ஆதமின் சந்ததிகளே! அல்லாஹ்வின் உதவிகளை மறந்துவிடாதீர்கள்!
பிறப்பதற்கு முன்
நீங்கள் இந்த உலகில் பிறப்பதற்காக உங்களுக்காகவே ஆண், பெண் இருவரை நியமித்தான்! அவர்களை உங்களுக்காக திருமண உறவில் இணைத்தான் அவர்கள்தான் உங்கள் பெற்றொர்! ஆனால் நீங்கள் வாலிபம் அடைந்ததும் அவர் களையும் மறந்துவிடுகிறீர்கள் உங்கள் ரப்புல் ஆலமீனையும் மறந்துவிடுகிறீர்கள்?
கருவாகிய போது
உங்கள் தாயின் கருவரையில் நீங்கள் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தீர்கள் ஆனால் உங்கள் அருமைத் தாயோ கருவைச் சுமந்துக்கொண்டு பட்ட இன்னல்களை உணர்ந்த துண்டா? நாள்தோறும் ஒருவித உடல் மாற்றம், குடும்பத்தில் அவளின் வேலைப் பளுவினால் சில நேரம் தடுமாற்றம் இறுதியில்பிரசவ வேதனை அதில் அவள் மரணத்தை தொட்டு முத்தமிடுகிறாள் அல்லாஹ் உங்கள் தாய்க்கும் உங்களுக்கும் அழகிய மறுவாழ்வு கொடுக்கிறான் நீங்கள் அந்த தாயையும் அந்த ரஹ்மானை மறந்துவிடுகிறீர்கள்!
வளரும் பருவத்தில்
என் மகன் வளர்ந்துவிட்டான் அவனுக்கு கல்வி கொடுக்க வேண்டும் என்று எண்ணி உங்கள் தந்தை ஹலாலான முறையில் பணம் சம்பாதிக்க தம் சக்திக்கு உட்பட்டு மூட்டையாவது சுமந்திருப்பார் ஆனால் நீங்களோ பள்ளிக் கூடத்தில் அமர்ந்து சக மாணவர்களுடன் விளையாடிக் கொண்டிருப்பீர்கள்! தந்தையின் வேதனை அறிந்த தாயோ மகனுக்கு தெரிந்தால் படிக்கமாட்டான் என்று மறைத்திருப்பாள் ஆனால் நீங்கள் அறிந்தும் அறியாதது போல் இருந்திருப்பீர்கள்! அப்படியிருந்தும் அல்லாஹ் உங்க ளுக்கு கல்வி ஞானத்தை கொடுத்தான் அதையும் தூக்கி வீசிவிடுகிறீர்கள்!
இளமைப் பருவத்தில்
இப்போது உங்கள் தந்தை சற்று வசதியானவராக இருந்திருப்பார் அவரிடம் அன்புச் சண்டை போட்டிருப்பீர்கள் அதனால் தம் சொந்த விருப்பத்தை உதறித்தள்ளிவிட்டு பெற்ற மகனுக்காக மோட்டார் பைக் வாங்கி கொடுத்தி ருப்பார் அதை உணராமல் ஊர் சுற்றியிருப்பீர்கள்! அல்லாஹ் உங்கள் தந்தையின் உள்ளத்தில் உம்மீது பாசத்தை போட்டானே இது நினைவுக்கு வருகிறதா?
வாலிபப் பருவத்தில்
பெற்றோரும், உடன் பிறந்தவர்களும் ஒற்றுமையாக கூடி நின்று உங்களுக்கு மணமுடிக்க உதவியிருப்பார்கள் அது நினைவுக்கு வருகிறதா? மணப்பெண்ணும் தாய்வீட்டை மறந்துவிட்டு உங்களிடம் ஏதோ அடிமைப் போல வந்திருப்பாள்! உங்கள் வீட்டை அழங்கரித்து, உங்கள் விருப்பத்தை நிறைவேற்றி உங்கள் தாய் எவ்வாறு சிரமப்பட்டு உங்களை ஈன்றெடுத்தாலோ அது போன்ற சிரமத்தை அடைந்து உங்களுக்காக பேர் சொல்லும் அழகான வாரிசை பெற்றிருப்பாள் அதையும் மறந்திருப்பீர்கள்! உங்களுக்காக உங்கள் பெற்றோர், உடன் பிறந்தோர், மனைவி, உறவினர்கள் போன்றவர்களின் உள்ளங்களில் உங்கள் ரஹ்மான் அன்பை கொட்டுகிறானே அதுகூட நினைவிற்கு வரவில்லையா!
”Jazaakallaahu khairan” www.mthasthageer.blogspot.com