ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கின்றார்கள்: ”தொழுகை-வரிசையின் இடைவெளியை அடைப்பவருக்கு அல்லாஹ் ஒரு அந்தஸ்தை உயர்த்துகிறான். மேலும் அவருக்கு சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுகிறான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: தபரானீ)
அபூ ஜுஹைஃபா ரளியல்லாஹு அன்.. அறிவிக்கின்றார்கள்: ”தொழுகை-வரிசையின் இடைவெளியை அடைப்பவருக்கு பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்”. (நூல்: பஸ்ஸார்)
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ”இறை விசுவாசிகளில் நம்பிக்கையால் முழுமை பெற்றவர், அவர்களில் அழகிய குணமிக்கவர்தான். உங்களில் சிறந்தவர், மனைவியரிடம் சிறந்தவராக நடந்தவர் தான்‘ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதீ. இது ஹஸன் ஸஹுஹ் என்று திர்மிதீ இமாம் கூறுகிறார்கள்).
அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னுல் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ”உலகம் (சிறிது காலத்திற்கு) சுகமளிக்கும் ஒன்றாகும். இந்த சுகப்பொருட்களில் சிறந்தது, நல்ல மனைவியாகும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.” (நூல்: முஸ்லிம்)
முஆவியா இப்னு ஹய்தா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ”இறைத்தூதர் அவர்களே! எங்களில் ஒருவரிடம் அவரது மனைவியின் உரிமைகள் என்ன? என்று கேட்டேன். நீ சாப்பிடும் போது அவளையும் நீ சாப்பிடச் செய்ய வேண்டும். நீ (புதிய ஆடை) உடுத்தும் போது அவளுக்கு நீ உடுத்தக் கொடுக்க வேண்டும் முகத்தில் அடிக்காதே! இழிவாக பேசாதே! வீட்டிலேயே தவிர அவளைக் கண்டிக்காதே! என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்”. (நூல்: அபூதாவூது)
இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ”நீங்கள் அனைவரும் பொறுப்பாளர்களாவீர். உங்களில் அனைவரும் அவரது பொறுப்புப்பற்றி கேள்வி கேட்கப்படுவீர். ஒரு தலைவர் பொறுப்பாளியாவார். ஒரு மனிதர், தன் குடும்பத்தாருக்கு பொறுப்பாளியாவார். ஒரு பெண் தன் கணவனின் வீடு, மற்றும் குழந்தைக்கு பொறுப்பாளியாவாள். நீங்கள் அனைவரும் பொறுப்பாளர்களாவீர். உங்களில் அனைவரும் தன் பொறுப்புப் பற்றி கேள்வி கேட்கப்படுவீர்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.” (நூல்கள் புகாரி, முஸ்லிம்)