அகிலத்தைக் கவர்ந்த அரபு மொழி (1)
[ அரபு மொழியின் காலத்தை எவரும் கணித்துக் கூறுவதற்கில்லை. ஏனெனில், அது வரலாற்றுக் காலத்திற்கு முந்திய மொழி. உலக மொழி ஆராய்ச்சியாளர்களிற் சிலர் அரபு மொழியே உலகின் முதல் மொழியெனவும், முதல் மனிதர் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அரபு மொழியைப் பேசினர் என்றும் பின்னர் அது ”அப்ரானி” மொழியாக மாறி ”ஹீப்ரு” மொழி என வழங்கப்படுகிறது என்றும் கூறுவர்.
இன்னும் சிலர், ”இலத்தீன், கிரீக் மொழிகளுக்கு முந்திய மொழி இது” எனக்கூறுவர். மற்றும் சிலர் ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்னர் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காலத்தில் வாழ்ந்த ”யஃரப்” என்ற வகுப்பார் அரபு மொழியைப் பேசினர் என்றும் ”யஃரப்” என்ற பெயரே ”அரப்” என மருவியது என்றும் கூறுகின்றனர். இவையெல்லாம் அரபு மொழியின் தொன்மையைக் காட்டுவதாகவே இருக்கும்.]
உள்ளத்தில் குமுழிடும் எண்ணத்தையும், பெருகிடும் உணர்ச்சியையும் பிறருக்குப் புலப்படுத்தத் தோன்றியதே மொழி. இவ்வாறு தோன்றிய மொழிகளுள் வளம் பெற்ற மொழிகளும் வளம் பெறா மொழிகளுமாக ஏறத்தாழ மூவாயிரம் மொழிகளை எண்ண முடிகிறது. இவற்றில் நிலஉலகில் முழுமதிபோல் ஒளிவீசுகிறது அகிலத்தைக் கவர்ந்த அரபு மொழி.
இம்மொழியின் இயல்பை ஆய்ந்தறிந்த ஐரோப்பிய அறிஞர்களான கார்லைல், இரேன்க், ஹிர்ஷ்ஃபீல்ட் போன்றோர் இதன் பழமையிலே குழைந்து இனிமையிலே இணைந்து புதுமையினைப் புகழ்ந்து வளமையினைச் சுவைத்து வெளியிட்டுள்ள கருத்துக்கள் ஏராளம்.
நனிசிறந்த நாகரிகத்தையும் மிக உயர்ந்த பண்பாட்டையும் வனப்பொழுகும் இலக்கியத்தையும் மிகப்பெரும் காவியங்களையும் மட்டுமின்றி அறிவியற் புதுமைகளையும், விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களையும், விண்கலை, நுண்கலை, கணிதக்கலை, தத்துவம், மருத்துவம், பௌதீகம், இரசாயனம் முதலானவற்றை மிக விரிவாக உலகிற்கு வழங்கிப் பெருமை கொண்ட மொழி அரபு மொழி. இவற்றினும் மேலாக வையக வாழ்வை வகுத்தளிக்கும் வான்மறை அல்குர்ஆனைப் பெற்ற மொழியும் அரபு மொழியே!
இம்மொழி உலக மொழிகள் அனைத்தையும் விட இலக்கிய இலக்கணச் சிறப்பை மிக விரிவாகப் பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி பழமைச் சிறப்பு, எளிமைச் சிறப்பு, இனிமைச் சிறப்பு, புதுமைச் சிறப்பு, வளமைச் சிறப்பு, தனிச்சிறப்பு, ஒலிச்சிறப்பு, எழுத்துச்சிறப்பு,சொற்சிறப்பு, பொருட்சிறப்பு,கருத்துச்சிறப்பு,கவிதைச்சிறப்பு,உவமைச்சிறப்பு,ஆகிய அனைத்தும் ஒருசேர இம்மொழி பெற்றுள்ளது.
இவற்றில் பழமைச்சிறப்பு, எளிமைச்சிறப்பு, இனிமைச்சிறப்பு, புதுமைச்சிறப்பு, சொற்சிறப்பு போன்ற சிலவற்றை மட்டும் இங்கு காண்போம்.
பழமைச்சிறப்பு:
அரபு மொழியின் காலத்தை எவரும் கணித்துக் கூறுவதற்கில்லை. ஏனெனில், அது வரலாற்றுக் காலத்திற்கு முந்திய மொழி.உலக மொழி ஆராய்ச்சியாளர்களிற் சிலர் அரபு மொழியே உலகின் முதல் மொழியெனவும், முதல் மனிதர் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அரபு மொழியைப் பேசினர் என்றும் பின்னர் அது ”அப்ரானி” மொழியாக மாறி ”ஹீப்ரு” மொழி என வழங்கப்படுகிறது என்றும் கூறுவர். இன்னும் சிலர், ”இலத்தீன், கிரீக் மொழிகளுக்கு முந்திய மொழி இது. எனக்கூறுவர். மற்றும் சிலர் ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்னர் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காலத்தில் வாழ்ந்த ”யஃரப்” என்ற வகுப்பார் அரபு மொழியைப் பேசினர் என்றும் ”யஃரப்” என்ற பெயரே ”அரப்” என மருவியது என்றும் கூறுகின்றனர். இவையெல்லாம் அரபு மொழியின் தொன்மையைக் காட்டுவதாகவே இருக்கும்.
எளிமைச்சிறப்பு:
அரபு மொழியின் காலத்தை எவரும் கணித்துக் கூறுவதற்கில்லை. ஏனெனில், அது வரலாற்றுக் காலத்திற்கு முந்திய மொழி. உலக மொழி ஆராய்ச்சியாளர்களிற் சிலர் அரபு மொழியே உலகின் முதல் மொழியெனவும், முதல் மனிதர் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அரபு மொழியைப் பேசினர் என்றும் பின்னர் அது ”அப்ரானி” மொழியாக மாறி ”ஹீப்ரு” மொழி என வழங்கப்படுகிறது என்றும் கூறுவர். இன்னும் சிலர், ”இலத்தீன், கிரீக் மொழிகளுக்கு முந்திய மொழி இது” எனக்கூறுவர். மற்றும் சிலர் ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்னர் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காலத்தில் வாழ்ந்த ”யஃரப்” என்ற வகுப்பார் அரபு மொழியைப் பேசினர் என்றும் ”யஃரப்” என்ற பெயரே ”அரப்” என மருவியது என்றும் கூறுகின்றனர். இவையெல்லாம் அரபு மொழியின் தொன்மையைக் காட்டுவதாகவே இருக்கும்.
செமித்திய மொழிகளுள் வளமையும் பழமையும் சிறப்பும் வாய்ந்த அரபு மொழி எழுதவும் படிக்கவும் பேசவும் மிகவும் எளிதானது. இதனாலேயே ”அரபு மொழி” இனிமையுடன் எளிமையும் மிக்கது எனக் கூறப் பெறுகிறது. அரபு எழுத்துக்களே மொத்தம் 28. சீன ஜப்பானிய மொழிகளின் எழுத்துக்களைப் போல மேலிருந்து கீழ் நோக்கி எழுதுகின்ற முறை அரபு மொழியில் இல்லை. வலப்புறமிருந்து இடப்புறம் நோக்கி எளிதாக எழுதலாம். பந்தை அடிப்பதற்கும் ஒரு பொருளை அசைப்பதற்கும் அகற்றுவதற்கும் எடுப்பதற்கும் ஏந்துவதற்கும் வலக்கரத்தையே உபயோகிக் கிறோம். இயல்பான இந்நிலையால் இம்மொழியை இயற்கை மொழி என்பர் மொழிவல்லார்.
சில மொழிகளின் எழுத்துக்களில் எழுதுகோலைப் பன்முறை எடுத்து மேலும் கீழும், பக்கவாட்டிலும் சில புள்ளிகளையும் குறிகளையும் கோடுகளையும் இட்டு எழுதியக வேண்டும். சில எழுத்துக்களோ எழுதுகோலை எடுக்காமலேயே தொடர்ந்து எளிதாக எழுதிக்கொண்டே செல்லலாம். எனவேதான் உர்தூ, பார்ஸீ, மலாயா, சிந்தி போன்ற மொழிகளை அரபு லிபியின் எழுத்துக்களிலேயே எழுதுகின்றனர். ஒரு காலத்தில் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் வாழ்ந்த முஸ்லிம்கள் தமிழையும் மலையாள மொழியையும் அரபு லிபியில் எழுதினர். இப்படி இயற்றப்பட்ட நூல்கள் சில இடங்களில் இப்பொழுதும் புழக்கத்திலிருக்கின்றன.
ஒரு பண்பட்ட மொழியின் உயர்ந்த நிலைஇ ஒவ்வோர் எழுத்தும் ஒரே ஒலியைப் பெற்றிருப்பதும்இ அதனைச் சரியாக உச்சரிப்பதும்தான். இச்சிறப்பை அரபு மொழியில் முழுமையாகக் காணமுடிகிறது. அரபு மொழியில் ஓர் எழுத்துக்கு ஒரே ஒலியானதால்இ எவரும் எளிதாக எதையும் படிக்க முடிகிறது. எந்த எழுத்துக்கும் மாறுபட்ட இரண்டு ஒலிகள் இல்லை. இவ்வாறு ஆங்கில எழுத்தை மட்டும் புரிந்து தொண்டு ஆங்கில நூல் எதையும் எளிதில் படித்துவிட முடியாது.
ஆங்கில மொழியில் ”C” எழுத்துக்கு, ”S” ஒலியும், ”க்” ஒலியும், வரும். இவற்றை PALACE பேலஸ் (மாளிகை), ACORD அகார்ன் (ஒரு விதை) என்ற சொற்களால் உணரலாம். இவ்வாறே ”ஜி” எழுத்துக்கு ”ஜ்” ஒலியும் ”க்” ஒலியும் வரும். இவற்றை JEM ”ஜெம் என்பதாலும், GUM ” கம் என்பதாலும் அறியலாம். சில ஆங்கிலச் சொற்களுக்கு எழுத்து இருக்கும். ஒலி இருக்காது. ”டால்க்”- TALK என எழுதி, ”டாக்” எனவும், ”வால்க்” – WALK எழுதி ”வாக்” எனவும் ஒலித்தாக வேண்டும். வு ”T” எழுத்துக்கு சில இடங்களில் ”ட்” ஒலியும், சில இடங்களில் ”ஷ்” ஒலியும் வரும். இதனை ”மோடிவ்” MOTION ”மோஷன்” – ஆழவழைன் என்பதால் நன்கறியலாம்.
தமிழிலும் ஓரெழுத்துக்கு இரு ஒலிகள் இருப்பதை காணலம். பண்பு, பன்மை என்பதில் ஒலிக்கும் ”P” ப ஒலி, தம்பி, கம்பி என்பதில் ஆங்கிலத்தில் வரும் ‘B” ஒலியாக மாறி வருகிறது.
ஆயிரத்து நானூறு ஆண்டுகட்கு முன், இஸ்லாமித் திருமறையாம் திருக்குர்ஆனின் அமுத மொழிகளை ஓதப்பட்டபோது படித்தோர் முதல் பாமரர் வரை அதனைப் புரிந்து கொண்டனர். இன்றைய அராபியக் குழந்தைகள் மட்டுமல்லாது அராபியரல்லாத குழந்தைகளும் எளிதில் விளங்கி குர்ஆனை ஓதிவருவதை நாம் காண்கிறோம். திருக்குர்ஆனின் தீன் சுனையிலிருந்து வெளிப்பட்ட அமுத மொழிகள் தங்கள் காதுகளில் பாய்ந்து விட்டால் மனம் மாறிவிடும் என்றஞ்சியே பாமர எதிரிகள் கூட பஞ்சை வைத்து அடைத்திருந்தனர் என வரலாறு கூறுகிறது.
ஆங்கிலக் கவிதையின் முன்னோடி” எனப் புகழப்படும் சாஸர் CFAUCER என்பவரால் அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட நூல்களை இன்று எவராலும் புரிந்து கொள்ள முடியாமலிருக்கும் போது, எழுத்தச்சனின் பழம் பெரும் மலையாளம், இன்றைய மலையாளிக்கு விளங்காதிருக்கும் போது, பழமையான இம்மொழியின் எளிமையினை என்னென்று புகழ்வது?
இம்மொழி மிகவும் எளிமையாயிருப்பதாலேயே திருக்குர்ஆனின் 6666 வசனங்களையும் மனனமிட்டு பிஞ்சு உள்ளங்களிலேயே பதித்துக்கொள்ளும் இலட்சோப இலட்சம் ஹாஃபிஸ்களை- குர்ஆனை மனனமிட்டோரைக் காண முடிகிறது. குர்ஆனை மனனமிட்டோரில் ஏழு வயது நிறைவு பெறாத பலர் அன்றும் இன்றும் உளர். அரபு மொழியின் எளிமைக்கு, தொன்றே போதுமான ஆதாரமாகும்.
கட்டுரையின் தொடர்ச்சிக்கு “Next” ஐ “கிளிக்” செய்யவும்
”Jazaakallaahu khairan” albaqavi.com