திறமை! உள்ளவனிடம் அது அடிமை. இல்லாதவனிடம்? அவன் அடிமை!
திறமை என்பது நீர்குமிழி போன்றது அது மேலே வந்து தான் ஆகும்.
திறமை உள்ளவனை யாரும் ஒதுக்க முடியாது. கண்டுபிடிப்பாளர் யாவரும் திறமைசாலிகளே.
திறமைசாலிகள் யாவரும் கண்டுபிடிப்பாளர்கள் அல்ல. ஏனெனில் அவர்கள் வேறு தளங்களிலிலும் மிளிர்கிறார்கள்.
திறமை அது இறைவன் கொடுத்த வரம் அதனால்தான் அது எல்லோருக்கும் கிட்டுவதில்லை.
திறமை காணத்தோன்றாதது, ஆனால் காணவைக்கும் பலரை.
திறமை சிலருக்கு உயிர்மூச்சு. அது இல்லாவிட்டால் ‘அது’ நின்று விடும்.
திறமைசாலிகள் நல்லவர்களே, ஏனெனில் தங்களின் திறமையால் பலர் பயன் அடைவது தெரியும், தெரிந்தே அவர்கள் செய்கிறார்கள்.
வஞ்சனையும் வாதும் சூதும் சூழ்ச்சியும் திறமையின் பாற்பட்டதல்ல. இவர்களை திறமைசாலிகள் என்பது திறமையாளர்களை அவமானப்படுத்துவதாகும்.
ஆம் மனிதனிடம் எண்ணிலடங்கா திறமைகள் ஒளிந்துகிடக்கின்றன.அவன் தன்னை பற்றி மிக மோசமாகத்தான் நினைத்து கொண்டிருக்கின்றான். அவர்களுல் ஒருசிலர் மட்டுமே தம்திறமைகளை வெளிக்கொனர்கின்றனர். தம்மை மிக கேவலமாகவும் லாயக்கு இல்லாதவன் என்று யார் நினைத்தாலும் அவர்கள் ஒருவித அடிமைகளே.