தாடி, தொப்பி, லுங்கி, ஜிப்பா முழுக்கை சட்டை இவைகளே ஒருவரை முஸ்லிமாக அடையாளப்படுத்துகின்றன. முஸ்லீம் என்றால் யார்?
குல்-இன்ன-ஸலாத்தி-வ-நுஸுகீ-வ-மஹ்யாய-வ-மமாத்தீ-லில்லாஹி-ரப்பில்-ஆலமீன்.
லா-ஷரீக்க-லஹூ–வ-பிதாலிக்க-உமிர்த்து-வ-அன-அவ்வலுல்-முஸ்லிமீன். (சூரா: அன்ஆம்: 162,163)
எனது தொழுகையும், சேவைகளும், வாழ்வும், மரணமும் அகிலங்களைப் படைத்து இரட்சித்து வரும் அல்லாஹ்வுக்கே உரித்தானவை. அவனுக்கு இணை, துணை, நிகர் கிடையாது. அதையே என் முதல் கொள்கையாகக் கொள்ளுமாறு ஏவப்பட்டுள்ளேன். யானே முதலாவது முஸ்லீமாக இருக்கிறேன் என்று (நபியே!) நீர் கூறுவீராக!
வெறும் உடலையும், வெளிக்காரணங்களையும் நம்புபவர் முஸ்லிம் அல்ல. ஒரு முஸ்லிம் வாழ்வில் செய்யும் நன்மை, சேவை, தியாகம், பிரதி உபகாரம், உழைப்பு ஆகியவை சுயநலத்துக்காக செய்திருப்பாரேயானால் அவர் எங்ஙனம் தன்னை முஸ்லிம் என்று சொல்லிக் கொள்ள முடியும்? அல்லாஹ்வை முன்னிட்டு செய்திருந்தாலே அவர் முஸ்லிம்.
தனது வாழ்க்கையை ஒருவர் அல்லாஹ்வுக்கு அர்ப்பணம் செயயும்போது அவருடைய ஆன்மா, உடல் அனைத்தும் அல்லாஹ்வுக்கு சொந்தமாகிவிடுகிறது.
அத்தகைய முஸ்லிம் ஒருவருடைய மனத்தை உடைப்பதாயினும், உடலை அடிப்பதாயினும் அல்லாஹ்வுக்குச் சொந்தமான பொருள்மீது கைவைப்பதாகிவிடும். மனிதன் தனது அற்ப உடல், வாழ்க்கையை அல்லாஹ்வுக்கு அற்பணம் செய்யம்போது அதைவிட பன்மடங்கு உயர்வான வாழ்வை அல்லாஹ் தருகின்றான்.
பெயர் அரபித்தமிழ், தலையில் தொப்பி, தாடி முஸ்லீம் என்று கூறிக்கொள்ள சமூகத்தின் பார்வைக்கு போதுமானவை. அதைத்தான்டி என்ன செய்கின்றோம் என்பதே ஒவ்வோர் முஸ்லிம் மனத்திலும் எழ வேண்டிய கேள்வி.
”Jazaakallaahu khairan” முஸ்லிம் முரசு, நவம்பர் 2009 (பக். 60)