முஹம்மது சிராஜ்
[ அல்லாஹ் உறுவாக்கிய இஸ்லாமிய மார்க்கத்தை பிளவுபடுத்த யாருக்கு அதிகாரமிருக்கிறது! அல்லாஹ் விதித்த ஒற்றுமை எனும் சட்டத்தை மீற யாருக்குக்கேனும் தனி சுநத்திரம் அளிக்கப்பட்டுள்ளதோ?
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும அவர்களே வெற்றி பெற்றோர், இது உலகப்பொதுமறை திருக்குர்–ஆன் 3:104-ன் வசனமாகும்
இந்த வசனத்தின் முலம் அல்லாஹ் நமக்கு அறிவுறுத்துவது என்னவென்றால் ஒரு சமுதாயமாக இருந்து நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழையுங்கள் என்பதுதான். ஆனால் இன்றைக்கோ தமிழகத்தில் மட்டும் தவ்ஹீத்வாதிகள் 72 சமுதாய பிரிவினர்களாக பிரிந்து நானா? நீயா எனறு பலப் பரிட்சையில் இறங்கிவிட்டனரே இது நியாயமா?
மார்க்கத்தில் ஒன்று சேர வாய்ப்பில்லை என்று கூக்குரலிடும் ஜமா–அத் தலைவர்கள் ஹஜ் மற்றும் உம்ராவில் மட்டும் கூட்டாக ஒன்று சேர்ந்து தாவாபு செய்யலாமா? தனியாக இவர்களுக்கென்று ஜமாஅத் தலைவர்களுக்கு என்று ஒரு ஹஜ் மற்றும் கிப்லா உள்ளதா? மார்க்கத்தை கேலிக்?கூத்தாக்க முயல்கிறார்களா இந்த ஜமாஅத் தலைவர்கள்! உண்மையை உணர்ந்து எல்லா ஆலிம்களும், சமுதாய தலைவர்களும், மக்களும் ஒற்றுமையாக ஜமாஅத் வேற்றுமைகளை மறந்து சமுதாயத்திற்காக பாடுபடவேண்டும்!
அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள், பிரிந்து விடாதீர்கள். இது திருக்குர் ஆன் 3:103–ன் வசனமாகும். இதன் விளக்கம் என்ன?
எல்லோரும் ஒரு அணியில் நின்று ஒரு கொள்கையை இறுக்கி பிடித்து சருகிவிடாமல் ஒற்றுமையாக இருப்பதே.
உலகப் பொதுமறை திருக்குர்ஆன் மற்றும் நபிவழி சுன்னத் ஆகிய இரண்டுதான் அல்லாஹ்வின் கையிறாகும்,
லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலில்லாஹி
(வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் ஆவார்கள)
எல்லோரும் மேற்கண்ட ஓரிரை கொள்கையை பற்றிப் பிடிக்க அல்லாஹ் நமக்கு தனது திருக்குர்ஆன் எனும் வார்த்தைகள் முலம் முஸ்லிம்களுக்கு கட்டளையிடுகிறான், ஆனால் நாம் அவ்வாறு ஒன்றுபட்டு நிற்கிறோமா? இல்லவே இல்லைஆளுக்கொரு ஜமாஅத். ஆளுக்கொரு கொள்கை. ஆளுக்கொரு தலைவன் என பிரிந்து நிற்கின்றனர் நம் முஸ்லிம் சகோதரர்கள் கீழே கொடுக்கப்பட்டது போன்று
நான் …….. ஜமாஅத்துக்காரன்,
நான் …….. ஜமாஅத்துக்காரன்.
நான் …….. ஜமாஅத்துக்காரன்,
நான் ரப்பானி,
நான் காதிரி,
நான் ஹனஃபி
நான் ஷாஃபி
நான் மாலிகி,
நான் ஹம்பலி
நான் …….. ஜமாஅத்துக்காரன்,
நான் …….. ஜமாஅத்துக்காரன்,
நான் …….. ஜமாஅத்துக்காரன்,
நான் …….. கழகக்காரன்
எவரும் அல்லாஹ்வின் புனிதமிக்க மார்க்கமான இஸ்லாத்தைச் சேர்ந்த உண்மையான முஸ்லிம் என்று சொல்வதில்லையே ஏன் இந்த அவலம்.
இந்த பிரிவினைக்கு காரணமாகியவர்களை அல்லாஹ் நாளை மறுமையில் கேள்வி கேட்பானே! அல்லாஹ்வுக்கும் மறுமையில் அவனுடைய கேள்விகளுக்கும் பயந்துக்கொள்ளுங்கள்!
தொடரும்…..