முஹம்மது சிராஜ்
அல்லாஹ் உறுவாக்கிய இஸ்லாமிய மார்க்கத்தை பிளவுபடுத்த யாருக்கு அதிகாரமிருக்கிறது! அல்லாஹ் விதித்த ஒற்றுமை எனும் சட்டத்தை மீற யாருக்குக்கேனும் தனி சுநத்திரம் அளிக்கப்பட்டுள்ளதோ?
தமிழகத்தில் முழுவதுமாக மக்களிடமிருந்து குஃப்ரு எனும் இறைநிராகரிப்பை நீங்கி விட்டதா? நாம் நமக்குள் சண்டைபோட்டுக்கொண்டு பிரிந்து நிற்க? இந்த இணைவைப்பவர்களை நேர்வழிப்படுத்து ஏகத்துவ வாதிகளே ஒன்றுபடுங்கள்! சுவனம் செல்ல முந்திக்கொள்ளுங்கள்!
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும அவர்களே வெற்றி பெற்றோர், இது உலகப்பொதுமறை திருக்குர்–ஆன் 3:104-ன் வசனமாகும்
இந்த வசனத்தின் முலம் அல்லாஹ் நமக்கு அறிவுறுத்துவது என்னவென்றால் ஒரு சமுதாயமாக இருந்து நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழையுங்கள் என்றுதான் ஆனால் இன்றைக்கோ தமிழகத்தில் மட்டும் தவ்ஹீத்வாதிகள் 72 சமுதாய பிரிவினர்களாக பிரிந்து நானா? நீயா எனறு பலப் பரிட்சையில் இறங்கிவிட்டனரே இது நியாயமா?
திருக்குர் ஆன் 3:105ன் வசத்தின் முலம் அல்லாஹ் நமக்கு இவ்வாறு கட்டளையிடுகிறான், தம்மிடம் தெளிவான் சான்றுகள் வந்த பின்பு முரண்பட்டுப் பிரிந்து விட்டோரைப் போல் ஆகாதீர்கள், அவர்களுக்கே கடும் வேதனை உண்டு
வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன, அல்லாஹ்விடமே காரியங்கக் கொண்டு செல்லப்படும் – என்ற திருக்குர் ஆன் 3:109ன் வசனத்தை இவர்கள் படிக்கவில்லை போலும்,
மார்க்கத்தில் ஒன்று சேர வாய்ப்பில்லை என்று கூக்குரலிடும் ஜமா–அத் தலைவர்கள் ஹஜ் மற்றும் உம்ராவில் மட்டும் கூட்டாக ஒன்று சேர்ந்து தாவாபு செய்யலாமா? தனியாக இவர்களுக்கென்று ஜமாஅத் தலைவர்களுக்கு என்று ஒரு ஹஜ் மற்றும் கிப்லா உள்ளதா? மார்க்கத்தை கேலிக்?கூத்தாக்க முயல்கிறார்களா இந்த ஜமாஅத் தலைவர்கள்!
அல்லாஹ்வின் கயிற்றை பற்றிப்பிடிப்போம்
என அருமை சகோதர, சகோதரிகளே நாம் அரபி இலக்கணம் அறியாத உம்மிகள் நமது நபியும் நம்மைப் போன்று உம்மிதான் ஆனால் அல்லாஹ் நமக்கு அறிவை கொடுத்துள்ளான். இனியும் இந்த பிறிந்து நின்று, பிறிவினைவாதிகளின் பின் நிற்காமல் உலகப் பொதுமறை திருக்குர்ஆன் மற்றும் நபிவழி சுன்னத் ஆகிய அல்லாஹ்வின் கயிற்றை பலமாக பற்றிப்பிடித்து தைரியமாக முஸ்லிம்கள் என்று சொல்வோமாக,
யார் சொன்னாலும் காது கொடுத்து கேட்போம் ஆனால் உலகப் பொதுமறை திருக்குர்ஆன் மற்றும் நபிவழி சுன்னத் ஆகிய இரண்டின் பக்கம் தான் தலை சாய்ப்போம் என்று சூளுரைத்து அல்லாஹ்வின் பக்கம் திரும்புவோமாக, மஹஷர் வெற்றிக்காக பொறுத்திருந்து, ஏகத்துவத்தை நிலைநாட்டி நம்மால் இயன்ற அளவு இஸ்லாத்தை எல்லோரிடமும் எத்தி வைத்து இல்வாழ்க்கையிலும் மறுமையிலும் பிரியாமல் மறுமை வெற்றிக்காக காத்திருப்போமாக, இன்ஷா அல்லாஹ் சுவனம் செல்வோமாக,
அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள், பிரிந்து விடாதீர்கள். – திருக்குர் ஆன் 3:103
ஒரு சில இஸ்லாமிய பெரும் தலைவர்களோ மார்க்கத்தை பரப்புகிறார்கள். உண்மைதான். அவர்களைப்பற்றி நான் குறைகூறவில்லை ஆனால் ஒரு தனி அமைப்பை ஒருவாக்கி ஜமாஅத் என்ற பெயரில் (இஸ்லாம் 72 பிரிவுகாளக பிரிந்து விடும் என்று எதை பற்றி நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பயந்தார்களோ? மேலும் இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் குர்ஆன்–சுன்னாவைப்பற்றிக்கொள்ளுங்கள் வழிதவரமாட்டீர்கள்! என்று அறிவித்தார்களே! இது இந்த ஜமாஅத் தலைவர்களின் காதுகளில் விழவில்லையா?) அதன் (ஜமாஅத்) மூலம் தங்களுக்கு பின்னால் ஒரு பெரிய கூட்டம் வரவேண்டும் என்றே எண்ணி வாழ்ந்து வருகின்றனர்! இது தவறாகும்.
எண்ணிக் கொள்ளுங்கள் பேரும், புகழும் பலனளிக்காது (இது அல்லாஹ்வுக்கே உரித்தானது!) மேலும் நாம் மரணித்தால் நாம் உருவாக்கிய கூட்டம் கப்ரு வரைதான் வரும் அதன் பிறகு நமக்கு ஏது கூட்டம்! நாமோ கப்ருகளில் அநாதைகளாக அடைபட்டுத்தான் வாழவேண்டும்!
இந்த உண்மையை உணர்ந்து எல்லா ஆலிம்களும், சமுதாய தலைவர்களும், மக்களும் ஒற்றுமையாக ஜமாஅத் வேற்றுமைகளை மறந்து சமுதாயத்திற்காக பாடுபடவேண்டும்! குர்ஆன்–சுன்னா முறைப்படி வாழவேண்டும் அப்போது தான் இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் காஃபிர்கள் மிரளுவார்கள்!
கீழே உள்ள நபிமொழியை
கவனமாக படியுங்கள்
கவனமாக படியுங்கள்
கவனமாக படியுங்கள்
மண்ணறையில் வெற்றிபெறுங்கள்!
ஒரு அன்சாரித் தோழரின் ஜனாஸாவை அடக்கம் செய்வதற்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் சென்றோம். கப்ரடியில் சென்ற போது உட்குழி தோண்டப்படாத நிலையில் இருந்ததால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கப்ருக்கு அருகில் அமர்ந்து கொண்டு ஒரு குச்சியினால் பூமியை கிளறிக் கொண்டிருந்தார்கள்.
எங்களின் தலைகளின் மீது பறவைகள் அமர்ந்திருப்பது போன்று (அமைதியாக) நாங்களும் அந்தக் கப்ருக்கு அருகாமையில் அமர்ந்தோம். (திடீரென) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தன் தலையை உயர்த்தி நீங்கள் கப்ரின் வேதனையிலிருந்து அல்லாஹ்விடத்தில் பாதுகாப்புத் தேடுங்கள் என இரண்டு அல்லது மூன்று முறை கூறி பின்வரும் வார்த்தைகளைக் கூறினார்கள்.
இறைவிசுவாசியான அடியான் ஒருவன் உலகத் தொடர்புகளைத் துண்டித்துக்கொண்டு மறுமையை எதிர்நோக்கிக் கொண்டிருக்கையில், (சக்ராத்தின் நேரத்தில்) சூரிய ஒளிக்கு ஒப்பான பிரகாசம் கொண்ட முகத்துடன் வானத்திலிருந்து வானவர்கள் சிலர் அவரிடம் வருவார்கள். இவர்கள் தங்களுடன் சுவர்க்கத்து கபன் துணிகளிலிருந்து ஒரு கபன் துணியையும், சுவர்க்கத்தின் நறுமணங் களிலிருந்து நறுமணத்தையும் வைத்துக் கொண்டு அவருடைய பார்வைக்கு எட்டும் தூரமளவு அமர்ந்திருப்பார்கள்.
அப்பொழுது உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து, அவரருகில் அமர்வார். அவரை நோக்கி, நல்ல ஆத்மாவே! நீ ஏக இறைவனுடைய மன்னிப்பை நோக்கியும் அவனுடைய திருப்தியை நோக்கியும் இந்த உலகிலிருந்து வெளியேறிவிடு என்று கூறுவார். தோல் பையிலிருந்து (அதனை வளைத்தால்) நீர் வழிந்து விடுவது போன்று (அந்த ஆத்மா உடலில் இருந்து இலகுவாக) வெளியேறி விடும். அந்த உயிரை எடுத்ததும் கொஞ்ச நேரம் கூட கையில் வைத்துக் கொள்ளாமல் அந்தக் கபனில் (கொண்டு வந்த) மணத்தோடு வைத்து விடுவார்கள். உலகத்தில் இருக்கும் கஸ்தூரி வாசனையை விட மிக மணம் வீசக்கூடியதாக அது இருக்கும்.
பின்பு அந்த உயிரை அல்லாஹ்விடம் கொண்டு செல்வார்கள்)வானவர்கள் இருக்கும் கூட்டத்திற்கு அருகாமையில் அந்த உயிரை கொண்டு போகும் போதெல்லாம் இது யாருடைய நல்ல உயிர்? என அவ்வானவர்கள் கேட்பார்கள். அதற்கு உலகில் இவருக்கு சொல்லப்பட்ட நல்ல பெயரைக் கொண்டு இன்னாருடைய மகன் இன்னார் என்று சொல்லப்படும்.
இவருக்காக முதல் வானத்தை, திறக்கும்படி அவ்வானவர் வேண்டுவார், அவருக்காக முதல் வானம் திறக்கப்படும். ஒவ்வொரு வானத்திலும் உள்ள மலக்குகள் அடுத்த வானம் வரை (அந்த உயிரை) பின் தொடருவார்கள். இப்படி ஏழு வானம் வரை அதனை எடுத்துச் செல்வர்.
அப்போது ஏக இறைவன், ஆத்மாவைச் சுமந்து சென்ற வானவர்களை நோக்கி, என் அடியானுடைய செயல்களை ”இல்லிய்யீனிலே‘ (நல்லடியார்களுடைய செயல்களின் பதிவேடுகள் இருக்குமிடத்திலே) பதிந்து விட்டு (விசாரணைக்காக) பூமியிலுள்ள அவருடைய உடலில் (கப்ரில்) அவருடைய ஆத்மாவைச் சேர்த்து விடுங்கள் என்று கூறுவான். (அவரின் உயிரை அவரின் உடலில் மீட்டப்படும்)
அவரிடத்தில் இரு மலக்குகள் வந்து அவரை அமரவைத்து,
உன்னுடைய இறைவன் யார்? எனக் கேட்பார்கள்.
என் இறைவன் அல்லாஹ் என்று கூறுவார்.
உன்னுடைய மார்க்கம் எது? எனக் கேட்பார்கள்,
எனது மார்க்கம் இஸ்லாம் எனக் கூறுவார்.
உமக்கு அனுப்பப்பட்ட தூதர் யார்? எனக் கேட்பார்கள்.
அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனக் கூறுவார்.
அது உமக்கு எப்படித் தெரியும்? என அவ்விருவரும் கேட்பார்கள்.
நான் குர்ஆனை ஓதினேன். (அதன் மூலம்) அவர்களை ஈமான் கொண்டு உண்மைப்படுத்தினேன் எனக் கூறுவார்.
அப்போது வானத்திலிருந்து ஓர் அழைப்பாளன் (அல்லாஹ்) அழைத்து என் அடியான் உண்மை சொல்லிவிட்டான் என்று சொல்லப்படும். ஆகவே அவருக்கு சுவர்க்கத்திலிருந்து ஒரு விரிப்பை விரித்து விடுங்கள். இன்னும் சுவர்க்கத்திலிருந்து ஒரு வாசலையும் திறந்து விடுங்கள் என்று சொல்லப்படும். அதன் வழியாக அவருக்கு நல்ல வாசனைகளும், நறுமணமும் வந்து கொண்டிருக்கும். அவருடைய கண் எட்டிய தூரத்திற்கு அவருடைய கப்ரு விசாலமாக்கப்படும். இன்னும் அவரிடத்திலே நறுமணம் வீசக்கூடிய, நல்ல ஆடை
அணிந்த, அழகிய தோற்றமுள்ள ஒருவர் வந்து, இதுவே (உலகில்) உமக்கு வாக்களிக்கப்பட்ட நாளாகும். உமக்கு சந்தோஷம் தரக்கூடிய ஒன்றைக் கொண்டு நற்செய்தி கூறுகின்றேன் என்பார். (அதற்கு கப்ரில் அடக்கம் செய்யப் பட்டவர்) நற்செய்தி கூறுபவரைப் போன்றே உன் தோற்றம் இருக்கின்றதே,
நீர் யார்? எனக் கேட்பார்.
நான்தான் உன் நல் அமல் என அம்மனிதர் கூறுவார்.
அப்போது அவர், இறைவா! என் குடும்பத்தவரிடத்திலும், என் பொருளிடத்திலும் நான் செல்வதற்காக, கியாமத்து நாளை (வெகு சீக்கிரம்) கொண்டு வருவாயாக! இறைவா! கியாமத்து நாளை (வெகு சீக்கிரம்) கொண்டு வருவாயாக எனக் கூறுவார்.
தொடரும்…..