாண்டு விட
இன்றே நான் உந்தன்
மனைவியாக வேண்டும்!
நன்றி: சிந்தனை சிறகினிலே