Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

அல்லாஹ்வை நினைவு கூர்ந்து அதிகமாக திக்ர் செய்வோம்

Posted on November 26, 2009 by admin

 

( لَقِيتُ إِبْرَاهِيمَ لَيْلَةَ أُسْرِيَ بِي فَقَالَ يَا مُحَمَّدُ أَقْرِئْ أُمَّتَكَ مِنِّي السَّلَامَ وَأَخْبِرْهُمْ أَنَّ الْجَنَّةَ طَيِّبَةُ التُّرْبَةِ عَذْبَةُ الْمَاءِ وَأَنَّهَا قِيعَانٌ وَأَنَّ غِرَاسَهَا سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ )

என்னை இரவில் அழைத்துச் செல்லப்பட்ட -மிஃராஜ் பயணத்தின்- போது இப்ராஹீம் (அலை) அவர்களை சந்தித்தேன். அவர்கள் என்னிடம், முஹம்மதே! உங்களுடைய சமுதாயத்தினருக்கு என்னுடைய ஸலாமைக் கூறுங்கள்! நிச்சயமாக மிகத் தூய்மையான மணலையும் சுவையான தண்ணீரையும் கொண்ட சொர்க்கத்தில் பொட்டல் வெளியும் உள்ளது. அதில் நடவேண்டியது சுப்ஹானல்லாஹ், வல்ஹம்து லில்லாஹ், வலா இலாஹ இல்லல்லாஹ், வல்லாஹு அக்பர் என்பதாகும் என்பதையும் அவர்களுக்கு அறிவித்துவிடுங்கள்! என்று கூறியதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்தார்கள். (அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதீ 3384)

( مَنْ قَالَ سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ وَبِحَمْدِهِ غُرِسَتْ لَهُ نَخْلَةٌ فِي الْجَنَّةِ )

ஸுப்ஹானல்லாஹி அளீம் வபி ஹம்திஹீ என யாரேனும் கூறினால் அவருக்காக சொர்க்கத்தில் ஒரு மரம் நடப்படுகிறது என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ 3386)

(عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِهِ وَهُوَ يَغْرِسُ غَرْسًا فَقَالَ يَا أَبَا هُرَيْرَةَ مَا الَّذِي تَغْرِسُ قُلْتُ غِرَاسًا لِي قَالَ أَلَا أَدُلُّكَ عَلَى غِرَاسٍ خَيْرٍ لَكَ مِنْ هَذَا قَالَ بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ قُلْ سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ يُغْرَسْ لَكَ بِكُلِّ وَاحِدَةٍ شَجَرَةٌ فِي الْجَنَّةِ )

பயிரை நட்டிக் கொண்டிருந்த அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களை கடந்து சென்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அபூஹுரைராவே! என்ன ஊன்றுகிறீர்? என்று கேட்டார்கள். அதற்கவர்கள், நான் எனக்காக ஒரு கன்றை ஊன்றுகிறேன் என்றார்கள். இதனை விட உமக்குச் சிறந்த பயிரை உமக்கு நான் அறிவிக்கட்டுமா? என்று கேட்க, அறிவியுங்கள்! அல்லாஹ்வின் தூதரே! என்றார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுப்ஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், லா இலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர் என்று கூறுவீராக! இவை ஒவ்வொன்றிற்கும் சொர்க்கத்தில் ஒரு மரம் நடப்படும் என்றார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னுமாஜா 3797)

கடமையான தொழுகைக்குப் பிறகும்

தூங்கச் செல்லும் போதும்

ஸுப்ஹானல்லாஹ்,

அல்ஹம்து லில்லாஹ்,

அல்லாஹு அக்பர்

என்ற திக்ர்களை கூறுதல்.

(عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِي اللَّهم عَنْهم قَالَ جَاءَ الْفُقَرَاءُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا ذَهَبَ أَهْلُ الدُّثُورِ مِنَ الْأَمْوَالِ بِالدَّرَجَاتِ الْعُلَا وَالنَّعِيمِ الْمُقِيمِ يُصَلُّونَ كَمَا نُصَلِّي وَيَصُومُونَ كَمَا نَصُومُ وَلَهُمْ فَضْلٌ مِنْ أَمْوَالٍ يَحُجُّونَ بِهَا وَيَعْتَمِرُونَ وَيُجَاهِدُونَ وَيَتَصَدَّقُونَ قَالَ أَلَا أُحَدِّثُكُمْ إِنْ أَخَذْتُمْ أَدْرَكْتُمْ مَنْ سَبَقَكُمْ وَلَمْ يُدْرِكْكُمْ أَحَدٌ بَعْدَكُمْ وَكُنْتُمْ خَيْرَ مَنْ أَنْتُمْ بَيْنَ ظَهْرَانَيْهِ إِلَّا مَنْ عَمِلَ مِثْلَهُ تُسَبِّحُونَ وَتَحْمَدُونَ وَتُكَبِّرُونَ خَلْفَ كُلِّ صَلَاةٍ ثَلَاثًا وَثَلَاثِينَ فَاخْتَلَفْنَا بَيْنَنَا فَقَالَ بَعْضُنَا نُسَبِّحُ ثَلَاثًا وَثَلَاثِينَ وَنَحْمَدُ ثَلَاثًا وَثَلَاثِينَ وَنُكَبِّرُ أَرْبَعًا وَثَلَاثِينَ فَرَجَعْتُ إِلَيْهِ فَقَالَ تَقُولُ سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَاللَّهُ أَكْبَرُ حَتَّى يَكُونَ مِنْهُنَّ كُلِّهِنَّ ثَلَاثًا وَثَلَاثِينَ )

வசதிபடைத்தோர் தங்கள் பொருளாதாரத்தின் மூலம் -சொர்க்கத்தில்- உயர்ந்த பதவிகளையும் நிரந்தர இன்பங்களையும் பெற்றுத் தரும் காரியங்களில் முன்னேறிச் செல்கின்றார்கள். நாங்கள் தொழுவது போன்று அவர்களும் தொழுகின்றார்கள், நாங்கள் நோன்பு நோற்பது போன்று அவர்களும் நோன்பு நோற்கின்றார்கள், அவர்களுக்கு பொருளாதார வசதியிருப்பதினால் அதன் மூலம் ஹஜ் செய்கின்றார்கள், உம்ராச் செய்கின்றார்கள், அறப்போர் புரியச் செல்கின்றார்கள், தர்மம் செய்கின்றார்கள்! என்று ஏழைகள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூறினார்கள்.

அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நான் உங்களுக்கு ஒன்றை அறிவிக்கட்டுமா? அதன்படி நீங்கள் செயல்பட்டால் -நன்மைகளில்- உங்களை முந்தி விட்டவர்களை நீங்கள் சென்றடைந்துவிடுவீர்கள். உங்களுக்கு பின்னுள்ளவர் எவரும் உங்களை வந்தடைய முடியாது. உங்களுடன் வாழ்பவர்களில் இதனைப் போன்று செயல்படுபவர்களைத் தவிர உள்ள அனைவர்களை விடவும் நீங்களே சிறந்தவர்களாவீர்கள்!

அது என்னவெனில்: -கடமையான- ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் 33 தடவை ஸுப்ஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், அல்லாஹு அக்பர் என்று கூறுங்கள் என்றார்கள். இதில் எங்களுக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. 33 தடவை ஸுப்ஹானல்லஹ், 33 தடவை அல்ஹம்து லில்லாஹ், 34 தடவை அல்லாஹுஅக்பர் என்று கூறுவோம் என எங்களில் சிலர் கூறினர்.

நான் -நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் – அவர்களிடம் திரும்பச் சென்று விளக்கம் கேட்டேன். அதற்கவர்கள், ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி வல்லாஹு அக்பர் என்று -33 தடவை- கூறு! இவ்வாறு கூறுவதினால் அவை ஒவ்வொன்றையும் 33 தடவை கூறியதாகிவிடும் என்றார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூற்கள் : புகாரீ 798, முஸ்லிம்)

( خَصْلَتَانِ أَوْ خَلَّتَانِ لَا يُحَافِظُ عَلَيْهِمَا عَبْدٌ مُسْلِمٌ إِلَّا دَخَلَ الْجَنَّةَ هُمَا يَسِيرٌ وَمَنْ يَعْمَلُ بِهِمَا قَلِيلٌ يُسَبِّحُ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ عَشْرًا وَيَحْمَدُ عَشْرًا وَيُكَبِّرُ عَشْرًا فَذَلِكَ خَمْسُونَ وَمِائَةٌ بِاللِّسَانِ وَأَلْفٌ وَخَمْسُ مِائَةٍ فِي الْمِيزَانِ وَيُكَبِّرُ أَرْبَعًا وَثَلَاثِينَ إِذَا أَخَذَ مَضْجَعَهُ وَيَحْمَدُ ثَلَاثًا وَثَلَاثِينَ وَيُسَبِّحُ ثَلَاثًا وَثَلَاثِينَ فَذَلِكَ مِائَةٌ بِاللِّسَانِ وَأَلْفٌ فِي الْمِيزَانِ فَلَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ يَعْقِدُهَا بِيَدِهِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ كَيْفَ هُمَا يَسِيرٌ وَمَنْ يَعْمَلُ بِهِمَا قَلِيلٌ قَالَ يَأْتِي أَحَدَكُمْ يَعْنِي الشَّيْطَانَ فِي مَنَامِهِ فَيُنَوِّمُهُ قَبْلَ أَنْ يَقُولَهُ وَيَأْتِيهِ فِي صَلَاتِهِ فَيُذَكِّرُهُ حَاجَةً قَبْلَ أَنْ يَقُولَهَا )

இரண்டு நல்லறங்கள் உள்ளன. அதனை முறையாகக் கடைபிடிக்கும் இறையடியான் நிச்சயமாக சொர்க்கத்தில் நுழைவான். அவ்விரண்டும் மிக எளிதானது. எனினும் அதனைக் கடைபிடிப்பவர் மிகக் குறைந்த எண்ணிக்கையினரே! –

அதில் ஒன்று : கடமையான- ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் 10 தடவை ஸுப்ஹானல்லாஹ் என்றும் 10 தடவை அல்ஹம்து லில்லாஹ் என்றும் 10 தடவை அல்லாஹு அக்பர் என்றும் கூறவேண்டும். இவ்வாறு -ஐவேளைத் தொழுகையில்- 150 தடவை மொழிவது மறுமைத் தராசில் 1500 நன்மைகளைப் பெற்றுத் தருகின்றன.

மற்றொன்று : உறங்குவதற்காகப் படுக்கையில் சாயும் போது 34 தடவை அல்லாஹு அக்பர் என்றும் 33 தடவை அல்ஹம்து லில்லாஹ் என்றும் 33 தடவை ஸுப்ஹானல்லாஹ் என்றும் கூறவேண்டும். இவ்வாறு மொழிந்த 100 -திக்ர்கள்- நன்மைத் தராசில் 1000 நன்மைகளைப் பெற்றுத் தருகின்றன என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அப்போது நபித் தோழர்கள், ‘அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே! இவ்விரண்டும் மிக எளிதாக இருக்கும் போது அதனைக் கடைபிடிப்பவர் ஏன் மிகக் குறைவாக உள்ளனர்?’ என்று கேட்டனர். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘உறங்கச் செல்லும் ஒருவரிடம் அவன் -ஷைத்தான்- வந்து இதனைக் கூறுவதற்கு முன் அவரை தூங்கவைத்து விடுகிறான். அதுபோல் அவர் தொழுது கொண்டிருக்கும் போதே அவரிடம் வந்து இதனைக் கூறுவதற்கு முன்னரே வேலைகளை நினைவூட்டி -எழுந்திருக்கச் செய்து- விடுகிறான்’ என்று பதிலளித்தார்கள். மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கை விரல்களால் -தஸ்பீஹ் எண்ணியதை- நான் கண்டேன்.(அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரளியல்லாஹு அன்ஹு, நூற்கள் : அஹ்மத், அபூதாவூத் 4404, திர்மிதீ, நஸாயீ, இப்னு ஹிப்பான்)

உளுச் செய்த பின் கூறும் திக்ர்

( . . . مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ يَتَوَضَّأُ فَيُبْلِغُ أَوْ فَيُسْبِغُ الْوَضُوءَ ثُمَّ يَقُولُ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ إِلَّا فُتِحَتْ لَهُ أَبْوَابُ الْجَنَّةِ الثَّمَانِيَةُ يَدْخُلُ مِنْ أَيِّهَا شَاءَ )

உங்களில் ஒருவர் முறையாக உளுச் செய்து விட்டு, பிறகு அஷ்ஹது அன் லாயிலாஹ இல்லல்லாஹ், வஹ்தஹு லா ஷரீக்க லஹு, வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு என்று கூறுவரானால் சொர்க்கத்தின் எட்டு வாயில்களும் அவருக்காக திறக்கப்படுகின்றன. அதில் அவர் விரும்பியவற்றில் நுழைந்து கொள்ளலாம் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : உக்பா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம் 345)

லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்

( . . يَا عَبْدَ اللَّهِ بْنَ قَيْسٍ أَلَا أَدُلُّكَ عَلَى كَنْزٍ مِنْ كُنُوزِ الْجَنَّةِ فَقُلْتُ بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ قُلْ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ )

அப்துல்லாஹ் இப்னு கைஸே! சொர்க்கத்தின் பொக்கிஷங்களில் ஒரு பொக்கிஷத்தை உமக்கு நான் அறிவிக்கட்டுமா? என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள். அதற்கு நான், அல்லாஹ்வின் தூதரே! அறிவியுங்கள்! என்றேன். அதற்கவர்கள், லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்று கூறு! என்றார்கள். (அறிவிப்பவர் : அபூ மூஸா ரளியல்லாஹு அன்ஹு, நூற்கள் : புகாரீ, முஸ்லிம் 4873)

(أوصاني خليلي أن أكثر من قول لاحول ولا قوة إلا بالله فإنها كنز من كنوز الجنة )

லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்பதை அதிகமாகக் கூறுமாறு என்னுடைய உற்றநேசர் (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்) எனக்கு உபதேசம் செய்தார்கள். ஏனெனில் நிச்சயமாக அது சொர்க்கத்துப் பொக்கிஷங்களில் ஒரு பொக்கிஷமாகும். (அறிவிப்பவர் : அபூதர் ரளியல்லாஹு அன்ஹு, நூற்கள் : அஹ்மத், இப்னு ஹிப்பான்)

( مَنْ دَخَلَ السُّوقَ فَقَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيتُ وَهُوَ حَيٌّ لَا يَمُوتُ بِيَدِهِ الْخَيْرُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ كَتَبَ اللَّهُ لَهُ أَلْفَ أَلْفِ حَسَنَةٍ وَمَحَا عَنْهُ أَلْفَ أَلْفِ سَيِّئَةٍ وَرَفَعَ لَهُ أَلْفَ أَلْفِ دَرَجَةٍ ) وفي رواية (وَبَنَى لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ )

கடை வீதியில் நுழையும் ஒருவர், லா யிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து, யுஹ்யீ வயுமீத்து, வஹுவ ஹைய்யுன் லாயமூத்து, பியதிஹில் கைரு, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர் எனக் கூறுவரானால் அவருக்கு 10 லட்சம் நன்மைகளை அல்லாஹ் எழுதுகிறான். 10 லட்சம் தீமைகளை அல்லாஹ் அழிக்கின்றான். 10 லட்சம் அந்தஸத்துகளை உயர்த்துகிறான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். மற்றொரு அறிவிப்பில்- அவருக்கு சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டிக் கொடுக்கின்றான் என்றும் வந்துள்ளது.(அறிவிப்பவர் : உமர் இப்னு கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு, நூற்கள் : திர்மிதீ 3350-3351, ஹாகிம்)

 ”Jazaakallaahu khairan” nouralislam.org/tamil

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 5 = 1

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb