Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

நல்லதொரு குடும்பம் (2)

Posted on December 8, 2009 by admin

MUST READ

அப்துல் அஜீஸ் பாகவி

முஸ்லிம் குடும்பத்தலைவர்களுக்கு ஹஜ்ஜுப் பெருநாள் தருகிற அழுத்தமான செய்தி இது. ஏதோ குடும்பம் அமைந்து விட்டது எப்படியாவது நாமும் வாழ்ந்து நமது குடும்பத்தையும் மகிழ்சியாக வாழவைத் விட்டு போய்ச் சேருவோம் என்று நினைப்பவர்கள் தங்களது வாழ்க்கையை மதிக்கத் தெரியாதவர்கள். தமது குடும்பத்தின் மரியாதையை பற்றி அக்கறையற்றவர்கள் என்று பொருள். ஒரு முஸ்லிம் குடும்பத்தலைவர் இப்படி இருக்கமாட்டார். அவரிடம் குடும்பத்தின் மகிழ்சி குறித்த அக்கறை இருக்கிற அளவு இறைவனுக்கு கட்டுப்படுதல் குறித்து தெளிவும் உறுதிப்பாடு இருக்கும்

ஒரு குடும்பத்தலைவனிடத்தில் இத்தகைய உறுதி எத்தனை சதவீதம் இருக்கிறதோ அந்த அளவு அவரது குடும்பம் நல்ல குடும்பமாக இருக்கும். அந்த குடும்பத்தின் பயணப் பாதையில் இடையில் சில சிரமங்கள் இடறினாலும் கூட சுகமான ஒரு எதிர்காலம் கட்டாயம் கிடைக்கும். வாழும் சமூகத்தில் அந்தக் குடும்பம் ஒரு வெளிச்சமான இடத்தை பெரும்.

ஒரு குடும்பத்தலைவனிம் உறுதியும் கண்டிப்பும் வெளிப்படையாகவும் பாசம் அவனது நெஞ்சுக்கள்ளேயும் இருக்க வேண்டும். ஒரு லட்சியக் குடும் பத்தை வழி நடத்த அது உதவும்.

நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் உற்தியும் கண்டிப்பும் வெளிப்படையாக இருந்தது.பாசம் மனதுக்குள் இருந்த்து. அதனாலேயே மனைவி ஹாஜரா (அலைஹிஸ்ஸலாம்) அம்மையாரையும் குழந்தை இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் பாலைவனத்தில் விட்டு விட்டு நகர்ந்த்தும் அந்தப் பாசம் அவரை இறைவன நோக்கி கையேந்த வைத்தது.

எங்கள் இறைவனே! நான் எனது குடும்பத்தை விவசாயமற்ற ஒரு பள்ளத்தாக்கில், கண்ணியம் மிகுந்த உன் வீட்டின் அருகே வசித்திருக்கச் செய்து விட்டேன். வணக்க வழிபாட்டை நிலை நிறுத்துவதற்காக அவ்வாறு செய்தேன். மக்களின் ஒரு சாராரின் இதயத்தை அவர்களை நோக்கி நீ திருப்பி விடு! கனி வகைகளை அவர்களுக்கு உணவாக வழங்குவாயாக! அவர்கள் உனக்கு நன்றி செலுத்துவார்கள். (அல்குர் ஆன் 14:37)

பிரம்மிப்பூட்டும் வகையில் இறைவன் அவரது பிரார்த்தனை அங்கீகரித்தான். பாலை வனத்தில் விடப்பட்ட அவரது அந்தக் குடும்பம் மாத்திரமல்ல ஆயிரமாயிரம் வருடங்களுக்கு அப்பாலும் அங்கு வந்து சேர்கிற லட்சக்கணக்கான குடும்பத்தினரை பலைவனத்தில் தாகத்தல் தவித்துப் போய்விடத வாரும், பசியால் வாடிப் போய்விடாத வாரும் பாதுகாத்து வருகிறான். ஆண்டு தோரும் லட்ச்க்கணக்கானோரை அந்த இடத்தை நோக்கி திருப்பி விடுகிறான்.

ஒரு குடும்பத் தலைவனின் உன்னதமான லட்சியமும் அந்த லட்சியத்தை முன்னெடுத்துச் செல்வதில் அவர் காட்டுகிற உறுதிப்பாடும் அவர் வென்றெடுக்கிற சோதனைகளும் அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் எத்தகைய இரவா புகழைத் தேடித்தரக் கூடியது என்படற்கு இபுறாகீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களது குடும்பம் மிகச்சிறந்த உதாரணம்.

மனைவியை துணைவி என்றும் சொல்வதுண்டு. காதல் ஒருவனை கைப்பிடித்து அவன் காரியம் யாவிலும் கைகொடுத்து அவள் வாழ்வதால் இந்தப் பெயர் வந்தது. இந்தப் பெயர் நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் இரண்டாவது மனைவி, அன்னை ஹாஜரா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு பொருந்துவது போல மற்றெவருக்கும் பொருந்துவது அரிது. தனது கணவரின் எண்ணவோட்டத்தை மிகச் சரியாக புரிந்து கொண்டு அதற்கேற்ப வாழ்ந்த மிக அற்புதமான குடும்பத் தலைவியாக அன்னை ஹாஜரா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் திகழ்கிறார்கள்.

ஆள் ஆரவாரம்ற்ற பாலை வனத்தில் கொண்டு வந்து, பச்சைக் குழந்தையோடு தனியே விட்டு விட்டு, வந்த வழியே புறப்படுகிற கணவரைப் பார்த்து இது இறைவனின் திட்டமா என்று கேட்ட ஒரு கேள்வியில் ஹாஜர அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அறிவாற்றல், பக்தி, துணிச்சல், தெளிவு, உடன்பாடு, ஆகிய அனைது அம்சங்களும் வெளிப்பட்டன.மனைவி என்றால் மிக அதிகமாக பேசுபவர் என்பது தான் மனித அகராதி சொல்லுகிற பொருள்.ஆனால் அன்னை ஹாஜரா அலைஹிஸ்ஸலாமோ மிக குறைவாக பேசிய அந்த ஒரு கேள்வியில் மனித வரலாற்றில் மிக ஆழமாக தனது தடத்தை பதிவு செய்து விட்டார்கள்.அந்த அன்னையின் மொத்தப் பண்புகளும் அந்த ஒரு கேள்வியில் உருவம் பெற்றுவிட்டது.

இறைபக்தியும் அறிவும் துணிச்சலும் ஒரு சிறந்த குடும்பத்த்லைவிக்கான இலக்கணங்கள் என்ற செய்தியையும் ஹஜ்ஜுப் பெருநாள் சுமந்து வருகிறது. அன்னை ஹாஜரா அம்மையாரைப் பற்றிய நினைவுகள் இந்தபப் பாடத்தை தருகின்றன. முஸ்லிம் குடும்பத்தலைவிகள் இந்த மூன்று அம்சங்களிலும் தங்களது தரத்தை பரிசீலனை செய்து கொண்டால் இன்றைய முஸ்லிம் குடும்பங்களில் இருக்கிற ஏராளமான சீர்கேடுகளை கலைந்து விட முடியும்.

உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல. அவை இறைவன் உங்களுக்கு வழங்கிய கொடைகள் என தத்துவ அறிஞர்கள் கூறுவதுண்டு. தனக்கு கொடையாகத் தருமாறு இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் இறைவனிடம் கேட்டுப் பெற்ற பிள்ளை தான் ஹஜ்ரத் இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.அவர் தான் இந்தப் புனிதக் குடும்பத்தின் மூன்றாவது பிரஜை.

உனக்காக நான் என் தலையையே தருவேன் என்று பேசுபவர்களப் பார்த்திருப்போம். பத்து ரூபாய் கடன் கேட்டு விட்டால் பிறகு தலையையே காட்டமாட்டார்கள். செந்தப் பிள்ளகள் கூட அப்படி அமைந்து விடுவதுண்டு. காலில் தூசி படாதவாறு தோளில் சுமந்து சென்ற தந்தையை அவர் கண்ணில் பூ விழுந்திருக்க்கிற போது அவரது விரல் பிடித்துச் செல்லத் தயங்குகிற காட்சிககள் ஒன்றும் அரிதானதல்ல.

ஆனால் நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களது அன்புப் பிள்ளையோ தந்தையின் கனவை – பெற்ற பிள்ளையையே அறுத்துப் பலியிடும் கனவை – நனவாக்குவதற்காக உண்மையிலேயே தலையை தரிக்கக் கொடுத்தார். ”தந்தையே! உங்களது கனவு மெய்ப்பட நான் ஒத்துழைப்பேன். அறுங்கள்! நான் குப்புறப் படுத்துக் கொள்கிறேன்” என்றார். (அல்குர் ஆன் :37:102,1030)

ஒரு நல்ல மகனது இலட்சணத்தை இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வழியாக ஹஜ்ஜுப் பெருநாள் சமுதாயத்திற்கு அடையாளப் படுத்துகிறது. பெற்றோரை புரிந்து கொண்டு அவர்களுக்கு கட்டுபடுவதும் அவர்களது பணிகளில் அவர்களுக்குத் துணை நிற்பதும் அவர்களது பெருமையை பாதுகாக்க தன்னால் இயன்ற அனைத்தையும் செய்வதே நல்ல குழந்தையின் இலக்கணம் என்பதை தனது ஒவ்வொரு செயலிலும் நபி இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வெளிப்படுத்தினார்கள்.

இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கட்டுப்பாடு மெச்சப்படுகிற அதே நேரத்தில் அவரது அம்மாவின் வளர்ப்பும் கவனிக்கப் பட வேண்டும். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதை தாயின் வளர்ப்புதான் தனயனிடம் ஏற்படுத்தும். ஹாஜரா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வளர்ப்பின் வாலிப்பான அனுபவமாகவே இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் திகழ்கிறார்கள். தந்தை ஒன்றை சொல்லும் போது, அது கிடக்குது போ! நீ போய் உன் வேலையை பாரு! என்று சொல்லுகிற அனனையாக ஹாஜரா அலைஹிஸ்ஸலாம் இருக்கவில்லை என்பதையே வரலாறு காட்டுகிறது.

ஏதாவது நல்ல குழந்தைகளை பார்த்துவிட்டால் தாய்க்குலம் பெருமுற ஒரு வார்த்தையுண்டு. இது வல்லவோ பிள்ளை? எனக்கும் இருக்கிறதே நான்கு நாரப்பிள்ளைகள்!

இப்படிப் பேசிவோர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரிக்கைய ஒரு முறை யோசித்து விட்டுப் பேசுவது நல்லது. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்

எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான மார்க்கத்தில் தான் பிறக்கின்றன.பெற்றோர்கள் தாம் அவற்றை யூதர்களாக்வோ கிருத்துவர்களாகவோ திருப்பிவிடுகிறார்கள்.” (ஸஹீஹுல் புகாரி 1385)

 ஒரு பெற்றோரின் பிரதான கடமை தங்களது பிள்ளைகள் தங்களால் சீர்கெட்டுப் போய்விடாதவாறு பார்த்துக் கொள்வது என்ற எச்சரிக்கையை இது தருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஹஜ்ஜுப் பெருநாள் ஒரு நல்ல குடும்பத்தின் வரலற்றை நினவூட்டி உலக மக்கள் அனைவரும் தமது குடும்பத்தை சீர்தூக்கிப் பார்த்துக கொள்ளும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. குடும்பத்தலைவனிடத்தில் உறுதி, குடும்பத்தலவியிடத்தில் தெளிவு, குழந்தைகளிடம் கட்டுப்பாடு என்ற மூன்று அம்சங்களும் ஒரு நல்ல குடும்பத்திற்கான இலக்கணங்கள் என்பதை ஹஜ்ஜுப் பெருநாள் தனக்கே உரிய சிலிர்ப்போடு சொல்லிச் சொல்கிறது.

ஹஜ்ஜுப் பெருநாள் நினைவூட்டுகிற இபுறாகீம் நபியின் குடும்பத்தின் வரலாற்றை படித்து விட்டு, எனக்கும் இப்படி ஒரு குடும்பம் அமையாதா? என்று ஏக்கப் பெருமூச்சு விடுபவர்களுக்கும் ஒரு வழியை ஹஜ்ஜுப் பெருநாள் காட்டுகிறது. அல்லாஹ்வை முன்னிருத்துவோருக்கு, அவனையே பெரிதென்று நினப்போருக்கு, நல்ல லட்சியமும் அதில் உறுதிப்பாடும் உள்ளோருக்கு நல்ல குடும்பத்தை அல்லாஹ் அமைத்துத் தருவான்.

உங்களுக்கு?

”Jazaakallaahu khairan” சிந்தனைச் சரம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 29 = 39

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb