இனிமைச் சிறப்பு:
”காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு” என்பது போல் ஒவ்வொருவருக்கும் அவரவர் மொழி இனிமையாகவே இருக்கும்.
ஸமஸ்கிருதம்‘ என்றால் ”நன்றாகச் செய்யப்பட்டது” என்பர்.
பாரசீகத்தை ”ஷிரீன் ஸபான்” (பாகு மொழி) என்பர்.
உருதுவை ”உயிர்” என்பர்.
இந்தியை ”இதயம்” என்பர்.
தெலுங்கைத் ”தேன்” என்பர்.
தமிழை ”இனிமை” என்பர்.
ஆனால் அராபியரோ எல்லோரையும் விட ஒரு படி மேலாக ”அரசர்களின் மொழி” என்றும் ”மொழிகளின் அரசன்” என்றும் கூறிப் பெருமைப்படுவார்கள்.
அதுமட்டுமல்லாமல் தங்களுக்குத்தான் பேசத் தெரியும். மற்றவர்களுக்குப் பேசத்தெரியாது என்று வேற்றுமொழியினரை ”அஜமீ” (பேசத் தெரியாத ஊமையர்) எனக் கூறுவார்கள்.
அரபியின் இனிமைக்கு இறையருள் இலக்கியமாகத் திகழும் தித்திக்கும் தேன் மறையாம் திருமறையே போதிய சான்றாகும். குர்ஆனின் வசனங்கள் ஓதப்பட்டால் அதன் இனிமையிலே குழைந்து மெய்மறந்து கேட்டு, இஸ்லாத்தை ஏற்றோரின் எண்ணிக்கை ஏராளம். இன்றுகூட வானொலியிலும், தொலைக் காட்சியிலும் ஒலி ஒளிபரப்பப்படும் திருமறையின் ஓசையைக் கேட்டு மாற்று வேதத்தினரும் உள்ளுருகி மெய்மறந்து விடுவதைக் காண்கிறோம்.’
‘திருக்குர்ஆன் ஓதப்படுவதை நான் கேட்கும்போதெல்லாம் உயரிய இசையை கேட்கும் உணர்ச்சியைப் பெறுகிறேன். அந்த இசையின் குழைவினூடே முரசொலிப்பது போன்ற ஒலியும் இடைவிடாது கேட்கிறது. இறுதியில் கவனித்தால் அது என் இதயத்தின் (துடிப்பால் எழும்) ஒலியாகவே இருப்பதைக் காண்கிறேன்” என்று கூறுகிறார் ஓர் அறிஞர். அண்மையில் இஸ்லாத்தை ஏற்ற இந்து நண்பர் ஒருவர், ”பக்கத்து வீட்டில் அன்றாடம் அதிகாலையில் குர்ஆனை ஓதும் சிறுமி ஒருத்தியின் இனிய குரலோசை என் இரத்த நாளங்களில் மின் சக்தி போல் ஊடுருவி என் இதயத்தையே ஈர்த்ததோடல்லாமல் குர்ஆனைக் கற்கத் தூண்டி இறுதியில் இஸ்லாத்தையே ஏற்குமாறு செய்தது” என்கிறார்!
உண்மைதான். அரபு மொழியின் ஓசை நயம், தேனினுமினிய இனிமை, மனிதனின் உள்ள உணர்சிசிகளை உன்னதமான பண்பாட்டிற்காகத் தட்டி எழுப்புவதாகவே அமைந்துள்ளது. அதன் இனிமைக்கு வேறு எம்மொழியி லுமில்லாச் சிறப்பெழுத்துக்கள் இம்மொழியில் அமைந்திருப்பதை ஒரு காரணமாகக் கூறலாம்.
புதுமைச்சிறப்பு:
பண்பாடமைந்த நாகரிக மொழிகள் பெற்றிருக்க வேண்டிய புதுமைகளையெல்லாம் இம்மொழியும் பெற்றிருக்கின்றது. பரந்து விரிந்த பல கருத்துக்களைச் சொல்லப் பயன்படுகின்ற மொழியே சிறந்ததெனக் கூறுவர் மொழி வல்லார்.
ஒரு வினைச்சொல் அது தன்னிலையா முன்னிலையா படர்க்கையா என்பதையும் ஆண்பாலா பெண்பாலா என்பதையும் உயர்திணையா அஃறிணையா என்பதையும் ஒரே சந்தர்ப்பத்தில் காட்டுகிறது. அதோடு காலத்தையும் தெரிவிக்கிறது. இச்சிறப்பை பிறமொழிகளில் காண்பதரிது.
”ளரப” என்னும் வினைச் சொல்லுக்கு ”அடித்தான்” என்பது பொருளாகும். அடித்தான் என்னும் வினைச் சொல் நிகழ்ந்த செயல் அடித்தான் என்பதையும் அச்செயலைச் செய்தவன் ஆண் மகன் என்பதையும்இ அவன் ஒருவனே என்பதையும்இ அச்செயலில் காலம் இறந்த காலம் என்பதையும் விரிவாகக் காட்டுகின்றது. ”ளரப” என்னும் வினைச் சொல் இவ்வைந்து கருத்துக்களையும் மூன்றெழுத்துள்ள ஒரே சொல்லில் அமைத்துக் காட்டுகின்றது. ஆங்கிலம் போன்ற மொழிகளில் ”HV பெஅட்” என்பதாக இரு சொற்களாலேயே அக்கருத்தை வெளியிட முடியும்.
சொற் சிறப்பு:
ஒரு மொழி வளமிக்கதாயின் அது சொல் வளம் பெற்றிருத்தல் வேண்டும். இப்பண்பால் இம்மொழி பிற மொழிக் கலப்பால் தூய்மை குன்றாமல் தனித்தியங்கும் ஆற்றல் பெற்று பொலிவோடு விளங்குகிறது. உயர்ந்த நாகரீகமும், சிறந்த பண்பாடும், கூரிய அறிவும் பெற்ற மக்களே அத்தகைய மொழியினைப் பெற்றிருக்க முடியும்.
”சொல்வளம்” என்றால் ஒரு பெருளுக்குப்பல சொற்கள் இருப்பது மட்டுமல்ல, எக்கருத்தையும் இலகுவாக எடுததுரைக்கும் வகையில் அதில் சொற்கள் நிரம்பியிருப்பதுவேயாகும்.
காலத்தைக் காட்டும் சந்திரனைக் குறிப்பதற்கு அதன் வளர்ச்சியைப் பொறுத்து ஹிலால், கமர், பத்ரு போன்ற சொற்களையும், ஐவகை விரல்களைக் காட்டுவதற்கு, கின்ஸர், பின்ஸர், உஸ்தா, ஸப்பாபத், இப்ஹாம் போன்ற ஏராளமான சொற்களையும் இம்மொழியில் பரவலாக காண முடிகிறது.
”தேன்” என்னும் ஒரு பொருளுக்கு 40 சொற்களையும், பாம்பு என்பதற்கு 200 சொற்களும், சிங்கம் என்பதற்கு 630 சொற்களும், வாள் என்பதற்கு 1000 சொற்களும், ஒட்டகை என்பதற்கு 1000 சொற்களும் மலிந்து காணப்படுகின்றன. இத்தகைய சொல்வளத்தின் காரணமாக அரபியர்கள் கவிதைகளில் சொற்சிலம்பம் ஆடுகிறார்கள்.
இம்மொழியில் பல பொருள் குறிக்கும் ஒரு சொல் ஏராளம் உண்டு. அவற்றுள் ”லரப” என்னும் ஒரே சொல்லுக்கு 26 பொருள்களும், ”ஐன்” என்னும் சொல்லுக்கு 30 பொருள்களும் அமைந்திருப்பதைக் காணலாம்.இதே மொழியில் பல சொற்களால் அமைத்துக்காட்டும் பொருள்களைச் சுட்ட ஒரே எழுத்துச் சொற்களையும் காணமுடிகிறது.
ரொக்க நாணயத்திற்கு ”ஐன்” என்ற எழுத்தையும், மேகத்துக்கு ”ஙைன்” என்ற எழுத்தையும் மீனுக்கு ”நூன்” என்ற எழுத்தையும் மலைக்கு ”காஃப்” என்ற எழுத்தையும் அரேபியர்கள் வழங்கி வருவதையும் உவமையாகக் கொள்ளலம். நுண்ணிய பல கருத்துக்களைச் சில எழுத்துக்களின் மூலம் தெரிவிப்பதை வேறு மொழிகளில் காண்பதரிது.
ஒரே ஒரு வினைச்சொல் முன்னூற்று ஐம்பத்துக்கு மேற்பட்ட வகைகளாகத் திரிந்து வருவது இம்மொழியின் சிறப்புக்குச் சிறந்த ஓர் எடுத்துக்காட்டாகும். ஆங்கிலத்தில் ”Go” என்பதை இறந்த காலத்தில் காட்ட,”Went” என்று மாற்ற வேண்டும். இந்நிலை அரபு மொழியில் இல்லை. ”யத்ஹபு”- போகிறான் என்பதில் முதல் எழுத்தை மாற்றிவிட்டால் ”தஹப”- போனான் என்ற இறந்த காலமாக மாறிவிடுகிறது.
அரபு மொழி, பிற மொழிகளின் ஆதிக்கத்தால் தனித்தன்மை இழந்துவிடாமல் பிற மொழியிலுள்ள புதுச் சொற்களுக்குப் பொருத்தமான தம் மொழிச் சொற்களை ஆக்கி அளிக்கின்றது. அவ்வாறு இல்லையெனில் தம் இயல்புக்கொப்பப் பிற மொழிப் பெயர்களை மாற்றி அமைத்து வழங்கி வருகின்றது.
அறிவியற்கலையானது ஓங்கி வளர்ந்துள்ள இக்காலத்தில் கூட இம்மொழி இப்பழம்பண்பினைக் காத்தே வருகின்றது. இதோ சில சான்றுகள்:
ஆங்கிலம் அரபி
1.Aeroplane – தய்யாரா
2.Rocket- ஸாறூக்
3.Train- கிதார்
4.Radio- மித்யாஉ
5.Telephone- ஹாத்திப்
6.Telegramme- பர்க்கியய்யா
7.Photograph- ஸுரத்துஷ் ஷம்ஸிய்யா
8.Cinema- ஸுரத்துல் முதஹர்ரிகா
9.Foot Ball- குரத்துல் கதம்
10.Fan- மிர்வஹா
11.Harmonium- முத்ரிப்
இவற்றைப் போல எல்லாத் துறைகளிலும் புதுச் சொற்கள் அமைக்கப்படுகின்றன. தேவையில்லா இடங்களில் தம் இயல்புக்கொப்ப அவை திருத்தியும் உருவாக்கப்படுகின்றன.
1.ஸந்தல்(சநதனம் ) 2.தன்பூல் (தாம்பூலம்) 3.ஸன்ஜபீல் (இஞ்சி) 4.கரன்புல் (கிராம்பு) என்பன அவற்றின் சான்றுகளாகும்.
ஒரு வேர்ச் சொல்லிலிருந்து பல கிளைச் சொற்கள் அமைப்பதும் இம்மொழியின் சொல்வளத்திறகு ஓர் எடுத்துக்காட்டாகும்.
”கதப” (எழுதினான்) என்னும் வேரிலிருந்து ”கிதாப்” (நூல் : எழுதப்பட்டது) ”மக்தப்” (பாடசாலை: எழுதப்பயிலுமிடம்) ”காத்திப்” (எழுத்தாளன்) ”முக்திப்” (எழுதக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்) ”முகாதபத்” (கடிதப் போக்குவரத்து) ”மக்தபத்”(நூலகம்: எழுதப்பட்ட நூல்களை வைக்குமிடம்) போன்ற எத்தனையோ சொற்கள் பிறக்கக் காண்கிறோம்.
இத்தகைய சொல் வளத்தாலும் சொல்லாட்சித் திறத்தாலும், இம்மொழியின் சொற்கள் பல ஆங்கில அகராதிகளில் இடம் பெற்றுள்ளன.
1.அல்ஜிப்ரா (அல்ஜிப்று)
2.அல்கமி (அல்கீமியா)
3.காட்டன் (குத்னு )
4.ஸைபர்(ஸிப்று)
5.ஆல்கஹால் (அல் குஹ்லு)
6.அட்மிரல் (அமீருல் பஹ்ர்)
7.ஜிப்ரால்டர் (ஜபலுத்தாரிக்)
8.டேமரின்ட் (தமருல் ஹிந்த்) போன்ற அரபிச் சொற்கள் அப்படியோ, அல்லது சிறிது திரிந்தோ ஆங்கில அகராதியில் இடம் பெற்று உலகப் பொதுச் சொற்களாய் மாறிவிட்டன்.
அதுபோல தமிழ் அகராதிகளில்
1.அசல்(அஸ்லு)
2.அமுல்(அமல்)
3.ஆஜர்(ஹாளிர்)
4.தாசில்தார் (தஹ்ஸீல்தார்)
5.ஜில்லா(ளில்ஆ) 6.தாலுகா (தஅல்லுகா)
7.ரத்து (ரத்து)
8.தாக்கீது (தஃகீது)
9.முன்ஷிப்(முன்ஸிஃப்) போன்ற எத்தனையோ சொற்களும் இடம் பெற்று, பொதுச் சொற்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.
பிற மொழிகளை விட உலகில் எல்லாச் சிறப்புகளும் நிறைந்த உலகப் பெரு மொழியாக அகிலத்தைக் கவர்ந்த அரபு மொழி திகழ்வதைக் காணலாம்.
”Jazaakallaahu khairan” http://albaqavi.com/home/?p=166