Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

இஸ்லாத்தில் பெண்கள் நிலை: இன்றைய யதார்த்தம் என்ன? (2)

Posted on December 5, 2009July 2, 2021 by admin

வாசகர் கருத்து – 1

[ நமது இயக்கங்கள் இதுவரை நடத்திய ‘டிசம்பர் 6”மற்றும் இடஒதுக்கீட்டு கோரிக்கை’ போராட்டங்களில் சகோதரிகளின் கையில் – ‘கொடி’யை கொடுத்து – கோஷம் போடவைத்து – தத்தமது இயக்க வலிமையை – அரசுக்கும் – மாற்று இயக்கத்துக்கு காட்டுவதற்கு உபயோகப்படுத்தப்படும் ‘கூட்டமாக’ – ‘கறிவேப்பிலையாக’ மட்டுமே அவர்களை வைத்திருக்கிறோமே தவிர – இயக்கங்களின் நிர்வாகத்தில்- ‘செயற்குழுவில்’ அவர்களுக்கு சிறிதளவாவது ‘நிர்வாகப் பொறுப்பு’ கொடுக்கவேண்டும் என்று எண்ணியதே கிடையாது..]

அஸ்ஸலாமு அலைக்கும்…

இஸ்லாத்தில் பெண்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் உரிமைகளுக்கும் – முஸ்லிம்களின் நடைமுறைக்கும் உள்ள மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது என்பது மறுக்கமுடியாத, மறைக்க முடியாத உண்மை..

மற்ற மதங்களை விட அதிகமான உரிமைகளையும் – அந்தஸ்த்தையும் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியிருக்கிறது என்று – திருமறை வசனங்கள் மற்றும் ஹதீஸ்களின் எண்ணிக்கையை பட்டியலிட்டு மேடையில் ஆவேஷமாக – மார்தட்டி – ‘வீர’ முழக்கமிடுவதோடு ‘முடிந்து’ போய்விடுகிறது.

மேடையில் கேட்கும் ‘உரை’களை, நமது சகோதரர்கள் தமது வீட்டுக்குள் செயல்முறை படுத்தாத வரை – ஏட்டுச்சுரைக்காய் கறிக்குத்வாது என்பார்களே – அதைப்போல முஸ்லிம்களால் பின்பற்றப்படாத – கிடப்பில் போடப்பட்ட பெண்ணுரிமை பற்றிய திருமறை வசனங்களும் மற்றும் ஹதீஸ்களும் ‘லாயக்கற்றதாக’ மாற்றாருக்கு தோன்றத்தான் செய்யும்…

முஸ்லிம்களின் நடைமுறை வாழ்க்கையை பார்த்துதான் மற்றவர்கள் – நமது மார்க்கத்தை புரிந்துக்கொள்வார்களே தவிர திருமறையையும்-ஹதீஸ்களையும் ஆய்ந்து படித்தல்ல. தற்கால உதாரண இஸ்லாம் அளித்திருக்கும் உரிமைகளின் மூலம் வெற்றிபெற்ற முஸ்லிம் சகோதரிகளை உலகுக்கு காட்ட தவறிவிட்டு – பிறர் விமர்சிக்கும்போது மட்டும் ‘மல்லுக்கு’ நிற்பது – முஸ்லிம்களுக்கு எந்தப்பயனையும் தராது என்பது என் தாழ்மையானக் கருத்து.. .

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் கூட சமூகத்தை கட்டமைப்பதில் -நீதிவழங்குவதில்- அரசு நிர்வாகத்தில் பெண்களும் – நபித்தோழியர்கள் குறிப்பிடத்தக்க பங்களித்திருக்கின்றனர். இன்று நிலையென்ன?

உதாரணமாக நமக்காக இருக்கின்ற இயக்கங்களில் நமது பெண்கள் ஆற்றவேண்டிய பங்கு என்ன்வென்பதை கூட நாம் தானே தீர்மாணிக்கிறோம்.

நமது இயக்கங்கள் இதுவரை நடத்திய ‘டிசம்பர் 6”மற்றும் இடஒதுக்கீட்டு கோரிக்கை’ போராட்டங்களில் சகோதரிகளின் கையில் – ‘கொடி’யை கொடுத்து – கோஷம் போடவைத்து – தத்தமது இயக்க வலிமையை – அரசுக்கும் – மாற்று இயக்கத்துக்கு காட்டுவதற்கு உபயோகப்படுத்தப்படும் ‘கூட்டமாக’ – ‘கறிவேப்பிலையாக’ மட்டுமே அவர்களை வைத்திருக்கிறோமே தவிர – இயக்கங்களின் நிர்வாகத்தில்- ‘செயற்குழுவில்’ அவர்களுக்கு சிறிதளவாவது ‘நிர்வாகப் பொறுப்பு’ கொடுக்கவேண்டும் என்று எண்ணியதே கிடையாது..

நிறைவாக, நம்மவர்கள் – இஸ்லாம் விதித்திருக்கும் பெண்களுக்கான ஒழுங்கு முறைகளை – கட்டுப்பாடுகளை பெண்கள் கண்டிப்பாக பேணுவதில் காட்டும் ஆர்வத்தில் – சிறிதளவையாவது, நமது உய்ரிய மார்க்கம் அவர்களுக்கு வழங்கிய உரிமைகளை அளிக்க முன்வரவேண்டும்.

எந்த ஒரு அமைப்போ, நிறுவனமோ வெற்றிகரமாக இயங்கவேண்டுமானால் அதன் ”நிர்வாகிகள்” நீதியாக – நேர்மையாக – ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு இயங்கவேண்டும் இல்லையென்றால் ஒட்டுமொத்த நிறுவனமும் ”உருப்படாமல்” போய்விடும்.

அதுபோல நமது ”முஸ்லிம் சகோதரிகளின் பின்தங்கிய நிலைக்கு முக்கிய காரணமாக விளங்குவது ”நிர்வாகிகள்தான்”. ஆமாம்.. ஆண்கள்தானே. – குடும்பத்தின் – பெண்களின் நிர்வாகிகளாக இருக்கிறார்கள்.. அவர்கள் நிர்வாக்திறனில் முழுமைப் பெற்ற்வர்களாக இருந்திருந்தால் அவர்களால் நிர்வகிக்கப்படும் ”பெண்கள்” சமுதாயத்தில் பின்னடைந்த்து இருக்க்கமாட்டார்கள்..மறை கூறும் வார்த்தைகளின் உண்மையான பொருளை உண்ராமல் –

”நிர்வாகி” என்ற ”வார்த்தைக்கு” தங்கள் மனம்போனபோக்கிலே வியாக்கியானம் செய்துகொண்டு தம்மை ”ஆண்டானாகவும்” – பெண்ணை அடிமையாகவும்” நடத்துகிறார்களே அதுதான் பிரச்சினைக்கு காரணம்.. ஆண்கள் மனது வைத்தால்தான் பெண்கள் முன்னேற முடியுமே தவிர – பெண்கள் தங்களின் உரிமைக்காக தாங்களே குரலெழுப்பக் முடியாத இழிவான சூழலை உருவக்கியிருக்கின்றனர்.இஸ்லாமிய அடிப்படை அறியாத பெரும்பாலான முஸ்லிம் ஆண் நிர்வாகிகள்தான் – நமது சமுதாயத்தில் சரிபாதியாக உள்ள பெண்களின் பின்னடைவுக்கு காரணம்..

ஆண்களூக்கும் நிர்வகிக்க தெரியவில்லை – பெண்களே சுயமாக நிர்வகித்து கொள்ளட்டுமே என்றும் விடத் தெரியவில்லை.

– பிறைநதிபுறத்தான்

வாசகர் கருத்து – 2

வல்ல இறைவன் நம் அனைவருக்கும் நல்லருள் செய்வானாக.

அல்ஹம்துலில்லாஹ், இஸ்லாமிய பெண்கள் பற்றிய உங்கள் கருத்தை நான் முழுமையாக ஆதரிக்கின்றேன்.

இஸ்லாம் பெண்களுக்கு எவ்வளவோ உரிமைகளை வழங்கிருக்கின்றது. ஆனால் இஸ்லாமிய ஆலிம்கள் அதை பெண்களுக்கு கிடைக்கவிடாமல் செய்வதில் கவனமாக உள்ளனர்.

எதுக்கெடுத்தால் குர் ஆன் ஹதீஸ் பேசுபவர்கள் கூட பெண்கள் என்று வந்தால் குர் ஆன் ஹதீஸை தூக்கி எரிந்துவிட்டு தங்கள் மனோஇச்சை என்ன சொல்கின்றதோ அதை மார்க்கமாக்கி கொள்கின்றனர்.

பெண் உரிமைக்கு ஆதரவான குர் ஆன் வசங்களையும் ஹதீஸ்களையும் வெளி உலகத்திற்க்கு சொல்வதில்லை.

குர் ஆன் ஹதீஸை மட்டும் பின் பற்றுவோம் என்று சொல்லும் தவ்ஹீத் ஆலீம்கள்கூட பெண்கள் என்று வந்த்தால் குர் ஆன் ஹதீஸை தூக்கி போட்டு மனோஇச்சைபடி பத்வா கொடுக்கின்றனர்.

பெண் உரிமை பற்றி குர் ஆன் ஹதீஸ் என்ன சொல்கின்றது என்பதை ஆய்வு செய்யும் நேரம் வந்துவிட்டது. உங்களை போல் சகோதரர்கள் தொடர்ந்து பெண்ணுரிமைக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும் என் கேட்டுக்கொள்கின்றேன். 

– இம்தியாஸ்

 

வாசகர் கருத்து – 3

[ மார்க்கம் அறியா ஒரு குறிப்பிட்ட சத ஆண்களால் பெண்கள் தங்களின் உரிமைகளை அனுபவிக்கமுடியாமல் ஒடுக்கப்படுகிறார்கள் என்பது உண்மை. ஆனால் அதே சமயம் மார்க்கம் அறிந்த ஆண்களிடமும் மார்க்கம் அறிந்த பெண்களிடமும் மட்டும் என்ன வாழ்கிறதாம்?]

அஸ்ஸலாமு அலைக்கும்… 

இறைவனின் படைப்பில் ஆணும் பெண்ணும் சமம். ஆணுக்குச் சுதந்திரத்தையும் அவர்களுக்கான உரிமைகளையும் அளித்தது யார்? அதே போன்று அல்லாஹ் அளித்த சுதந்திரத்தையும் உரிமைகளையும் பெண்களுக்கும் யாரும் போனால் போகிறது என்று அளிக்கத் தேவையில்லை. அவர்களாகவே எடுத்துக் கொள்வார்கள் – அவர்களை அல்லாஹ்வுக்கு அஞ்சி அடிமைகளாக நடத்தாமல் இருந்தால்!

மார்க்கம் அறியா ஒரு குறிப்பிட்ட சத ஆண்களால் பெண்கள் தங்களின் உரிமைகளை அனுபவிக்கமுடியாமல் ஒடுக்கப்படுகிறார்கள் என்பது உண்மை. ஆனால் அதே சமயம் மார்க்கம் அறிந்த ஆண்களிடமும் மார்க்கம் அறிந்த பெண்களிடமும் மட்டும் என்ன வாழ்கிறதாம்?

முதலில் இங்கு அடிப்படையான தேவையே – மார்க்கம் வழங்கும் அடிப்படை உரிமைகளும் சுதந்திரமும் என்னென்ன என்பதை ஆண்களும் பெண்களும் அறிந்து கொள்வது தான்.

தங்களுக்கான உரிமைகள் என்னென்ன என்பதை அறியாத பெண், எப்படி தான் சுதந்திரக்காற்றை அனுபவிப்பாள்?

– அபூ சுமையா

www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 8

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb