பல ஆண்டுகளாக மூளை எப்படி சிந்தின்கின்றது என்பது பற்றி ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. இதன் நோக்கம் மூளையைபோல் சிந்திக்கும் இயந்திரத்தை உருவாக்குவது.அதற்காக படிகளாக முதலில் எலியின் மூளையை போல் சிந்திக்ககூடிய சூப்பர் கம்ப்யூட்டர் ஒன்றினை உருவாக்கினர்.
இவ்வரிசையில் பூனையின் மூளையை போல் சிந்திக்க கூடிய சூப்பர் கம்ப்யூட்டர் ஒன்றை தற்போது IBM நிறுவனம் உருவாக்கி உள்ளது. இக்கணினி உருவாக்க பயன்படுத்தப்பட்ட Processor மொத்தம் 1,47,456 மற்றும் அதன் நினைவகம் 144 Terabyte (1 Terabyte(TB) = 1024 GB)) நாம் பயன்படுத்தும் கணினியை விட இலட்சம் மடங்கு சக்தி வாய்ந்தது இந்த சூப்பர் கம்ப்யூட்டர்.இவ்வளவு சக்தி வாய்ந்த கம்ப்யூட்டர் பூனையின் மூளையை விட நூறு மடங்கு குறைவான வேகத்திலே யோசிக்கின்றது. ஆனாலும் இத்துறையில் பெரும் முன்னேற்றம் என்று கூறுகின்றனர்.
இதற்கே இவ்வளவு சக்தி வாய்த்த கணினி என்றால், மனித மூளைக்கு நிகரான சிந்திக்கும் திறனை கொண்ட கணினியை உருவாக்குவது எவ்வளவு கடினம் என நினைத்து பாருங்கள். இதுவரை 1% மட்டுமே மனித மூளையை போல சிந்திக்கும் சூப்பர் கம்ப்யூட்டர் உள்ளது.
(மூளை ஒரு சிக்கலான இணைப்பு அதிலுள்ள நூறு கோடி நியூரான் மற்றும் அதை இணைக்கக் கூடிய ஆயிரம் கோடி நரம்பு முனைகளையும் உள்ளடக்கியது. இதில் மூளையில் சிந்திக்கும் பகுதியை Cerebral Cortex என்று அழைகின்றனர்.)
”Jazaakallaahu khairan” Posted by Ahamed Imam
source : Times of India