அஸ்ஸாலாமு அலைக்கும்
என் பெயர் அப்துல் ஹாதி. தந்தை பெயர் நூர் முஹம்மது. நான் ஒன்பதாம் வகுப்பு வரை பள்ளிக்கூடத்தில் படித்துவிட்டு வேலூரில் அமைந்துள்ள அல்பாக்கியாத்துஸ்ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் காலடி வைத்தேன். அப்போது எனக்கு 16 வயது. அங்கே ஓதிக்கொண்டே பத்தாம் வகுப்புத் தேர்வை எழுதினேன்.
பின்னர் அண்ணாமலை பல்கலைக் கழகத் தொலைநிலைக் கல்வி மூலம் பி.ஏ. வரலாறு பயின்றேன். அத்துடனே சென்னைப் பல்கலைக் கழகத்தின் மூலம் அஃப்ஸலுல் உலமா தேர்வை முடித்துவிட்டேன். ஆக பாக்கியாத்தை விட்டு வெளியே வந்தபோது ஒரு பி.ஏ. பட்டதாரியாகவும் ஓர் ஆலிமாகவும் வெளியே வந்தேன்.
அதன் பின்னர் கல்வியின் ஆர்வத்தால் உ.பி.யில் உள்ள தேவ்பந்த் எனும் ஊரில் அமைந்துள்ள தாருல் உலூமில் ஓராண்டு கல்வி பயின்றேன். அதன் பின்னர் சென்னை வந்த நான் இங்கேயே ஒரு பள்ளியில் பணிசெய்துகொண்டே சென்னைப் பல்கலைக் கழகத்தில் முதுநிலை அரபி பயின்றேன்.அதை முடித்த நேரத்தில் பேராசிரியர்களின் ஆலோசனையாலும் தூண்டுதலாலும் இளம் முனைவருக்காக விண்ணப்பம் செய்தேன். அல்லாஹ்வின் அருளால் அதையும் முடித்துவிட்டு இன்று இதோ முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சியிலும் ஈடுபட்டுவருகிறேன்.
உலக மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் என் பணி அமையவே நான் இந்த வலைப்பூவைத் தொடங்கி உள்ளேன். தமிழ் மக்கள் அனைவரும் பயன்பெறுகிறார்கள் என்று நம்புகிறேன். அல்ஹம்துலில்லாஹ்.
அப்துல் ஹாதி
please visit:
www.hadibaquaviar.blogspot.com