இதுவா வாழ்க்கை? இதுவல்லவே வாழ்க்கை!
நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை
சவால்நிறைந்த வாழ்க்கை
ஊர்ஜிதமில்லா வாழ்க்கை,
நிரந்தரமில்லா வாழ்க்கை,
பிரச்சனைகளுடனான வாழ்க்கை
ஏற்றத்தாழ்வுள்ள வாழ்க்கை.
வியாதி உடனான வாழ்க்கை,
பொறாமையாளர்கள் வீழ்த்த நினைக்கும் வாழ்க்கை
முடிந்துபோகும் வாழ்க்கை
மொத்தத்தில் மேல்காணப்படும் ஏதாவதொன்றுடனே
மடியும் வாழ்க்கை
முடியும் வாழ்க்கை!
ஆஹா இத்தனை பிரச்சனைகளிலும் மனிதன் தான் என்னவோ – பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரமாம் ஆண்டு வாழ்பவனை போலல்லவா அவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
இப்படியே ஓடிக்கொண்டிருக்கும் அவனது வாழ்க்கை திடீரென்று ஒருநாள் நிறுப்படுகின்றபோது, அவன் கட்டிய பல்லாண்டு கால கனவு தவிடு பொடியாகின்றது.
அக்கடைசி நிமிடத்தில் விழித்து கொள்கிறான்,.தன் சொத்து முழுவதும் எழுதி தரவும் முன்வருகிறான். ஆனால் அவனது ஆசையை நிறைவேற்ற யாரும் முன்வரமாட்டார்கள்.
ஏனெனில் இந்த சந்தர்ப்பத்தை தானே மற்றவர்கள் எதிர்பார்த்துகொண்டிருந்தார்கள்.
படித்தவர்களும் பண்பட்டவர்களும் பண்டிதர்களும் அனுபவஸ்தர்களும் படிக்கமறந்த கடைசிபாடம் அல்லவாஇது? இப்பாடத்தில் முதல்கோணல் முற்றும் கோணலல்ல! முடிவுக்கோணலே முழுகோணல்!
இத்தேர்வில் தவறியோர் மறுதேர்வு எழுத அணுமதியில்லை
மறு நுழைவுக்கும் வழியும் இல்லை.
கை பிசைந்து நிற்கும் அவலநிலை.
வாழ்க்கையின் வெளிச்சத்திலிருந்தவர்களுக்கு
வாழ்க்கையே இருட்டாகி போன நிலை,
உதவியற்ற உதவாக்கரை நிலை
நிலைதடுமாறிப்போன நிலை.
நிலையென்று நிணைத்தமைக்காக
நித்தம் வருந்துகின்ற நிலை.
இந்த இழிநிலைபற்றி யாரும் சொல்லவில்லையே
என அங்கலாய்க்க முடியாத நிலை.
வருத்தப்பட்டும் தவிர்க்க வழியில்லா நிலை
மேலும் வருத்தப்பட்டும் ”முடிவு” தேடமுடியா நிலை
மொத்தத்தில் எந்தவழியும் இல்லாநிலை
இழிநிலை.
இந்நிலை.?
நிலைதடுமாறியோருக்கு கண்டிப்பாக வரும் நிலை
என்னதான் செய்வது?
செய்யலாமே நிறைய
தற்போதைய உன்வாழ்க்கைதான் மறு[மை]வாழ்வுக்கு
மருந்து
பரிகாரம்.
பலன்.
முன் ஜாக்கிரதை.
படிப்பு
பாடம்
எல்லாம்.
ஆம் அனைத்தும் குர்ஆனில் சொல்லப்பட்டதுதானே
எங்கே சென்று இருந்தாய் நீ
மறந்தாய்
மறக்கப்படுகிறாய்
மறுத்தாய்
மறுக்கப்படுகிறாய்
படித்த கட்டுரைகளுடன் குர் ஆன் வசனத்தை ஒப்பிட்டு பார்
வாழ்க்கையின் பாடத்தில் வழுக்கிவிழுந்தவர்கள்
மகிழ்ச்சியைதேடி அதை தொலைத்தவர்கள்
பலனென்று எண்ணி படுகுழியில் விழுந்தவர்கள்
உதவி செய்ய ஆளிருந்தும் உதவி பெறமுடியாதவர்கள்
மொத்தத்தில் தப்புக்கணக்கு போட்டவர்கள்
உன் குரல் கூட கூப்பாடாய் அல்லவா மொழியப்படுகிறது.
source: http://tamilhome.blogspot.in/2009/08/blog-post.html