க’அபா காட்சிக்கு நிகர்….!
நிலையற்ற உலகில் காணுகின்ற காட்சியெல்லாம்
மலைக்க வைத்திடினும் மனதைக் கவர்ந்திடினும்
மலையருகே அமைந்துள்ள மக்கா மாநகரின்
க’அபா ஆலயத்தை அலை போன்ற கூட்டத்தினர்
வலம் வருகின்ற காட்சிக்கு நிகர்…..
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நவின்றார்கள்:
”மூன்றை கண்ணால் காண்பது பெரும் பாக்கியம்:
1. க’பாவின் காட்சி,
2. திருக்குர் ஆனின் எழுத்துக்கள்,
3. பெற்ற தாயின் திருமுகம்.”