Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

நல்லதொரு குடும்பம் (1)

Posted on December 8, 2009 by admin

 MUST READ

அப்துல் அஜீஸ் பாகவி

[ மனைவியை துணைவி என்றும் சொல்வதுண்டு. காதல் ஒருவனை கைப்பிடித்து அவன் காரியம் யாவிலும் கைகொடுத்து அவள் வாழ்வதால் இந்தப் பெயர் வந்தது. இந்தப் பெயர் நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் இரண்டாவது மனைவி, அன்னை ஹாஜரா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு பொருந்துவது போல மற்றெவருக்கும் பொருந்துவது அரிது.

தனது கணவரின் எண்ணவோட்டத்தை மிகச் சரியாக புரிந்து கொண்டு அதற்கேற்ப வாழ்ந்த மிக அற்புதமான குடும்பத் தலைவியாக அன்னை ஹாஜரா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் திகழ்கிறார்கள். ஆள் ஆரவாரம்ற்ற பாலை வனத்தில் கொண்டு வந்து, பச்சைக் குழந்தையோடு தனியே விட்டு விட்டு, வந்த வழியே புறப்படுகிற கணவரைப் பார்த்து ‘இது இறைவனின் திட்டமா?’ என்று கேட்ட ஒரு கேள்வியில் ஹாஜர அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அறிவாற்றல், பக்தி, துணிச்சல், தெளிவு, உடன்பாடு, ஆகிய அனைது அம்சங்களும் வெளிப்பட்டன.

மனைவி என்றால் மிக அதிகமாக பேசுபவர் என்பது தான் மனித அகராதி சொல்லுகிற பொருள்.ஆனால் அன்னை ஹாஜரா அலைஹிஸ்ஸலாமோ மிக குறைவாக பேசிய அந்த ஒரு கேள்வியில் மனித வரலாற்றில் மிக ஆழமாக தனது தடத்தை பதிவு செய்து விட்டார்கள். அந்த அன்னையின் மொத்தப் பண்புகளும் அந்த ஒரு கேள்வியில் உருவம் பெற்றுவிட்டது.]

ஹஜ்ஜுப் பெருநாள் முடிந்துவிட்டால் கூட அதன் அடையாளங்கள் சட்டென்று மறைந்து விடுவதில்லை. மலர் வாடினாலும் மணம் வீசுவது போல அதன் வாசனை தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள் என்ற திருக்குர் ஆனின் 2.203 வசனத்திற்கு அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தருகிற விளக்கத்தின்படி துல் ஹஜ் 10 ம் நாளாகிய பெருநாள் தினமும் அதை தொடர்ந்து வருகிற மூன்று நாட்களும் அய்யாமுத்தஷ்ரீக் எனப்படுகிறது. அந்நாட்களில், கூட்டுத்தொழுகைகளுக்குப் பின் தொடர்ந்து ஓதப்படிகிற தக்பீரின் ஒலியால் முஸ்லிம் மஹல்லாக்களில் உற்சாகமும் பக்திப்பரவசமும் படர்கிறது.

அது மட்டுமல்ல முஸ்லிம்களின் வீடுகள் தோரும் குர்பானி இறைச்சி சுக்க வைப்பதற்காக தோரணங்கட்டி தொங்கவிடப் பட்டிருக்கும். அய்யாமுத்த்ஷ்ரீக் என்ற வார்த்தைக்கான பொருளே குர்பானி இறைச்சியை உலர வைக்கிற நாட்கள் என்பது தான். அந்த காய்ந்த இறைச்சி அடுத்த காலாண்டுகளுக்காவது ஹஜ்ஜுப் பெருநாளை நினைவு படுத்திக் கொண்டிருக்கும்.சில பகுதிகளில் ஹஜ்ஜுப் பெருநாளை பெரிய பெருநாள் என்றும் குறிப்பிடுவதுண்டு. அது எதனால் என்பது ஒரு ஆராய்சிக்குரிய விசயம் தான். ஒரு நாளோடு முடியாமல் பல நாட்களுக்கு தொடரும் அதன் அடையாளங்களாலா? அல்லது பெருந்தகை ஹஜ்ரத் இபுராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நினைவு கூறப்படுகிற நாள் என்பதாலா? என்ற கேள்விகள் தொடர்ந்தால் அதில் பல சுவையான தகவல்கள் கிடைக்கலாம். எப்படி இருப்பினும் ஹஜ்ஜுப் பெருநாள் அந்தப் பெயருக்கு பொருத்தமான நாள்தான்.

ஈதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாளை விட ஈதுல் அள்ஹா எனும் ஹஜ்ஜுப் பெருநாள் தருகிற செய்திகளும் அது தருகிற சிலிர்ப்பூட்டும் உணர்வுகளும் பெரியது தான். பெரியது மாத்திரம் அல்ல, ஏராளமானதும் கூட. ஏராளமானது மாத்திரம் அல்ல தொடர்ச்சியானதும் கூட.

இன்றிலிருந்து சுமார் 4167 வருடங்களுக்கு முன்னாள் இராக்கிலிருந்து புலம் பெயர்ந்து சிரியாவிலும் பின்னர் மக்காவிலுமாக வாழ்ந்த ஒரு சிறு குடும்பத்தின் கதையை பன்னூறு தலைமுறைகளுக்கு அப்பாலும் வரலாற்றின் வேகமும் விசித்திரங்களும் நிறைந்த ஓட்டங்களை வென்று வாழும் படி செய்து கொண்டிருப்பதனால் சந்தேகத்திற்கிடமின்றி ஹஜ்ஜுப் பெருநாள் பெரிய பெருநாள் தான்.

அந்த்ச் சிறு குடும்பம் ஹஜ்ரத் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம், அவரது மனைவி ஹாஜரா அலைஹிஸ்ஸலாம், குழ்ந்தை இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் ஆகிய மூவரைக் கொண்டது. இந்தக் குடும்பத்தில் நடந்த எதேச்சையான விசயங்களும் அது சந்தித்த சிரமங்களும் வாழையடி வாழையாய் மனித சமூகம் அனுபவிக்க வேண்டிய கடமைகளாக மாறின.

ஒரு சிறு குடும்பத்தின் வாழ்க்கை தலைமுறைகளைத் தாண்டி நிலைக்கவும் பின்பற்றப்படவும் காரணமாக அமைந்த விஷய்ங்களை மிகுந்த அக்கறையோடு கவனிக்க மனித சமூகம் கடமைப் பட்டிருக்கிறது.

இன்றைய காலகட்டத்தில் பெரும் பாலோருக்கு சிறு குடும்பம் தான். ஆனால் அச்சிறு குடும்பத்தின் தேவைகளுக்காகவும் சுக வாழ்வுக்காகவும் மனித சமூகம் இழக்கிற மனிதத்தன்மையும் நிகழ்கிற கொடுமைகளும் அதிகம். மிக அதிகம்.

ஒரு இன்ஷியல் மாற்றத்திற்காக வரும் மாணவரிடம் 50 ரூபாய் வசூலிக்கிற சாதாரண குமாஸ்தாவிலிருந்து பாராளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்காக 5 லட்சம் வசூலிக்கிற மக்கள் பிரதிநிதி வரை லஞ்சம் வாங்குகிறார்கள். அது எதற்காக என்று கேட்டுப்பார்த்தால் எல்லாம் குடும்பத்திற்காகத்தான் என்று பதில் வரும்.

குடும்பத்தின் சுக வாழ்வுக்காகவே தேயிலையிலிருந்து தேன் வரை ஒவ்வொன்றிலும் கலப்படம் அல்லது எடை குறைவு செய்கிறார் வியாபாரி.

கொலை கொள்ளை போன்ற கொடுஞ் செயல்கள் செய்கிற குண்டர்களை விசாரித்தால் குடும்பத்தை காப்பாற்று வதற்காகவே இத்த்னையும் செய்வதாக கூறுகிறார்கள்.

ஆபாசமாக நடிக்கிற நடிகைகளை அல்லது மோசமான நடத்தை கொண்ட பெண்களிடம் கேட்டால் குடும்த்திற்காகவே இவ்வாறு வாழ்வதாக சத்தியம் செய்வார்கள்.

தேசத்தை கட்டிக் கொடுக்கிற ஈனச் செய்லில் ஈடுபடுபவர்களை பிடித்து விசாரித்தால் குடும்பத்தின் நன்மைக்காவே இந்த கொடுமையை செய்ய நேர்ந்தது என்று புலம்புவார்கள்.

அவர்களது குடும்பம் எவ்வளவு பெரிது என்று விசாரித்தால் எண்ணிக்கை 5 விரல்களை தாண்டாது. தனது சிறு குடும்பத்தின் தேவையை பெரிது என்று கருதுபவர்கள் பல சமயத்திலும் சமுதாயத்திற்கு மிகப் பெரும் தீமைகள இழைத்து விடுகிறார்கள்.

அத்தோடு அவர்களது மனிதப்பண்பையும், கண்ணியத்தையும், சுய கவுரவத்தையும் கூட இழந்து விடுகிறார்கள்.

இதற்கு அவர்களது குடும்பத்தினரும் உடந்தையாகவே உள்ளனர். அல்லது கண்டுகொள்வதில்லை.

குடும்ப வாழ்வில் நீதி, தர்மம், சுய மரியாதை ஆகிய பண்புகளை கவனத்தில் கொள்கிற மனைவி அல்லது குழ்ந்தைகளின் எண்ணிக்கையும் குறைவாக்வே இருக்கிறது.

கலீபா உமர் ரலியல்லாஹு அன்ஹு காலத்தில் நடந்த்தாக ஒரு செய்தி சொல்லப்படுவதுண்டு. ஒரு பால் வியாபாரியின் வீட்டில் ஒரு உரையாடல் நடக்கிறது. பாலில் தண்ணீரை கலக்குமாறு அந்த வீட்டின் தலைவி கூறுகிறார். அவர்களது மகளோ அதை மறுத்து, அம்மா கலீபா உமர் அவர்களுக்கு விசயம் தெரிந்தால் கடுமையாக கோபித்துக் கொள்வார்கள் கலப்படம் செய்யாதே என்கிறாள். உமர் இப்போது நம்மை பார்த்துக் கொண்டா இருக்கிறார்? என்று தாய் கேள்வி கேட்க, அம்மா உமர் பார்க்காவிட்டாலும், நம்முடைய இறைவன் பார்த்துக் கொண்டல்லவா இருக்கிறான் என்று மகள் சொன்னாராம்.

இப்படி ஒரு இல்லம் வரலாற்று பக்கங்களில் மட்டுமே வாசிக்கக் கிடைடக்கிறது. இன்றைய வாழ்வியல் போங்கிலோ, எப்படியாவது சம்பாதித்துக் கொடு என்று கேட்கிற மனைவி, என்ன செய்தாவது வசதிகளை செய்து கொடு என்று கேட்கிற பிள்ளைகள் இருக்கிற போது ஒரு சிறு குடும்பமே பெரும் சமுதாயச் சீரழிவிற்கு போதுமானதாக இருக்கிறது. கும்பகோணத்தில் ஒரு பள்ளிக் கூடத்தில் நூற்றுக் கணக்கான குழ்ந்தைகள் எரிந்து சாம்பலனதின் பின்னணியில் ஏதோ ஒரு அதிகாரி லஞ்சம் பெற்றுக் கொண்டு கொடுத்த அனுமதிதான் காரணம் என்பதை அறியும் போது ஒரு குடும்பத்தின் மதிப்பீடற்ற வாழ்க்கை காரணமாக நிகழக்கூடிய ஆபத்தின் கனபரிமாணத்தை உணர முடியும்.

இந்த சூழ்நிலையில் குடும்பத்திற்காக தனது உயர்தரமான பண்புகளை விட்டுக் கொடுக்காத இலட்சியத் தந்தையாக ஹஜ்ரத் இப்றாகீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் திகழ்ந்த வரலாற்றை ஹஜ்ஜுப் பெருநாள் மிக அழுத்தமாக நினைவூட்டுகிறது. இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களது குடும்ப வாழ்வு ஒரு திட்டமிட்டநோக்கில் அமைந்த்தாகவும் உயர்ந்த எதிர்பார்பை கொண்டதாகவும் இருந்தது.இறைவா! என்னையும் என்னுடைய குடும்பத்தையும் வணக்க வழிபாடுகளை நிலை நிறுத்துபவர்களக ஆக்கு! (அல்கு ஆன் 14:40) என்ற அவரது பிரார்த்தனை அவரது வாழ்கையின் இலட்சியத்தை எடுத்துக் கூறுகிறது என்றால், ”இறவனே! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக. மேலும், நல்லவர்களுடன் என்னைச் சேர்த்து வைப்பாயாக! இன்னும், பின் வரும் மக்களில் எனக்கு நீ நற்பெயரை எற்படுத்துவாயாக! (26:84,) என்ற அவரது பிரார்த்தனை அவரது குடும்பம் பிற்கால சமுதாயம் போற்றும் வண்ணம் புகழ்பூத்ததாக விளங்க வேண்டும் என்ற உன்னதமான எதிர்பார்ப்பை புலப்படுத்துகிறது.

ஒரு பார்வைக்கு ஒரு தந்தையாக அவரது சில நடவடிக்ககள் கருணைக் குறைவானதாக, நெகிழ்சி அற்றதாக தோன்றினாலும் கூட அது புறத்தோற்றமே தவிர எதார்த்தமல்ல. ஒரு இலட்சிய வேகம் கொண்ட மனிதரின் உறுதியின் கடுமை சில வேளைகளில் அவரது நடவடிக்கயில் வெளிப்படும். அந்த நடவடிக்கையை அந்த பின்புலத்தோடுதான் மதிப்பிட வேண்டும். ஒரு திரட்சியான வீரன் அவனது மனைவியை ஆசையோடு அணைக்கையில் சில வேளைகளில் அது அவளை நோகச் செய்யக் கூடும். ஆனால் அந்தக்கடுமை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படது அவனது ஆசைதான் கவமிக்கப் படும். அது போலவே இபுறாகீம் அலை அவர்களின் கடுமயான நடவடிக்கை களை அவரது கொள்கை உறுதிப்பாட்டின் பின்னணியில் தான் கவனிக்க வேண்டும். ஒரு இறைவனை உணர்ந்து கொண்ட பிறகு, அந்த இறைவனுக்கு கட்டுப்படுகையில் ஏற்படுகிற எந்தச் சிரமமும் சுகமானதாக்வும் நன்மையானதாக்வும் மாறுவதை அனுபவித்து அறிந்த பிறகு ஒரு தெளிவான மனிதரின் செயல்பாடுகள் இப்படித்தான் இருக்க முடியும். இவ்வாரன்றி வேறெப்படி இருக்க முடியும்?

ஹாஜ்ரா அம்மையாரையும் குழ்ந்தை இஸ்மாயீலையும் பாலை வனப் பொட்டல் வெளியில் தனியாக விட்டு வரும்போதாகட்டும், மகனை அறுப்பதற்காக கத்தியை தீட்டிய போதாகட்டும் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடமிருந்து வெளிப்படுவது நம்ரூதின் நெருப்புக்குண்டத்தில் வீசப்பட்ட போது தனது வாழ்வைப் பற்றிய எந்த உறுதிப்பாடு அவருக்கு இருந்ததோ அதே உறுதி தான்.

அல்லாஹ்வின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்ட வாழ்கையில் எந்த அர்ப்பணிப்பும் வீணாவதில்லை. அது மேலும் நன்மையை கொண்டுவருகிறது. மேலும் மகிழ்ச்சியை தருகிறது என்பதை அனுபவித்து உணர்த மனிதர் சோதனை களங்களில் தயக்கமின்றி பங்காற்றுவார். அவர் கருணையற்றவரோ, நொகிழ்வுத்தன்மை இல்லாதவரோ அல்ல. அவர், தனது இறைவன் எந்த உத்தரவை சொன்னாலும் அது நன்மையானதாகத்தான் இருக்கும். அந்த உத்தரவிற்கான தூர நோக்கு உடனடியாக புரியாவிட்டாலும் கூட அதில் சம்பதப்பட்ட யாரும் நஷ்டத்திற்குள்ளாக மாட்டார்கள் என்பதை உள்ளம் நிறைய உறுதி கொண்டிருப்பவர் என்றே அவரது நடவடிக்ககளுக்கு பொருள் கொள்ள வேண்டும்.

கட்டுரையின் தொடர்ச்சிக்கு ”Next” ஐ ”கிளிக்” செய்யவும்.

www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 3 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb