[ ஒரு கிலோ சோயா வடகத்திலுள்ள புரதம்
3-5 லிட்டர் பால் அல்லது
1 கிலோ மாமிசம் அல்லது
24 முட்டைகளின் புரதத்திற்கு சமமானது.]
தற்சமயம் நம் உணவில் இடம் பிடித்துள்ள சோயா அதிகப் புரதச் சத்தும், குறைந்த கொழுப்புச் சத்தும் கொண்டுள்ளது. இதன் மூலம், அதிக புரதத்தைக் குறைந்த செலவில் அடையலாம். சோயா பொருட் களைத் தொடர்ந்து உட்கொண்டு வந்தால் இதய நோய்கள் மற்றும் புற்றுநோயை முழுமையாகக் கட்டுப்படுத்தலாம். மேலே குறிப்பிட்டுள்ள நோய்களைத் தவிர்த்து எழும்புகளை பலப்படுத்து வதுடன் பெண்கள் மற்றும் நீரழிவு நோயாளிகளுக்கு உகந்தது சோயா.
சோயாவின் மகிமையும், நன்மைகளும்
சோயாவிலுள்ள PUFA எனப்படும் Poly Unsaturated Fatty Acids இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துகிறது.
சோயாவில் கரையும் நார்ச்சத்து உள்ளதால் இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது.சோயா உணவு கெட்ட கொலஸ்டிரால் என்னும் LDL (Low Density Lipo proteins) அளவைக் குறைத்து, நல்ல கொலஸ்டிரால் எனப்படும் HDL (High Density Lipoproteins) அளவைக் கூட்டுவதன் மூலம், மாரடைப்பைக் குறைக்கிறது.
தினசரி சோயா உட்கொள்வதன் மூலம் பல்வேறு வகையான புற்று நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
முக்கியமாக நாள்பட்ட பல்வேறு நோய்களைக் கட்டுப்படுத்துவதில் சோயா பெரும் பங்காற்றுகிறது.
சோயா உணவு மாதவிடாய் நின்ற பின் உடலில் ஏற்படும் சங்கடங் களைக் குறைத்து, எலும்புகளின் சீரழிவைத் தடுக்கிறது. சோயா உடல் முதிர்ச்சியைத் தாமதப்படுத்துகிறது.
இரும்புச்சத்தும், கால்ஷியமும் நிறைந்துள்ளதால், இவ்வுணவு கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் ஏற்றது.
சோயாவில் அடங்கியுள்ள பீட்டா கரோட்டின் எனப்படும் வைட்டமின் ஏ சத்து சருமத்தை மென்மையாக்குவதுடன், கண் சம்பந்தமான முக்கியமான மாலைக் கண் நோயைத் தடுக்கிறது. குழந்தைகளுக்குத் தினமும் சோயா உணவில் சேர்க்கப்படும் போது மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் சிறந்த முன்னேற்றத்தைக் காணலாம்.
குழந்தைகளுக்கு மாற்று உணவாக சோயா தொடர்ந்து தரப்பட்டு வந்தால் உடல் எடை, உயரம் மற்றும் நினைவாற்றல் கூடுவதுடன் இரத்த நிறமிகளின் (ஹீமோகுளோபின்) எண்ணிக்கையும் உயரும்.
சோயா உணவு கால்ஷியம், மக்னீஷியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக் களைக் கொண்டிருப்பதால், பற்களை உறுதிப்படுத்துவதுடன் நரம்பு சம்பந்தமான நோய்களையும் தடுக்கிறது.
சோயா உணவு யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்தி மூட்டுவலியைக் (ஆர்த்ரைட்டிஸ்) குறைத்து சிறுநீரகக் கோளாறிலிருந்து பாதுகாக்கிறது.
ஒரு கிலோ சோயா வடகத்திலுள்ள புரதம் 3-5 லிட்டர் பால் அல்லது 1 கிலோ மாமிசம் அல்லது 24 முட்டைகளின் புரதத்திற்கு சமமானது.
அனைத்துப் பருப்புகளிலும் உள்ள புரதச் சத்தைவிட மும்மடங்கு புரதச்சத்து சோயா வடகத்திலுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கும் இது மிக அவசியமான ஊட்டச்சத்து உணவு.
எச்சரிக்கை !!!
சோயா உணவு ஆண்களில் விந்து உற்பத்தியை பாதிக்கலாம்
சோயா உணவுகளை அதிக அளவில் உட்கொள்வது ஆண்களில் விந்து உற்பத்தியை பாதிக்கலாம் என அண்மைய ஆராய்சிகள் தெரிவிக்கிறன.
சோயா உணவை உட்கொள்ளும் ஆண்களில் காணப்படும் விந்து கலங்களின் எண்ணிக்கை சோயா உணவை உட்கொள்ளாத ஆண்களிலும் குறைவாக இருப்பதாக அறியப்பட்டுள்ளது. 15 வகையான சோயா உணவுகளை கொடுத்து செய்யப்பட்ட ஆராய்ச்சியில் சோயா உணவை உட்கொண்ட ஆண்கள் 41 மில்லியன் விந்து கலங்கள்/மில்லி லீற்றர் விந்து பாயத்தில் (திரவத்தில்) காணப்படுவதாகவும், இது பொதுவாக ஆண்களில் காணப்படும் சராசரி விந்து எண்ணிக்கையான 66 மில்லியன் விந்து கலங்கள்/ மில்லிலீற்றர் விந்து பாயத்திலும் கணிசமான அளவு குறைவாகும். சோயா உணவுகளில் உள்ள ஐசோ பிளேவோன்கள் (isoflavone) இதில் முக்கிய பங்கு வகிப்பதாக சொல்லப்படுகிறது.
சோயா உணவுகளில், மற்றும் சில தாவர உணவுகளில் காணப்படும் தாவர ஈஸ்ரோஜன் (phytoestrogens) பெண்களில் காணப்படும் ஈஸ்ரோஜன் ஓமோனின் விளைவை ஒத்த விளைவை ஏற்படுத்துவதால் ஆண்களில் விந்து கலங்களின் எண்ணிக்கை, விந்து கலங்களின் அசையும் திறன், விந்தின் தரம் இறுதியில் உடலுறவுக்கான விருப்பம் என்பவற்றை பாதிப்பதாக சொல்லப்படுகிறது.
ஆனால் அண்மைய ஆய்வில் சோயா உணவு பற்றிய ஆய்வு விந்து கலங்களின் அசையும் திறன், விந்து கலங்களின் உருவ அமைப்பு, மற்றும் விந்து பாயத்தின் அளவுடன் தொடர்பை கொண்டிருக்கவில்லை என சொல்லப்படுகிறது.
மேலும் அதிக நிறையுடையவர்களிலும் விந்து கலங்களின் எண்ணிக்கை சாதாரணமானவர்களை விட குறைவாக இருப்பதாக அறியப்பட்டுள்ளது.
இந்த ஆராய்ச்சி முடிவு கடந்த மாத விஞ்ஞான/ அறிவியல் ஏடு ஒன்றில் வந்ததாகும். ஆனால் 2005 ஆம் ஆண்டில் இது பற்றி ஒரு அறிக்கை அறிவியல் கூட்டம் ஒன்றில் வாசிக்கப்பட்ட போது அந்த அறிக்கையை நிராகரித்து வட அமெரிக்க சோய உணவு கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கை இது. இந்த அறிக்கையில் இந்த விடயம் பற்றி எந்த அறிவியல் ஏடுகளிலும் ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படவில்லை எம்பதும் ஒரு முக்கிய காரணமாக அவர்களால் சொல்லப்பட்டுள்ளது (Fraser’s findings have not been published in a peer reviewed journal).
அண்மைய ஆய்வு முடிவு அங்கீகரிக்கப்பட்ட ஒரு விஞ்ஞான ஏட்டில் வெளிவந்திருக்கிறது. இதைபற்றி என்ன சொல்லப்போகிறார்கள் என தெரியவில்லை. வட அமெரிக்காவில் ஒரு முக்கிய வியாபார பயிராக விளங்கிவரும் சோயாவினால் வரக்கூடிய பாதகமான விளைவுகள் பற்றி அதிகம் ஆய்வு செய்யப்படாமைக்கு பொருளாதார ரீதியில் பலமான இப்படியான அமைப்புக்களும் காரணமாக இருக்கலாம். ஏன் எனில் சோய உணவின் நன்மைகள் பற்றிய ஆய்வுகளே அதிகம் வெளிவந்து இருக்கிறன/வெளிவருகிறன.
சோயா உற்பத்தி
ஹார்டா (மத்திய பிரதேசம்): மத்திய பிரதேசத்தில் மழை சரியான பருவத்தில் பெய்ததாலும், பருவநிலை சாதகமாக இருப்பதால் சோயா உற்பத்தி அமோகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிபறது.
இந்தியாவில் சோயா உற்பத்தியில் மத்திய பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இந்த மாநிலத்தில் ஹார்டா மாவட்டத்தில் அதிக அளவு சோயா உற்பத்தியாகிறது. இந்த மாவட்டம் மத்திய பிரதேசத்தின் பஞ்சாப் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் பஞ்சாப் மாநிலம் போல, இங்கும் உணவு தானிய உற்பத்தி அதிக அளவு உள்ளது.
கோழி தீவனம் உட்பட கால்நடை தீவனம் தயாரிக்க முக்கிய பொருளாக உள்ள சோயா விலையை பொருத்தே, முட்டை, கோழி இறைச்சி விலையும் இருக்கும். அத்துடன் சோயா இருந்து சமையல் எண்ணெய் தயாரிக்கவும் பயன்படுகிறது.
மத்திய பிரதேச மாநிலத்தில் ஹார்டா மாவட்டத்தில் கரிப் பருவத்தில் 1 லட்சத்து 77 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சோயா, எண்ணெய் வித்துக்கள் பயிரிடப்பட்டுள்ளன. இதில் 1 லட்சத்து 65 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சோயா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் இருந்து 2 லட்சத்து 31 ஆயிரம் டன் சோயா உற்பத்தியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி ஆகியவை 12,370 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. சென்ற வருடம் 1 லட்சத்து 64 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் சோயா சாகுபடி செய்யப்பட்டது. இதில் இருந்து 2 லட்சத்து 10 ஆயிரம் டன் உற்பத்தியானது.
சோயா பீன் டிரிங்க்
தேவையான பொருட்கள்:
சோயா பீன் பவுடர் (டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) – 100 கிராம்
ஆவின் மில்க் பவுடர் – 100 கிராம்
பாதாம், பிஸ்தா – 50 கிராம்
சர்க்கரை – 50 கிராம்
ஏலக்காய் – 2
செய்முறை:
சோயா பீன் பவுடர், மில்க் பவுடர் இரண்டையும் கலந்து வைத்துக் கொள்ளவும். பாதாம், பிஸ்தா, ஏலக்காய் மூன்றையும் கடாயில் வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். சர்க்கரையையும் பொடித்து எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
ஸ்பெஷல்:
இரவு வெகுநேரம் கண் விழித்துப் படிப்பவர்கள் அரை டம்ளர் கொதி நீரில் ஒரு டீஸ்பூன் இந்தப் பொடியைக் கலந்து குடித்துப் பாருங்கள். தூக்கம் பறந்தோடி விடும்.
சோயா சப்பாத்தி
சோயா சப்பாத்தி, மிக சத்தான உணவு. வீட்டில் உள்ள அனைவருக்கும் ஏற்றது.
முதலில் சோயாவின் சத்துக்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். சோயாவில் அதிகமாக புரதம், மெக்னீசியம், நார்ச்சத்து (fibre), கால்சியம்உள்ளது. இதில் L.d.L எனப்படும், Low Density Lipids என்கின்ற கெட்டகொலஸ்ட்ராலை நம் உடலில் சேர விடாது. இதனால் குழந்தைகள், பெண்கள்மற்றும் பெரியவர்கள் அனைவருக்கும் ஏற்றது இந்த சோயா.சோயா கடைகளில் பல வடிவங்களில் கிடைக்கிறது. சோயா பீன்ஸ், சோயாபால், சோயா உருண்டை
(soya chunk), எண்ணெய் , சோயா பனீர், சோயா மாவு, சோயா குருனை மற்றும் பல வகைகளில் கிடைக்கிறது.
தேவையானவை:
சோயா மாவு – 1 cup
கோதுமை மாவு -1 cup
சோம்பு – 1 மே.க
மிளகாய்தூள்-1 மே.க
தேவையான அளவு உபபு
நெய் – 3 மே.க.
சோயா சப்பாத்தி செய்முறை
நெய் தவிர எல்லா பொருள்களையும் சிறிதுதண்ணீர் விட்டு நன்றாக சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ள வேண்டும்.
இதை ஒன்று முதல் இரண்டு மணி நேரம் ஊற விடவும்.
பின்னர் இதில் சிறிது எடுத்து சப்பதியாக இட்டு சூடான சப்பாத்தி கல்லில் போட்டு, நெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
சூடான , சுவையான சோயா சப்பாத்தி தயார்.
குறிப்பு: இங்கு சோயா சப்பாத்தி செய்ய சோயா மாவு இல்லை என்றால் அதற்கு பதிலாக சோயா உருண்டைகளை ஊற வைத்து அரைத்த விழுது ஒரு கப் சேர்த்துக்கொள்ளலாம்.
சப்பாத்திக்கு கோதுமை மாவு அரைக்கும் பொழுது ஒரு கிலோ கோதுமைக்கு 150 கிராம் சோயா சேர்த்து அரைத்து வைத்து கொள்ளலாம். அந்த மாவில் சப்பாத்தி செய்தால் சப்பாத்தி ருசியாக இருக்கும்.
தொகுப்பு: அபூ ஸஃபிய்யாஹ்