ஜின்கள் என்ற படைப்பு உண்மையே: திருக்குர்ஆன் சான்றிதழ்
”மனிதர்களையும், ஜின்களையும் அவர்கள் என்னை வணங்கு வதற்காகவே அன்றி படைக்கவில்லை.” (அல் குர்ஆன் 51:56)
”நெருப்புக் கொழுந்திலிருந்து அவன் (இறைவன்) ஜின்களைப் படைத்தான்”. (அல்குர்ஆன் 55:15)
”(இப்லிஸாகிய) அவன் ஜின் இனத்தை சேர்ந்தவனவான்.” (அல் குர்ஆன் 18:50)
ஜின் இனத்துக்கும் இறைத்தூதர்கள்
(மறுமை நாளில் இறைவன் ஜின், மனித கூட்டத்தாரை நோக்கி) ஜின், மனித கூட்டத்தாரே! உங்களுக்கு என் வசனங்களை படித்துக் காட்டவும், இந்நாளில் சந்திப்பைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்யவும் உங்களிலிருந்தே உங்களிடம் தூதர்கள் வரவில்லையாஸஎன்று (இறைவன்) கேட்பான். அதற்கு அவர்கள் நாங்கள் எங்கள் (பாவத்தின்) மீது சாட்சிக் கூறுகிறோம் என்று கூறுவார்கள். இதற்கு காரணம் இந்த உலக வாழ்வில் அவர்கள் மயங்கி நிராகரிப்பவர்களாகவே இருந்தது தான். (அல் குர்ஆன் 6:30)
நிச்சயமாக, ஜின்களில் சில (திருக்குர்ஆனை) செவி மடுத்து(த் தம் இனத்தாரிடம் கூறினர்) ‘நிச்சயமாக நாங்கள், மிகவும் ஆச்சரிய மான ஒரு குர்ஆனை கேட்டோம்’ என்று கூறினர் என எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டதென்று (நபியே) நீர் கூறுவீராக! (72-)
ஜின்களில் இறை விசுவாசிகள்
அது (திருக்குர்ஆன்) நேர்மையின் பால் வழிகாட்டுகிறது, ஆகவே அதைக்கொண்டு நாங்கள் ஈமான் கொண்டோம், அன்றியும் எங்கள் இறைவனுக்கு ஒருவனையும் நாங்கள் இணையாக்கமாட்டோம் (என்ற அந்த ஜின் கூறலாயிற்று) (72-)
நல்ல ஜின்களின் ஏகத்துவ நம்பிக்கை
மேலும் எங்கள் இறைவனுடைய மகிமை நிச்சயமாக மிக்க மேலானது, அவன் (எவரையும் தன்) மனைவியாகவோ மகனாகவோ எடுத்துக்கொள்ளவில்லை. (அல்குர்ஆன்72-)
நல்ல ஜின்களின் வாக்குமூலம்
ஆனால் நம்மில் மூடராகிவிட்ட (சிலர்) அல்லாஹ்வின் மீது தகாத வார்த்தைகளை சொல்லிக்கொண்டிருக்கின்றனர். (அல்குர்ஆன்72-)
ஜின்களின் எண்ணங்கள் மேலும் மனிதர்களும் ஜின்களும் அல்லாஹ்வின் மீது பொய் கூறவே மாட்டார்கள் என்று நிச்சயமா நாம் எண்ணிக்கொண்டிருந்தோம்! (அல்குர்ஆன்72-)
ஜின்களின் மமதை
ஆனால் நிச்சயமாக மனிதர்களிலுள்ள ஆடவர்களில் சிலர் ஜின்களிலுள்ள ஆடவர்கள் சிலரிடம் காவல் தேடிக் கொண்டிருந்தனர். இதனால் அவர்கள் (ஜின்களிலுள்ள அவ் வாடவர்களின்) மமதை பெருகிவிட்டனர் ஜின்களின் வாக்குமூலம் இன்னும் நிச்சயமாக அவர்களும் நீங்கள் எண்ணியதைப் போலவே அல்லாஹ் ஒருவரையும் (மறுமையில் உயிர்ப்பித்து எழுப்பமாட்டான் என்று எண்ணிக்கொண்டு இருந்தனர் (அல்குர்ஆன்72-)
ஜின்களின் அபார ஆற்றல்
நிச்சயமாக நாம் வானத்தை தொட்டுப் பார்த்தோம். அது கடுமையான காவலாளிகளாலும், தீப்பந்தங்களாலும் நிரப்பப் பட்டிருப்பதை நாங்கள் கண்டோம். (அல்குர்ஆன்)
ஜின்களில் பலம் பொருந்திய ஓர் இப்ரீத் கூறியது நீங்கள் உங்கள் இடத்திலிருந்து எழுந்திருப்பதற்கு முன் அதை நான் உங்களிடம் கொண்டு வந்து விடுவேன். நிச்சயமாக நான் அதற்கு சக்தியுள்ளவனாகவும் நம்பிக்கைக்கு உரியவனாகவும் இருக்கிறேன் (அல்குர்ஆன்: 27-9)
ஜின்களுக்கு அபரிமிதமான சக்திகள் இருந்தாலும் குறைகளும் உண்டு
அவைகளுக்கு மறைவான ஞானம் பற்றிய அறிவு இல்லை
அவர் (சுலைமான்) மீது நாம் மரணத்தை விதித்த போது அவரது கைத் தடியை அறித்த நிலத்து பூச்சி (கரையான்)யைத் தவிர வேறெதுவும் ஜின்களுக்கு அறிவிக்கவில்லை. அவர் கீழே விழவே ”மறைவான விஷயங்களை நாம் அறிந்திருந்தால் இழிவு தரும் இந்த கடின வேலையில் நீடித்திருக்கத் தேவையில்லை என்று ஜின்களுக்கு தெளிவாக தெரிந்தது.” (அல்குர்ஆன் 34:14)
ஜின்களின் சேட்டைகள்
(முன்னர் வானில் பேசப்படுவதைச்) செவிமடுப்பதற்காக (அதற்குள்ள சில) இடங்களில் நாங்கள் அமர்ந்திருப்போம், ஆனால் இப்பொழுதோ எவன் அவ்வாறு செவிமடுக்க முயல்கிறானோ அவன் தனக்காக் காத்திருக்கும் தீப்பந்தத்தையே காண்பான் (அல்குர்ஆன்72-)
ஜின்களின் இதை அறியமுடியாது!
அன்றியும் புமியிலிருப்பவர்களுக்குத் தீங்கு நாட்டப் பட்டிருக்கிறதா? அல்லது அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு நன்மையை நாடி இருக்கிறானா? என்பதையும் நாங்கள் நிச்சயமாக அறியமாட்டோம்! (அல்குர்ஆன்௰72)
ஜின்களிலும் நல்லோர் தீயோர்
மேலும் நிச்சயமாக நம்மில் நல்லோரும் இருக்கின்றனர் அப்படியல்லாதவர்களும் நம்மில் இருக்கின்றனர். நாம் பல்வேறு வழிகளையுடையவர்களாகவும் இருந்தோம்! (72:1)
ஜின்களுக்கும் அல்லாஹ்வின் பயம் உள்ளது
அன்றியும் நிச்சயமாக நாம் புமியில் அல்லாஹ்வை இயலாமலாக்க முடியாது என்பதையும் அவனை விட்டு ஓடி (ஒளிந்து) கொள்வதாலும் அவனை (எங்கேயும்) இயலாமலாக்க முடியாதென்பதையும் நாம் அறிந்து கொண்டோம். (72:2)
நல்ல ஜின்கள் ஈமான் கொள்வார்கள்
இன்னும் நிச்சயமாக நாம் நேர்வழியை (குர்ஆனை) செவிமடுத்த போது, நாம் அதன் மீது ஈமான் கொண்டோம். எனவே எவன் தன் இறைவன் மீது ஈமான் கொள்கிறானோ அவன் இழப்பைப ப்பற்றியும் அநீதியைப்பற்றியும் பயப்படமாட்டான் (72:3)
ஜின்களிலும் முஸ்லிம்கள் உள்ளனர்
இன்னும் நிச்சயமாக நம்மில் முஸ்லிம்களும் இருக்கின்றனர், நம்மில் அக்கிகரமக்காரர்களும் இருக்கின்றனர். எவர்கள் முஸ்லிம் களாகி (வழிபட்டார்களோ) அவர்கள் தாம் நேர்வழியை தேடிக்கொண்டனர் (72:4)
ஜின்களும் இஸ்லாத்தை (தாவா பணியை) தங்களுடைய சமுதாயத்திற்கு எத்திவைக்கின்றன
(ஜின்கள்) கூறினார்கள் ”எங்களுடைய சமூகத்தாரே! நிச்சயமாக நாங்கள் ஒரு வேதத்தை செவிமடுத்தோம். அது மூஸாவுக்குப் பின்னர் இறக்கப்பட்டிருக்கிறது. தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மைப் படுத்துகிறது அது உண்மையின் பக்கமும், நேரான மார்க்கத்தின் பக்கமும் (நமக்கும் சேர்த்து) வழிக்காட்டுகிறது”. (அல் குர்ஆன் 46:30) அக்கிரமக்காரர்களோ நரகத்திற்கு எரி விறகாய் விட்டனர் (என்று அந்த ஜின் கூறிற்று) (72:5)
ஜின்களும் தங்கள் உணவை சமைத்துத்தான் உண்கின்றன
ஜின்கள் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களை சந்தித்த இரவில் அந்த சந்திப்பில் தாமும் கலந்துக் கொண்டதாக கூறும் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள். அந்த இரவில் ஜின்களுக்கு குர்ஆன் கற்றுக் கொடுக்கப்பட்ட சம்பவத்தையும் ”ஜின்களின் காலடி சுவடுகள்” அவர்கள் சமைத்த பாத்திரங்கள், அடுப்புகள் குறித்தும் அறிவிக்கிறார்கள். (திர்மிதி 3311)
மனிதர்கள் மற்றும் ஜின்கள் மீது அல்லாஹ்வின் கருணை (மானிடர்களோ, ஜின்களோ) அவர்கள் (நேர்) வழியின் மீது உறுதியுடன் நிலைத்து நின்றால், நிச்சயமாக நாம் அவர்களுக்கு மிக அதிகமாகத் தண்ணீர் புகட்டுவோம் (72:6)
அல்லாஹ் மனிதர்களுக்கு வசப்படுத்திக் கொடுத்தவைகள்
அல்லாஹ் எத்தகையவன் என்றால் அவன் தான் வானங்களையும் புமியையும் படைத்து வானத்திலிருந்து மழையையும் பொழியச்செய்து அதைக் கொண்டு கனிவர்கங்களையும் உங்களுக்கு ஆகாரமாக வெளிப்படு்தித் தன் கட்டளையினால் கடலில் செல்லுமாறு கப்பலை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்தும், ஆறுகளையும் உங்களுக்கு வசப் படுத்தித்தந்தான். (14:2)
(தவறாமல்), தம் வழிகளில் ஒழுங்காகச் செல்லுமாறு சூரியனையும் சந்திரனையும் அவனே உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். மேலும் அவனே இரவையும் பகலையும் உங்களுக்கு வசப்படுத்தித்தந்தான் (14:3)
அல்லாஹ் நபிமார்களுக்கு வசப்படுத்திக் கொடுத்தவைகள்
அப்போது நாம் சுலைமானுக்கு அதை (தீர்ப்பின் நியாயத்தை) விளங்க வைத்தோம், மேலும் அவ்விருவருக்கும் ஞானத்தையும் (நற்) கல்வியையும் கொடுத்தோம், இன்னும் நாம் தாவுதுக்கு மலைகளையும், பறவைகளையும் வசப்படுத்திக்கொடுத்தோம், அவை (தாவுதுடன்) தஸ்பீஹ் செய்து கொண்டிருந்தன. இவற்றையெல்லாம் நாமே செய்தோம். (21:9)
இன்னும் சுலைமானுக்கு கடுமையாக வீசும் காற்றையும் (நாம் வசப்படுத்திக்கொடுத்தோம்) அது அவருடைய ஏவலின் படி, நாம் எந்த புமியை பாக்கியமுடையதாக்கினோமோ (அந்த புமிக்கு அவரை எடுத்துச்) சென்றது. இவ்வாறு ஒவ்வொரு பொருளையும் பற்றி நாம் அறிந்தோராக இருக்கின்றோம் (21:1)
ஜின்களை அல்லாஹ் நபி சுலைமான் (அலை) அவர்களுக்கு வசப்படுத்திக்கொடுத்தாலும் அவற்றின் நடவடிக்கைகளை அல்லாஹ்தான் கண்காணித்து வந்தான் என்பதற்கு ஆதாரம்.
இன்னும் ஷைத்தான்களிலிருந்தும் அவருக்காக (கடலிலி) மூழ்கி வரக்கூடியவர்களை (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம், இது தவிர) மற்ற வேலைகளையும் (அந்த ஷைத்தான்கள்) செய்யும், அன்றியும் நாமே அவற்றை கண்காணித்து வந்தோம் (21:2)
நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம்அவர்களுக்கு ஜின்களை வசப் படுத்திக் கொடுத்தவன் அல்லாஹ்வே (அவருக்கு தாமாகவே ஜின்களை வசப்படுத்தும் ஆற்றல் இருக்கவில்லை)
(அவருக்குப் பின்னர்) சுலைமானுக்கு காற்றை (வசப்படுத்திக்கொடுத்தோம்) அதனுடைய காலைப்பயணம் ஒரு மாத தூரமாகவும் மாலைப்பயணம் ஒரு மாத தூரமாகவும் இருந்தது. மேலும் நாம் அவருக்காக செம்பை ஊற்றுப்பொல் உருகியோடச்செய்தோம். தம் இறைவனுடைய அனுமிதப்படி அவருக்கு முன் உழைப்பவற்றில் ஜின்களிலிருந்தும் (வசப்படுத்திக் கொடுத்தோம்) அவர்களில் எவர் (அவருக்கு ஊழியம் செய்வதில்) நம்முடைய கட்டளையைப் புறக்கணிக் கின்றனரோ அவரைக் கொழுந்து விட்டெரியும் (நரக) வேதனையைச் சுவைக்கும்படி நாம் செய்வோம் (என்று எச்சரித்தோம்)
முடிவுரை
மனிதர்களில் சிலர் தங்களிடம் ஜின்கள் உள்ளன அவற்றை தாங்கள் வசப்படுத்தி வைத்துள்ளதாக சொல்லுவார்கள் உண்மையில் அவர்கள் கெட்டவர்களாத்தான் இருக்கவேண்டும்! ஏனெனில் கீழே உள்ள அல்லாஹ்வின் வசனத்தை மீண்டும் உண்ணிப்பாக கவனியுங்கள்:
(அவருக்குப் பின்னர்) சுலைமானுக்கு காற்றை (வசப்படுத்திக் கொடுத்தோம்) அதனுடைய காலைப்பயணம் ஒரு மாத தூரமாகவும் மாலைப்பயணம் ஒரு மாத தூரமாகவும் இருந்தது. மேலும் நாம் அவருக்காக செம்பை ஊற்றுப்பொல் உருகியோடச்செய்தோம். தம் இறைவனுடைய அனுமிதப்படி அவருக்கு முன் உழைப்பவற்றில் ஜின்களிலிருந்தும் (வசப்படுத்திக்கொடுத்தோம்) அவர்களில் எவர் (அவருக்கு ஊழியம் செய்வதில்) நம்முடைய கட்டளையைப் புறக்கணிக்கின்றனரோ அவரைக் கொழுந்து விட்டெரியும் (நரக) வேதனையைச் சுவைக்கும்படி நாம் செய்வோம் (என்று எச்சரித்தோம்)
நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம்அவர்களுக்கு இணையான சக்தியை அல்லாஹ் எந்த மனிதனுக்காவது கொடுப்பானா?மேலும் நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம்அவர்களுக்கு அல்லாஹ்தானே ஜின்களை வசப்படுத்திக்கொடுத்தான் அவரால் தன்னைத்தானே ஜின்களை வசப்படுத்தும் திறமை இருந்ததா?
ஒரு நபிக்கு இல்லாத திறமை சாதாரண மனிதர்களுக்கு கிடைத்துவிடுமா?
சகோதரர்களே அல்லாஹ் திருக்குர்ஆனில் அடிக்கடி சிந்திக்க மாட்டீர்களா? என்று கேட்கிறானே இன்னுமா தாங்கள் சிந்திக்க வில்லை! சிந்திக்க முற்படுங்கள் வெற்றிபெருவீர்கள்!
”Jazaakallaahu khairan” islamicparadise.wordpress.com