சேது கவி ஜவ்வாது புலவர், வள்ளல் ஜமால் முஹம்மது வழிவந்த ஈரோடு எம்.கே. ஜமால் முஹம்மது.
1978–ல் எனது சிறிய தந்தையார் மறைந்த எஸ்.ஏ. அப்துஸ்ஸலாம், மறைந்த பெரியவர் ஹாஜி அப்துல் கரீம் ஜமாலி ஹளரத் ஆகியோர் சிலோன் மவ்லானா என்பவரை அறிமுகப்படுத்தினர்.
அவர்களில் எங்கள் பெற்றோரும் உற்றாரும் நானும் (அன்று எனக்கு வயது 18) அவர் காலில் விழுந்து அவரை வணங்கிய என்னை மன்னித்தருள்வாய் யா அல்லாஹ்!
1991-ல் எனக்கு திருமணம் நடந்தது. அந்த சிலோன் மவ்லானா எங்கள் வீட்டிற்கு வருகை தந்திருந்த போது காலில் விழும் பழக்கம் எங்களுக்கு வழக்கமானதால் விழுந்தோம். என் முதல் மனைவி காலில் விழாததால் 08 12 1996-ல் எனக்கும் எனது மனைவிக்கும் பிரிவு ஏற்பட்டது.
சிலோன் மவ்லானாவை சந்திக்கும் போதெல்லாம் ”நீ அவளை தலாக் விடாவிட்டால் என்னிடம் வரவேண்டாம். ‘துஆ‘ செய்ய மாட்டோம்” என்று சொன்னதால், நானும் அவரது சொல் கேட்டு மதியிழந்து எனது மனைவிக்கு மனவிலக்கு கொடுத்து விட்டேன். என்னைப்போன்று எத்தனையோ நபர்கள் இதுபோன்று மனவிலக்கு கொடுத்துள்ளார்கள். எனவே யா அல்லாஹ், எங்கள் பிழையை பொருத்தருள்வாயாக!
(சத்தியப்பிரகடனம் மாத இதழ், செப்டம்பர் 2009, 51 ஆம் பக்க கட்டுரையிலிருந்து)
நன்றி: முஸ்லிம் முரசு, நவம்பர் 2009