ஆஸ்த்துமா என்பது என்ன ?
ஆஸ்த்மா நுரையீரல்கள பாதிக்க கூடிய ஒரு நோய். குழந்தைகளை அதிகம் பாதிக்க கூடிய ஒரு நோய். இதனால் அடிக்கடி இழுப்பு, சுவாசிக்க முடியாத நிலை, மார்பு கூட்டில் ஒரு இறுக்கம், இருமல் போன்றவை வரும். எப்போதுமே ஆஸ்த்மா இருந்தாலும் ஒவ்வாமை ஏர்படும் போது இதன் தீவிரம் அதிகரிக்கும். குடும்பத்தில் யாருக்கேனும் ஆஸ்த்மா இருந்தால் வரக்கூடிய வாய்புகள் அதிகம் என்றாலும் ஆஸ்த்மா வருவதற்கு என்ன முக்கிய காரணம் என்பது இன்னும் தெளிவாக அறிந்து கொள்ளப்படவில்லை.
அதேபோல இதை முற்றிலும் குணப்படுத்துதலும் முடியாது. மருந்துகளால் ஒருவித கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாமே அன்றி குணப்படுத்துதல் இயலாது. கட்டுப்பாடில் இருக்கும் போது இழுப்பு, மூச்சு திணரல் வராமல் இருக்கும். நன்றாக தூங்க முடியும் என்பதால் பள்ளிக்கு செல்வதோ விளையாடுவதோ தடை படுவதில்லை.
ஆஸ்த்மாவின் விளைவுகள்: அமெரிக்காவில் 2001 ஆம் ஆண்டு 12 மில்லியன் குழந்தைகள் ஆஸ்த்மா பாதிப்பால் தாக்கப்பட்டார்கள் (asthma aatack). கிட்டதட்ட 21 மில்லியன் பேர் ஆஸ்த்மா வால் சிரமப்படுகிறார்கள். பெற்றோருக்கு ஆஸ்த்மா இருந்தால் குழந்தைகளுக்கு ஆஸ்த்மா வர 6 மடங்கு அதிகம் வாய்ப்பிருக்கிறது.
ஆஸ்த்மாவை கண்டறியும் வழிகள்: ஆஸ்த்மாவை கண்டறிவது மிக கடினம். அதுவும் 5 வயதுக்குள்ளான குழந்தைகளிடம் கண்டறிவதும் இன்னும் கடினம். மருத்துவ பரிசோதனைக்கு செல்லும்போது மருத்துவர் கேட்கும் சில கேல்விகளுக்கு நீங்கள் அளிக்கும் பதிலை வத்தே கண்டறிய முடியும். அதன்பின் நுரையீரல் பரிசோதனை செய்து அதை ஊர்ஜிதம் செய்துகொள்வார்கள்.
பரிசோதனை செய்யும் மருத்துவர் இரவில் மூச்சுதிணறல் இருக்கிறதா, வீட்டில் யாருக்கேனும் ஆஸ்த்மா இருக்கிறதா, மார்பு தசைகளில் இறுக்கமான உணர்வு இருக்கிறதா என்று கேட்பார். ஸ்பைரோமீட்டர் என்ற குழாய் மூலம் அதிகப்படியாக உங்களால் எவ்வளவு காற்றை உள்ளிழுக்க முடியும் என்பதையும் பார்க்க முடியும். இந்த காற்று அளவு ஆஸ்த்மா மருந்து எடுத்து கொள்வதற்கு முன், மருந்து எடுத்து கொண்டதன் பின் கணக்கிட்டு பார்க்க படும். அதிக முறை ஒவ்வாமை விளைவுகள் ஏற்படும் போது அது ஆஸ்த்மாவாக மாற வாய்ப்பு இருக்கிறது. காற்று மூச்சுக்குழாய்கள் மூலம் நுரையீரலுக்குள் சிறிய குழாய்கள் மூலம் செல்லுகிறது. ஆஸ்த்மா விளைவு ஏற்படும் போது அந்த குழாய்கள் சுருங்கிவிடுவதால் தேவையான காற்று செல்ல முட்யாமல் தடைபடுகிறது. அதிக முயுக்கஸ் எனப்படும் திரவம், சளி சுரந்து இருமலை இன்னும் அதிகமாக்கும். பிறகு இது மூச்சு இழுப்பில் முடியும். சிலசமயம் தக்க மருந்து கொடுத்து மூச்சு குழாய்களை விரிவாக்க முடியாவிட்டால், இறக்கவும் நேரிடும்.
ஆஸ்த்மா வரக்காரணங்கள்: சுற்றுப்புர சூழலில் உள்ள மாசு, சிகரெட் புகை போன்றவை முக்கிய காரணங்களாகும். அமெரிக்கா போன்ற நகரங்களில் குளிர்காலம் முழுதும் சன்னல்கள் போன்றவை திறக்கப்படுவதில்லை என்பதால் சுழலும் காற்றில் மாசு, நுண்ணுயிர்கள் இவை வெளியேற வாய்ப்பு இருப்பதில்லை.
ஆஸ்த்மாவை எப்படி கட்டுபாட்டில் வைத்திருப்பது?
மருத்துவர் தரும் மருந்துகளை தவறாமல் எடுத்து கொள்ளுங்கள். அதேபோல சுற்றுப்புரத்தில் உள்ள மாசினை தவிர்க்க கூடிய மட்டும் முயற்சி செய்யுங்கள். வீட்டில் புகை பிடிப்பவர்கள் இருப்பின் வெளியே சென்று புகை பிடித்தல், அல்லது வீட்டு சன்னல்களை திறந்து வைத்தல் போன்றவற்றை செய்யவும். ஆஸ்த்மாவிற்கு சில மாத்திரைகள் அல்லது ஒரு மூச்சு இழுக்கும் குப்பியிலோ மருந்து இருக்கும். பெரும்பாலும் இவை மூச்சு குழாய்களை விரிவாக்கும் மருந்துகளே. அடிக்கடி உபயோகிக்காமல் தேவைக்கேற்ப மருத்துவ ரின் அறிவுறையை பின்பற்றி கட்டுப்பாட்டுள் வைத்திருங்கள்.
முக்கிய காரணிகள்:
சூழலில் உள்ள சிகரெட் புகையின் மாசு; ஆஸ்த்மா உள்ளவர்களின் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் அவர் அருகாமையில் புகைப்பதை தவிர்க்க வேண்டும்.
தூசி: தலையணை உறைகள், படுக்கை விரிப்புகள் இவற்றை அடிக்கடி துவைத்து உபயோகிக்க வேண்டும். அதேபோல stuffed animal விளையாட்டு பொம்மைகள் கொடுக்காதீர்கள். வீட்டிற்கு வெளியே காற்றில் உள்ள மாசு: சில நிறுவனங்கள் வெளியேற்றும் புகை, கார் போன்ற வாகனங்களில் வெளியிடும் புகை போன்றவை ஆஸ்த்மா உள்ளவருக்கு ஆபத்தை வரவழைக்க கூடும்.
கரப்பான் பூச்சிகள் அடைசல் அதிகம் இருக்கும் இடத்தில் நிறைய இருக்கும். இவற்றை கொல்ல பயன் படுத்தும் மருந்தின் வீரியம் ஆஸ்த்மாவை வரவழைக்கூடியது. அதனால் வீட்டில் நீர் தேங்கி இருக்கும் இடங்களை சுத்தம் செய்து துப்புரவாக வைத்திருத்தல் அவசியம்.
செல்ல பிராணிகள் பூனை, நாய் போன்ற இவற்றின் முடி பலருக்கு ஒவ்வாமை தரக்கூடியது. பிறகு அது ஆஸ்த்மாவில் கொண்டு விடும். எனவே எவ்வளவுதான் நண்பனாக இருந்தாலும் அதிக முடி உள்ள செல்ல பிராணிகலை படுக்கை அறையில் அனுமதிக்காதீர்கள். அடிக்கடி வீட்டை சுத்தம் செய்து முடியை அகற்றுவது முக்கியம்.
பாசி : பாசி, மோல்ட் இவற்றை சுவாசிப்பதன் மூலம் அதிக ஆஸ்த்மா விளைவுகள் நேரலாம். வீட்டில் அதிக ஈரப்பதம் இல்லாமல் பார்த்து கொள்வது முக்கியம். எங்கேயாவது தண்ணீர் கசியுமானால் அதை உடனே சரி செய்ய வேண்டியது அவசியமாகும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சத்துள்ள காய்கறிகள், வைட்டமின் C அதிகம் உள்ள பழங்களை உண்பது அவசியம்.
ஆஸ்த்மா நோய் அறிகுறி
வருடம் 1900-ல் ஆஸ்த்மா நோய் என்பது மிகவும் அரிதான ஒன்றாக இருந்தது. ஆனால் இப்பொழுதோ, அது ஒரு பெருவாரியாகப் பரவுகிற தொற்றுநோயாக வளர்ந்திருக்கிறது. அமெரிக்காவில் மட்டும் ஒன்றரைக்கோடிக்கும் மேலான மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த எண்ணிக்கையை விட 10 மடங்கு அதிகமாய் இந்நோய் உலகளவில் மக்களை பாதித்திருக்கிறது.
ஒவ்வொரு வருடமும், 5,000 அமெரிக்கர்கள், மிக முக்கியமாய் வயதானவர்கள் இந்த நோயால் உயிரிழக்கின்றனர். உலக சுகாதார நிறுவனத்தின் கணக்குப்படி, இப்படி இறப்பவர்களின் எண்ணிக்கை, உலகளவிலே 180,000. இப்படி ஆஸ்த்மா நோயினால் இறப்பவர்களின் எண்ணிக்கை இந்த அளவிற்கு உயர்ந்ததன் காரணத்தை முழுமையாக புரிந்து கொள்ளமுடியவில்லை. எனினும், இதுவரை உள்ள விபரங்களின் மூலம், ஆஸ்த்மாநோய் மேலைநாடுகளில் அதுவும் ஆங்கிலம் பேசப்படும் நாடுகளில் மிக அதிகமாய் பரவியிருப்பதாயும், ஆப்பிரிக்க மூலை முடுக்குகளில் சுத்தமாய் இந்த நோய் காணப்படுவதில்லை எனவும் தெரிய வருகிறது.
ஆஸ்த்மா நோய் கொண்ட தாயோ அல்லது தகப்பனோ, ஒரு குழந்தை ஆஸ்த்மா நோய் அடைவதற்கு காரணமாக இருக்கலாம் என்றிருந்தாலும், புள்ளிவிவரங்கள் மூலம், வம்சாவழி மரபை விட சுற்றுப்புற சூழலும், வளரும் வாழ்க்கை முறையும்தான் மிக அதிகமாய் ஆஸ்த்மா நோய்க்கு காரணமாய் இருப்பதாய் தெரிகிறது. முக்கியமாய் எந்தெந்த அம்சங்கள் ஆஸ்த்மாநோய்க்கு காரணமாய் இருக்கின்றன என நுண்மையாக இன்னும் தெரியவில்லை. காரணங்களாய் கருதக்கூடிய சிலவற்றில் மிக முக்கியமான ஒன்று – தற்போதைய குழந்தைகள் முந்தைய காலத்தவர்களை விட அதிகமாய் வீட்டுக்குள்ளும், வேறு கட்டிடத்துக்குள்ளும் நேரத்தை செலுத்துகிறார்கள் என்பது.
இப்படி நான்கு சுவற்றுக்குள் அடைந்து கிடப்பதால், இவர்கள் மிக அதிகமாய் வீட்டில் இருக்கக்கூடிய அலர்ஜி சம்பத்தப்பட்டவைகளினால் (தூசிகளில் வளரும் பூச்சிகள், எலி, கரப்பான் போன்றவைகள் உட்பட) பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. ஒரு முக்கியமான கருத்தின் படி, மேலை நாடுகளின் குழந்தைகளின் நுரையீரல் சம்பத்தப்பட்ட வியாதிகளின் தடுப்புச்சக்தி, வளரும் நாடுகளின் குழந்தைகளின் தடுப்புச்சக்தியை விட குறைந்ததாய் இருக்கிறது. மேலை நாடுகளிளுள்ள குழந்தைகள், பூச்சிகளின் அருகே வளர்ந்து பழக்கப்படாதவர்கள். எனவே, இவர்கள் மிக எளிதாக ஆஸ்த்மா நோய்க்கும், வேறு சில அலர்ஜி சம்பத்தப்பட்ட வியாதிகளுக்கும் (hay fever and eczema) ஆளாகி விடுகிறார்கள்.
அநேகமாக, பாதி ஆஸ்த்மா நோய்க்காரர்கள் அலர்ஜி (குடும்ப வம்சாவழி சம்பத்தப்பட்டதாக இருக்கக்கூடியது) மூலமாக ஆஸ்த்மா நோய் அடைந்திருக்கிறார்கள். மீதப்பாதி, அலர்ஜி மூலம் இல்லாமல், குடும்பத்தில் வேறு யாருக்கும் இல்லாமல், வயதான பிறகு நோயடைந்தவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு, முதலில் சாதாரண ஜலதோஷமாய் இருந்து, படிப்படியாய், இழுப்பு வந்து, நாட்கணக்காய், மாதக்கணக்காய் சுவாசிக்க கஷ்டப்பட்டு ஆஸ்த்மா நோய் கஷ்டத்தைக் கொடுத்திருக்கிறது. இந்த இரு விதமாய் நோய்வாய்ப்பட்டவர்களுக்கும், மூச்சிழுக்கும் வழி சுருங்கிவிடுகிறது.
ஆஸ்த்மா நோய் குழந்தைகளிடம் அதிகமாய்ப் பரவி இருந்தாலும் – தற்சமயம் அமெரிக்காவில் இது ஒரு சாதாரண (ஏராளமானவர்களுக்கு வரக்கூடியதாய்) குழந்தை வியாதி – ஏகப்பட்ட வயதானவர்களும் ஆஸ்த்மா நோய்வாய்ப் பட்டிருக்கின்றனர். மேலும், இரசாயணத் தொழிற்சாலைகளில் வேலை பார்ப்பவர்களிடம், அந்த இரசாயணப் பொருட்களின் மூலமாகக் கூட ஆஸ்த்மா ஏற்பட்டிருக்கிறது. வீட்டிலுள்ள தொற்றுநோய் கிருமிகளிலுருந்து, உடற்பயிற்சி, குளிற்காற்று, உணர்ச்சி கொந்தளிப்பின் மற்றும் ஒசோன் போன்ற இராசாயனப் பொருட்கள் ஆஸ்த்மா நோயைத் துரிதப் படுத்துவையாக இருக்கின்றன.
இருந்த போதிலும், வெளிக்காற்றின் கிருமிகள் ஆஸ்த்மா நோய் உருவாக காரணம் என இதுவரை உறுதிப்படுத்தப் படவில்லை. வாழும் ஊரின் ஏழ்மை சிறிது காரணமாக இருக்கிறது. அமெரிக்காவில் போர்டோ ரிக்கோவைச் சேர்ந்தவர்களிடமும், ஆப்பிரிக்க வழி மக்களிடமும், ஆஸ்த்மா நோய் மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது. புகை பிடிப்பது ஆஸ்த்மா நோயை அதிகரிக்கச் செய்கிறது. கர்ப்பமாக இருக்கும் போது, புகை பிடிப்பது, பிறக்கும் குழந்தைக்கு ஆஸ்த்மா நோய் வருவதற்கு வாய்ப்பினை அதிகப் படுத்துகிறது. உடல் குண்டாக இருப்பது கூட ஆஸ்த்மா நோயுடன் சம்பத்தப் பட்டதுதான்.
இப்படி மிக ஏராளமான காரணங்களும், விவரங்களுடனும் ஆஸ்த்மா நோய் சம்பத்தப் பட்டிருப்பதால், விஞ்ஞானிகளால் இதுவரை இதன் முழுத்தன்மையை புரிந்துகொள்ள முடியவில்லை. இருந்த போதிலும், இவர்கள் மிகச் சிறப்பாய் வேலை செய்து, Inhaled steroids போன்ற ஒருசில மருந்துகளை கண்டுபிடித்திருக்கிறார்கள். இதுவும், வேறு சில புதிய மருத்துவ முறைகளும் சரியாகவும், தொடர்ந்தும் உபயோகப்படுத்தினால், ஆஸ்த்மா நோய் மூலமான சில இறப்புகளை தவிர்க்கலாம்.
அடிக்கடி மூக்கடைப்பா?
எல்லா வயதினருக்கும் மூக்கடைப்பு என்பது ஜலதோஷம் அலர்ஜி போன்ற சாதாரண காரணங்களால் ஏற்படுகிறது சில முக்கியமான காரணங்களைப் பார்ப்போம்.
ஒரு சிலருக்கு மூக்கினுள் உள்ள ”செப்டம்” எலும்பு வளைந்து இருக்கும் இதனால் சுவாசப்பாதையில் எலும்பு குறுக்கிட்டு மூக்கடைப்பு இருக்கும் மூக்கினுள் இருக்கிற அந்த வளைந்த எலும்பை எஸ்.எம்.ஆர். முறையில் முழுவதுமாக அகற்றிவிடுவார்கள் இதனால் பாதிப்பு ஏதும் இருக்காது. என்ன… மூக்கு கொஞ்சம் கொள கொளவென்று ஆடிக்கொண்டிருக்கும்.
ஒரு பக்கம் படுத்தால் அந்தப் பக்கமாக மூக்கு சரிந்து இருக்கும் அவ்வளவுதான். ஆனால் குழந்தைகளைப் பொறுத்தவரை இப்படி எலும்பை எடுப்பது அவர்களின் எலும்பு வளர்ச்சியையே பாதிக்கும் என்பதால் எஸ்.எம்.ஆர். முறை சிகிச்சை அவர்களுக்குச் செய்யப்படுவது இல்லை.
வளைந்த எலும்பைச் சரிசெய்கிற இன்னொரு முறை… “செப்டோ பியாஸ்டி” இதில் மூக்கு எலும்பு முழுவதையும் அகற்றாமல் எந்தப் பகுதி வளைந்திருக்கிறதோ அந்த இடத்தை மட்டும் மாற்றி நேர்செய்கிறார்கள் மூக்கடைப்புக்கான அடுத்த காரணம் “பாலிப்” என்கிற சதை. “பாலிப்” என்கிற சதை வளர்ச்சியை “பீல்டுக்ரேப்ஸ்” என்பார்கள். உரித்த திராட்சைப்பழங்களைப் போல… கொத்துக் கொத்தாகத் தோற்றம் அளிப்பதால் இப்படி சொல்கிறார்கள் என்கிறார் டாக்டர் ரவிராமலிங்கம். அவர் மேலும் கூறியதாவது:-
மூக்கு ஜவ்வு, மினிக்கஸ் மெம்பரைன் போன்ற பகுதிகளில் அலர்ஜியாலோ, “காளான்” கிருமிகளாலோ இந்தச் சதை வளர்கிறது. இது வளர வளர சைனஸ் அறைகளின் வாசலை அடைக்கிறது. அதனால் சைனஸஸில் சளி தேங்கி, சைனஸ் பிரச்னை ஏற்படுகிறது. இதன் தொடர்ச்சியாக “பாலிப்” மேலும் பெரிதாக வளரத் துவங்குகிறது.
இப்படி “பாலிப்” சைனஸ் என்று போட்டி போட்டுக்கொண்டு தொல்லை தொடங்கும்போது பேச்சு பாதிக்கப்படும். மூக்கடைத்தபடி பேசுவார்கள். வாயால்தான் சுவாசிக்க வேண்டிவரும். வாசனை டேஸ்ட் பிரச்னைக்கும் ஆளாகிறார்கள். “பாலிப்” குறையைப் போக்குவதன் மூலம் ஆஸ்துமாவில் இருந்தும் இவர்கள் குணமாக வழியிருக்கிறது!
“பாலிப்” வளர்ச்சி உள்ளவர்களுக்கு என்ன சிகிச்சை செய்கிறார்கள். பாலிப்களை மூக்கிலிருந்து பிரித்து எடுப்பதே சிறந்த வழி. இதை பாலிபெக்டமி என்கிறார்கள் அறுவைசிகிச்சை செய்து இந்த பாலிப்களை வேரோடு பறிக்க வேண்டும். இல்லையென்றால் திரும்பத் திரும்ப வளர ஆரம்பிக்கும். சி.டி. ஸ்கேன் மூலம் அதன் வேர்கள் எவ்வளவு தூரம் பரவியுள்ளது என்பதைக் கண்டுபிடித்து எண்டோஸ்கோபிக் முறையில் அதை அடியோடு அகற்றுவதே நிரந்தரதீர்வைத் தரும்.
சிலவகை பாலிப்கள் ஆஸ்பர்ஜில்லஸ் என்கிற காளான்களால் ஏற்படுகிறது. இதைக் கவனிக்காமல் விட்டால் இந்தச் சதையானது வளர்ந்து மூளைவரை பாய்ந்துவிடுகிறது. இந்தச் சிக்கலான கட்டத்தில் மிகத் திறமையான அனுபவம் வாய்ந்த டாக்டர்கள் மட்டுமே, சரியான முறையில் நோயாளிக்கு எந்த ஆபத்தும் ஏற்படாத வகையில் இந்த “பாலிப்”களை அகற்ற முடியும்!
நம்முடைய முகத்தின் ஆபத்தான பகுதி எது தெரியுமா?
மூக்கை ஒட்டி அமைந்துள்ள அந்த முக்கோண ஏரியாதான். ஏராளமான ரத்தக்குழாய்கள் இந்த முக்கோணப் பகுதி வழியாகத்தான் மூளைக்குச் செல்கின்றன. இந்தப் பகுதியில் ஏதேனும் சின்ன ரத்தக்காயமோ புண்ணோ உண்டானால் கூட… அதன் கிருமிகள் உடனடியாக மூளைக்குச் சென்று மரணத்தையே ஏற்படுத்தலாம்.
மூக்கிலும் இதேபோல ஒரு ஆபத்தானபகுதி இருக்கிறது அது மூக்கின் உள்ளே மேல்பகுதி அதாவது மூளையின் அடித்தளத்தை தொட்டபடி செல்கிற சுவாசவழி. இதை ஆபத்தான மூக்குப்பகுதி என்கிறார்கள் எண்டோஸ்கோபிக் ஆபரேஷன்கள் மிக மிக கவனமாக செய்யப்பட வேண்டும். கொஞ்சம் தவறினாலும் மூளைப் பகுதியைத் துளைத்து பெரிய ஆபத்தை உண்டாக்கிவிடும்.
என்னிடம் ஒரு கல்லூரி மாணவன் வந்தான்… அவனுக்கு மூக்கில் இந்த ஆபத்தான பகுதியில் பாலிப் வளர்ந்திருந்தது. கவனிக்காமலே விட்டதால் பாலிப் பெரிதாக வளர்ந்து இதனால் அவனது இரண்டு கண்களும் அகலத்தில் விலகி திரும்பியிருந்தது. இதுபோல் ஆவதற்கு “தவளைமுகம்” என்கிறோம். அந்த மாணவனுக்கு எண்டோஸ்கோபிக் முறையில் மூக்கில் ஆபரேஷன் செய்து “பாலிப்”பை நீக்கி, கண்கள் சரிசெய்யப்பட்டன.
நமக்குத் தெரிந்த சின்னச் சின்ன விஷயங்களாலும் மூக்கடைப்பு ஏற்பட்டு, பெரிய அளவில் பாதிப்புகள் உண்டாகலாம் என்கிறார் டாக்டர் ரவிராமலிங்கம்.
ஜலதோஷம்: வரும் முன் காப்போம்
எதெதற்கோ தடுப்பு ஊசி கண்டுபிடித்துவிட்டார்கள். இந்த ஜலதோஷத்துக்கு மட்டும் தீர்வே இல்லையா? என்று நீங்கள் பொருமித்தீர்த்திருக்கலாம். ஜலதோஷத்திற்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது சுலபமல்ல. காரணம், எட்டு வேறுபட்ட குடும்பங்களைச் சேர்ந்த இருநூறுவகை வைரஸ் கிருமிகள் ஜலதோஷத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.
தடுப்பதற்கும் சரி, குணமாவதற்கும் சரி, வைட்டமின் சி ஜலதோஷத்துக்கு மிகவும் ஏற்றது என்பது ஓரளவு உண்மை. அதற்காக வைட்டமின் சி மாத்திரைகளை எக்கச்சக்கமாக விழுங்கித் தள்ள வேண்டாம். இந்தச் சத்துக்களில் பெரும்பகுதி சிறுநீர் வழியாக வெளியேறிவிடுகிறது. தவிர, அதிக வைட்டமின் சி மாத்திரைகள் சிலசமயம் சிறுநீரகக் கற்கள் உண்டாவதற்கும் காரணமாக அமையலாம்.
புகைப்பவர்கள், குறைந்தது மழை ஸீஸனிலாவது, அதை நிறுத்திக்கொள்வது நல்லது. நமது மூச்சுக்குழாயில் ஸீலியா எனப்படும் மிக மெல்லிய ரோமங்கள் உண்டு. தொற்று நோய்க்கு எதிராகப் போராடுவதில் இவற்றுக்கு முக்கிய பங்குண்டு. சிகரெட் பழக்கம் இந்த ரோமங்களைச் செயலிழக்கச் செய்துவிடுகின்றன. நாமே சிகரெட் பிடித்தால் தான் என்றில்லை. மற்றவர்கள் விடும் புகையை சுவாசித்தாலும் இந்தப் பாதிப்பு உண்டு.
நல்ல காற்றோட்டமான சூழ்நிலையில் இருப்பதற்கு முயற்சி செய்யுங்கள். இல்லையென்றால் கிருமிகள் நிறைந்த அசுத்தக் காற்று மீண்டும் மீண்டும் ஒரே இடத்தில் சுற்றி ஜலதோஷத்துக்கு வழிவகுக்கும்.
கைகளை அடிக்கடி கழுவுங்கள். அதுவும் ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ இருந்தால் இதை நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டும்.
ஜலதோஷம் பிடித்த ஒருவர் பயன்படுத்திய பேனா, தொலைபேசி ஆகியவற்றைக் கூட அவருடைய ஜலதோஷம் நீங்கும் வரையில் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. இதெல்லாம் நடக்கிற காரியமா? என்று கேட்டால், வேறு வழியில்லாதபட்சத்தில், கைக்குட்டையைப் பயன்படுத்தி அவற்றை உபயோகிக்கப் பாருங்கள்.
ஜாலியாக இருங்கள். ஜலதோஷக் கிருமிகள் உங்களோடு டூ விட்டுவிட வாய்ப்புண்டு. மற்றவர்களைவிட மனஇறுக்கத்தோடு இருப்பவர்களை ஜலதோஷக் கிருமிகள் தாக்கும் வாய்ப்பு நூறு சதவிகிதம் அதிகம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
நன்றி: பத்மா அர்விந்த், டாக்டர்கள்: சரஸ்வதி, ரவிராமலிங்கம், ஜெயவேலன், IIT