சொர்க்கத்தை வேண்டி துஆச் செய்யவேண்டும்
(مَنْ سَأَلَ اللَّهَ الْجَنَّةَ ثَلَاثَ مَرَّاتٍ قَالَتِ الْجَنَّةُ اللَّهُمَّ أَدْخِلْهُ الْجَنَّةَ وَمَنِ اسْتَجَارَ مِنَ النَّارِ ثَلَاثَ مَرَّاتٍ قَالَتِ النَّارُ اللَّهُمَّ أَجِرْهُ مِنَ النَّارِ )
சொர்க்கத்தைத் தரவேண்டுமென மூன்று தடவை யாரேனும் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தால், யாஅல்லாஹ்! அவரை சொர்க்கத்தில் நுழையச் செய்துவிடுவாயாக! என்று சொர்க்கம் கூறுகிறது. நரகத்தை விட்டும் காப்பாற்ற வேண்டுமென மூன்று தடவை யாரேனும் –அல்லாஹ்விடம்– பிரார்த்தித்தால், யாஅல்லாஹ்! நரகை விட்டும் இவரைக் காப்பாற்றுவாயாக! என நரகம் கூறுகிறது என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: திர்மிதீ 2495, நஸாயீ, இப்னுமாஜா, ஹாகிம்)
உண்மையையே பேசவேண்டும். பொய் பேசக் கூடாது
( إِنَّ الصِّدْقَ يَهْدِي إِلَى الْبِرِّ وَإِنَّ الْبِرَّ يَهْدِي إِلَى الْجَنَّةِ وَإِنَّ الرَّجُلَ لَيَصْدُقُ حَتَّى يَكُونَ صِدِّيقًا وَإِنَّ الْكَذِبَ يَهْدِي إِلَى الْفُجُورِ وَإِنَّ الْفُجُورَ يَهْدِي إِلَى النَّارِ وَإِنَّ الرَّجُلَ لَيَكْذِبُ حَتَّى يُكْتَبَ عِنْدَ اللَّهِ كَذَّابًا )
நிச்சயமாக உண்மை நல்லவைகளின் பக்கம் வழிகாட்டுகிறது. நிச்சயமாக நல்லவை சொர்க்கத்தின் பக்கம் வழிகாட்டுகிறது. உண்மை பேசும் மனிதன் உண்மையாளனாகிவிடுகிறான். நிச்சயமாக பொய் தீமையின் பக்கம் வழிகாட்டுகிறது. நிச்சயமாக தீமை நரகத்தின் பக்கம் வழிகாட்டுகிறது. நிச்சயமாக பொய்யுரைப்பவன் அல்லாஹ்விடத்தில் பொய்யன் என்று எழுதப்படுகிறான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரீ 5629, முஸ்லிம்)
வீண் தர்க்கத்தில் ஈடுபடக் கூடாது
( أَنَا زَعِيمٌ بِبَيْتٍ فِي رَبَضِ الْجَنَّةِ لِمَنْ تَرَكَ الْمِرَاءَ وَإِنْ كَانَ مُحِقًّا وَبِبَيْتٍ فِي وَسَطِ الْجَنَّةِ لِمَنْ تَرَكَ الْكَذِبَ وَإِنْ كَانَ مَازِحًا وَبِبَيْتٍ فِي أَعْلَى الْجَنَّةِ لِمَنْ حَسَّنَ خُلُقَهُ )
உரிமையிருந்தும் தர்க்கம் செய்வதை விட்டுவிட்டவனுக்கு சொர்க்கத்தின் ஓரத்தில் ஒரு வீட்டை பெற்றுத் தரவும், கேலியாகக் கூட பொய் பேசாதவனுக்கு சொர்க்கத்தின் நடுப்பகுதியில் ஒரு வீட்டைப் பெற்றுத் தரவும,; நற்குணம் உடையவனுக்கு சொர்க்கத்தின் உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் பெற்றுத் தரவும் நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஉமாமா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : அபூதாவூத் 4167)
” Jazaakallaahu khairan ” nouralislam.org