பெண்ணுக்குத் திருமண வயதாகிவிட்டது. காலாகாலத்தில் அவளை யாராவது ஒருவன் கையில் பிடித்துத் தர வேண்டும். அதோடு நம் கடமை முடிந்துவிட்டது,” என்று நினைக்கும் பெற்றோர், தங்கள் விருப்பத்திற்கு ஒரு மாப்பிள்ளையைப் பார்த்து, அவனைப் பெண்ணுக்குப் பிடித்திருக்கிறதா? இல்லையா? என்றுகூட கேட்காமல் மணம் முடித்து விடுகின்றனர்.
பெண்ணும் பெற்றோரை எதிர்த்துப் பேச முடியாமல், அவர்கள் பார்த்த மாப்பிள்ளையை மணம் முடித்துக்கொள்கிறாள். விளைவு… திருமண வாழ்க்கை சில நாட்களிலேயே கசந்து விடுகிறது.
பெண்களை அவர்களது விருப்பமில்லாமல், ஆண்கள் திருமணம் செய்யவே கூடாது என்கிறது இஸ்லாம். “விசுவாசிகளே! பெண்களை (அவர்கள் உங்களை விரும்பாமல் வெறுக்க, அவர்களை) பலவந்தமாக அடைவது உங்களுக்கு ஆகுமானதல்ல,” என குர்ஆனில் சொல்லப் பட்டுள்ளது.
மேலும், மணப்பெண்கள், தனக்கு மணமகனைப் பிடித்திருக்கிறது என மனப்பூர்வமாக ஒப்புதல் தரவேண்டுமென்றும், அவள் அந்த மணமகனை திருமணம் செய்ய விரும்பவில்லை என்றால், பலாத்காரமாக திருமணம் செய்து வைக்கக்கூடாது என்றும் எச்சரிக்கிறது.
பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்கும் விஷயத்தில் பெற்றோர்கள், குர்ஆன் சொல்லும் கருத்துக்களை கண்டிப்பாக பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும்.
”Jazaakallaahu khairan” A.K.R Ahmed kabeer Refaye Mohamed