‘நான் ஒரு குச்சியைக் கொண்டு பல் துலக்குவதாகக் (கனவு) கண்டேன். அப்போது என்னிடம் இரண்டு மனிதர்கள் வந்தார்கள். அவ்விருவரில் ஒருவர் வயதில் பெரியவராக இருந்தார். அவ்விருவரில் வயதில் சிறியவரிடம் பல் துலக்கும் குச்சியைக் கொடுத்தேன். அப்போது ‘வயதில் மூத்தவரை முற்படுத்துவீராக!’ என்று என்னிடம் கூறப்பட்டது. உடனே அவ்விருவரில் வயதில் பெரியவருக்கு அக்குச்சியைக் கொடுத்தேன்’ என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்”. (புகாரி: 246 இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு).
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு விஷயத்தை பேசுகிறார்கள் என்றால், அதை (வார்த்தை வார்த்தையாக, எழுத்து எழுத்தாகக் கணக்கிட்டு) எண்ணக் கூடியவர் எண்ணியிருந்தால், ஒன்று விடாமல் எண்ணியிருக்கலாம். (அந்த அளவிற்கு நிறுத்தி நிதானமாக, தெளிவாகப் பேசி வந்தார்கள்.) (புகாரி : 3567 ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா.)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருவர் மற்றொரு மனிதரைப் புகழ்ந்து கொண்டிருப்பதையும் அவரை மிகைப்படுத்தி (ஒரேயடியாக உயர்த்திப்) புகழ்ந்து கொண்டிருப்பதையும் செவியுற்றார்கள். உடனே, ‘நீங்கள் அந்த மனிதரின் முதுகை நாசமாக்கி விட்டீர்கள் – அல்லது துண்டித்து விட்டீர்கள்” என்று கூறினார்கள். (புகாரி : 2663 அபூ மூஸா ரலியல்லாஹு அன்ஹு.)
ஒருவர் இன்னொரு மனிதரைப் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் புகழ்ந்து பேசினார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘அழிந்து போவீர். உம் தோழரின் கழுத்தை நீர் துண்டித்து விட்டீர். உம் தோழரின் கழுத்தை நீர் துண்டித்து விட்டீர்” என்று (பலமுறை) கூறினார்கள். பிறகு, ‘தன் சகோதரனைப் புகழ்ந்தே ஆகவேண்டும் என்ற நிலையில் உங்களில் இருப்பவர், இன்னாரை நான் இப்படிப்பட்டவர் என்று எண்ணுகிறேன். அல்லாஹ்வே அவருக்குப் போதுமானவன். அல்லாஹ் (உண்மை நிலையை அறிந்தவனாக) இருக்க, அவனை முந்திக்கொண்டு நான் யாரையும் தூய்மையானவர் என்று கூற மாட்டேன். அவரை இன்னின்ன விதமாக எண்ணுகிறேன்” என்று கூறட்டும். அந்தப் பண்பை அவர் அந்த மனிதரிடமிருந்து அறிந்திருந்தால் மட்டுமே இப்படிக் கூறட்டும்” என்றார்கள். (புகாரி : 2662 அபூபக்ரா ரலியல்லாஹு அன்ஹு).
அல்லாஹ்விடத்தில் தந்தைக்காக பிள்ளை பாவமன்னிப்புக் கோரவேண்டும்
إِنَّ الرَّجُلَ لَتُرْفَعُ دَرَجَتُهُ فِي الْجَنَّةِ فَيَقُولُ أَنَّى هَذَا فَيُقَالُ بِاسْتِغْفَارِ وَلَدِكَ لَكَ
ஒரு மனிதருக்கு சொர்க்கத்தில் நிச்சயமாக அந்தஸ்த்துக்கள் உயர்த்தப்படும். அப்போது அவர், இது எவ்வாறு எனக்குக் கிடைத்தது? என்று ஆச்சரியப்பட்டுக் கேட்பார். இது உனக்காக உன்னுடைய மகன் பாவமன்னிப்புத் தேடியதனால் கிடைத்தது என்று அவருக்குக் கூறப்படும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு, நூற்கள் : அஹ்மத், இப்னுமாஜா 3650)
ஒரு மனிதருக்கு சொர்க்கத்தில் நிச்சயமாக அந்தஸ்த்துக்கள் உயர்த்தப்படும். அப்போது அவர், இது எவ்வாறு எனக்குக் கிடைத்தது? என்று ஆச்சரியப்பட்டுக் கேட்பார். இது உனக்காக உன்னுடைய மகன் பாவமன்னிப்புத் தேடியதனால் கிடைத்தது என்று அவருக்குக் கூறப்படும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு, நூற்கள்: அஹ்மத், இப்னுமாஜா 3650)