அப்துல் அஜீஸ் ஃபாஜில் பாகவி M.A.
فاسئلوا اهل الذكر إن كنتم لا تعلمون
2606 يقول من سلك طريقا يبتغي فيه علما سلك الله به طريقا إلى الجنة وإن الملائكة لتضع أجنحتها رضاء لطالب العلم وإن العالم ليستغفر له من في السموات ومن في الأرض حتى الحيتان في الماء وفضل العالم على العابد كفضل القمر على سائر الكواكب إن العلماء ورثة الأنبياء إن الأنبياء لم يورثوا دينارا ولا درهما إنما ورثوا العلم فمن أخذ به أخذ بحظ وافر- ترمذي
عن قيس قال سمعت عبد الله بن مسعود يقولا قال رسول الله صلى اللهم عليه وسلم لا حسد إلا في اثنتين رجل آتاه الله مالا فسلطه على هلكته في الحق ورجل آتاه الله حكمة فهو يقضي بها ويعلمها
عن عتبة بن أبي حكيم عن أبي الدرداء قال وما نحن لولا كلمات العلماء الدارمي
ஆலிம்கள் மீதான சமுதாயத்தின் அக்கறை- உண்மையில்- நேரத்திற்கு தொழ வைத்தால் போதும்.
ஆலிம்கள் சமுதாயப் பணி பிரதானமானது. சமுதாயத்தை இஸ்லாத்தின் அடிப்படையில் வாழவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சமுதாயத்திற்கு மார்க்கத்தை எடுத்துச் சொல்லி, அல்லாஹ் ரஸூலைப் பற்றி அச்சமூட்டி எச்சரிக்கை செய்து நபிமார்களின் வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள்.
o சமுதாய பாது காவலர்களும் கூட. ( உதாரணம்: உமர் முக்தார் )
o காலத்தின் கோலம் பணம், அதிகாரத்திற்கு குற்றவேள் செய்பவர்களாக ஆக்கப்பட்டார்கள்.
ஆயினும், إنما يخشي الله من عباده العلماء ஓரிரு விதிவிலக்குகளை தவிர்த்து விட்டுப் பார்த்தால் பூமியின் மேற்பர்ப்பில் வாழும் அல்லாஹ்வின் ஆட்கள். குடிப்பதற்கு வீட்டிலிருந்து தண்ணீர் கொண்டு வரும் ஆலிம்.
o எது தொழில்? எது சேவை? எது வணக்கம்? என்பது நிய்யத்தை பொருத்த விஷயம்.
o ஆலிம்கள் சேவையாகத்தான் பணியாற்றுகிறார்கள்.
சமுதாயம் அதை வேலையாகப் பார்க்கிறது.
o சமுதாயத்திற்கு ஆலிம்கள் மீது ஒரு குறை.
சத்தியத்தை துணிந்து சொல்வதில்லை. காலத்திற் கேற்ப பேசுவதில்லை.
o ஆலிம்களுக்கும் சமுதாயத்தின் மீது ஒரு குறை.
இரண்டாம் தரக் குடிமக்களைப் போல வேளைக்காரர்களாக நடத்துகிறார்கள்.
இந்நிலை மாற முதல் ஸ்டெப் எடுக்க வேண்டியது சமுதாயமே!
o சமுதாயத்திலிருந்து தான் ஆலிம்கள். சமுதாயம் தான் ஆலிம்களை உருவாக்குகிறது.
ஆலிம்களில் குறை என்றால் அது சமுதாயத்தின் குறை தான்.
o ஒரு நிறுவனம் தனக்காக ஒருவரை தேர்வு செய்தவுடன் அவருக்கு பயிற்சியளிக்கிறது.
அவரிடம் நூல்கள் இல்லை. படிக்கிற போது லைப்ரரி. அரபு நூல்கள் குதிரைக் கொம்பு. எங்கிருந்து அவர் செய்திகளைச் சேகரிப்பார்?
o ஆலிம்கள் விஷயத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளாத ஒரு சமுதாயம் தன்னைத் தற்காத்துக் கொள்ளாத சமுதாயமே!
அவர்களை திறனாளர்களாக ஆக்க வேண்டிய கடமை சமுதாயத்தினுடையது. அவர்களை விமர்ச்சிக்க நினைக்கும் எவரும் முதலில் அவர்களது மேம்பாட்டிற்கு நாம் என்ன செய்தாம் என்பதை ஒரு நிமிடவாது யோசித்துப் பார்த்து விட்டு பிறகு பேசட்டும்.
உதவி கேட்டு வருகிறார்கள் என்பதற்காக மலிவாக கருதி விடாதீகள். நமது பிள்ளைகளுக்கு கலிமா சொல்லிக்கொடுப்பவர்கள் .நமக்கு மார்க்கத்தை சொல்லித்தருபவர்கள்.
ஆலிம்கள் பற்றி குறை பேசியவருக்கு அஃலா ஹஜ்ரத் சொன்ன பதில் : வக்கீலிடம் ஆடிட்டரிடம் காசு கொடுக்காமல் வேலை நடக்குமா?
தங்களுக்காக சேவயாற்றுபவர்கள் என்ற கண்ணோட்டத்திற்கு சமுதாயம் மாறும் என்றால் ஆலிகளின் சேவையின் தரமும் உயரும்.
”Jazaakallaahu khairan” வெள்ளி மேடை